”சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லுமப்பா”
நிஜமான பாடல் வரிகள் இவை. எனக்கு மட்டுமா இவரை பிடிக்கும் ஓவ்வொரு சினிமா ரசிகனுக்கும் இவரை பிடிக்கும்.ரஜனி போல முடியை ஸ்டைலாக கோதாத சினிமா ரசிகன் யாரும் இருக்க முடியுமா?
என் சின்ன வயதில் இருந்தே நான் ரசித்துவரும் ஒரு மனிதர் ரஜனி சார்,எனக்கு இவரில் பிடித்தது இவரது எளிமைதான் பணம்,புகழ் அளவுக்கு அதிகமாக இருந்ததும் எளிமையாக இருக்கும் இவரது பண்பு சிறப்பானது.
நான் எந்த நடிகருக்கும் தனிப்பட்ட ரீதியில் ரசிகன் கிடையாது ஓவ்வொரு நடிகரையும் ஓவ்வொறு காரணத்துக்காக பிடிக்கும் எல்லா நடிகர்களின் படங்களும் பார்பேன்.
அப்படி என்னிடம் இல்லை இல்லை உனக்கு பிடித்த ஒரு நடிகரை கட்டாயம் சொல்லவேண்டும் என்று கேட்டால் முதலில் வருவது ரஜனி சாரின் பெயர்தான்.
பாடசாலையில் படிக்கிறகாலங்களில் ரஜனி சாரை போல மிமிக்கிரி ப்ராக்டிஸ் பண்ணி ஆசிரியரிடம் வாங்கி கட்டிய அனுபவம் எல்லாம் நிறைய உண்டு.எப்படியாவது ரஜனி சார் போல பேசவேண்டும் என்று முயற்சி செய்து கடைசிவரை எனக்கு அவரின் குரல் வரவேயில்லை பின் ஓரளவு வந்தது ஆனால் முழுமையாக அவரின் குரலில் மிமிக்கிரி பண்ண முடியவில்லை.
சரி த்ரிஷா இல்லாட்டி திவ்யா என்று மனசை தேத்திக்கொண்டு.ரஜனி சாரின் குரல் வராததினால் நான் ரகுவரன் மாதிரி நன்றாக பேசுவேன் என்பதாலும்(இப்ப டச் விட்டு போச்சி ஆனால் சில தடவை முயற்சி செய்தால் பேச முடியும்)என் நண்பன் ஒருவன் பாட்ஷா படத்தில் ரஜனி சார் பேசும் வசனங்கள் எல்லாம் அப்படியே அவரது ஸ்டைலில் பேசுவான்.அவன் ரஜனி சார் போல பேச நான் ரகுவரன் ஸ்டைலில் எடுத்து விடுவேன்.
மிமிக்கிரி மீதான ஆர்வத்தினால் அலைந்து திரிந்த காலம் அது,ரகுவரன்,எம்.ஜி.ஆர்.மன்சூர் அலிகான்,கருணாநிதி,தசவதாரம் படத்தில் பலராம் நாய்டு கமல் வாய்ஸ்,கங்கை அமரன், கேப்டன் விஜயகாந்,இப்படி சிலரின் குரலின் மிமிக்கிரி பண்ணுவேன் ஆனால் ரஜனி சாரின் குரலும்,பிரகாஸ் ராஜ் இன் குரலும் கடைசி வரை வரவேயில்லை .
அதுக்கு பிறகு மிமிக்கிரி மீதான ஆர்வம் குறைந்து பல வருடங்கள் ஓடிவிட்டது.இப்ப கூட டி.வியில் ரஜனி சாரின் படங்கள் போனால் அவரை போல பேச முயற்சிப்பது உண்டு ஆனால் பல்புதான் கிடைக்கும் அவர் குரல் வரவே வராது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ரஜனி சாரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்று குறிப்பிட்டு சொல்வது கடினம் பெரும்பாலும் அவரின் எல்லாப் படங்களும் பிடிக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த அவரது படங்களில் 10 படத்தை சொல்லச்சொன்னால்
- முள்ளும் மலரும்,
- எங்கேயோ கேட்ட குரல்,
- தில்லு முல்லு
- முரட்டுக்காளை
- பாட்ஷா
- படையப்பா
- சந்திரமுகி
- ஜானி
- படிக்காதவன்
- எஜமான்
ரஜனி சார் வில்லனாக நடித்த டங்களில் மிகவும் பிடித்தது
- மூன்று முடிச்சு,
- 16 வயதினிலே.
ரஜனிகாந் என்ற சொல் எத்தனை சினிமா ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளது ”இவன் பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா” சின்னக் குழந்தை முதல் பெரியவர் வரை எல்லா வயதினரையும் தன் ஸ்டைலால் கவர்ந்த ரஜனிசார் உண்மையில் ஸ்டையில் மன்னன் தான்.
”கமல் 50”என்ற கமல் சாரின் 50 ம் ஆண்டு திரைப்பயணத்தை கெளரவப் படுத்திய விழாவில் பேசும் போது ரஜனி சார் எந்த பந்தாவும்,ஈகோவும் இல்லாமல் கமலை உயர்த்தி தன்னை தாழ்த்தி பேசினார். கமல் சார் கூட குறிப்பிட்டார் ரஜனி இப்படி தன்னை தாழ்த்தி பேசவேண்டிய எந்த தேவையும் இல்லை ஆனால் இதுதான் அவரது குணம் நான் பகிரங்கமாக சவால் விடுகின்றேன் என்னைப்போல ரஜனியை போல சிறந்த நண்பர்கள் எவனும் இல்லை என்று.
இதுதான் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் இன்றும் உயர்ந்து நிற்க காரணம்.
கமல் 50 விழாவில் ரஜனி சார் பேசும் வீடியோ
தமிழ் சினிமாவில் என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் அது ரஜனி சார் தான்.
அடுத்த வாரம் இன்னும் ஒரு துறையைச் சேர்ந்த என்னைக் கவர்ந்த ஒரு பிரபலம் பற்றி பார்ப்போம்
படங்கள்-கூகுள்
வீடியோ-you tube
|
12 comments:
வணக்கம் ராஜ்!சூப்பர்!!!!!ஸ்டார்!
ஆள் கடையைப் பூட்டிப்போட்டு வேலைக்குப் போட்டுது போல?வாறவை வெளியில நிண்டு ஷோ கேசில (பதிவு)இருக்கிற பொருள்களைப் பாத்திட்டு,ஓடர்(கொமென்ட்)போட்டிட்டுப் போவேணும் போல?பிறகு,அவர் வந்து பாத்து ஓடர் வந்த பொருள்கள அனுப்புவார் போல(பதில்)!!!ஹி!ஹி!ஹி!!!!
ரஜினி ரஜினிதான்.
வணக்கம் ராஜ்,
என்னது மிமிகிரி செய்வீங்களா??? சொல்லவே இல்ல.. பெரிய ஆளுதான் நீங்க... வாழ்த்துக்கள். அருமையான அலசல் வழமை போலவே உங்கள் பாணியில். யாருக்குத்தான் ரஜினியை பிடிக்காமல் போகும். நானும் ஒரு ரஜினி ரசிகன். அருமையான பதிவிற்கு நன்றிகள்.
அருமை...நம்ம தலைவரை பத்தி படிக்கும் போது...
நல்ல பதிவு ! எளிமை = ரஜினி ! நல்ல நண்பர்களுக்கு உதாரணம் : கமல் ரஜினி ! சூப்பர் ! வாழ்த்துக்கள் நண்பரே !
சென்னையை விட்டு வந்தாச்சோ ராஜ்?.... ரஜனியை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். நல்ல பகிர்வு.
அங்கு யாரை எல்லாம் சந்தித்தீங்க? நடிகர்களில்?
சூப்பர் ஸ்டாரை யாருக்குத்தான் பிடிக்காது.நல்ல பகிர்வு நன்றி.
நண்பரே தலைவர் பற்றி பதிவு எழுதி நெகிழ செய்து விட்டீர்கள். நீங்கள் மிமிக்ரி செய்வீர்களா? நானும் ஓரளவுக்கு நன்றாக மிமிக்ரி செய்வேன். மிக்க மகிழ்ச்சி
ஆள் கடையைப் பூட்டிப்போட்டு வேலைக்குப் போட்டுது போல?வாறவை வெளியில நிண்டு ஷோ கேசில (பதிவு)இருக்கிற பொருள்களைப் பாத்திட்டு,ஓடர்(கொமென்ட்)போட்டிட்டுப் போவேணும் போல?பிறகு,அவர் வந்து பாத்து ஓடர் வந்த பொருள்கள அனுப்புவார் போல(பதில்)!!!ஹி!ஹி!ஹி!!!!
ரஜனியின் படத்தில் 6இருந்து 60 வரை, நல்லவனுக்கு நல்லவன்.பணக்காரன் ,நீண்ட பட்டியல் இருக்கு பிடித்த படங்கள் சொல்ல.ரஜனி ஒரு ஜீனியஸ்!
நேரம் இன்மை காரணமாக நண்பர்களுக்கு தனித்தனியாக பதிலளிக்க முடியவில்லை மன்னிக்கவேண்டும் நண்பர்களே
ஆதிரா அக்கா ஆம் வந்துவிட்டேன் நான் மதுரைக்கு மட்டும் தான் போனேன் சென்னைக்கு போகவில்லை அடுத்த முறை இந்தியா போகும் போது சென்னைக்கு போகவேண்டும்
அனைவருக்கும் நன்றி நண்பர்களே.
Post a Comment