வணக்கம் நண்பர்களே இது எனது 200வது பதிவாகும்.1000ம் பதிவுகளை எல்லாம் எழுதிய பதிவர்கள் இருக்கும் இந்த பதிவுலகில் 200 பதிவு ஒன்று பெரியவிடயம் இல்லை. ஆனால் சச்சின் இருக்கு அதே கிரிக்கெட் பீல்டில்தானே ஷாகிப் அல்ஹசனும் இருக்கின்றார்.சூப்பர் ஸ்டார் இருக்கும் சினி பீல்டில் தானே நடிகர் ஜெய்யும் இருக்கின்றார்.எனவே எனக்கும் 200 பதிவு என்பது ஒரு சிறப்புத்தான்.
என் பதிவுலக பயணம் கிட்ட தட்ட இரண்டும் வருடம் ஆகப் போகின்றது என் பதிவுலக பயணத்தில் என்னை ஊக்குவித்து ஆதரவு வழங்கியவர்கள் பலர்
பதிவுலகில் இதுவரை 3விருதுகளை பெற்று இருக்கின்றேன். விகடனில் குட் ப்ளாக்காக என் தளம் பலமுறை தெரிவாகியிருக்கின்றது.தமிழ் மணம் டாப்-20 இல் பலவாரங்கள் இடம் பெற்று இருக்கின்றேன். அதிக பட்சமாக 4ம் இடம் கிடைத்திருக்கு.திரட்டிகளில் என் பல பதிவுகள் பிரபலம் ஆகியிருக்கு ஏன் பல பிரபல இணைய தளங்களே என் பதிவுகளை காப்பி அடிக்கும் அளவுக்கு என் பதிவுகள் இருந்திருக்கு என்பது எனக்கு பெருமையே ஹி.ஹி.ஹி.ஹி......
ஆனால் இவை எல்லாவற்றையும் விட பதிவுலகில் நீ என்ன சாதித்தாய் என்றால் உலகில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் முகம் தெரியாத உறவுகள் பலரை அக்கா,அண்ணா,மாம்ஸ்,சகோதரன்,சகோதரி என்று இந்த பதிவுலகின் மூலம் எனக்கு கிடைத்திருக்கின்றார்கள் இதைவிட வேறு என்ன வேணும்.
நான் எல்லாம் பதிவெழுத வருவேன் என்று எப்போதும் நினைத்தது இல்லை பதிவுலகம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.ஒரு பிரபல இலங்கை பதிவரின் கிரிக்கெட் பதிவுகளை எதேர்சையாக இனையத்தில் வாசிக்க கிடைத்த போது
அவரது கிரிக்கெட் பதிவுகளால் கவரப் பட்டு எனக்கும் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்ததால் ஏன் நானும் ஒரு கிரிக்கெட் பதிவு எழுதும் தளம் ஆரம்பிக்க கூடாது என்று தோன்றியது அதன் விளைவே நண்பர்கள் தளம் ஆரம்பத்தில் கிரிக்கெட் பதிவுகளை மாத்திரம் அதிகமாக எழுதிவந்தேன். அதன் பின் பலதரப் பட்டவிடயங்களையும் எழுது அப்போதுதான் உன் தளம் பலரால் படிக்கப் படும் என்று ஆலோசனை வழங்கி என்னை ஊக்குவித்த நாற்று குழும நிறுவணர் திரு நிரூபன் அவர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகள்.
நான் பதிவுலகில் அறியப்படாதவனாக இருந்த காலத்தில் இருந்து இன்றுவரை என்னக்கு ஊக்கமும் என் பதிவுகள் பற்றிய விமர்சனங்களையும் தவராமல் கூறும்.என் பதிவுலக பயணத்தின் என் கூடவே பயணிக்கும் சக பதிவர் அருமை அண்ணன் நண்பர் பாலாவின் பக்கங்கள் பாலா அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பதிவுலகில் அறிமுகமாகி கூடப் பிறந்த ஒரு சகோதரனைப்போல என்னிடம் அன்பு செலுத்தும் என் பதிவுகள் பற்றிய நிறைகுறைகளை சொல்லி இன்றுவரை என்னை ஊக்கப் படுத்தும் அருமை அண்ணன் தனிமரம் நேசன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகள்.
ஒரு காலத்தில் காட்டான் என்ற பெயரில் திரு நிரூபன் அவர்களின் பதிவுகளிலும் ஜடியாமணியின் பதிவுகளிலும் ஒருவர் கும்மி அடிப்பார்.அவரை எல்லோறும் காட்டான் மாமா என்று அழைப்பார்கள் பல தடவைகள் நான் மனதில் நினைத்ததுண்டு இவர் எல்லாம் நம்ம பதிவுகளில் வந்து கும்மி அடிப்பாரா என்று.மிகவிரைவில் அது நடந்தது எனது பதிவுகளில் பலரால் படிக்கப் பட்டது என் தளத்திற்கு ஒரு அங்கீகாரம் வாங்கித்தந்ததுமான மறக்கமுடியாத பாடசாலைக்காலங்கள் தொடரில் காட்டான் மாமா என் தளத்திற்கு முதன் முதலில் வருகை தந்தார்.அன்றில் இருந்து இன்றுவரை அவர் எனக்கு வழங்கிவரும் ஆதரவு மிகப்பெரியது.
ஒரு முறை நாற்று குழுமத்தில் ஏற்பட சில மனக்கசப்புக்களின் போது என் மீது நம்பிக்கை வைத்து காட்டான் மாமா எனக்காக பேசிய தருனங்கள் என்றும் மறக்கமுடியாதவை அந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக பேசிய பதிவர் கந்தசாமி,மற்றும் பதிவர் துஷி இருவருக்கும் அப்போது என்னால் நன்றி சொல்லமுடியவில்லை. எனவே இந்தப் பதிவின் ஊடாக நன்றிகள் நண்பர்களே.ஆனாலும் இவர்களுக்கு என்னில் ஒரு சின்னக்கோபம் இருக்கத்தான் செய்தது காரணம் இவர்கள் எவ்வளவோ சொல்லியும் நான் இவர்கள் பேச்சை கேட்காமல் நாற்று குழுமத்தில் இருந்து விலகிவிட்டேன்.இதனால் இவர்களுக்கு என்மீது சற்று கோபம் இருக்கும் என்று நினைக்கின்றேன் மன்னிக்கவேண்டும் நண்பர்களே.(தற்போது நாற்றுகுழுமத்தில் மீண்டும் இணைந்துவிட்டேன்)
மறக்கமுடியாத பாடசாலைக்காலங்கள் என்ற தொடர் எனக்கு பல அற்புதமான நண்பர்களை பெற்றுத்தந்தது. கோகுல் மனதில் கோகுல்,ஆகுலன்,துஷி,கந்தசாமி,திரு ஜடியாமணி,M.R ,வேடந்தாங்கல் - கருன், காந்தி பனங்கூர் , kobiraj, முனைவர்.இரா.குணசீலன், M.Shanmugan, Riyas, செங்கோவி பாஸ், "என் ராஜபாட்டை"- ராஜா, பிரணவன்,மதுரன், Loganathan Gobinath, கார்த்தி கேயனி, thalir, Mohamed Faaique,கவிதை வீதி # சௌந்தர், மாலதி ,
அகாதுகா அப்பாடக்கர்ஸ் ப்ளாக் நண்பர்கள் டாக்டர் புட்டி பால்,மற்றும் மொக்க ராசு
மேலே சொன்னவர்களில் ஒரு சிலரை தவிற ஏனையவர்கள் பதிவுலகில் நான் மிகவும் நெருங்கி பழகும் நண்பர்களாக மாறிவிட்டார்கள்.
அதிலும் இந்த தொடர்முழுவதும் மிகவும் ஆர்வமுடன் என்னுடன் பயணித்தவர்களில் துஷி குறிப்பிடத்தக்கவர்ஒருவர்.மிக்க நன்றி நண்பா
இதில் பலரது பெயர்கள் தவறவிடப் பட்டுஇருக்கலாம் மன்னிக்கவேண்டும் நண்பர்களே.அனைவருக்கும் நன்றிகள்.
அகாதுகா அப்பாடக்கர்ஸ் ப்ளாக் நண்பர்கள் டாக்டர் புட்டி பால்,மற்றும் மொக்க ராசு
மேலே சொன்னவர்களில் ஒரு சிலரை தவிற ஏனையவர்கள் பதிவுலகில் நான் மிகவும் நெருங்கி பழகும் நண்பர்களாக மாறிவிட்டார்கள்.
அதிலும் இந்த தொடர்முழுவதும் மிகவும் ஆர்வமுடன் என்னுடன் பயணித்தவர்களில் துஷி குறிப்பிடத்தக்கவர்ஒருவர்.மிக்க நன்றி நண்பா
இதில் பலரது பெயர்கள் தவறவிடப் பட்டுஇருக்கலாம் மன்னிக்கவேண்டும் நண்பர்களே.அனைவருக்கும் நன்றிகள்.
இப்படி பல நண்பர்களையும் பல வாசகர்களையும் என் தளத்திற்கு அள்ளித்தந்த பெருமை இந்த தொடரையே சாரும்.அதற்காக இந்த தொடரை நான் எழுத காரணமாக அமைந்த பிரியாவுக்கும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றிகள்.
சி.பி.செந்தில் குமார்,பன்னிக்குட்டி ராமசாமி,மாத்தியோசிமணி இவர்கள் எல்லாம் என் தளத்திற்கு வருவார்களா என்று ஏங்கிய நாட்கள் உண்டு,ஆனால் பின்பு இவர்களுடன் பாஸ் என்றும் தலைவர் என்றும்,மச்சான் சார் என்று பதிவுலகில் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு இன்றுவரை ஆச்சரியம் தான்,இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் தளத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் புலவர் இராமநுசம் ஜயா,சென்னைப் பித்தன் ஜயா,திரு மின்னல் வரிகள் கணேஸ் அண்ணன்,அம்பாளடியாள் அக்கா,ஆமினா அக்கா,அதிரா அக்கா,ராஜி அக்கா,லக்சுமி அம்மா,ஸாதிகா அக்கா, சம்பத்குமார், மாய உலகம் மாயா(இவர் தற்போது நம்முடன் இந்த உலகில் இல்லை), வேங்கட ஸ்ரீனிவாசன்,துரை டானியல்,தமிழ்வாசி பிரகாஸ் அண்ணன்,நம்ம விக்கி மாமா,வீடு சுரேஸ்குமார் அண்ணன்,அண்ணன் நாஞ்சில் மனோ,திரு ரமணி அவர்கள்,அருள், ஹாலிவுட்ரசிகன், Kumaran ,வந்தேமாதரம் சசி அண்ணன் சகாதேவன் , திண்டுக்கல் தனபாலன், ரெவெரி, மகேந்திரன், வை.கோபாலகிருஷ்ணன், நண்டு @நொரண்டு -ஈரோடு, Rathnavel, பி.அமல்ராஜ், மதுமதி, இராஜராஜேஸ்வரி,வரோ அண்ணன்,ம.தி.சுதா, N.H.பிரசாத்,ஹைதர் அலி, ஜீ, ஜ.ரா.ரமேஷ் பாபு,அம்பலத்தார் ஜயா,வெங்கட சீனிவாசன், சிந்தனைசிறகுகள் வலைப்பதிவின் ஓனர் அன்பு அக்கா Chamundeeswari Parthasarathy ,மற்றும் அவரது சகோதரன் மகேஸ்,மழை கழுவிய பூக்கள் அதிசயா,
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் இதில் யாருடைய பெயராவது விடுபட்டு இருந்தால் மன்னிக்கவேண்டும் நண்பர்களே.அவர்களுக்கும் நன்றிகள்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் இதில் யாருடைய பெயராவது விடுபட்டு இருந்தால் மன்னிக்கவேண்டும் நண்பர்களே.அவர்களுக்கும் நன்றிகள்
மதிப்பிற்குறிய யோகா ஜயா என் பதிவுகள் அனைத்திற்கும் தவறாமல் வந்து கருத்துரை வழங்குவார் யோகா ஜயாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அதைவிட என் பதிவுகளை வாசித்து பேஸ்புக் ஊடாக என் பதிவுகள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
என் பதிவுகளை பலரிடம் கொண்டு சேர்க்கும் அனைத்து திரட்டிகளுக்கும்,நண்பர்கள்தளத்தின் வாசகர்களுக்கும் மனமார்ந்த என் நன்றிகள்.
இதுவரை எழுதிய 199 பதிவுகளுக்கு 6121கருத்துரைகள் கிடைத்திருக்கின்றது தொடர்ந்து இந்த சிறியவனின் எழுத்துக்களுக்கு உங்கள் மேலான ஆதரவுதான் தொடர்ந்து எழுத உந்து சக்த்தியாகும்.தற்போது எல்லாம் இனைய இணைப்பு பிரச்சனை மற்றும் மனதில் உள்ள வலிகளால் அதிகம் எழுதமுடிவதில்லை எனினும் மனம் அமைதிகொள்ளும் போதும் நேரம் கிடைக்கும் போதும் கண்டிப்பாக எழுதுகின்றேன்.
இதில் முக்கியமான ஒருவரின் பெயர் குறிப்பிடவில்லை என்று அவரது ரசிகர்கள் கொந்தளிக்கவேண்டாம். நான் வேண்டும் என்றுதான் அவரின் பெயரை மேலே குறிப்பிடவில்லை.ஆரம்பத்தில் திரட்டிகளில் இண்ட்லியை தவிற வேறு எதிலும் இணைப்பது இல்லை காரணம் எனக்கு வேறு திரட்டிகள் பற்றி எதுவும் தெரியாது.அதைவிட திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளையும் என் தளத்தில் இணைத்திருக்கவில்லை அதை எப்படி இணைப்பது என்று நிரூபன் அவர்களின் ஆலோசனையில் நான் பின்பு இணைத்தாலும் முதன் முதலில் திரட்டிகளில் உன் பதிவை இணை அப்பதான் பலரை அது சென்று சேரும் என்று எனக்கு திரட்டிகள் பற்றி அறியத்தந்தவர் அப்போதைய பதிவுலகின் ஜங் சூப்பர்ஸ்டார்.
ஏன் அப்போதைய என்றால் இப்போது அவரு பேஸ்புக் பகிர்வுகளில் ஜங் சூப்பர்ஸ்டார். அதைவிட இப்போது பதிவுகள் அதிகம் எழுதுவது இல்லை.அவரது எழுத்துக்கள் வித்தியாசமானவை பெரும்பாலும் பலர் குறிபிட்ட விடயங்களை மட்டும்தான் எழுதுவார்கள் சிலவிடயங்களை எழுதுவது இல்லை ஆனால் கிரிக்கெட்,அரசியல்,மொக்கை,உள்ளூர் சினிமா முதல் உலக சினிமாவரை அத்தனைவிடயங்களையும் கலந்துகட்டி எழுதியவர்.ஹன்சிகா என்ற நடிகை பதிவுலகில் பிரபலமாக இவருதான் காரணம் இவரும் மாத்தியோசி மணியும் பதிவுலகில் ஹன்சிகாவுக்காக போட்ட அன்புச்சண்டைகள் ஏராளம்,அதன் வெளிப்பாடில் வந்த ஒரு உலகமகா மொக்கை பதிவுதான் ஜடியாமணி எழுதிய ”நான் எப்ப உனக்கு சமைஞ்சு விருந்தாகப் போறேனோ”என்று ஹன்சிகா எழுதுவது போல எழுதிய மொக்கை பதிவு.
இப்ப புரிந்திருக்கும் நான் யாரை குறிப்பிட்டேன் என்று ஆம் எங்கள் தானைத் தளபதி ஹன்சி முதல் ராதா மகள் கார்த்திகா வரை அனைவரையும் காதலித்த காதல்மன்னன்,பதிவுலகில் நடிகைளை ஜொள்ளுவதில் எங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருந்த அன்பு அண்ணன் திரு மைந்தன் சிவா தான்.
மேலே நகைச்சுவைக்காக மைந்தனை உரிமையுடன் கலாய்தாலும் என் பதிவுலக பயணத்தில் என்னை தூக்கிவிட்ட நண்பர்களுள் மைந்தனும் ஒருவர்
உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பா.
மேலே யாருக்காவது நன்றி கூற தவறியிருந்தால் அனைவருக்கும் நன்றி நண்பர்களே
ஒரு வாழ்த்து
அருமை அண்ணன் தனிமரம் நேசன் அவர்கள் எழுதிய மலையகத்தில் முகம் தொலைத்தவன் என்ற தொடரை வருகின்ற 12ம் திகதி மின்நூலாக வெளியிட இருக்கின்றார்.மேலதிக விபரங்களை நேசன் அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளாம்.அவரது மின்நூல் வெளியீடு சிறப்பாக அமையவும் அவரது முயற்சிகள் வெற்றி அடையவும் வாழ்த்துகின்றேன்.வாழ்த்துக்கள் அண்ணா
பதிவுலகம் மூலம் அறிமுகம் ஆகி பதிவுலகிற்கு அப்பால் சகோதரனாக,நண்பனாக,உறவுகளாக என் மீது அன்பு செலுத்தும் உங்கள் அன்புக்கு நான் என்ன செய்யப் போகின்றேன் என்று எனக்கு தெரியாது நண்பர்களே
எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கீகாரம் உங்கள் கைகளில்
ஒரு வாழ்த்து
அருமை அண்ணன் தனிமரம் நேசன் அவர்கள் எழுதிய மலையகத்தில் முகம் தொலைத்தவன் என்ற தொடரை வருகின்ற 12ம் திகதி மின்நூலாக வெளியிட இருக்கின்றார்.மேலதிக விபரங்களை நேசன் அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளாம்.அவரது மின்நூல் வெளியீடு சிறப்பாக அமையவும் அவரது முயற்சிகள் வெற்றி அடையவும் வாழ்த்துகின்றேன்.வாழ்த்துக்கள் அண்ணா
பதிவுலகம் மூலம் அறிமுகம் ஆகி பதிவுலகிற்கு அப்பால் சகோதரனாக,நண்பனாக,உறவுகளாக என் மீது அன்பு செலுத்தும் உங்கள் அன்புக்கு நான் என்ன செய்யப் போகின்றேன் என்று எனக்கு தெரியாது நண்பர்களே
எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கீகாரம் உங்கள் கைகளில்
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
*********************************************************************************
முஸ்கி-தலைப்பு இது எல்லாம் எதனால் நடந்தது?உங்கள் அன்பினால் நண்பர்களே.
|
49 comments:
ஏற்றகனவே நமக்கும் அவங்களுக்கு வாய்க்கா வரப்பு சண்டையிருக்கு....
என்ன சண்டையிருக்கு....
வாழ்த்துகள் மச்சி.,
பாட சாலை தொடர் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம் கிடைத்தது என நினைக்கிறேன்.
அப்போதிலிருந்து இப்போது வரை எப்போதும் வாசிக்கக்கூடிய பதிவுகளையே தந்து வருகிறீர்கள்.தொடரட்டும் உங்கள் எழுத்து ஆர்வம,வாழ்த்துகள்.
தனித்தனியவோ ஒட்டுமொத்தமாவே யாருக்கும் இங்கு நன்றி சொல்லனுமன்னு அவசியம் இல்ல ராஜா...
நண்பர்களுக்குள்ள நன்றி சொல்லிக்கிட்ட அது உண்மையான நட்பா இருக்காது...
என்ன நான் சொல்றது...
200 பதிவுகள் எழுதுவது என்பது சாதாரண விஷயம் இல்ல நண்பரே...
அதில் தங்களுடைய சிந்தனை முயற்சி ஆக்கம் ஆகியவை அடங்கியிருக்கிறது. நல்ல கருத்துகளோடு வரும் யாரும் இங்கு அடையாளம் காட்டப்படுவார்கள்...
தங்களுடைய படைப்புகள் இன்னும் இந்த பதிவுலகை அழகுப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை...
வாழ்த்துக்கள்...
டபுளுக்கு வாழ்த்துக்கள் ராஜா....
இன்னும் பல்சுவைகளில் கலக்க வாழ்த்துக்கள்
எங்கடா என்னோட பெயரை காணேல...பய புள்ள மறந்திடிச்சு போல நம்மள எல்லாம்..ப்ரென்ட் லிஸ்ட்டில இருந்து தூக்கிர வேண்டியது தான் எண்டு ஜோசிசேன்..ம்ம்ம் :)
வாழ்த்துக்கள் கே எஸ் எஸ் ராஜ்..கலக்குங்க..
@கவிதை வீதி... // சௌந்தர் //
ஏற்றகனவே நமக்கும் அவங்களுக்கு வாய்க்கா வரப்பு சண்டையிருக்கு....
என்ன சண்டையிருக்கு.////
எனக்கு இந்தக் கமண்ட் புரியலை பாஸ்
வாழ்த்துக்கள் ராஜ்,, தொடர்ந்து கலக்குங்க..
@
கோகுல் said...
வாழ்த்துகள் மச்சி.,
பாட சாலை தொடர் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம் கிடைத்தது என நினைக்கிறேன்.
அப்போதிலிருந்து இப்போது வரை எப்போதும் வாசிக்கக்கூடிய பதிவுகளையே தந்து வருகிறீர்கள்.தொடரட்டும் உங்கள் எழுத்து ஆர்வம,வாழ்த்துகள்////
மிக்க நன்றி பாஸ்
@ கவிதை வீதி... // சௌந்தர் // said...
தனித்தனியவோ ஒட்டுமொத்தமாவே யாருக்கும் இங்கு நன்றி சொல்லனுமன்னு அவசியம் இல்ல ராஜா...
நண்பர்களுக்குள்ள நன்றி சொல்லிக்கிட்ட அது உண்மையான நட்பா இருக்காது...
என்ன நான் சொல்றது.////
உண்மைதான் பாஸ் ஆனால் கடந்து வந்த பாதையை ஞாபகம் செய்யும் போது நன்றி சொல்வது தவிர்க்கமுடியாதது ஆகின்றது
@ கவிதை வீதி... // சௌந்தர் // said...
200 பதிவுகள் எழுதுவது என்பது சாதாரண விஷயம் இல்ல நண்பரே...
அதில் தங்களுடைய சிந்தனை முயற்சி ஆக்கம் ஆகியவை அடங்கியிருக்கிறது. நல்ல கருத்துகளோடு வரும் யாரும் இங்கு அடையாளம் காட்டப்படுவார்கள்...
தங்களுடைய படைப்புகள் இன்னும் இந்த பதிவுலகை அழகுப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை...
வாழ்த்துக்கள்..////
மிக்க நன்றி பாஸ்
@ prakash kumar said...
டபுளுக்கு வாழ்த்துக்கள் ராஜா....
இன்னும் பல்சுவைகளில் கலக்க வாழ்த்துக்கள்
////
நன்றி பாஸ்
@ மைந்தன் சிவா said...
எங்கடா என்னோட பெயரை காணேல...பய புள்ள மறந்திடிச்சு போல நம்மள எல்லாம்..ப்ரென்ட் லிஸ்ட்டில இருந்து தூக்கிர வேண்டியது தான் எண்டு ஜோசிசேன்..ம்ம்ம் :)
வாழ்த்துக்கள் கே எஸ் எஸ் ராஜ்..கலக்குங்க..
////
ஹி.ஹி.ஹி.ஹி......மறக்க கூடிய பிகரா நீங்க சாரி பாஸ் மறக்க கூடிய நபரா நீங்கள்
மிக்க நன்றி பாஸ்
@ Riyas said...
வாழ்த்துக்கள் ராஜ்,, தொடர்ந்து கலக்குங்க..
////
நன்றி பாஸ்
@மைந்தன் சிவா
யோவ் உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்திருக்கேன் பதிவுலக முன்னால் ஜங் சூப்பர் ஸ்டார் என்று அது பற்றி ஒன்னும் சொல்லவில்லையே ஹி.ஹி.ஹி.ஹி.........
//K.s.s.Rajh said...
@மைந்தன் சிவா
யோவ் உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்திருக்கேன் பதிவுலக முன்னால் ஜங் சூப்பர் ஸ்டார் என்று அது பற்றி ஒன்னும் சொல்லவில்லையே ஹி.ஹி.ஹி.ஹி....//
ஹிஹி கொடுத்த காசுக்கு தீயா வேலை செய்யுறீங்க..ஐ அப்பிரிசியேட்!! :P
@மைந்தன் சிவா
//////K.s.s.Rajh said...
@மைந்தன் சிவா
யோவ் உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்திருக்கேன் பதிவுலக முன்னால் ஜங் சூப்பர் ஸ்டார் என்று அது பற்றி ஒன்னும் சொல்லவில்லையே ஹி.ஹி.ஹி.ஹி....//
ஹிஹி கொடுத்த காசுக்கு தீயா வேலை செய்யுறீங்க..ஐ அப்பிரிசியேட்!! ////
ஹி.ஹி.ஹி.ஹி.......அடிக்கடி இப்படி பண்ணுங்க பாஸ்
@K.s.s.Rajh
புரியலையா..
அப்பா...
அதுக்குதான் இந்த கமாண்ட்....
ஏதோ நம்மால முடிஞ்சது..
பெரியதொரு முயற்சியும் பொறுமையும்.வாழ்த்துக்கள் நண்பா...!தொடர்ந்தும் பல்;; ஆண்டுகள் ஒரு தடம் பதித்த பதிவராக பயணிக்க சிறிய தங்கை அதிசயாவின் அன்பு நிறைந்த வாழ்த்துக்களும் செபங்களும்.சந்திப்போம் சொந்தமே!
வணக்கம் நன்பா..
எப்படி இருக்கீங்க..?
நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கிறோம் இல்ல... முதலில் 200 வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 10,15 பதிவுகள் எழுதீட்டு பதிவர் என்று சொல்லும் என்னைப்போன்றவர்கள் இருக்கும் இடத்தில் குறுகிய காலத்துக்குள் 200 பதிவுகள் எழுதிய நீங்கள் ஆச்சரியம் தான் இது தொடரணும்.. தொடர வாழ்த்துக்கள்.
இப்போது ரெம்ப நான் ரெம்ப பிஸி நண்பா, அதனால் வலைப்பக்கம் போவதையே அறவே நிறுத்திவிட்டேன்.. யாருடைய பதிவும் எந்த பதிவும் படிப்பதே இல்லை. இன்று உங்கள் பதிவை எதாச்சையாகத்தான் படித்தேன்.. என்னையும் மறக்காமல் வைத்து சொல்லி இருந்தது இன்ப அதிர்ச்சி. தேங்க்ஸ் நன்பா ^_^
இலங்கை வந்த சமயம் நான் தங்கிய இடத்திலேயே நீங்கள் இருப்பதால் உங்களை இறுதியில் சந்திக்கலாம் என்று விட்டு கடைசியில் அது முடியாமல் போய் விட்டது.. சாரி நன்பா.. இது எனக்கும் மிக மன வருத்தமே... ரியலி சாரி.. அடுத்த வருடம் இலங்கையில் சந்திப்போம் நண்பா.. ^_^
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...நன்றி…(TM.6)
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
@கவிதை வீதி... // சௌந்தர் //
////
@K.s.s.Rajh
புரியலையா..
அப்பா...
அதுக்குதான் இந்த கமாண்ட்....
ஏதோ நம்மால முடிஞ்சது////
ஹா.ஹா.ஹா.ஹா..........
@ Athisaya said...
பெரியதொரு முயற்சியும் பொறுமையும்.வாழ்த்துக்கள் நண்பா...!தொடர்ந்தும் பல்;; ஆண்டுகள் ஒரு தடம் பதித்த பதிவராக பயணிக்க சிறிய தங்கை அதிசயாவின் அன்பு நிறைந்த வாழ்த்துக்களும் செபங்களும்.சந்திப்போம் சொந்தமே////
நன்றி சகோதரி
@துஷ்யந்தன்
நான் நலம் பாஸ் நீங்கள் எப்படி சுகம்?உங்களை எப்படி பாஸ் மறப்பது மறக்க கூடிய பிகரா நீங்கள் சாரி நபரா நீங்கள் மிக்க நன்றி பாஸ்.ஏன் மச்சி சாரி எல்லாம் நீங்கள் அருகில் வந்தும் பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் தான் மற்றும் படி வேறு ஒன்றும் இல்லை.ஓக்கே அடுத்தமுறை நிச்சயம் சந்திப்போம்
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
200வது பதிவுக்கு வாழ்த்துகள்....!எல்லாரும் 1000பதிவு 2000பதிவு போடுவதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளிர்கள்....! முத்து எல்லா சிப்பியிலும் இருப்பதில்லை...!
@வீடு சுரேஸ்குமார்
நன்றி பாஸ்
ஆமா உங்கள் கருத்தில் ஏதும் உள்குத்து இல்லையே
வணக்கம் ராசுக்குட்டி நலமா? என்னையும் எல்லா பதிவுகளிலும் மறக்காமல் குறிப்பிடுகின்றாய் நன்றி ராசுக்குட்டி.. இன்னும் அதிக பதிவுகள் காண வாழ்த்துக்கள்.
@காட்டான்
வாங்க மாம்ஸ் நீண்டநாட்களுக்கு பிறகு
ரொம்ப நன்றி மாம்ஸ்
ராஜ் இதப் படிச்சு முடிக்கரதுக்குள்ள எனக்கு மூச்சே வாங்கிடுச்சு!...
உனது தளத்த எனக்கு மஹேஷ்தான் அறிமுகப் படுத்தி வைத்தான்!...
எத்தனைப் பேரு! எத்தனை உதவிகள்,
ஆலோசனைகள், நட்பு, சண்டை..... நல்ல பதிவுலகப் பயணம்!...
சீக்கிரமா 200 500 ஆகனும் 500 1000 ஆகனு... மேலும் வளரனும்!...
நான் இன்னைக்கு எழுத நீயும் ஒரு உந்து சக்த்தியா இருண்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி!... ரொம்ப மகிழ்ச்சி& பெருமை!...
தொடரட்டும் உனது வெற்றிப் பயணம்!... வாழ்த்துக்கள்!...
200 க்கு வாழ்த்துக்கள் சகோ.
உங்களை வாழ்த்தும் நண்பர்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
வணக்கம் ஐயா,
நலமா?
ஒரு குடும்பத்தினுள் குத்து வெட்டு வருவதில்லையா?
நடந்தவற்றை மறுபடியும் மறுபடியுமா கிளறனும்?
இந்த இனிய நாளில் தொடர்ந்தும் சிறப்பாக, அதிக வாசகர்களைப் பெறும் வண்ண எழுதி அனைவர் மனங்களிலும் இடம் பிடிக்க அடியேன் வாழ்த்துகிறேன் ஐயா!
200 பதிவுகள் என்பது
ஒரு அசுரச் சாதனைதான்
இது ஆயிரமாவது பதிவுக்கான
ஆரம்ப இடம்தான் என கருதிக்கொண்டு
தொடர்ந்து சிறப்பாக ஓட
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மாப்ள..
@Chamundeeswari Parthasarathy
மிக்க நன்றி அக்கா என் தளமும் ஒருவருக்கு எழுத உந்துசக்தியாக இருந்தமை எனக்கும் பெருமையே
@நண்டு @நொரண்டு -ஈரோடு
நன்றி பாஸ்
@முனைவர் பரமசிவம்
நன்றி பாஸ்
@நிரூபன்
நான் நலம் ஜயா நீங்கள் எப்படி?
மிக்க நன்றி பாஸ்
@Ramani
நன்றி பாஸ்
@வேடந்தாங்கல் - கருண்
நன்றி பாஸ்
200க்கு வாழ்த்துகள்.
வணக்கம் ராச் தாமதமாக வரவேண்டிய நிலை !ம்ம் 200 பதிவு போதாது இன்னும் பல ஆயிரம் பதிவு நீ எழுதணும் உன்னால் முடியும் என்று வாழ்த்துகின்றேன்! அடிக்கடி என்னை அன்பில் உருக வைக்கின்றாய் மறக்கமுடியாத பள்ளித்தொடரில் தான் நானும் பின் தொடர்ந்தேன் இப்போது பிரிக்க முடியாத நட்பாகியதில் நான் தான் அதிகம் கடமைப்பட்டு இருக்கின்றேன். வாழ்த்துக்கள் தொடருங்கள் பலபதிவு!கூட வருவேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம்.
@Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி பாஸ்
@தனிமரம்
மிக்க நன்றி பாஸ்
200வது பதிவு வரை வந்த நீங்க்அ மேலும் மேலும் வளர வேண்டும்! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!...
மேலும் மேலும் உங்கலது பயணம் தொடர்ந்து எங்களுக்கெல்லாம்விருந்தாக அமைய வேண்டும்!....
தொடருங்கள் அண்ணா தொடர்கிறோம்!
@mahesh
நன்றி பாஸ்
வாழ்த்துகள் கிஸ்ராஜா!
@செங்கோவி
வாங்க பாஸ் மிக்க நன்றி பாஸ்
Post a Comment