சென்னையில் வரும் 26ம் திகதி நடைபெற உள்ள பதிவர் சந்திப்பு சிறப்புற நடைபெற நண்பர்கள் தளம் அதன் வாசகர்கள் சார்பில் வாழ்த்தி நிற்கின்றது.
அன்புடைய விழா ஏற்பாட்டுக்குழு நண்பர்களுக்கு
கடல் கடந்து ஈழத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் என்னையும் உங்களையும் இணைத்தது இந்த வலை உலகம் தான்.எங்களுக்கு எப்பவும் இந்திய நாட்டின் மீது குறிப்பாக தமிழ் சொந்தங்கள் மீது ஒரு அளவற்ற பற்று சினிமா என்றாலும் முதலில் நாங்கள் ரசிப்பது இந்திய சினிமாவைத்தான்,கலை கலாச்சாரம் என்று பல்வேறு விடயங்களில் ஒன்று பட்ட நாங்கள் வலைப்பதிவுகள் வாயிலாகவும் ஒன்றுபட்டுள்ளது மகிழ்ச்சியானவிடயமே.
எங்கள் எழுத்துக்களை பலரிடம் கொண்டு சேர்த்திலும்,அதற்கு சரியான அங்கீகாரம் வழங்கியதிலும் இந்திய பதிவுலக சொந்தங்களுக்கு அளப்பெரிய பங்களிப்பு உள்ளது.பதிவுலகையைம் தாண்டி அண்ணா என்றும்,அக்கா என்றும்,மாப்ள என்றும் மாமா என்றும் உரிமையுடன் பழகும் உங்களுடன் இந்த நட்பு கிடைக்கப்பெற்றது மிக்க மகிழ்ச்சியான விடயம்.
சும்மா பொழுதுபோக்கிற்கு பதிவெழுதுவது என்ற நிலையைத்தாண்டி அறிவியல்,மருத்துவம்,அரசியல்,பொருளாதாரம் என்று மக்களுக்கு பயன் படும் பல வலைப்பதிவுகள் பதிவுலகில் இயங்கிவருவது சிறப்பான விடயம்
இப்படியான சந்திப்புக்கள் மூலம் பலரும் அறியாமல் இருக்கும் பல வலைத்தளங்கள் பலரும் அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் என் பது நிச்சயம்.
பதிவர்களுக்கு இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவும் பல சிறந்த படைப்பாளிகள் அடையாளம் காணப்படவும் இப்படியான சந்திப்புக்கள் நிச்சயம் உதவும் அந்தவகையில் மாபெரும் ஒரு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த சென்னை பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்குழுவுக்கு ஒரு பதிவர் என்ற முறையில் நன்றியையும் வாழ்த்துக்களையும் பதிவு செய்கின்றேன்.
உங்கள் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள மனம் விரும்பினாலும், நாடுகடந்து இருப்பதால் கலந்துகொள்வதில் சில பிரச்சனைகள் இருப்பதால் மனம் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துகொள்கின்றது இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெறும் பட்சத்தில் அதை நிச்சயம் தவறவிட மாட்டேன் நண்பர்களே.
மின்னல் வரிகள் கணேஸ்,மதுமது,புலவர் இராமநுசம் ஜயா,சென்னைப்பித்தன் ஜயா,கவிதைவீதி செளந்தர்,மற்றும் தமிழ்வாசி பிரகாஸ் போன்ற இந்த ஏற்பாட்டுக்குழுவில் அங்கம் வகிக்கும் சிலர் என்னுடன் நன்கு பதிவுலகில் பழகும் நண்பர்களே இவர்களால் இப்படி ஒரு முயற்சிக்கு வித்திடப்படுகின்றது என்று அறிந்தவுடன் மிகவும் நான் மகிழ்ச்சி அடைந்தேன் இந்த சந்திப்பு சிறப்புற நடைபெற பாடும்படும் அனைத்து உள்ளங்களுக்கும் அனைத்து பதிவர்களுக்கும் இந்த பதிவுலகில் வலம் வரும் ஒரு பதிவர் என்ற முறையில் மீண்டும் வாழ்த்துக்களையும் மனமார்ந்த நன்றியையும் நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் கூறிக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே.
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
நண்பர்கள்
நண்பர்கள்
*********************************************************************************
இன்றைய தினம் வெளியான இன்னும் ஒரு பதிவை படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா-5
*********************************************************************************
|
23 comments:
வாழ்த்துக்கள் நண்பரே... நன்றி...
தங்கள் வாழ்த்து நிச்சயம்
விழா ஏற்பாட்டுக் குழுவினருக்கு
நல்லூக்கம் கொடுக்கும்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
கடல் கடந்து வாழும் தங்கள் வாழ்த்துக்கு, கரம் குவித்து நன்றி தெரிவிக்கிறேன் சா இராமாநுசம்
வாழ்த்துக்கள் ...
நீங்க எங்க ரீ ரீ அண்ணா வின்ற நண்பர் தானே ..
முக நூலில் அழைப்பை பார்த்து வந்தினான் ..வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே...
வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரரே.
வாழ்த்துக்கு நன்றி ராஜ்
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
@Ramani
நன்றி பாஸ்
@புலவர் சா இராமாநுசம்
நன்றி ஜயா
@கலை
வாருங்கள் அக்கா முதல் முறையாக நம்ம தளத்துக்கு வந்திருக்கிறீங்க
ஆமா அது யார் ரீ ரீ அண்ணா? எனக்கு புரியவில்லை
@கலை
நன்றி அக்கா
@மதுமதி
நன்றி பாஸ்
@Jey
நன்றி சகோ
@சென்னை பித்தன்
நன்றி பாஸ்
வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
ராஜ்... ரீரீ அண்ணா என்றால் தனிமரம் நேசன் என்று புரிந்து கொள்க. உங்களைப் போன்ற வெளிநாடு வாழ் நண்பர்கள் இங்கு வந்தால் உங்களுக்காகவே ஒரு மினி பதிவர் மாநாடு நடத்திடலாம் வருத்தப்படாதீங்க. உங்களுடைய மகிழ்வு தந்த வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
@Jaffna Athikaa
உங்கள் தளம் திரட்டியா புரியவில்லை நண்பரே
@பால கணேஷ்
அட ரீ ரீ அண்ணா என்றால் நேசன் அண்ணாவா
மிக்க நன்றி பாஸ்
நன்றிகள் பல தோழா....
@தொழிற்களம் குழு
நன்றி சகோ
வருத்தப்படாதே தம்பி. உன் சார்பில் நாங்க கலந்துக்கிட்டு சிறப்பிக்கிறோம். அந்த குறை தெரியாம இருக்க, உனக்கு புகைப்படம் அனுப்புறோம். ஆமா, என் பிளாக்குக்கு வராம, என் மக பிளாக் மட்டும் போறியே இது நல்லா இருக்கா? அவ, என்னை மதிப்பாளா?
@ராஜி
மிக்க நன்றி அக்கா
ஹா.ஹா.ஹா.ஹா....தற்போது எல்லாம் அதிகமாக ப்ளாக் பக்கம் வரமுடியவில்லை அக்கா அதைவிட புதியவர்களை ஊக்குவிப்பது நமது கடமை அல்லவா அதுதான் உங்க பொண்னு ப்ளாக் பக்கம் நேரம் கிடைக்கும் போது போவது அதுவும் ஒரு சில பதிவுகளுக்குத்தான்
அக்காவை மறப்பேனா இனி கண்டிப்பாக உங்கள் ப்ளாக் பக்கம் தவறாமல் வருவேன் அப்படி வராவிட்டால் டாகுதரின் சுறா படத்தை எத்தனை தடவை நீங்க பார்க்க சொன்னாலும் பாக்கிறன் சரியா
Post a Comment