ரோஷினிக்கு மனம் எல்லாம் கவலை குடிகொண்டு இருந்தது.தற்போது பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவி இன்னும் சில மாதங்களில் படிப்புமுடிந்துவிடும்.அதுக்குள் அவனுக்கு என்ன அவசரம் கல்வியா காதலா என்று வந்த போது அவள் மனம் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்க விரும்பினாலும்.இதனால் அவள் உயிருக்கு உயிராக நேசித்த ராகுலன் விட்டு பிரிந்துவிடுவானே என்று பயந்தாலும் ராகுலனின் பிரிவு அவளுக்கு அவ்வளவு வேதனையாக இருக்கப்போவதில்லை ஆனாலும் அவனை பிரியவும் மனம் இல்லை.
அவன் இவளைவிட்டு பிரியவது இது முதல் தடவையில்லை பிரிவதும் பின் சேர்வதும் ஏதோ பொழுதுபோக்கிற்காக இவளை காதலிப்பது போலத்தான் அவனின் செயற்பாடுகள்.அவன் முதல் தடவை இவளை பிரிந்த போது மிகவும் உடைந்து போய்விட்டாள்.தீடீர் என்று அவனது போன் நிறுத்திவைக்கப் பட்டுஇருந்தது எவ்வளவு முயன்றும் அவனை தொடர்பு கொள்ளமுடியவில்லை.
நண்பர்களிடம் விசாரித்த போது எந்த தகவலும் இல்லை பின் அவனாக ஒரு நாள் போன் செய்தான்.இங்க பாரும் ரோஷினி உமக்கு எனக்கு சரிப்பட்டு வராது எங்கள் வீட்டில் சாதி பார்ப்பினம் வீட்டில் உறுதியாக சொல்லிப்போட்டினம் குறைந்த சாதிப்பெண்ணை கலியாணம் முடித்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக.குடும்பமா காதலா என்று வரும் போது எனக்கு என் குடும்பம்தான் முக்கியம் இதுதான் நான் உங்களுக்கு போன் எடுக்கும் கடைசிதடவை இனிமேல் உங்களிடம் பேச எதுவும் இல்லை ஓக்கே பை பை.
இவளை எதுவும் பேசவிடாது அவனே பட பட என பேசிமுடித்தான்.மிகவும் மனம் உடைந்து போன ரோஷினி அழுதாள் இரவு பகல் என்று அவள் பொழுதுகள் எல்லம் அழுகையிலே கழிந்தன வேறு என்ன செய்யமுடியும் அந்த அபலைப்பெண்ணால். கொஞ்சம் கொஞ்சமாக ராகுலின் நினைப்புக்கள் மறந்து போகின்ற போது மீண்டும் அவனாக ஒரு நாள் போன் செய்து மன்னித்துவிடும் ரோஷினி நான் உம்மை மிகவும் காயப்படுத்திவிட்டேன் இனி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை உம்மை விட்டு பிரியமாட்டேன் இது சத்தியம் என்று சொல்லி அவன் மன்றாடியபோது அவளால் அவனை வெறுக்கமுடியவில்லை அவள் மனம் எங்கும் அவன் குடிகொண்டு இருந்ததால்.
இரண்டாவது தடவையாக அவன் வெளிநாடுபோகப்போகின்றேன் உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று கூறி வெளிநாடு செல்லமுயன்ற போதும் அவள் எதுவும் பேசவில்லை மெளனமாக அழுத்தான் முடிந்தது.ஆனால் சிறிது நாட்களின் பின் மீண்டும் அவன் வந்து வெளிநாட்டுப் பயணம் சரிவரவில்லை என்று அவளுடனான உறவை புதுப்பிக்க முயன்ற போதும் அவளால் அவனை வெறுக்கமுடியவில்லை அவள் மனம் எல்லாம் அவன் குடிகொண்டு இருந்ததால்.
இவளாக அவனை தேடிச்சென்று காதலிக்கவில்லை அவளது அண்ணின் நண்பன் தான் ராகுலன். அவன் முதலில் இவளை துரத்தி துரத்தி காதலித்த போதும் இவள் எந்த பதிலும் சொல்லவில்லை.சில வருடம் அலையவிட்ட பின்புதான் ஒரு ராகுலனுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.அப்போதே ராகுலன் யாரிடமோ சொன்னானம் என்னை இவள் இப்படி அலையவிடுறாள் இவளுக்கு வலி என்றால் என்ன, பிரிவு என்றால் என்ன என்று நான் நல்ல பாடம் புகட்டுறேன் பார் என்று.இதை அப்பவே இவள் அறிந்திருந்தாலும் அவன் மேல் உள்ள காதலால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தற்போத ராகுலனின் செயல் பாடுகளை பார்க்கின்ற போது அவளுக்கு அவன் தன்னை பழிவாங்கத்தான் அப்படி செய்கின்றானோ என்று தோன்றினாலும் அவன் மேல் இருந்த காதலினால் அவளால் எதுவும் பேசமுடியவில்லை.
வீட்டில் வெளிநாடு செல்லுமாறு கட்டாயப்படுத்துகின்றார்கள்.எனவே நீ உன் படிப்பை இடை நிறுத்திவிட்டு வா நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளாம் இல்லை என்றால் உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது நான் வெளிநாடு சென்றுவிடுகின்றேன் என்று தெளிவாக கூறிவிட்டான்.இதுதான் தற்போது ரோஷினியின் கவலைக்கு காரணம்.
சரிதான் போடா என்று அவனை வெருக்கவும் முடியவில்லை.அவனுடன் சேர்வதற்காக தன் படிப்பை இடைநிறுத்தவும் முடியவில்லை பல பெண்கள் செய்யும் தவறு இதுதானே ஆண்கள் அன்பால் அடிக்கும் போது அந்த அன்புக்கு அடிமையான பெண்கள் ஆண்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தமது வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றார்கள்.ரோஷினி என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்தாள்.
*********************************************************************************
த்ரிஷா பிரைவேட் லிமிட்டர் நிறுவணத்தினரால் தமது நிறுவணத்திற்கு புதிதாக ஒரு கட்டிடம் நிர்மாணிக்க இருப்பதால் அதற்காக கட்டிட ஓப்பந்தக்காரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தன.
அந்த விண்ணப்பங்களை சரிபார்த்து அவர்களை நேர்முகத்தேர்வு செய்து சிறந்த ஒப்பந்தக்காரர்களிடம் கட்டிடம் அமைக்கும் பணியை வழங்கவேண்டிய பொறுப்பு அந்த நிறுவணத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான ரோஷினியிடம் வழங்கப்பட்டு இருந்தது.சந்தைப்படுத்தல் பிரிவில் ஒருவராக இந்த நிறுவணத்தில் இணைந்து மிக குறுகிய காலத்தில் நிறுவணத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்த ரோஷினியின் மேல் நிறுவணம் நல்ல நன்மதிப்பை வைத்துள்ளது.
தங்கள் நிறுவணத்திற்கு வந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்துகொண்டு இருக்கும் போது ராகுலன் என்ற பெயரில் வந்த விண்ணப்பத்தை அவளை அறியாமல் அவள் கரங்கள் இறுகபற்றிக்கொண்டன.அதன் விபரங்களை பரிசீலனை செய்ததில் அது ராகுலன்தான் என்பதை உறுதிசெய்துகொண்டாள்.
அவனை பார்க்கவேண்டும் என்ற ஆவல் அவள் மனதில் எழுந்தாலும் அவன் மேலான கோபம் மாறவில்லை.
கிட்ட தட்ட ஜந்து ஆறுவருடம் ஆகிவிட்டது அவனை பார்த்து. அன்று படிப்பைவிட்டுவிட்டு திருமணம் செய்யமுடியாது என்று மறுப்பு தெரிவித்ததுக்கு பிறகு அவனை சந்திகவில்லை எங்கே இருக்கின்றான் என்று அறிந்துகொள்ளவும் ரோஷினி முயற்சிக்கவில்லை காரணம் அவள் மனதை அவன் அவ்வளவு காயப்படுத்தியிருந்தான்.
கிட்ட தட்ட ஜந்து ஆறுவருடம் ஆகிவிட்டது அவனை பார்த்து. அன்று படிப்பைவிட்டுவிட்டு திருமணம் செய்யமுடியாது என்று மறுப்பு தெரிவித்ததுக்கு பிறகு அவனை சந்திகவில்லை எங்கே இருக்கின்றான் என்று அறிந்துகொள்ளவும் ரோஷினி முயற்சிக்கவில்லை காரணம் அவள் மனதை அவன் அவ்வளவு காயப்படுத்தியிருந்தான்.
இனிமேம் அவன் முகத்திலும் முழிக்ககூடாது என்று இருந்த ரோஷினிக்கு இப்போது தர்மசங்கடமான நிலமை அவனது விண்ணப்பத்தை நிராகரிக்கவும் முடியாது அப்படி நிராகரித்தால் அவன் மேலான கோபத்தினால் அவதை நிராகரித்தாக வந்துவிடும் பிறகு அவனுக்கு தனக்கு என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது எனவே நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லுவம் பிறகு பார்ப்போம் என்று முடிவு செய்துகொண்டாள்.
அடுத்தநாள் காலை விண்ணப்பத்தை சமர்பித்த கட்டிட ஒப்பந்தக்காரர்கள் எல்லோறும் நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தனர்.ஓவ்வொறுவராக நேர்முகம் கண்டபின் ராகுலனின் முறை அவன் சற்றும் ரோஷினியை இங்கு எதிர்பார்கவில்லை
சிறிது நேரம் இருவரும் பேசவில்லை பின் ராகுலனே பேசினான்.சாரி ரோஷினி
நான் ரொம்பவே உங்களை காயப்படுத்திவிட்டேன்.அதை மனசில் வைத்துக்கொண்டு என்னை தெரிவு செய்யாமல் விட்டுவிடாதீர்கள் இந்தக் கட்டிட நிர்மாணிப்பு ஒப்பந்தம் எனக்கு கிடைத்தால் என் கடன்கள் பாதியாக குறைந்துவிடும் அதைவிட என் பொருளாதர நிலமை மேம்படும் ப்ளீஸ் ரோஷினி
ரோஷினி எதுவும் பேசாமல் ஒரே கேள்வியைமட்டும் கேட்டாள் கல்யாணம் ஆகிடுச்சா?
இல்லை ரோஷினி
வேறு எந்தக் கேள்வியும் ரோஷினி அவனிடம் கேட்கவில்லை வெயிட் பண்ணுங்க மிஸ்டர் ராகுலன் நாங்கள் யாருக்கு கட்டிட ஒப்பந்தத்தை வழங்குவது என்று அறிவிப்போம் என்று சொல்லிவிட்டு அடுத்தவரை வரச்சொன்னாள் ரோஷினி
ராகுலன் பெரிதும் நம்பியிருந்தான் தனக்கு இந்த ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஆனால் ரோஷினியை பார்த பின் அவனுக்கு துளியும் நம்பிக்கையில்லை.அவன் நினைத்த மாதிரியே நடந்தது ராகுலுக்கு அந்த கட்டிட ஒப்பந்தம் கிடைக்கவில்லை வேறு ஒருவருக்குதான் அது வழங்கப்பட்டது.
மிகுந்த மனவேதனையோடு ராகுலன் வெளியேவர ராகுலன் என்று ரோஷினி அழைத்தாள்
என்ன என்று கோபத்தோடு ராகுலன் திரும்பினான்
இங்க பாருங்க ராகுலன் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் நான் இந்த கட்டிட ஒப்பந்ததை உங்களுக்கு வழங்கவில்லை என்று நினைக்கவேண்டாம்.
உங்களைவிட குறைந்த செலவில் சிறப்பாக கட்டிடத்தை அமைக்க விண்ணப்பத்தை சமர்ப்பித்தவருக்குத்தான் இந்த ஓப்பந்தத்தை வழங்கியுள்ளோம்.என்னை நம்பி ஒரு பொறுப்பை நிறுவணம் ஒப்படைக்கும் போது அதை நான் சரியாக செய்யவேண்டும் நம்மை நம்புறவங்களுக்கு நாம் உண்மையாக இருக்கனும் இல்லையா ராகுலன்.
நம்மை நம்புறவங்களுக்கு நாம் உண்மையாக இருக்கனும் இல்லையா இந்த வார்த்தைகள் ராகுலனை வெகுவாக காயப்படுத்தியது சாரி ரோஷினி நான் உங்களை வெகுவாக காயப்படுத்திட்டன் வெரி சாரி.போயிட்டுவாரன் பை பை
இருங்க ராகுலன் என்ன அவசரம் என்னையும் கூட்டிட்டு போங்க ராகுலன் என்று ரோஷினி சொல்லவும் ஓடிவந்த ராகுலன் அவளை கட்டிக்கொண்டான்.என்மேல ஒரு துளியும் கோபம் இல்லையா ரோஷினி
இருக்கு ராகுல் ஆனாலும் அந்த கோபத்தை எல்லாம் தாண்டி மனம் முழுவதும் நீ குடிகொண்டு இருப்பதால் என்றும் உன்னை வெறுக்கமுடியவில்லை.என் காதல் உண்மையானது அதுக்கு நான் எப்பவும் உண்மையாக இருப்பேன் ராகுலன்.
(யாவும் கற்பனை)
|
12 comments:
அருமையான காதல் கதை
வித்தியாசமான சரியான முடிவு
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 1
@Ramani
மிக்க நன்றி பாஸ்
சுபம்.....சுகம்.வாழ்த்துக்கள்.அப்பிடியே அஞ்சலியும் அழகு.
ஆணின் அன்பை பயன்படுத்தி காரியம் சாதிக்கும் பெண்களும் இருக்கவே செய்கின்றனர் :)
@Athisaya
நன்றி சகோ
@மைந்தன் சிவா
நெசம்தான் தல அது பற்றி ஒரு கதை போட்டுட்டால் போச்சு
நன்றி தல
பகல் வணக்கம்,ராஜ்!நலமா?கதை அருமை,உங்கள் மனசு போல்!
நல்லதொரு காதல் கதை நண்பரே...
வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)
Alakiya sirukathai
Super...... Aarumaiyana kadhal kadhai.
Super...... Aarumaiyana kadhal kadhai.
Post a Comment