2004 ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்தது கங்குலி தலைமையிலான இந்திய அணி.முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது கங்குலி விளையாடமுடியாமல் போக ராவிட் தலைமையில் களம் இறங்கியது இந்திய அணி.
சேவாக் உலகில் தோன்றிய அசத்தலான துடுப்பாட்டவீரரகளில் ஒருவர் தாதாவின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு.சேவாக்கில் ஒரு பழக்கம் அதாவது பொதுவாக ஒருவீரர் 90+ ரன்கள் எடுத்த பின்பு இல்லை 190+எடுத்த பின்பு 90+ ஜ சதமாகவோ இல்லை 190+ ஜ இரட்டை சதமாகவோ மாற்றவிரும்பி மெதுவாக ஆடுவார்கள்.
ஆனால் சிலர் அதை பற்றி எல்லாம் கவலைப்படாது அடித்து நொருக்கிவிடுவார்கள் அந்தவகைதான் சேவாக்.இலங்கையின் குமார்சங்ககாரவும் அப்படித்தான் ஒரு முறை 180 ஓட்டங்களிலிருந்தபோது வரிசையாக பவுண்ட்ரி அடித்து இரட்டை சதம் பூர்த்தி செய்தார்.
ஆனால் சேவாக் சற்று வித்தியாசமானவர் ஆம் 296 ரன்கள் எடுத்து இருக்கும் போது எந்த வீரராவது சிக்சர் அடிக்க விரும்புவார்களா காரணம் சிலவேளை ஆட்டம் இழந்துவிட்டால் வெரும் 4 ஓட்டங்களால் முச்சதம் தவறிவிடும் ஆனால்.சேவாக் அடித்தார் இதுதான் சேவாகின் தனித்தன்மை.
ஆம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் அதிரடியாக ஆடிய சேவாக் 296 ஓட்டங்களை பெற்று இருந்த போது அதிரடியாக சிக்சர் அடித்து டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது முச்சதத்தை பூர்த்திசெய்தார்(பிறகு தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும் சேவாக் முச்சதம் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது).
இந்தப்போட்டியில் சச்சின் 194 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்று இருந்த போது கேப்டன் ராவிட் டிக்ளேயர் செய்வதாக அறிவித்தார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பியது அதாவது கங்குலி சொல்லித்தான்(கங்குலி இந்தபோட்டியில் விளையாடவில்லை என்றாலும் அப்போதைய இந்திய கேப்டன் கங்குதான்)ராவிட் டிக்ளேயர் செய்ததாகவும் சச்சினை இரட்டை சதம் அடிக்கவிடக்கூடாது என்பதற்காக கங்குலியின் சதி என்றும் பெரும் சர்ச்சை கிளம்பியது.
ஆனால் தாதா அதை பற்றி எல்லாம் கவலை படவில்லை.டெஸ்ட் ஒரு நாள் தொடர்களை பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்தது தாதா தலைமையிலான இந்திய அணி.பாகிஸ்தானில் வைத்து தொடரை கைப்பற்றிய முதலாவது இந்திய அணித்தலைவர் என்ற பெருமை தாதாவுக்கு கிடைத்தது.
ஆனால் தாதாவின் சரிவு ஆரம்பமாகிய காலகட்டமும் இதுதான் அவர் தனது துடுப்பாட்டதில் கவனம் செலுத்தவில்லை தாதாவின் துடுப்பாட்டம் மோசமாகவே இருந்தது.
அடுத்து இன்னும் ஒரு பெரிய பிரச்சனை தாதாவுக்கு அதாவது தாதா தலைமையிலான இந்திய அணி எந்த தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் ஆனால் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்துவிடும் தாதா தலைமையில் இந்திய அணி இந்தியா வரிசையாக 17 தொடர்களில் இறுதிபோட்டியில் தோல்வி அடைந்துள்ளது.இப்படி தாதாமீது சில சர்ச்சைகள் கிளம்பிய காலம் அது.
2004 ஆண்டின் இறுதியில் பங்களாதேஸ் சென்றது இந்திய அணி இளம் வீரரகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தொடரில் ஒரு குறிபிடதக்க விடயங்கள் இரண்டு.ஒன்று சச்சின் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இனிங்சில் பெற்ற அதிக ஓட்டமான ஆட்டம் இழக்காமல் 248 ஓட்டங்களை இந்த தொடரில் தான் பெற்றார்.
இன்னும் ஒன்று இந்திய அணிக்கு அதுவரை நிலையான ஒரு விக்கெட் கீப்பர் இல்லை பலர் வருவதும் போவதுமாக இருந்தனர்.புதிதாக வந்த பார்த்தீவ் பட்டேன்,தினேஸ் கார்த்திக் என்று யாரும் பெரிதாக சோபிக்கவில்லை பெரும்பாலும் ராவிட்டே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார் தாதா தலமையிலான அணியில்.
இந்திய ஏ அணியில் சிறப்பாக ஆடிய ஒரு விக்கெட் கீப்பரை கங்குலி அணிக்குள் கொண்டு வந்தார் இந்த தொடரில்.
அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அடுத்த சில வருடங்களில் அந்த விக்கெட் கீப்பர் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவார் என்று.ஆம் அது வேறு யாரும் இல்லை தற்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் அது.
பங்களாதேஸ் தொடரை இந்தியா வென்றாலும் கங்குலி மீது பல விமர்சனங்கள் கிளம்பின.
(தாதா இன்னும் வருவார்)
இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா தொடரின் முன்னைய பகுதிகள்
|
6 comments:
வணக்கம்,ராஜ்!கிரிக்கெட் ரசிகர்களுக்கு உங்கள் பகிர்வு அருமை!!!!
தாதாவின் வீழ்ச்சி ஆரம்பம்!
மைந்தன் சிவா said...
தாதாவின் வீழ்ச்சி ஆரம்பம்!////என்ன சொல்லுறீங்கன்னு .............................!
நல்ல தொகுப்பு... பாராட்டுக்கள்...
பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)
@
Yoga.S. said...
மைந்தன் சிவா said...
தாதாவின் வீழ்ச்சி ஆரம்பம்!////என்ன சொல்லுறீங்கன்னு ..........////
கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் வீழ்ச்சி ஆரம்பித்த காலம் அது அதைத்தான் மைந்து சொல்லுறார்
அனைவருக்கும் நன்றி நண்பர்களே
Post a Comment