இப்ப சில நண்பர்கள் பேஸ்புக்கில் ஒரு விவாதம் செய்யுறாங்க அது என்னான்னா எங்க அகில உலக லேடி சூப்பர் ஸ்டார் தேவயானி அவர் கணவர் ராஜகுமாரன் கூட ஒரு படத்தில் நடிக்கின்றார்.இது பொறுக்கமுடியாத சிலர்.தலிவி 15 வயசுப்பொண்ணா அந்த படத்தில் நடிக்குதாம் இது என்ன கொடுமை என்று வாதிடுறாங்க.
இவங்களுக்கு என்ன பிரச்சனைனா ஒருவேளை எங்க தலிவி மறுபடியும் நடிக்க வந்தால் இவங்களின் சமந்தா,ஹன்சிகா,கஜோல் என்று இவங்க மார்கெட் காலியாகிடுமோ என்ற பயம் தான்.ஹி.ஹி.ஹி.ஹி.......
ஒரு விளக்கம் அது என்ன அகில உலக லேடி சூப்பர் ஸ்டார் யாரு இந்த பட்டம் கொடுத்ததுனு உங்களுக்கு குழப்பம் வராலம்.இருங்க தெளிவு படுத்துறன்.
இளைய தளபது,புரட்சி தளபதி,கேப்டன் என்று எல்லாம் சொல்லுறீங்களே இவர்கள் எல்லாம் என்ன மிலிட்ரிலயா இருந்தாங்க இல்லைத்தானே எல்லாம் நம்ம ரசிக கண்மணிகள் கொடுத்த பட்டம் தானே.அது போல எங்க தலிவியையும் நாங்க அகில உலக லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லுறம் ஓக்கேயா
சரி மேட்டருக்கு வருவம் அமிதாப்பச்சன் அவர் மகனுக்கு மகனாக 12 வயசுப்பையனாக நடிக்கும் போது.
அதைவுட 40,50,60 வயசிலையும் காலேஜ் ஸ்டுடண்டா நம்ம ஹீரோக்கள் நடிக்கும் போது எங்க தலிவி 15 பெண்ணா நடிச்சா என்ன தப்பு இல்லை என்ன தப்பு?
யோவ் பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்புடுறானு உனக்கு என்னனு நீங்க பொங்கலாம். அதைதானுங்க நானும் சொல்லுறன் எங்க தலிவிக்கு அழகு இருக்கு இளைமை இருக்கு அவங்க 15 வயசு பொண்ணா என்ன 12 வயசு மாதிரியும் நடிப்பாங்க.இதுக்கு ஏன் விவாதம்.
தலிவியின் சிரிப்பில் சின்னாப்பின்னமானவர்களின் தொகை நம்ம ஹீரோக்கள் படத்தில் பந்தாடும் வில்லன்களின் அடியாள்களின் தொகையைவிட பல மடங்கு அதிகம்யா.
கோழி குருடா இருந்தா நமக்கு என்னய்யா குழம்பு ருசியா இருந்தா சரிதானே அதே போல தலிவிக்கு 35+ வயசு இருந்தா நமக்கு என்ன.அவங்களுக்கு 15+ நடிக்கிற அளவுக்கு அழகும் திறமையும் இருக்கு அப்புறம் என்ன விவாதம்.
அப்பறம் படம் வெளியாகும் போது 15 அடி ஒசரத்துக்கு கட்டவுட் வைச்சு பால் அபிசேகம் நெய் அபிசேகம் என்று பல நடத்துறம் பாருங்க.
அப்பறம் முதல் இரவு ஜ மின் படம் வெளியாகுற முதல் இரவு தூங்காம தியேட்டர் வாசலில் காத்து இருந்து காத்தால வெள்ளன டிக்கெட் வாங்கி பர்ஸ்ட் ஷோ பார்த்தாதான் இந்த மண்ணில் தேவயாணி ரசிகனா பொறந்ததுக்கு அர்த்தம் கெடைக்கும்.
அப்பறம் தேவயாணிக்கு போட்டியா உள்ள ஹன்சிகா,சமந்தா,கஜால் அகர்வால் எல்லோறையும் விமர்சிச்சு பல பதிவுகள் போடுவோம் கஜோல் அட்டு பிகர்,சமந்தா சா................அதாவது சாறு இல்லாதா சாத்துக்குடினு சொல்ல வந்தேன்.
அப்பறம் படம் மெகா ஹிட்டாத்தான் இருக்கும் ஒருவேளை மெகா ஹிட்டாகாம ஹிட்டாகிடுச்சினா.இல்லை படம் மெகா ஹிட்தான் ஒருவாரத்தில் இவ்வளவு வசூல்,அவ்வளவு வசூல் அப்படி இப்படினு நாலு அஞ்சு பதிவுகள் போடுவோம்.சரி அப்புடியும் இல்லைனா அந்த நாட்டில் இத்தனை நாள் ஓடுது இந்த நாட்டில் இத்தனை நாள் ஓடுது அப்புடினு வசந்தியை கெளப்பி விடுவோம் சாரி வதந்தியை கெளப்பிவிடுவோம்.
எப்படியும் நம்ம பதிவர்கள் படம் பற்றி விமர்சனம் போடுவாங்க அதுல தலிவியை புடிக்காக சிலர் தலிவி பற்றி ஏதும் சொன்னால் உடனே அங்க போய் சண்டைபோடுவோம் பத்து பதினஞ்சு ஜடில நாங்க ஒரு குறூப்பா போயி திட்டிட்டு வருமோம்.இல்லை பெயரிலியாக கமண்ட் போட்டுவோம்.
பல மைனஸ் ஓட்டுக்கள் குத்துவோம்
எது எப்புடியோ எங்களுக்கு செம விருந்தாக தலிவி படம் வர இருக்கு அதை மெகா மெகா ஹிட்டாகுவதுதான் எங்க வேலை.
இப்படிக்கு
தேவயானியின் அழகில் ஆன்மாவை தொலைத்தோர் சங்கம்
|
27 comments:
பாவங்க அவர்... தம்பியின் வற்புறுத்தலில் நடிப்பதாக தகவல்... (தம்பி : நாக்க முக்க புகழ்)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... அப்ப இன்னைக்கு நைட் கணவுல... தலிவி வருவாங்களா?.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியல...
Why this kolaiveri?
எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இதுப்போல இனி கொல்லாத
@திண்டுக்கல் தனபாலன்
இது எங்கள் கடமை பாஸ்
@Chamundeeswari Parthasarathy
ஆல் ரெடி 15 வருசத்துக்கு முன்னாடி நான் ரொம்ப சின்னப் பையனாக இருக்கும் போதே வந்திட்டாங்க
@கவிதை வீதி... // சௌந்தர் //
ஹா.ஹா.ஹா.ஹா......
@ராஜி
////Why this kolaiveri?
////
ஹி.ஹி.ஹி.ஹி.......
@ராஜி
////எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இதுப்போல இனி கொல்லாத////
இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு
இது எல்லாம் பொறாமையில் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் தேவயானி நல்ல திறமையான நடிகை நிச்சயம் படம் ஹிட்டாகட்டும் நல்ல பாட்டு செட்டாகட்டும் தனிமரம் பிட்டாக்கும் பாடலை:))))
வேலையில்லை என்றால் வாழைமரம் கட்ட நானும் வாரன் வசந்திகூட சீச்சீ வசந்தி தியேட்டருக்கு நான் கூட :))))
@தனிமரம்
////
இது எல்லாம் பொறாமையில் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் தேவயானி நல்ல திறமையான நடிகை நிச்சயம் படம் ஹிட்டாகட்டும் நல்ல பாட்டு செட்டாகட்டும் தனிமரம் பிட்டாக்கும் பாடலை:))////என்ன பாஸ் ஒரே அடுக்கு மொழியாக இருக்கு நம்ம சிம்பு அப்பா படம் ஏதும் பார்த்திட்டு வாறீங்களா
@
தனிமரம் said...
வேலையில்லை என்றால் வாழைமரம் கட்ட நானும் வாரன் வசந்திகூட சீச்சீ வசந்தி தியேட்டருக்கு நான் கூட :)////
வாழை மரம் மட்டும் இல்லை இன்னும் பல வேலைகள் இருக்கு வாங்க வாங்க
நடத்துங்க ராசா!உங்க வயசே வெறும் பதினெட்டு தானே?ஹ!ஹ!ஹா!!!!
அப்படியே "எம்.என்.ராஜமும் இருபது வயதுக் கதாநாயகி வேடத்தில் நடிக்கக் கூடாதா ?" அப்படின்னு ஒரு பதிவு போட்டுத்தள்ளவும்....இதுக்கு அது எவ்வளவோ பெட்டர். இறைவா "நண்பர்கள்" இடமிருந்து என்னைக்காப்பாற்று...எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன் னு ரஜினி சரியாத்தான் சொல்லியிருக்கிறார் .
ஹையோ முருகா ராஜ் ஐக் காப்பாத்தப்பா.. முடியல்ல:)).
சமந்தாவுடன் ஒப்பிட்டு பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. இதன் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள் ராஜ்...
ஆஹா...நீங்க தலிவியின் தொண்டனா...கலக்குங்க..
தேவைதான்
அம்பது அறுவது வயசுலயும் உங்க காலத்து ஹீரோயின்கள பத்தி எல்லாம் பத்தி எழுதுறீங்களே.. நீங்க எல்லாம் நல்லா வரனும்!!
இங்க பார்டா.....கொஞ்ச நாளையில கோயில் கட்டிப்போடுவீங்கள்போல !
அனைவருக்கும் நன்றி நண்பர்களே
ஏங்க, வுட்டா ஒரு ரசிகர் மன்றமே தொடங்கிடுவீங்க போலிருக்கே!! உங்க தலைவி நடிக்கும் படம் வெற்றியடைய வாழ்த்துகள்!
***
'நீ வருவாய் என' எனக்கு பிடித்த படம், அதுதானா ராஜகுமாரன் இயக்கிய கடைசி படம்? (அ) வி.மண்ணுக்குமா?
யோவ் கிஸ்ராஜா, உம்ம தலைவியோட லேட்டஸ்ட் ஸ்டில் போட தில் இருக்கா? ஏம்யா பழைய ஸ்டில்லைப் போட்டிருக்கீங்க?
@பழூர் கார்த்தி
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாஸ்
@செங்கோவி
போடுறோம்யா போடுறோம்
Post a Comment