Monday, October 24, 2011

(100வது பதிவு)சச்சின்,கலீஸ், பிரட்மனுடன் ஒப்பிடலாமா? சிறப்புப்பார்வை

இந்திய ஜாம்பவான் லிட்டில் மாஸ்டர் சச்சினை பிரட்மனுடன் ஓப்பிட்டு பலர் பேசிவருகின்றார்கள் சில பிரட்மனைவிடவும் சச்சின் சிறந்த வீரர் என்றும்,சிலர் இல்லை பிரட்மனுக்கு கிட்டையும்சச்சின் வரமுடியாது என்றும் பல கருத்துக்களை சொல்லிவருகின்றனர்..எனவே தற்போது விளையாடும் வீரர்களில் பிரட்மனுடன் ஓப்பிடக்கூடியவர் யார் என்றால்?பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் கைகள் சுட்டிக்காட்டுவது சச்சின் என்ற சாதனையாளரைத்தான்.



தற்போது விளையாடும் வீரர்களில் பலர் சிறப்பான பெருபேருகளை
வெளிப்படுத்தினாலும்,குறிப்பாக,அவுஸ்ரேலியாவின் ரிக்கிபொண்டிங்,இந்திய சுவர் ராகுல் ராவிட்...கிரிக்கெட் உலகில் தோன்றிய மிகச்சிறந்த வீரகளில் இவர்கள் நிச்சயம் உள்ளடங்குவார்கள்..ஆனால் இவர்களை பிரட்மனுடன் ஓப்பிட்டு பேசுவது இல்லை இவர்களின் ஆட்டத்திறன் வேறு பிரட்மனின் ஆட்டத்திறன் வேறு....இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
ஆனால் பிரட்மனே சச்சினின் ஆட்டத்தை பார்த்து சொன்னாராம் இந்தப்பையன் என்னைபோலவே விளையாடுகின்றான் என்று..இது சச்சினுக்கு கிடைத்த புகழ்தான்...தற்போது விளையாடும் வீரர்களில் சச்சினின் சாதனைகளை முறியடிப்பது கடினமே...அவரது டெஸ்போட்டிகளின் அதிக ஓட்டம்,அதிக சதம் சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும் ஓரு நாள் போட்டிகளில் அவர் பெற்றுள்ள 18000க்கு மேட்பட்ட ஓட்டங்களை இன்னும் ஓரு கிரிக்கெட்வீரர் நெருங்குவது என்பது கடினமே..சச்சினது டெஸ்ட் சாதனைகளை முன்பு ரிக்கிபொண்டிங் பினாலே துரத்திக்கொண்டுவந்தார்..ஆனால் தற்போது பொண்டிங்கின் ஆட்டம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை....

தற்போது தென்னாபிரிக்காவின் சகதுறை நட்சத்திரம் ஜக்கலீஸ்..சச்சினின் டெஸ்ட் சாதனைகளை துரத்திக்கொண்டே வருகின்றார்..மிகச்சிறந்த சகலதுறை வீரரான் இவர்...தற்போது விளையாடும் வீரர்களில் பிரட்மனுடன் ஓப்பிடக்கூடிய வீரர்களை பட்டியல் இடும் இடத்து..சச்சினுடன் போட்டி போடக்கூடிய வீரர் இவராகத்தான் இருப்பார்.

பிரட்மன்


கிரிக்கெட்டின் பிதாமகர் என்று வர்ணிக்கப்படும் டொன் பிரட்மன் என அழைக்கப்படுகின்ற டொனால்ட்ஜோர்ஜ் பிரட்மன் அவுஸ்ரேலியாவின் முன்னால் ஜாம்பவான் ஆவார்.


இவரது காலத்தில் கிரிக்கெட்டில் ஓருநாள் போட்டிகள் இல்லை டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே இருந்தது.மிகச்சிறந்த துடுப்பாட்ட சாதனையாளரான இவரது சாதனைகள் முழுவதையும் இங்கே பட்டியல் இடமுடியாது.எனவே சுருக்கமான புள்ளிவிபரத்தை பார்ப்போம்.


1928ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக பிரிஸ்பேனில்நடைபெற்ற டெஸ்ட்டில் தனது அறிமுகத்தினைமேற்கொண்டார். அதில் பிரட்மன் 18 & 1 ஓட்டத்தினையேபெற்றுக்கொண்டார்.இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 1948ம் ஆண்டு விளையாடினார்.அந்தப் போட்டியில் பிரட்மன் தான்எதிர்கொண்ட 2வது பந்தில் எரிக் கொலிய்ஸ்சின்பந்துவீச்சில் போல்டாகி ஓட்டமெதுவும்பெறாமல் பூச்சியத்துக்கு ஆட்டமிழக்க அவர் தனது கிரிக்கெட்வாழ்வினை 99.94 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் நிறைவுசெய்தார். அந்தப் போட்டியில் 4 ஓட்டங்களைப்பெற்றிருந்தால் பிரட்மனின் துடுப்பாட்ட சராசரி 100 ஆகமாற்றமடைந்திருக்கும்..டெஸ்ட் கிரிக்கெட்டில் துடுபாட்ட சாராசரி 100ரைப்பெற்ற வீரராக சாதனைபடைத்திருப்பார்..ஆனாலும் இவரது 99.94 என்ற சாராசாரியை எந்த ஓருவீரரும் நெருங்குவது என்பது கடினமே...


இரண்டு முச்சதங்களை விளாசியுள்ள பிரட்மன் ஓரு முறை 299* ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றுள்ளார் எதிர் முனையில் கடைசிவிக்கெட்டாக விளையாடிய வீரரின் ஓத்துழைப்பு இன்மையால் அவரால் 3வது முச்சதத்தை பெறமுடியாமல் போய்விட்டது..டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓரே நாளில் 300 ஓட்டங்களைப்பெற்றவர் என்ற அற்புதமான ஒரு சாதனையையும் அவர் தன் வசம்வைத்திருக்கின்றார்.2001ம் ஆண்டு பெப்ரவரி 25ம் திகதி சேர் டொன் பிரட்மன்தனது 92வது வயதில் இறந்தார்


டெஸ்ட் போட்டிகள் - 52
இன்னிங்ஸ்- 80
ஆட்டமிழக்காதது-10
அரைச் சதம்-13
சதம்-29
அதிகூடிய ஓட்டம்-334
மொத்த ஓட்டங்கள்-6996
சராசரி-99.94
பிடிகள்-32



52 டெஸ்போட்டிகளில் 29 சதங்களை விளாசிய பிரட்மன் ஓருவேளை இப்ப உள்ளவீரர்கள் போல 150 க்கு மேட்பட்ட போட்டிகளில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்திருந்தால்..100 சதங்கள் அடித்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை.
உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட மேதை பிரட்மனுடன் கிரிக்கெட் வீரர்களை அவ்வப்போது கிரிக்கெட் விமர்சகர்களும்,கிரிக்கெட் வீரர்களும் ஓப்பிட்டு பேசிவது உண்டு..எனவே சச்சினை பிரட்மனுடம் ஓப்பிட்டு..முனால் கிரிக்கெட் வீரர்கள்,கிரிக்கெட் விமர்சகர்கள்,ரசிகர்கள்,போன்ற பலர் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பட்டிமன்றம் நடத்திவருகின்றனர்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
சச்சின்


பிரட்மனை சச்சின் சந்தித்த போது
கிரிக்கெட்டின் கடவுள் என்று தற்போது அவரது ரசிகர்களால்
போற்றப்படுகின்ற சச்சின்..கிரிகெட்டில் நிறைய சாதனைகளுக்குச்சொந்தக்காரர்.1989ல் த 16வது வயதில் அறிமுகமாகி.இன்றுவரை 22 வருடங்கள் விளையாடிவரும் இவரது கிரிக்கெட் மீதான பற்றை என்னவென்று சொல்வது.1990க்கு முதல் அறிமுகமான வீரர்களில் இன்றுவரை விளையாடும் வீரர் சச்சின் மட்டும்தான்
அவரது புள்ளிவிபரங்கள்

துடுப்பாட்டம்,களத்தடுப்பு

MatInnsNORunsHSAveSR100504s6sகேட்ச்
டெஸ்ட்1812983214965248*56.25516164108
ஒருநாள்4534424118111200*45.16
86.3248951981193136
20 ஓவர்110101010.00
83.3300201


பந்துவீச்சி

MatInnsBallsRunsWktsBBIBBMAveSR4w5w10
டெஸ்ட்18113741322416453/103/1453.68
91.8000
ஒருநாள்453269804468381545/325/3244.40
52.2420
20 ஓவர்11151211/121/1212.00
15.0000

சச்சினது சாதனைகளை பட்டியல் படுத்த பதிவு காணாது.
பிரட்மனுடம் ஓப்பிட சச்சின் தகுதியானவர்தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
ஜக்கலீஸ்
சச்சின்&கலீஸ்
உலகில் தோன்றிய மிகச்சிறந்த சகலதுறைவீரர்..ஜக்கலீஸ் என்றால் அது மிகையாகாது.டெஸ்ட் மற்றும்,ஓரு நாள் போட்டிகளிள் இரண்டிலும் பத்தாயிரம் ஓட்டங்களுக்கு மேல் கடந்த 5வீரர்களில் இவரும் ஓருவர்..சச்சின்,லாரா,பொண்டிங்,ராகுல்ராவிட்,ஏனையோர்.

அனேகமான கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் சச்சின்,ராவிட்,பொண்டிங்,லாரா பிரபல்யமான அளவுக்கு கலீஸ் பிரபல்யமாகவில்லை சத்தம் இல்லாமல் சாதனைபடைத்துக்கொண்டிருக்கும் தென்னாபிரிக்காவின் சகலதுறை ஆட்டக்காரர்..கிரிக்கெட்டில் துடுபாட்டத்தினால் அணியை வெற்றி பெறவைப்பவர்கள்,தனியே பந்து வீச்சினால் தமது அணியை வெற்றிபெறவைப்பவர்கள்.இருக்கின்றார்கள்,இவை இரண்டினாலும் தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கி..தென்னாபிரிக்க அணியைதாங்கும் தூண் கலீஸ்.

1995ஆம் ஆண்டு சச்சின் அறிமுகமாகி 6 வருடங்களுக்கு பின் சர்வதேச கிரிகெட்டில் அறிமுகமானவர் கலீஸ்..ஓரு நாள் போட்டிகளில் 1996ல் அறிமுகமானார்.
புள்ளிவிபரங்கள்
(புள்ளிவிபரம் espncricinfo.com தளத்தில் இருந்து பெறப்பட்டது)
துடுப்பாட்டம்,களத்தடுப்பு

MatInnsNORunsHSAve
SR100504s6sகேட்ச்
டெஸ்ட்1452463811947201*57.43
45.224054131586166
ஒருநாள்316302531131813945.45
72.881783888133122
20ஓவர் போட்டி161615127334.13
119.900440176


பந்துவீச்சி

MatInnsBallsRunsWktsBBI
AveEconSR4w5w10
டெஸ்ட்1452401833786432706/54
32.012.8267.9750
ஒருநாள்3162771052884642655/30
31.934.8239.7220
20 ஓவர் போட்டி161218622952/20
45.807.3837.2000
டெஸ்ட்,மற்றும் ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ஓட்டங்களைக்கடந்து இரண்டிலும் 250 விக்கெட்டுகளுக்குமேல் கைப்பற்றிய ஓரே ஓரு வீரர் கலீஸ் தான்.

ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் அதிக ஓட்டம் அதிகசதம் சாதனைகளை கலீஸ் நெருங்க முடியாது..ஆனால் டெஸ்போட்டிகளில் கலீஸ் சிலவேளைகளில்..முறியடித்தாலும் ஆச்சரியம் இல்லை ஏன் என்றால் தற்போது சிறப்பாக ஆடிவரும் கலீஸ் சச்சினைவிட டெஸ்ட் போட்டிகளில் 3018 ஓட்டங்களை குறைவாக பெற்றுள்ளார்.

சச்சின் 51சதங்களை அடித்துள்ளார்..கலீஸ் 40 சதங்களை அடித்துள்ளார்..இதில் தற்போது சச்சினைவிட கலீஸ் விரைவாக டெஸ்ட்போட்டிகளில் சதங்களை அடித்துவருகின்றமை கவனிக்கதக்கது...சச்சினுக்கு தற்போது 38 வயதாகிவிட்டது சச்சினைவிட கலீஸ் இரண்டு வயது இளையவர் எனவே சச்சினைவிட அவர் கூடுதலாக இரண்டு மூன்று ஆண்டுகள் விளையாடினால்.சிலவேளை சச்சினின் டெஸ்ட் சாதனைகளை நெருங்கிவர வாய்ப்புள்ளது...ஆனால் தற்போதும் சச்சின் விளையாடிவருவதால்..சச்சின் ஓய்வு பெறும் போது இன்னமும் அவரது சாதனைகள் கூடவாய்ப்புள்ளது...எனவே கலீஸ் முறியடிக்காவிட்டாலும்..கலீஸ் மிகச்சிறந்த ஓரு வீரர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

ஓப்பீடு
ஒரு கிரிக்கெட் வீரருடன் இன்னும் ஒரு கிரிக்கெட் வீரரை ஓப்பிடுவது பொருத்தமானது இல்லை ஏன் என்றால் ஓவ்வொறு வீரருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும்.சச்சினால் செய்யமுடியாத சாதனைகள் சிலவற்றை கலீஸ் செய்துள்ளார்,பிரட்மன் செய்யமுடியாத சாதனைகள் சிலவற்றை சச்சின் செய்துள்ளார்....ஓவ்வொறு வீரருக்கும் ஒரு தனித்திறமையிருக்கும்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com)nanparkal/நண்பர்கள்
ஆனாலும் கிரிக்கெட்டின் பிதாமகர் என்று வர்ணிக்கப்படுகின்ற பிரட்மனுடன் வீரர்களை ஓப்பிடுவது அந்த வீரர்களுக்கு கெளரவம்தான்..அந்தவகையில் தற்போது விளையாடும் வீரர்களில் பிரட்மனுடன் ஓப்பிடும் போது முதலில் சச்சின் இருந்தாலும்,சச்சினுக்கு அடுத்த இடத்தில்..கலீஸைத்தான் சுட்டிகாட்டமுடியும்..

சச்சின் அளவுக்கு கலீஸ் புகழ் பெறவில்லை என்றாலும் கிரிக்கெட் சரித்திரத்தில் கலீஸின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

முஸ்கி-இந்தப்பதிவின் கருவைத்தந்து இதுபற்றி எழுதச்சென்னவர் நம்ம சகபதிவர்,நண்பர் மைந்தன் சிவா...3,4 மாதங்களுக்கு முன்பே சொன்னார்..நான் வேறு பதிவுகள் எழுதியதனால் எழுதமுடியவில்லை இபோது 100வது பதிவாக எழுதியுள்ளேன்

100வது பதிவு
இது என் 100வது பதிவாகும்.


தொடர்ந்து ஆதரவு வழங்கி என்னை எழுத ஊக்கப்டுத்தும் அனைத்து வாசகர்கள்..நண்பர்கள் அனைவருக்கும் என் மன மார்ந்த நன்றிகள்......
ஒரு சிறப்பு நன்றி
தனிமரம் நேசன் அண்ணா
இது ஏன் என்று சொல்வதில் எனக்கு ஓரு பிரச்சனையும் இல்லை ஆனால் அவரின் நல்ல மனதுக்கு சங்கடம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் ஏன் சிறப்பு நன்றி சொல்கின்றேன் என்று சொல்லவில்லை.ஏன் என்று அவருக்குத்தெரியும்.

தவராமல் ஓட்டுபோட்டு கருத்துரைகளை கூறி என்னைஊக்கப்படுத்தும் சகபதிவர்கள் நண்பர்கள் இந்தலிஸ்ட் நீளம் என்பதால் ஒவ்வொறு பதிவர்களும் எனக்கு எப்படி அறிமுகமானார்கள் என்று ஒரு பதிவு அடுத்து போடயிருக்கின்றேன் அதில் தனித்தனியாக நன்றி சொல்கின்றேன்.

நன்றி...







Post Comment

70 comments:

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி
100வது பதிவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

பால கணேஷ் said...

நூறாவது பதிவுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் ராஜா. பிராட்மேன் ஆடிய காலத்தில் இவ்வளவு ஆட்டங்கள் ஆட முடிந்திருந்தால் இன்னும் பல சாதனைகள் படைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அவர் தனிதான். சச்சினை காலிஸ் விஞ்சுவது... ஒருக்கால் சாத்தியனாமாலும் சச்சின் சச்சின்தான்! உங்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

காட்டான் said...

கலீஸ் இந்தியா,பாகிஸ்தான்'இலங்கை போற்ற ஏதாவது ஒரு நாட்டில் பிறந்திருந்தால் இன்னும் அதிக புகழ் அடைந்திருப்பார் அவரை விட புகழடைந்த சிலர் அவரை விட சிறப்பாக விளையாடுகிறார்களா என்ன..!!!!???

Yaathoramani.blogspot.com said...

100 வது பதிவாகவும் அது சச்சின் பதிவாகவும்
அமைந்துள்ளது எத்தனைப் பொருத்தம்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய ஒப்பீடு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

100 வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
 இது இன்னும் ஆயிரம் பதிவுகளாக வளரனும்  உங்கள் திறமைக்கு நீங்கள் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம்.
சிறப்பு நன்றி என்று சொல்லி என்னை தூரத்தில் வைத்துவிடாதீர்கள் என்றும் ராச்சுடன் ஒரு வாசகனாக ,சகபதிவாளராக, நண்பனாக கூட வருவதே என் விருப்பம்.

தனிமரம் said...

கிரிக்கட்டில் நான் கருத்துச் சொல்வதில்லை . சச்சின் மீது எனக்கு மரியாதை இருக்கு எந்தச் சூழ்நிலையிலும் தன் நிதானம் தவறியது இல்லை.

தனிமரம் said...

அடுத்த பதிவில் கருத்துக்களுடன் சந்திப்போம்.

Riyas said...

எந்த வீரரையும் எந்த வீரருடனும் ஒப்பிட முடியாது..

பிரட்மனும் சிறந்தவர்
சச்சினும் சிறந்தவர்
கலிசும் சிறந்தவர்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை..

K.s.s.Rajh said...

@காட்டான்

நன்றி மாம்ஸ் உங்களைபோன்றவர்களின் ஆசிகளே இன்னும் என்னை நிறைய எழுதத்தூண்டும்...

K.s.s.Rajh said...

@
கணேஷ் கூறியது...
நூறாவது பதிவுக்கு முதலில் என் வாழ்த்துக்கள் ராஜா. பிராட்மேன் ஆடிய காலத்தில் இவ்வளவு ஆட்டங்கள் ஆட முடிந்திருந்தால் இன்னும் பல சாதனைகள் படைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அவர் தனிதான். சச்சினை காலிஸ் விஞ்சுவது... ஒருக்கால் சாத்தியனாமாலும் சச்சின் சச்சின்தான்! உங்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்/////

தீபாவளி வாழ்த்துக்கள் சார்...
நன்றி சார்

K.s.s.Rajh said...

@காட்டான் கூறியது...
கலீஸ் இந்தியா,பாகிஸ்தான்'இலங்கை போற்ற ஏதாவது ஒரு நாட்டில் பிறந்திருந்தால் இன்னும் அதிக புகழ் அடைந்திருப்பார் அவரை விட புகழடைந்த சிலர் அவரை விட சிறப்பாக விளையாடுகிறார்களா என்ன..!!!!??////

ஆமா மாம்ஸ் ஓருவேளிஅ கலிஸ் இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை போன்ற நாட்டில் பிறந்திருந்தால் சிலவேளை அவர் புகழின் உச்சிக்கு சென்று இருக்கலாம் ஆனால் அவர் கிரிக்கெட்டில் சிலவேளை காணாமலும் போய்யிருப்பார்

K.s.s.Rajh said...

@
K.s.s.Rajh கூறியது...
@காட்டான் கூறியது...
கலீஸ் இந்தியா,பாகிஸ்தான்'இலங்கை போற்ற ஏதாவது ஒரு நாட்டில் பிறந்திருந்தால் இன்னும் அதிக புகழ் அடைந்திருப்பார் அவரை விட புகழடைந்த சிலர் அவரை விட சிறப்பாக விளையாடுகிறார்களா என்ன..!!!!??///

சரியாகச்சொன்னீங்க மாம்ஸ் ஆனால் சிலவேளை அவர் கிரிக்கெட்டைவிட்டு கானாமலும் போய்யிருப்பார்

K.s.s.Rajh said...

@
Ramani கூறியது...
100 வது பதிவாகவும் அது சச்சின் பதிவாகவும்
அமைந்துள்ளது எத்தனைப் பொருத்தம்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Online Works For All கூறியது...
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html/////

தகவலுக்கு நன்றி

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
அழகிய ஒப்பீடு../////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
100 வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்./////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
இது இன்னும் ஆயிரம் பதிவுகளாக வளரனும் உங்கள் திறமைக்கு நீங்கள் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம்.
சிறப்பு நன்றி என்று சொல்லி என்னை தூரத்தில் வைத்துவிடாதீர்கள் என்றும் ராச்சுடன் ஒரு வாசகனாக ,சகபதிவாளராக, நண்பனாக கூட வருவதே என் விருப்பம்////

நன்றி பாஸ் நன்றி சொல்லனும் என்று தோனிச்சு அதான் பாஸ்..உங்களைப்போன்றோர்களின் அன்பும் ஆதரவும் இருந்தால் பதிவுலகில் இன்னும் நிறைய தூரம் போகலாம்.நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
கிரிக்கட்டில் நான் கருத்துச் சொல்வதில்லை . சச்சின் மீது எனக்கு மரியாதை இருக்கு எந்தச் சூழ்நிலையிலும் தன் நிதானம் தவறியது இல்லை/////

ஆம் பாஸ் நானும் தனிப்பட்ட ரீதியில் சச்சினுக்கு ரசிகன் இல்லை அவர்து இந்தக்குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
அடுத்த பதிவில் கருத்துக்களுடன் சந்திப்போம்////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
Riyas கூறியது...
எந்த வீரரையும் எந்த வீரருடனும் ஒப்பிட முடியாது..

பிரட்மனும் சிறந்தவர்
சச்சினும் சிறந்தவர்
கலிசும் சிறந்தவர்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை./////

ஆம் நண்பா ஓவ்வொறு வீரருக்கும் ஓவ்வொறு தனித்தன்மையுண்டு..

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆ... 100 ஆவது பதிவோ....

வாழ்த்துக்கள் ராஜ் வாழ்த்துக்கள்....

வேல்ட் கப்பில் இலங்கை வென்ற நேரம் மச் பார்த்ததுக்கு, கிரிக்கெட்டே பார்ப்பதில்லை.... அவ்வ்வ்வ்வ்:))).. நீங்க எழுதுங்க.

Unknown said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
கலக்கல் பதிவு மாப்ள...கலக்கிபுட்டீங்க...ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவம் இருக்குங்க!..நன்றி!

kaialavuman said...

இதில் மற்றொன்றையும் பார்க்கவேண்டும் நண்பரே. காலிஸ் திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவரை ப்ராட்மேனுடம் ஒப்பிடாதமைக்கு முக்கிய காரணம் அவரது style. அவர் மெதுவாக விளையாடக் கூடியவர். அதாவது, திராவிட் மாதிரியான ஆட்டக் காரர். லாரா, பாண்டிங், சச்சின் ஆகியோர் ப்ராட்மேன் போல அதிரடி ஆட்டக்காரர்கள். பாண்டிங் நிச்சயமாக ப்ராட்மேன் போன்ற ஜெண்டில் மேன் இல்லை.

இது போன்ற காரணங்களைத் தவிர ப்ராட்மேனே தன் போல் (இங்கே Style-ஐ தான்) விளையாடுவதாக வேறு குறிப்பிட்டுள்ளது ஒரு கூடுதல் மதிப்பு (plus point) தருவதாலும் அவருடைய ரசிகர்கள் அப்படி நினைக்கலாம்.

மற்றபடி, ஒரு வீரருடன் மற்றொரு வீரரை ஒப்பிடுவது, அதுவும் அவர்களுடைய காலம் மற்றும் சூழல் வேறுவேறாக இருக்கும் பொழுது, சரியில்லை என்றேத் தோன்றுகிறது.

நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் நூறுக்கு..

Riyas said...

100வது பதிவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

Before i forgot sorry friend,

சம்பத்குமார் said...

100 வது பதிவுக்கு நெஞ்சார்ந்த மனப்பூர்வ வாழ்த்துக்கள் நண்பரே..

தொடரட்டும் உங்கள் சாதனைகள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

M.R said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

அனைத்திலும் வாக்களித்தேன்
தமிழ் மணம் ஏழாவது வாக்கு

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா

சென்னை பித்தன் said...

சதங்கள் அடித்துச் சாதனை படைத் தவரைப் பற்றிய உங்கள் சதப் பதிவு அருமை.
வாழ்த்துகள்.

Unknown said...

ம்ம் நல்லதொரு பார்வை!!
சச்சின் என்ற நாமம் இருந்திடாவிடில் கலீசை உலகமே கொண்டாடி இருக்கும்!!
நன்றிகள்-பதிவாக்கியமைக்கு
வாழ்த்துக்கள்-நூறு பதிவுகளுக்கு,மற்றும் தீபாவளிக்கு!!

சுதா SJ said...

மச்சி 100 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
நமக்கு 30 தாண்டவே மூச்சு முட்டுது
இதில் உங்க 100 வது பதிவு.. சாதனைதான்.

இன்னும் இன்னும் வளர நன்பனாக என் வாழ்த்துக்கள். வேலைப்பளு காரணமாக கருத்து போட முடியாவிட்டாலும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கேன்.

அப்புறம்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மச்சி ^_^

தீபாவளி அன்று வேலை என்று அலையாமல் ப்ரியா(வுடன்) இருந்து எஞ்சோஜ் பண்ண என் வாழ்த்துக்கள்..
ஹீ ஹீ ( ஜோக் மச்சி.. கோவிச்சுக்காத.,)

அம்பாளடியாள் said...

முதல் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ அப்புறம்
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

ரைட்டர் நட்சத்திரா said...

100 பதிவுகளுக்கு பாரட்டுக்கள்
நண்பரே. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் மச்சான்சார்,
நலமா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் உளம் கனிந்த இனிய இன்பத் தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஒப்பீட்டு அலசலைப் பற்றிச் சொல்லி, கடைசியில் ஒவ்வோர் வீரர்களுக்கும் திறமை இருக்கும் எனக் கூறியிருப்பது பதிவிற்கு நச்.

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் காத்திரமான பதிவுகளை எழுதிடவும் வாழ்த்துக்கள்!

Unknown said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் நண்பனுக்கு .
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

K.s.s.Rajh said...

@athira
/////
athira கூறியது...
ஆ... 100 ஆவது பதிவோ....

வாழ்த்துக்கள் ராஜ் வாழ்த்துக்கள்....

வேல்ட் கப்பில் இலங்கை வென்ற நேரம் மச் பார்த்ததுக்கு, கிரிக்கெட்டே பார்ப்பதில்லை.... அவ்வ்வ்வ்வ்:))).. நீங்க எழுதுங்க/////
ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.....நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@விக்கியுலகம்
////
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
கலக்கல் பதிவு மாப்ள...கலக்கிபுட்டீங்க...ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவம் இருக்குங்க!..நன்றி////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@வேங்கட ஸ்ரீனிவாசன்
////இதில் மற்றொன்றையும் பார்க்கவேண்டும் நண்பரே. காலிஸ் திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவரை ப்ராட்மேனுடம் ஒப்பிடாதமைக்கு முக்கிய காரணம் அவரது style. அவர் மெதுவாக விளையாடக் கூடியவர். அதாவது, திராவிட் மாதிரியான ஆட்டக் காரர். லாரா, பாண்டிங், சச்சின் ஆகியோர் ப்ராட்மேன் போல அதிரடி ஆட்டக்காரர்கள். பாண்டிங் நிச்சயமாக ப்ராட்மேன் போன்ற ஜெண்டில் மேன் இல்லை.

இது போன்ற காரணங்களைத் தவிர ப்ராட்மேனே தன் போல் (இங்கே Style-ஐ தான்) விளையாடுவதாக வேறு குறிப்பிட்டுள்ளது ஒரு கூடுதல் மதிப்பு (plus point) தருவதாலும் அவருடைய ரசிகர்கள் அப்படி நினைக்கலாம்.

மற்றபடி, ஒரு வீரருடன் மற்றொரு வீரரை ஒப்பிடுவது, அதுவும் அவர்களுடைய காலம் மற்றும் சூழல் வேறுவேறாக இருக்கும் பொழுது, சரியில்லை என்றேத் தோன்றுகிறது.

நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்////

ஆம் பாஸ் ஓவ்வொறு வீரருக்கும் ஒரு தனித்திறமையிருக்கும்...

வாழ்த்துக்கு நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!\
////வாழ்த்துக்கள் நூறுக்கு////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Riyas

////100வது பதிவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

Before i forgot sorry friend/////

அட இதுல என்ன நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@சம்பத்குமார்

/////100 வது பதிவுக்கு நெஞ்சார்ந்த மனப்பூர்வ வாழ்த்துக்கள் நண்பரே..

தொடரட்டும் உங்கள் சாதனைகள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்/////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@M.R
////நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

அனைத்திலும் வாக்களித்தேன்
தமிழ் மணம் ஏழாவது வாக்கு

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா////

நன்றி பாஸ் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@சென்னை பித்தன்

////சென்னை பித்தன் கூறியது...
சதங்கள் அடித்துச் சாதனை படைத் தவரைப் பற்றிய உங்கள் சதப் பதிவு அருமை.
வாழ்த்துகள்////

நன்றி ஜயா

K.s.s.Rajh said...

@மைந்தன் சிவா
வாங்க பாஸ்..உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி எழுதியிருக்கேனா என்று தெரியவில்லை எனக்கு வந்தை எழுதியுள்ளேன்...கலீஸ் மிகச்சிறந்த வீரர் அதில் யாரும் எந்த மாற்க்கருத்தும் சொல்லமுடியாது...

வாழ்த்துக்கு நன்றி..பாஸ் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

////மச்சி 100 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.
நமக்கு 30 தாண்டவே மூச்சு முட்டுது
இதில் உங்க 100 வது பதிவு.. சாதனைதான்.

இன்னும் இன்னும் வளர நன்பனாக என் வாழ்த்துக்கள். வேலைப்பளு காரணமாக கருத்து போட முடியாவிட்டாலும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கேன்.

அப்புறம்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மச்சி ^_^

தீபாவளி அன்று வேலை என்று அலையாமல் ப்ரியா(வுடன்) இருந்து எஞ்சோஜ் பண்ண என் வாழ்த்துக்கள்..
ஹீ ஹீ ( ஜோக் மச்சி.. கோவிச்சுக்காத.,/////

ஏன்யா ஏன்............ஹி.ஹி.ஹி.ஹி........நன்றி மச்சி உங்களுக்கும் வாழ்த்துக்கள்.....

K.s.s.Rajh said...

@அம்பாளடியாள்

நன்றி மேடம் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@கார்த்தி கேயனி

நன்றி பாஸ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@நிரூபன்

வாங்க பாஸ் நீங்களும் சரன்யாவை தங்கைச்சியாக பார்க்கதொடங்கிவிட்டீங்க போல நன்றி..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

100 வது பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...சதம் அடித்த சாதனை பற்றிய பதிவு மேட்சுக்கு மேட்ச்.

மாய உலகம் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

F.NIHAZA said...

100 வது பதிவா....
கலக்குங்கள் சகோ.....

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்....

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

K.s.s.Rajh said...

@யானைக்குட்டி@ ஞானேந்திரன்

நன்றி நண்பா..தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@சி.பி.செந்தில்குமார்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@மாய உலகம்

நன்றி நண்பா உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@F.NIHAZA

நன்றி சகோதரி

K.s.s.Rajh said...

@ரெவெரி

நன்றி நண்பா

ம.தி.சுதா said...

முதலில் தங்களது சதத்திற்கு வாழ்த்துக்கள்...

ம.தி.சுதா said...

சச்சின் உண்மையிலேயே சிறந்த வீரர் தான்... அனால் பிரட்மனோடு ஒப்பிட எனக்குத் தெரியவில்லையப்பா..

காரணம் அந்த காலத்தான் மைதானத்தின் விஸ்திரணம்...

காப்பு உபகரணங்கள் இல்லாமை.. என பல சொல்லலாம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

இராஜராஜேஸ்வரி said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

@♔ம.தி.சுதா♔

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@இராஜராஜேஸ்வரி

நன்றி பாஸ்

Unknown said...

வாழ்த்துக்கள் சகோ 100 வது பதிவிற்கு..
இன்னும் பல சாதனைகள் செய்து பெருமை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்..


நல்ல அலசல் மற்றும் ஒப்பீடு இந்த பதிவு.

சென்னை பித்தன் said...

சதங்களில் சாதனை படைத்தவர் பற்றிய பதிவு உங்கள் நூறாவது பதிவு!நன்று.

Mohamed Faaique said...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 111வது பதிவு’னு ஒரு எழுதிய ஞாபகம்.... என்னங்க நடக்குது???

உங்கள் ஆராய்ச்சி சரியாகத்தான் இருக்கு...

K.s.s.Rajh said...

@Mohamed Faaique

மன்னிக்கவேண்டும் பாஸ் இது நான் முன்பு எழுதிவெளியிட்ட பதிவு
இன்று தளத்தை எடிட்டிங் வேலை செய்யும் போது ரீட்மோர் ஆப்சன் எல்லாப்பதிவுகளுக்கும் செட்பன்னும் போது தவறுதலாக மீண்டும் பப்ளிஸ் ஆகிவிட்டது அதான் எல்லோறுடைய டாஷ்போட்டிலும் தோன்றியிருக்கும் சந்தேகம் இருந்தால் மேல பாருங்கள் எத்தின யாம் திகதிவெளியிட்டு இருக்கேன் என்று தவறுக்கு வருந்துகின்றேன்

K.s.s.Rajh said...

மன்னிக்கவேண்டும் நண்பர்களே இது நான் முன்பு எழுதிவெளியிட்ட பதிவு
இன்று தளத்தை எடிட்டிங் வேலை செய்யும் போது ரீட்மோர் ஆப்சன் எல்லாப்பதிவுகளுக்கும் செட்பன்னும் போது தவறுதலாக மீண்டும் பப்ளிஸ் ஆகிவிட்டது அதான் எல்லோறுடைய டாஷ்போட்டிலும் மீண்டும் தோன்றியிருக்கு சந்தேகம் இருந்தால் மேல பாருங்கள் எத்தின யாம் திகதிவெளியிட்டு இருக்கேன் என்று தவறுக்கு வருந்துகின்றேன்....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சதத்திற்கு வாழ்த்துக்கள் .

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails