Thursday, March 10, 2011

பலேகல்லவில் பாகிஸ்தானை பந்தாடிய நியூஸ்லாந்து அணி(Kss.Rajh)

உலகக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் கடந்த, 8-3-20011,கண்டி பலேகல்ல மைதானத்தில் இடம்பெற்ற
நியூஸ்லாந்து,பாகிஸ்தான்,போட்டியைபார்ப்பதற்கு
சென்றுஇருந்தோம், எமது நண்பர்களில்,





சுஜிதன் தலைமையில் நியூஸ்லாந்து ஆதரவாளர்களும்



எனது தலைமையில் பாகிஸ்தான் ஆதரவாளர்களும் போயிருந்தோம்,

நாணைய சுழற்சியில் நமது ஆளு(அப்ரடி)தோற்க,
ஆகா ஆரம்பமே ஆப்பா/
நியூஸ்லாந்து ஆதரவு நண்பர்கள் கலாய்த்தார்கள்.
விக்டோரி பேட்டிங் எடுத்தார்
.
நமது அக்தரின் முதல் ஒவரிலேயே பிரண்டன் மெக்கலம் சிக்சரை விளாசினார்
பிறகு கேட்கவா வேண்டும்,சுஜிதன் அணி(நியூஸ்லாந்து ஆதரவு நண்பர்கள்)
லொள்லு தாங்கமுடியவில்லை,
எமது கவலையைப்பார்த்த அக்தர் அடுத்த பந்திலேயே மெக்கலத்தை போல்டாக்கினார்.இருந்தாலும் அக்தரின் பந்தை நியூஸ்லாந்து வீரர்கள் வெலுத்து வாங்கியதும் ரோஸ் டெயிலர் பிறந்த நாளில் சதம் அடித்து அசத்தியதும் பாகிஸ்தான் மண்ணைக்கவ்வியதும்.
 நாங்கள்(பாகிஸ்தான் ஆதரவு நண்பர்கள்)சுஜிதன் அணியிடம்(நியூஸ்லாந்து ஆதரவு நண்பர்கள்)
நன்றாக மூக்கு உடைபட்டோம்.
அதிலும் ரோஸ் டெயிலர் மைதானத்துக்கு வெளியே ஒரு சிக்சர் அடித்தார், 
எமக்கு பக்கத்தில் எல்லைக்கோட்டில் நின்ற யுனிஸ்கானுக்கு மேலாகத்தான் அந்த சிக்சரை டெயிலர் அடித்தார், பாவம் நம்மாளு யுனிஸ் அப்பாவியாக மைதானத்துக்கு வெளியே போன பந்தை பார்த்துக்கொண்டிருந்தார்.


பிறகு 303 ரன் வெற்றி இலக்கை துரத்திய நம்ம ஆளுகள் அடுத்தடுத்து விக்கட்டை பறிகொடுத்தனர்.

இடையில் டானியல் விக்டோரி காயமடைந்ததும் நமக்கு ஒர் திருப்தி,
விக்டோரியின் சுழல் இல்லை என்று,
ஆனால் கேப்டன் விக்டோரி இல்லாத போதும் நியூஸ்லாந்து அணி சிறப்பாக பந்து வீசி நம்ம ஆளுகளை சுருட்டினர்,

அப்ரடி வந்து அதிரடியை காட்டியதும் எமக்கு உட்சாகம் ஆனால் அவரும் போல்டாகினார்,பிறகு என்ன பாகிஸ்தான் பரிதாபமாக தோல்வி அடைந்தது,
அப்துல் ராசாக் மட்டும் அரைச்சதம் அடித்து அறுதல் தந்தார்.
ஆனால் எது எப்படியோ ரோஸ் டெயிலர்ரின் அதிரடியால் நல்ல ஒரு போட்டியை பார்த்த திருப்தி,

வேறு அணிகள் விளையாடும் போது எமது நண்பர்கள் வெவ்வேறு அணிகளுக்கு சப்போட் பண்ணினாலும்,
உலகக்கிண்ணத்தை இலங்கை வெல்ல வேண்டும்
  இலங்கை கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பது,
எங்களது ஆசை எங்களது மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கயையரது
ஆசை நிறை வேற்று வார்களா சங்கா குழுவினர் பொருத்து இருந்து பார்ப்போம்.


Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails