என்னுடன் ஒரு பொண்ணு படித்தாள்.ஒரு பொண்ணுதான் படித்தாளா என்று யாரும் மொக்கையா கேட்கப்படாது என்னுடன் படித்த பொண்ணுங்கள் பற்றி பல பதிவுகள் ஏற்கனவே போட்டுள்ளேன்.
இவள் பெயர் சுவாதி(நிஜப்பெயர் இல்லை).சுவாதியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இது ஒரு பெரிய மேட்டராய்யா ஜஸ்வர்யா ராய் முதல் அஞ்சலி வரை எனக்கு பல பொண்ணுங்களை பிடிக்கும் ஹீ.ஹீ....
என் நண்பன் ஒருவன் என்ன செய்தான் என்றால். ராஜ் சுவாதியை ரொம்ப பிடிக்கும் என்று சொல்லித்திரியுறான்,ராஜ்க்கு சுவாதி மேல ஒரு லவ் என்று வசந்தியை பரப்பிவிட்டான் ஆமா அது வசந்தியா இல்லை வதந்தியா?சரி ஏதோ ஒன்னை பரப்பிட்டான்.
இவள் பெயர் சுவாதி(நிஜப்பெயர் இல்லை).சுவாதியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இது ஒரு பெரிய மேட்டராய்யா ஜஸ்வர்யா ராய் முதல் அஞ்சலி வரை எனக்கு பல பொண்ணுங்களை பிடிக்கும் ஹீ.ஹீ....
என் நண்பன் ஒருவன் என்ன செய்தான் என்றால். ராஜ் சுவாதியை ரொம்ப பிடிக்கும் என்று சொல்லித்திரியுறான்,ராஜ்க்கு சுவாதி மேல ஒரு லவ் என்று வசந்தியை பரப்பிவிட்டான் ஆமா அது வசந்தியா இல்லை வதந்தியா?சரி ஏதோ ஒன்னை பரப்பிட்டான்.
இது நடந்து பல காலம்ஆச்சு இப்ப அந்தப்பொண்ணுக்கு என்னை ஞாபகம் இருக்கானு கூட எனக்கு தெரியாது. நானும் காலப்போக்கில் அவளை மறந்து போய்விட்டேன்.
இப்ப என்ன பிரச்சனை என்றால் நண்பர்கள் இம்சை தாங்க முடியலை.பழய நண்பர்கள் எல்லாம் ஒன்று சேரும் போது எப்படியும் அவளை பற்றி கதைப்பாங்க.நாங்கள் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை ஏதாவது காரசாரமாக விவாதிப்பது உண்டு.இதன் போது நான் ஏதாவது காரசாரமாக விவாதித்தால் என்னை கடுப்பேத்த என்று உடனே சுவாதி கதையை ஆரம்பிச்சுடுவானுங்க.
இப்படித்தான் ஒரு நாள் ஒருத்தன் இரவு 12மணிக்கு போன் பண்ணி கேக்குறான்.டேய் ராஜ் சுவாதி பேஸ்புக்ல இருக்கிறாளா இருந்தா லிங் தாவன் என்று.எனக்கு வாயில வந்த கெட்ட வார்த்தை எல்லாம் ஒன்று சேர்த்து அவனை திட்டி போனை கட்பண்ணினேன்.
பிறகு ஒரு நாள் நண்பன் ஒருவன் ஸ்கைப்புக்கு வாவன் மச்சி ஒரு அவசரம் என்றான் நானும் என்னமோ ஏதோனு பதறி அடிச்சுகிட்டு என்னடானு கேட்டால்
என்ன ராஜ் சுவாதி ஊருக்கு வந்திட்டாளாம் என்ன கதை என்றான்?
அவனின் பரம்பரை முழுவதையும் இழுத்து திட்டு திட்டுனு திட்டியும் அடுத்தநாளும் இதே கேள்வியை கேட்டான்.
இப்ப என்ன என்றால் அந்தப்பொண்ணு பேஸ்புக்கில் நுழைந்துவிட்டாள்.
இது என்ன அம்புட்டு பெரிய மேட்டரா? அவள் பேஸ்புக்கில் நுழைந்ததும் நுழைந்தாள்.என் நிம்மதி போச்சு நம்ம பசங்க உடனே எனக்கு போன்,ஸ்கைப்பில் சாட்டிங்கில் நேரடியாக என அவனுங்க இம்சை தாங்க முடியலை.
அவள் பேஸ்புக் ப்ரண்ட் லிஸ்ட்டில் ஏன் நான் இல்லை என்று ஒரு குழு ஆராச்சியில் வேற ஈடுபட்டு இருக்கானுங்களாம். வெளங்கீடும் நல்லா ஆராச்சி செய்யுங்க உங்களுக்கு டாக்டர் பட்டம் உறுதி(ஒரு டாகுதர் படுத்துறபாட தாங்க முடியலை)
சில பசங்க அந்தப்பெண்ணிடம் கடலை போடுவதற்காக என்னை காமடிப்பீஸ் ஆக்கிகிட்டு இருக்கானுங்க.ஜயா ராசாக்களே உங்களை கெஞ்சி கேட்கிறன் தயவு செய்து என்னைவைத்து காமடி பண்ணாதீங்க முடியலை.
அன்புள்ள நண்பிக்கு
என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ என்று எனக்கு தெரியாது,இதை நீங்கள் படிப்பீர்களா இல்லையா என்றும் எனக்கு தெரியாது.
நான் அப்பவும் சொன்னேன் இப்பவும் சொல்லுகின்றேன் உங்களை எனக்கு வெகுவாக பிடிக்கும் அதுக்காக உங்கள் மேல் எனக்கு லவ் இருந்தது என்று எல்லாம் இல்லை.
நான் அப்பவும் சொன்னேன் இப்பவும் சொல்லுகின்றேன் உங்களை எனக்கு வெகுவாக பிடிக்கும் அதுக்காக உங்கள் மேல் எனக்கு லவ் இருந்தது என்று எல்லாம் இல்லை.
இந்த மனிதப் பயணத்தில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கின்றோம் அதில் சிலரது செயல்களினால் நாம் ஈர்க்கப்படும் போதோ இல்லை அவர்களின் குணங்கள் பிடிக்கின்ற போது அவர்களை எமக்கு மிகவும் பிடிப்பது இல்லையா அப்படி உங்களது செயல்பாடுகளாலும் குறும்புத்தனமாக எல்லோறுடனும் சகஜமாக பழகும் தன்மையாலும் உங்களை எனக்கு வெகுவாக பிடிக்கும்.உங்களுடன் நட்பாக இருக்கவேண்டும் உங்களுடன் பேசவேண்டும் என்று அப்போது நான் மனதில் நினைத்ததுண்டு.இது ஒரு தவறு எனின் மன்னிக்கவேண்டுகின்றேன்.
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
டேய் மச்சிகளா இனியாவது என்னை இம்சை பண்ணாதீங்கடா பீளீஸ்
படம்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை
|
15 comments:
வணக்கம் ராஜ்!எப்பிடி சுகம்?நான் நல்ல?!சுகம்!!!!!கெட்ட வார்த்தையா?அப்பிடியெண்டா என்ன?நாயே,பேயே பன்னாட,சாவுகிராக்கி ன்னு வடிவேலு படங்கள்ல திட்டுவாரே,அதானே?
விரும்பி படித்தேன். பொதுவாக சமுதாயத்தின் சந்தேக பார்வையிலிருந்த தப்புவது கடினமே.
தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி.
Lol
@Yoga.S.
ஆமா ஜயா அதேதான்
@மாசிலா
நன்றி சகோ
@drogba
நன்றி சகோ
எது சுவாதி பேஸ்புக் வந்திட்டாளா?முதலே சொல்லப்பிடாது?
முதல் வேலையா ப்ளாக் பண்ணலாம்னு இருக்கேன்..
நாங்கெல்லாம் நாலு நிமிசம் வாழ்ந்தாலும்...
ஆஹா ராஜ் செம மூளப்பா உனக்கு!
எல்லாரையும் 1 பதிவப் போட்டு ஃப்லட்டாக்கீட்டியே! அருமை!~
ராஜ்! நண்பர்கள் அப்படித்தான்.என்ன செய்ய?
@மைந்தன் சிவா
யோவ் அதுக்கு ஏன் சுவாதி ஏதோ வயசுக்கு வந்த மாதிரி பாயுறீங்க இது நடிகை சுவாதி இல்லை பாஸ் என் கூட படிச்ச ஒரு பொண்ணு
@Chamundeeswari Parthasarathy
நாங்கள்ளாம் அப்பவே அப்படி இப்ப கேக்கவா வேணும்
@சென்னை பித்தன்
ஆனாலும் ரொம்ப இம்சை பண்ணுறாங்க பாஸ்
அப்போ , சுவாதி ஃபேஸ்புக் வந்தது உண்மைத்தானா ஹி..ஹி... :-)))
//சில பசங்க அந்தப்பெண்ணிடம் கடலை போடுவதற்காக என்னை காமடிப்பீஸ் ஆக்கிகிட்டு இருக்கானுங்க.ஜயா ராசாக்களே உங்களை கெஞ்சி கேட்கிறன் தயவு செய்து என்னைவைத்து காமடி பண்ணாதீங்க முடியலை.//
இதுப்போல அனுபவங்கள் பல எனக்கும் இருக்கு :-)
@ஜெய்லானி
நன்றி சகோ
Post a Comment