Wednesday, November 30, 2011

சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரை போல வருமா

கடந்த சில நாட்கள் கொஞ்சம் மனதில் வலியிருந்தது எப்பவும் மனதில் இருக்கும் வலிகளை கண்டு நான் சோர்வது இல்லை காரணம் வலிகள் இருக்கும் போதுதான் தன் நம்பிக்கை பிறக்கின்றது.மனம் வலிகளை எதிர்த்து போராடுகின்ற போதுதான் வாழ்க்கை வலிமை பெறுகின்றது.

அப்படித்தான் சில மனக்கஸ்டங்களால் பதிவுலகில் கடந்தசில நாட்களாக சீராக இயங்கமுடியவில்லை நண்பர்களின் தளங்களுக்கும் வரமுடியவில்லை.
நண்பன் ஒருவன் கேட்டான் வா ராஜ் ஊர்ப்பக்கம் போய்ட்டு வருவோம் என்று சரி என்று எங்கள் ஊர்பக்கம் போனோம்...ஊருக்கு வந்ததும் மனதில் தானாக உட்சாகம் பிறந்தது கவலைகள் மறந்தது.

Post Comment

Monday, November 28, 2011

பிறந்த நாள் எப்படி கொண்டாடுவார்கள்!!

வணக்கம் இது ஒரு மொக்கை பதிவு,முழுவதும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்துவது நோக்கம் அல்ல
நம்ம ஈழத்துப் பதிவர் ஒருவருக்கு வரும் 1-12-2011 இல் பிறந்த நாள் வருது அதை வைத்து அவர் எப்படி பிறந்த நாள் கொண்டாடுவார்கள் எப்படி நம்ம பதிவர்கள் வாழ்த்துவார்கள் என்று ஒரு மொக்கை....ஓக்கே ரெடி ஸ்டாட்....

Post Comment

Friday, November 25, 2011

என்னைக்கவர்ந்த பிரபலங்கள்....இந்த வாரம் ஆளுமையின் சிகரம் யார் அவர்?


இந்தத்தொடர் மூலம் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி அவர்கள் ஏன் என்னைக்கவர்ந்தார்கள் என்பது பற்றியும் பேசலாம் என்று நினைக்கின்றேன் ஓவ்வொறு வெள்ளிக்கிழமையும் இனி என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேசுவோம்....இந்தப்பகுதியில் கிரிக்கெட்,சினிமா,அரசியல்,போன்ற பல்வேறு துறைகளில் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேச இருக்கின்றேன்.

ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் ஓருவருக்கு பிடிப்பவர்களை இன்னும் ஒருவருக்கு பிடிக்காது..ஒவ்வொறு மனிதனுக்கும் ஒவ்வொறு ரசனை.அந்த வகையில் என்னைக்கவர்ந்த பிரபலங்கள் பற்றி பேசும் தொடர் இது...

Post Comment

Thursday, November 24, 2011

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடி பார்த்தேன் என்னைப்பார்த்து பாடிய பொண்ணு

நான்கு வருடங்களுக்கு முன் என்னை ஒரு பெண்காதலித்தாள் ஆனால் அவளது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை அவளைப்பற்றிய பதிவுதான் இது. ஏற்கனவே இந்தப்பதிவை என் தளத்தில் எழுதியுள்ளேன்.நான் புதிய பதிவராக இருந்த போது எழுதியது.அப்போது எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாக போடலாம் என்று எண்ணியபோது இந்தப்பதிவு கண்ணில் பட்டது எனவே இதை மீள் பதிவாகத்தருகின்றேன்...

எனக்கு முதல் காதல் என் பாடசாலைக்காலத்தில் வந்தது.அதற்கு பிறகு காதல் என்பதை பற்றி நான் சிந்திப்பது இல்லை சொல்லப்போனால் காதல் என்ற சொல்லே எனக்கு மறந்து விட்டது எனலாம்.இந்த காலப்பகுதியில் என்னை ஒரு பெண்காதலித்தாள் (அவளுக்கு அது முதல் காதலாக இருந்திருக்களாம்). அவளைப்பற்றிய பதிவு இது.அவளது பெயர் தனுஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நான் எனது சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்த காலப்பகுதி அழகான கிராமத்து மண் வாசனையுடன் கூடிய வாழ்க்கை.

நகரத்து வாழ்க்கையில் நாம் எத்தனை சந்தோசங்களை தொலைத்து வாழ்கின்றோம் குறிப்பாக கிணற்றில் குளிப்பது என்ற ஒன்று நம்மிடையே மறந்து போகின்ற விடயமாக மாறியுள்ளது .என்னதான் குளியல் அறைகளில் குளித்தாலும் கிணற்றில் தண்ணீர் அள்ளிக்குளிக்கும் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாகுமா.நீச்சல் தாடாகத்தில் நீந்துகின்ற போது ஊரில்ஆற்றில் நீந்துவதற்கு ஈடாகாது.மாலை வேளைகளில் அயலவர்களுடன் மரநிழலில் அமர்ந்து கதைத்துக்கொண்டிருப்பது.இப்படி எத்தனை சின்னச்சின்ன சந்தோசங்களை நாம் நகரவாழ்க்கையில் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்


எனது சித்தப்பாவின் வீட்டிற்கு போன முதல் நாள் தனுஜா எனக்கு அறிமுகமானாள்.எனது அண்ணாவின்(சித்தப்பாவின் மகன்)நண்பருடைய மனைவியின் தங்கைதான் தனுஜா அவர்கள் குடும்பத்துடன் எனது சித்தப்பாவின் காணியில் இருந்த இன்னும் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள்.பெருப்பாலும் தனுஜாவின் குடுப்பம் சித்தப்பாவீட்டில் தான் இருப்பார்கள் சிலவேளை எல்லோறும் ஒன்றாகவே சமைத்து உண்பார்கள்.அவள் அப்போது உயர்தரம் படித்துக்கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள் நான் பார்த்தால் வேறுபக்கம் பார்ப்பது போல பாவனை செய்வாள்.எனக்கு ஒரு சந்தேகம் இவள் ஏன் என்னைப் பார்க்கின்றாள். 

தனுஜா பேரழகி என்று சொல்ல முடியாவிடாலும் ஒருமுறை பார்த்தாள் மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகு.ஒரு நாள் என்னிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டாள் .நான் ராஜ் என்றேன் அதற்கு அவள் முழுப்பெயர் என்னவென்றாள் நான் ராஜ்தான் என்று சொன்னேன்(ராஜ் என்றே எல்லோறும் அழைப்பதால் எனது முழுப்பெயர் எனக்கே மறந்து போச்சு ஹி.ஹி.ஹி.ஹி)அடுத்த நாள் ஒரு பேப்பரை என்னிடம் தந்து(சுடர் ஒளி வார இதழ் என நினைக்கின்றேன்)வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள்.நான் அதை வாங்கிப்பார்த்த போது அதில் I Love you  என்று எழுதப்பட்டிருந்தது.


எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பேப்பரை தூக்கி போடுவிட்டு நான் பேசாமல் போய்விட்டேன்.அடுத்தநாள் என்னிடம் தயங்கி தயங்கி வந்தாள் ராஜ் நான் நேத்து தந்ததுக்கு என்ன பதில் என்றாள்.உடனே நான் என்ன சொல்லுறது என்னை உங்களுக்கு ஒரு கிழமையாகத்தான் தெரியும். அதற்குள் காதல் என்றாள் என்னால் நம்பமுடியவில்லை என்னால் உங்களை காதலிக்க முடியாது சாரி என்று கூறிவிட்டேன்.அவளைப்பார்க்க பாவமாக இருந்தாலும் பொதுவாக எனக்கு மனதில் எது சரி என்று படுகிறதோ அதை அப்படியே கூறிவிடுவது என் பழக்கம் அவள் ஒன்றுமே சொல்லவில்லை பேசாமல் போய்விட்டாள்.அதற்கு பிறகு சித்தப்பாவீட்டிற்கு வருவாள்.நான் அவள் வந்தாள் வெளியில் போய்விடுவேன். 

பிறகு சித்தியை மாமி(அத்தைஎன்றும்) அண்ணியை அக்கா என்றும் அழைக்கத்தொடங்கிவிட்டாள்.இது பற்றி ஒரு நாள் அண்ணி என்னிடம் கேட்டார் என்ன ராஜ் தனுஜா இப்படி கூப்பிடுறாள் என்றார் .அண்ணி என்னிடம் அப்படி கேட்டதற்கு காரணம் உள்ளது எனது சித்தப்பாவின் பிள்ளைகள் எல்லோறும் திருமணம் செய்தும் தொழில் நிமித்தமாகவும்  வேறு இடத்தில் இருக்கிறார்கள்.ஒரு அண்ணா மட்டுமே சித்தப்பாவுடன் இருக்கிறார் அவரும் திருமணம் முடித்துவிட்டார்.அண்ணி அப்படி கேட்டதும் நான் சொன்னேன் கண்ணன் அண்ணாவை(சித்தப்பாவின் மகன்) இரண்டாவது திருமணம் செய்யப்போறாள் போல உங்கள் பதவி காலி என்றேன்.அதற்கு அண்ணி ராஜ் ஜோக் அடிக்காமல் சொல்லு என்றார்.

பிறகு நான் அண்ணியிடம் சொன்னேன் என்னை லவ் பன்னுவதாக தனுஜா சொல்கிறாள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி பேசி(திட்டி)அனுப்பிவிட்டேன் .அதுதான் அவள் சித்தியை மாமி என்றும் உங்களை அக்கா என்றும் கூப்பிடுறாள் போல என்றேன்.அண்ணி சிரித்துக்கொண்டே போய்விடார். அதற்கு பிறகு அண்ணா,அண்ணி,சித்தி சித்தப்பா எல்லோறுக்கும் என்னை கலாய்ப்பதுதான் வேலை.

இதற்கு இடையில் வெளிஊரில் படித்துக்கொண்டிருந்த தனுஜாவின் அண்ணன் வந்து இருந்தான்.அவன் என்னுடன் நல்ல நண்பனாகிவிட்டான். ஆனால் தனுஜா என்னை விடுவதாக இல்லை கவிதைகள் எழுதுவதும் என்னால் உங்களை மறக்க முடியாது ராஜ் அப்படி இப்படினு என்னிடம் சொல்லுவாள் அவளை பார்க்க பாவமாக இருக்கும். 

சித்தப்பாவீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு நண்பன் (நான் சித்தப்பாவீட்டிற்கு போயிருந்த போது நல்ல நண்பனாகி விட்டான்).தனுஜா குடும்பம் சித்தப்பாவின் காணியில் வசிக்க வந்ததில் இருந்து தனுஜாவை ஒருதலையாக காதலித்து வருகின்றானாம். அவனுக்கு தனுஜா என்னைகாதலிப்பது தெரிந்ததும் என்னிடம் கேட்டான். ராஜ் தனுஜாவை நான் லவ் பண்ணுறன் அவள் உங்களை லவ் பன்னுகின்றாள் என்றான் அதற்கு நான் சொன்னேன் டேய் அவள்தாண்டா என்னை லவ் பண்ணுறாள் நான் லவ் பண்ணலை அத்துடன் நான் சித்தப்பாவீட்ட வந்திருக்கேன் பிறகு எனது ஊருக்கு போய்விடுவன்.நீதான் இங்க இருக்கிற எனவே நீ தாராளமாக லவ் பண்ணு என்றேன். 

அனால் தனுஜா அவனது காதலை ஏற்றுக்கொள்வதாக இல்லை.சொல்லப்போனால் தனுஜா என்னை விடுகிறமாதிரி இல்லை. அப்போது நான் நினைத்துக்கொண்டேன் பொண்ணுங்க நாங்களாக தேடிப்போய் காதலித்தாள் பந்தா பன்னுவார்கள் ஆனால் அவர்களுக்கு ஒருவனை பிடித்து விட்டால் எவ்வளவு இறங்கி வருகின்றார்கள் என்று நினைத்துக்கொண்டேன்
யாரடி நீ மோகினி படத்தில் தனுசை ஓரு தலையாக காதலிக்கும் சரன்யா மோகனிடம் இருந்து தப்பிக்க தனுஸ் ஓடுவாரே அப்படி இருந்தது என் நிலமை




 தனுஜா ஒரு நாள் என்னிடம் கேட்டாள் ஏன் ராஜ் என்னை லவ் பண்ண மாட்டேன் என்கிறீங்க சொல்லுங்க என்றாள்.நான் உடனே பெரிய ஹீரோ கணக்கா அப்படி இல்லை தனுஜா எனக்கு காதல் பிடிக்காது அப்படி இப்படினு அவுத்து விட்டேன்.அதற்கு அவள் என்றைக்காவது நீங்கள் என்னை லவ் பண்ணுவீங்க என்றாள்.நான் சொன்னேன் உங்களை ஒருத்தன் லவ் பண்ணுறான் தானே(பக்கத்து வீட்டு நண்பன்) ஏன் அவனை நீங்க லவ் பண்ணலாம்தானே என்றேன்.அதற்கு அவள் காதல் எப்ப யார்மேல வரும் என்று சொல்லிட்டு வருவதில்லை என்னை தன்னால் மறக்க முடியாது என்று சொன்னாள் (நிறைய சினிமாப்படம் பார்ப்பாள் போல).

தனுஜாவின் காதலை நான் ஏற்றுக்கொள்ளாதற்கு பிரதான காரணம் அப்போது காதல் பற்றி சிந்திக்கும் மனநிலையில் நான் இல்லை(இப்பவும் அப்படித்தான்) அதைவிட எனக்கு பாடசாலையில் ஏற்பட்ட காதலின் வலி மனதில் இருந்ததால்(அப்போது இருந்தது இப்ப இல்லை)



மற்றது அவள் தனது காதலை சொன்ன போது அவளது அண்ணனை எனக்கு தெரிந்திருக்காவிட்டாலும் பிறகு நல்ல நண்பன் ஆகிவிட்டான் இந்த உலகில் எனக்கு பிடிக்காத விடயம் என்று சொன்னால் முதலில் நான் கூறுவது நண்பர்களின் தங்கச்சியை(சகோதரி) காதலிப்பது இப்படி பட்டவர்களை எனக்கு பிடிக்காது.எனவே தனுஜாவின் காதலை ஏற்றுக்கொள்ளாதற்கு இதுவும் ஒருகாரணம்.



மற்றது தனுஜாவை ஒருதலையாக காதலித்த நண்பனின் காதல் ஏன் என்றாள் ஒரு தலைக்காதலின் வலி எனக்கு நன்றாக தெரியும்.

இப்படி சில காரணங்களால் அவள் மேல் எனக்கு காதல் வரவில்லை


ஆனாலும் அவளை பார்க்கும் போது பாவமாக இருக்கும்.பிறகு நான் சித்தப்பா வீட்டில் இருந்து வரும் போது அவளிடம் போய்ட்டு வாறன் என்று சொன்ன போது அவள் அழுது விட்டாள்.எப்பவும் உங்களை என்னால் மறக்க முடியாது ராஜ் என்றாள்.கடைசிவரை அவளது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு பிறகு நான் சித்தப்பாவின் வீட்டில் இருந்து வந்து விட்டேன்.நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ் நிலைகளால் இப்போது சித்தி ,சித்தப்பா,அண்ணா அண்ணி எல்லோறும் வேற ஊரில் வசிக்கின்றார்கள். இப்ப தனுஜாவின் குடுப்பம் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

மீள் பதிவு
படங்களில் இருப்பது-தூத்துக்குடி,மதுரை சம்பவம் போன்ற படங்களில் நடித்த கருவாப் பையா கருவாப் பையா பாட்டு புகழ் நடிகை கார்த்திகா
படங்கள்-கூகுள்

************************************************************************************************************
தவறுக்கு வருந்துகின்றேன்-
மன்னிக்கவேண்டும் நண்பர்களே நான் முன்பு
எழுதிவெளியிட்ட என் 100வது பதிவான. சச்சின், கலீஸ் பிரட்மனுடன் ஒப்பிடலாமா?

என்ற பதிவு.இன்று மீண்டும் பல நண்பர்களின் டாஷ்போட்டில் தோன்றியதால் பலர் அதற்கு கமண்ட் போட்டு கேட்டு இருந்தார்கள்..



இன்று என் தளத்தை எடிட்டிங் செய்யும் போது ரீட் மோர் ஆப்சன் எல்லாப்பதிவுகளுக்கும் செட்டிங் செய்யும் போது தவறுதலாக மீண்டும் பப்ளிஸ் ஆகிவிட்டது அதனால்தான் எல்லோறுடைய டாஷ்போட்டிலும் அந்தப்பதிவு மீண்டும் தோன்றியிருக்கு என்று நினைக்கின்றேன் தவறுக்கு வருந்துகின்றேன் நண்பர்களே.....

தவறுதலாக மீண்டும் அந்தப்பதிவு பப்ளிஸ் ஆனதுக்கு மன்னிக்கவும்

************************************************************************************************************




Post Comment

Wednesday, November 23, 2011

சமூக அமைப்பில் வரதட்சனை ஓழியவேண்டும்

ஜந்து பெண்களைப்பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று ஒரு பழமொழியை நம்மாளுகள் அந்தக்காலத்தில் சொல்லியிருப்பார்கள் இது ஏன் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை ஆனால் பெண்குழந்தை என்றால் அவளை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்கும் வரை தாய் தந்தைக்கு மிகவும் கஸ்டம். பொருளாதார ரீதியில் அதாவது வரதட்சனை என்ற ஒரு விடயம் மிகவு தாக்கம் செலுத்துவதால்.இப்படி ஒரு பழமொழியை சொல்லியிருக்கின்றார்கள் போலும் அந்தக்காலத்தில்.இது ராஜ் இன் ந

Post Comment

Monday, November 21, 2011

சொன்னா புரியாது சொல்லாட்டி தெரியாது நீங்க எல்லாம் என் மேல வைச்ச பாசம்..

அனைவருக்கும் வணக்கம் எனது நண்பர்கள் தளம் சொந்த டொமைனுக்கு மாறியுள்ளது இதுவரை www.cricketnanparkal.blogspot.com என்று இருந்த என் தளத்தின் முகவரி நேற்று முதல்-www.nanparkal.com என சொந்த டொமைனுக்கு மாறியுள்ளேன்.என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றேன்

சொந்த டொமைனுக்கு மாறியதும் பாலோவர் விட்ஜெட்டை காணவில்லை திரும்ப ஒரு மாதிரி அட்பண்ணிவிட்டேன்.தளத்தில் கொஞ்சம் எடிட்டிங் வேலை செய்தால் இரண்டு நாட்களாக சீராக பதிவிட முடியவில்லை..

Post Comment

Saturday, November 19, 2011

மஞ்சனத்து மரத்துகட்ட மைய வைச்சு மயக்கிப்புட்ட(ஒரு காதல் கடிதம்)


நான் சில பதிவுகளில் வாழ்க்கையில் பக்குவம் வராதவயதில் வரும் காதல்களை சாடியுள்ளதை படித்திருப்பீர்கள்.என் நண்பன் ஒருவன் கேட்டான் நீ இப்படி காதலை சாடுகின்றாய் உனக்கு காதலைப்பற்றி என்ன தெரியும்.ஓரு காதல் கடிதம் எழுத முடியுமா?என்று சவால் விட்டான்
நமக்கு சவாலை சந்திப்பது ரொம்ம புடிக்கும் என்பதால் சரி காதல் கடிதம் எழுதலாம் என்று களத்தில் இறங்கினேன்.....இரவிரவாக சிந்தித்தும் கடிதம் எழுத வரவேயில்லை எனவே ஆனந்தம் படத்தில் மளிகைக்கடைக்காரரிடம் காதல் கவிதை எழுத சொல்லும் போது அவர் மளிகை கடையில் உள்ள பொருற்களை வைத்து கவிதை எழுதுவார் தானே

Post Comment

Wednesday, November 16, 2011

மழலை உலகம் மகத்தானது(என் பார்வையில் தொடர் பதிவு)

தற்போது வலையுலகில் மழலை உலகம் மகத்தானது என்று தொடர்பதிவுகளை பதிவர்கள் எழுதிவருகின்றார்கள்.
தொடர் பதிவு என்றால் என்ன என்று அறியாத பதிவர் இல்லாத வாசகர்களுக்காக சின்ன விளக்கம்.ஒரு பதிவர் தன் தளத்தில் ஒரு பதிவை எழுதி அதே பதிவை இன்னும் ஓரு பதிவரின் பார்வையில் எழுதச்சொல்லி அழைப்பது தொடர் பதிவாகும்.

Post Comment

நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா பாடலும் என் நண்பனும்

நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா இந்தப்பாடல் ஓரு காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல் சகலகலா வல்லவன் படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடலில் சில்க் ஸ்மிதாவின் நடனம் அந்தக்காலத்தில் பலரின் தூக்கத்தை கெடுத்திருக்கும்...தலைமுறைகளை தாண்டிய ஹிட் பாடல்.இந்தப்படம் வெளிவந்த போது நான் பிறக்ககூட இல்லை.

Post Comment

Monday, November 14, 2011

என்றும் நினைவில் நிற்கும் ஓரு நண்பியும் நானும்

என் நட்பு வட்டாரத்தில் பெண்கள் பெரிதாக இல்லை என் கூட பாடசாலையில் படித்த சிலர் பேர் தொலைபேசியில் கதைப்பார்கள்,சிலர்,பேஸ்புக்கில் அவ்வப்போது சட் பண்ணுவார்கள் .தற்போது என் வலைப்பதிவை படித்து பல பொண்ணுங்க என்னுடன் நண்பர்களாகிவிட்டார்கள் அது வேற கதை



Post Comment

Sunday, November 13, 2011

காதல் கடிதத்தின் உருக்கமான கடிதம்

அன்புள்ள காதலர்களுக்கு வணக்கம்
நான் தான் காதல் கடிதம் இன்று உங்களால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நான். ஒரு காலத்தில் காதலர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்துள்ளேன். எத்தனை காதலர்களின் காதல்கள் என்னால் வாழ்து இருக்கின்றது, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

Post Comment

Friday, November 11, 2011

(பகுதி-10)என் உயிர் நீ தானே....


கடந்த பதிவில்-
சுதனின் உடல் நிலையில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டது...சுதனின் காலை அகற்றத்தேவையில்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்...புஸ்பா நிம்மதிஅடைந்தாள்...
இனி.....
சுதன் குணமாகி முகாமுக்கு வந்து சேர்ந்தார்,கொஞ்சக்காலம் முகாம் வாழ்க்கை பிறகு வன்னியில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்திய போது சுதனும்,புஸ்பாவும்,அவர்கள் முன்பு இருந்த காணியில் குடியேரவில்லை.அங்கே புஸ்பாவின் அம்மா,வெள்ளையன்,ரதி,மூக்காயி போன்றோர் மட்டும் அங்கே மீளக்குடியேறினர்,சுதனும்,புஸ்பாவும்,தங்கள் குழந்தைகளுடன்,சுதனின் உறவினர் ஓருவரின் காணியில் வேறு ஓரு ஊரில் அதாவது சுதனின் சொந்த ஊரிற்கு அருகில் இருக்கு ஓரு ஊரில் வசிக்கத்தொடங்கினர் 

Post Comment

Wednesday, November 09, 2011

சச்சின் என்ற ஜாம்பவானின் சாதனைகளில் நேற்று மேலும் ஓரு மணிமகுடம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் நேற்று மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இனிங்சில் டெஸ்ட்போட்டிகளில் 15000 ஓட்டங்களைக்கடந்த முதல் வீரராக சாதனை படைத்தார்...இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் க

Post Comment

Tuesday, November 08, 2011

ஓரு பதிவர் பேசுகின்றார்.


இன்று என்பதிவின் ஊடாக பதிவுலகம் பற்றி பேசுகின்றேன்




அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
இன்று (8-11-2011) நண்பர்கள் தளம் ஆரம்பிக்கப்பட்டு ஓரு வருடங்கள் பூர்த்தியாகின்றது 8-11-2010 அன்று என் தளத்தை ஆரம்பித்து முதலாவது
பதிவு வை எழுதினேன்...நான் பதிவெழுத வந்த இந்த ஓரு வருடத்தில் இதுவரை 108 பதிவுகள் எழுதியிருக்கின்றேன்.3488 கருத்துரைகள் கிடைத்திருக்கின்றன..திரட்டிகளில் என் பல பதிவுகள் பிரபல்யமாகியிருக்கின்றன,விகடனில் குட்ப்ளாகில் என் தளம் தேர்வுவாகியிருந்தது.தமிழ்மணத்தில் டாப்-20 பதிவர்களில் பல வாரங்கள் இடம்பிடித்திருக்கின்றேன்.அதிகபட்சமாக 4வது இடம் கிடைத்து..
தமிழ்விருதின் சிறந்த கிரிக்கெட் பதிவருக்கான விருது கிடைத்தது.

Post Comment

Monday, November 07, 2011

சினிமாவை சுவாசிக்கும் ஓரு கலைஞன் கமல் எனக்குப்பிடித்த டாப்-20 கமல் படங்கள்

இன்று(November-7) கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் 57 வது பிறந்தநாளாகும்,சினிமாவை நேசித்து சினிமாவை சுவாசிக்கும் ஓரு கலைஞன் கமல்.இவரை பற்றி சொல்வதற்கு ஓரு பதிவு போதாது.எனவே இந்தப்பதிவு கமல் நடித்த படிங்களில் எனக்கு பிடித்த டாப்-20 படங்களை பட்டியில இட்டுள்ளேன்.

Post Comment

Saturday, November 05, 2011

(பகுதி-9)என் உயிர் நீ தானே


கடந்த பதிவில்-இருந்தாலும் வயிறு என்று ஓன்று இருக்கின்றதே....எனவே
இடம்பெயர்கின்றவர்களின் பொருட்களை வாகனத்தில் ஏற்றிவிடும் வேலையை தொடங்கினார்கள் சுதனும்,வெள்ளையனும்,கடுமையான ஷெல்கள் விழுகின்ற போதும்..,உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்தனர்....இனி......



அவர்கள் இருந்த ஊரில் கடுமையாக ஷெல் விழத்தொடங்கியதால் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர்..இப்படி மாறி மாறி கடைசியில் புது மாத்தளன் என்னும் இடத்தில் வந்து விட்டனர்...இனி போவதற்கு அடுத்தது முள்ளிவாய்க்கால் என்ற ஓரு இடம் மட்டும்தான் இருக்கு....

Post Comment

Thursday, November 03, 2011

எனக்குப்பிடித்த டாப்-10 கிரிக்கெட் கேப்டன்கள்

கிரிக்கெட் மீதான என் காதல் மட்டும் குறையவே மாட்டேன் என்கின்றது....எனது தளம் ஆரம்பத்தில் வெறும் கிரிக்கெட் பதிவுகளை மட்டுமே எழுதவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன் பின்பு பலதரபட்ட விடயங்களை கலந்து கட்டி எழுதி இன்று பல்சுவைப்பட்ட பதிவுகளுடன் வாசகர்களின் ரசனையை பூர்த்தி செய்யும் தளமாக என் தளம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி..

Post Comment

Wednesday, November 02, 2011

வலிகள் நிறைந்த வாழ்க்கை தன்நம்பிக்கை பெண் கங்கா

நான் சின்னவயதில் எங்கள் ஊரில் கண்ட ஓரு அக்காவின் சோகக்கதைதான் இது..அவர் பெயர் கங்கா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
பல விவசாயிகளின் வயல்களில் வேலைசெய்து செய்து தமது குடும்பத்தை ஓட்டும் ஓரு கூலித்தொழிலாளியின் மகள்தான் கங்கா நல்ல அழகானவர்.
மூன்று பெண் சகோதரிகளும்,ஓரு சகோதரனும் இவருக்கு உண்டு.
சகோதரன் திருமணம் செய்து வேறு இடத்துக்கு போய்விட்டார்

Post Comment

Tuesday, November 01, 2011

என் பார்வையில் 7ம் அறிவு,இது விமர்சனம் இல்லை

தீபாவளிக்கு வந்த படங்களில் 7ம் அறிவு தாமதமாகத்தான் பார்க்கமுடிந்தது.
7ம் அறிவு பற்றி பலர் விமர்சனம் செய்ததால் நான் விமர்சனம் எழுதவில்லை படத்தை பற்றி.சின்ன பார்வை.


1600 வருடங்களுக்கு முட்பட்ட காலத்தில் போதி தர்மர்..என்ற இந்தியாவை அதுவும் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட ஓரு ஞானி சீனாவுக்கு சென்றுஅங்கு ஒரு கிராமத்தில் தனது தற்பாதுகாப்பு கலைகள்,மருத்துவம் போன்றவற்றை கற்பிக்கின்றார். கொடிய தொற்று நோயில் இருந்து அந்த மக்களைக்காக்கின்றார்

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails