Saturday, March 12, 2016

முள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி

வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந்தப்பக்கம் வரமுடியவில்லை.இப்போது குறும்பட துறையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் அதை அறிவிப்பதற்காக இந்த பதிவு. இன்று எனது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் குறும்படம் வலி இது பற்றிய உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்நான் இயக்கிவரும் முழுநீள படம் ஒன்றும் தயாராகி வருகின்றது அதில் இடம் பெரும் பாடல் ஒன்றினை காதலர் தினம் அன்று வெளியீடு செய்திருந்தோம் பாடலை கேட்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் எங்கேயோ தூரத்தில் நான் போகிறேன் உன் வார்த்தையால்

                                                              படத்தின் போஸ்டர்

VJ.நிதன் நாயகனாகவும்,பவி நாயகியாகவும் இந்த படத்தில் நடிக்கின்றார்கள் இவர்களுடன் பரனி,சாருஜன்,கோபாலசிங்கம்,சுஜுவன் மற்றும் பலர் நடிக்கின்றார்கள் இவருகளுடன் நானும் முக்கிய பாத்திரம் ஒன்றி நடிக்கின்றேன்.விரைவில் படத்தை எதிர்ப்பாருங்கள்.குறைந்தளவு வளங்களை பயன் படுத்தி ஈழத்தில் கிளிநொச்சியில் இருந்து எங்களின் படைப்புக்கள் இவை இதற்கான உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றேன் நண்பர்களே.

அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

தமிழ் மணத்தில் இந்த பதிவை யாராவது திரட்டிகளில் இணைத்துவிடுங்கள் நண்பர்களே இல்லை உங்கள் பதிவுகளில் பகிர்ந்துகொள்ளுங்கள் 

Post Comment

Sunday, August 24, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்- இறுதிப்பகுதி

ரெஸ்ரொரண்டுக்குள் போய் அமந்துகொண்டோம்.ஏதே தோ உணவுகள் எல்லாம் வாங்கி வந்தார் வைஸ்னவி அக்கா ஆனால் எதையும் என்னால் சாப்பிடமுடியவில்லை மனம் முழுவதும் ஏதோ இனம்புரியாத வலி.என்ன ராம் சோகமாக இருக்கீங்க ஒன்றும் பேசமாட்டேன் என்கிறீங்க நான் போறன் என்று கவலையா என்று கேட்டார்?

Post Comment

Saturday, August 23, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-7

கிருபாவின் போன் நம்பரைக்கண்டு பிடித்து கொடுத்தற்கு பிறகு ஊருக்கு போன வைஸ்னவி அக்காவிடம் இருந்து எந்த தொடர்பும் சில நாட்கள் இல்லை.நான் கூட நினைத்தேன் அவருடன் போனில் கதைக்க தொடங்கிவிட்டார் போல அதான் பிசியாகிவிட்டார் என்று.ஏதோ சந்தோசமாக இருந்தால் சரி என்று நினைத்துக்கொண்டு நான் என் வேலையில் மூழ்கிவிட்டேன்.

Post Comment

Friday, August 15, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல் -பகுதி-6

சின்ன வயதில் இருந்து குடும்ப உறவுகளிடம் இருந்து விலகியே இருந்திருக்கின்றேன் நான். குறிப்பிட்டு சொல்லப்போனால் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவுகூட உண்டதில்லை.ஆனால் வைஸ்னவி அக்காவீட்டில் தம்பி,தங்கச்சி என்று எல்லோரும் ஒரு நண்பர்களைப்போல பழகுவதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.நமக்கு கிடைக்காத ஒரு விடயத்தை பார்க்கும் போது ஆச்சரியம் வருவது இயல்புதானே.

Post Comment

Friday, August 01, 2014

பரந்தாமனின் (சு)வாசம்-ஒரு ராதையின் தேடல்-பகுதி-5

தேடல்கள் எப்போதும் சுகமானவை அதே நேரம் தேடப்படும் காரணங்களை பொருத்து அது ரணமானதாகவும் அமைந்துவிடும்.அதுவும் நமக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக தேடுவதில் கொஞ்சம் மனம் தளர்ந்தாலும் சலிப்புத்தன்மை வந்துவிடும்.வைஸ்னவி அக்காவுக்கான இந்த தேடலில் என்ன நடந்தாலும் சரி.சலிப்படையக்கூடாது.யாருமே என்னிடம் காட்டாத அன்பையும் பாசத்தையும் காட்டுகின்றார்.எனவே அந்த அன்பும்,பாசமும் எனக்கு வேண்டும்.எனவே அந்த அன்புக்காகவாவது கிருபாவை தேடிக்கண்டு பிடிக்கவேண்டும் என்ற வைராக்கியம் என் மனசில்.

Post Comment

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails