ஆனைவிழுந்தான் வாழ்க்கை சிறுவனான சதீஸ்க்கு சந்தோசமாக இருந்தாலும்.அவனது குடும்ப நிலை தொடர்ந்து அங்கே இருக்க முடியாதவாறு மாறியது.வறுமை வாட்டியது.
ஆனைவிழுந்தான் பல விடயங்களை அவனுக்கு கற்றுத்தந்த ஊர்.விளையாட்டில் அதிகம் ஆர்வம் உள்ள சதீஸ் முதன் முதலில் கிரிக்கெட் பேட் பிடிக்க கற்றுக்கொடுத்தது ஆனைவிழுந்தானில்தான்.
கங்குலி,ஜெயசூர்யா,ஸ்ரிபன் ப்ளமிங்,என்று அவனது அபிமான கிரிக்கெட் வீரரகளின் பெயர்கள் எல்லாம் பரிச்சயமானது அந்த ஊரில் தான்.
கிரிக்கெட் வீரர்கள் பற்றிய விபரங்களை,செய்திகளை படங்களை,பத்திரிகையில் இருந்து வெட்டி ஓட்டி சேகரிப்பது வைப்பது சதீஸ்சின் பொழுது போக்கு.
வறுமைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டத்தில் தன்னம்பிக்கை சிறிது குறைந்தாலும் தோற்றுப்போய்விடுவோம். தொடர்ந்து போராடவேண்டும் பசி,பட்டினி எல்லாம் அறியாமல் இருக்கும் மனிதர்கள் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்.என்று சதீஸ் அப்போது எல்லாம் நினைத்துக்கொள்வதுண்டு.
1998 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ராணுவத்தின் வசம் இருந்த கிளிநொச்சி நகரம் மீண்டும் விடுதலைப்புலிகள் வசமானதைத்தொடர்ந்து. 2000 ஆம் ஆண்டு மீளவும் மக்கள் கிளிநொச்சியில் குடியேறத்தொடங்கினர். 2001 ஆம் ஆண்டு சதீஸ் வாழ்கையில் மறக்கமுடியாத ஒரு ஆண்டு.ஆம் ,உறவுகளாக பழகிய அன்பான மனிதர்களை பிரியப்போகின்றோமே என்ற கவலை அவன் மனதில்.ஆம் ஆனைவிழுந்தானில் இருந்து 2001ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மீண்டும் சொந்த ஊர் நோக்கிய பயணம்.
ஆனைவிழுந்தானில் இருந்த பல மக்களும் தமது சொந்த இடங்களுக்கு செல்லத்தொடங்கினர்.சதீஸும் ஆனைவிழுந்தானை விட்டு 2001ம் ஆண்டு வந்த பின் சில மாதங்களில் ஒரு நாள் மீண்டும் போயிருந்தான்.அதுதான் அவனுக்கும் அந்த மண்ணுக்குமான இறுதித்தொடர்பு மீண்டும் அவன் அந்த மண்ணை மிதிக்கவேயில்லை.
மீண்டும் சொந்த ஊருக்கு வந்த சதீஸ்க்கு எல்லாம் புதிதாக தெரிந்தது 5 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்து போகுன்ற போது விபரம் தெரியாத வயது ஆனால் இப்போது ஒரளவு அறிந்த சிறுவனாக மாறிவிட்டான்.
இடம் பெயர்வுக்கு முன் படித்த பாடசாலையிலே மீண்டும் சேர்தான்.எல்லோறும் ஏற்கனவே தெரிந்த நண்பர்கள் என்பதால் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஒரு சிலர் புதிய முகங்களாக இருந்தார்கள்.
மீண்டும் சொந்த ஊரில் அவனது பள்ளிப்பருவம் சந்தோசமாக ஆரம்பித்தது.
பாடசாலைக்கு சேர்ந்த அன்றுதான் அவளை முதன் முதலில் பார்த்தான்
சைட் உச்சி பிரித்து இழுத்த அவளது தலைமுடி,உயிரை கொள்ளை கொள்ளும் காந்தக் கண்கள்,என்னேரமும் புன்னகை சிந்தும் அவள் இதழ்கள்,சிறுமியாக இருந்து இளம்பெண்ணாக அவள் மாறிக்கொண்டு இருப்பதை சொல்லும் அவள் முன்னழகு,பொட்டு வைக்காத அவள் நெற்றி,காதோரம் வீழ்ந்து இருக்கும் அவள் முடி
ஒரு அழகுப்பதுமையை அவன் வகுப்பில் சதீஸ் பார்த்தான்.எல்லோறுடனும் கலகல என பேசுவாள். ஒரு குறும்புக்கார குட்டிப்பெண். அவள் பெயர் பிரியா
அவளது குறும்புகளை வெகுவாக சதீஸ் ரசிப்பான்.அவளுடன் பேசவேண்டும் என மனம் ஏங்கினாலும் ஏதோ ஒரு தயக்கம் அவனை தடுத்துவிடும்.
என்னதான் சொந்த ஊருக்கு வந்தாலும் வறுமை சதீஸை வாட்டியது.நாளைக்கு எல்லோறும் சயன்ஸ் புக் ஒன்று கொண்டு வரவேண்டும் என விஞாண பாட ஆசிரியர் சொல்லிவிட்டார் அதன் விலை அப்போது 35 ரூபாதான் ஆனாலும் சதிஸ்க்கு அது பெரிய தொகை.அவன் ஆசையாசையாக வளர்த்த ஆட்டுக்கடா விற்பனையாகி சயன்ஸ்புக் உட்பட பல படிப்பு செலவுகளையும் குடும்ப செலவையும் ஈடு செய்தது.
2002 ம் ஆண்டு நாட்டில் யுத்தம் நீங்கி சமாதானம் ஆரம்பித்தது. வறுமை படிப்படியாக குறையத்தொடங்கியது.விவசாயியான சதீஸின் தந்தை மீண்டும் விவசாயம் செய்யத்தொடங்கினார்.ஓரளவு அவர்கள் கஸ்டங்கள் நீங்கியது.
(தொடரும்)
சயன்ஸ்புக்-விஞான பாட செயன்முறைகளை எழுதுவதற்கு பயன்படுத்தபப்டும் கொப்பி(நோட்டுபுத்தகம்)ஒரு பக்கம் வெள்ளை தாளும் மறுபக்கம் கோட்டுத்தாளும் இருக்கும்
படங்கள்-கூகுள்
இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் தொடர்
படங்கள்-கூகுள்
இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் தொடர்
|
8 comments:
நலமா நண்பரே! மீண்டும் சந்திப்போம்!
வறுமை... கொடுமை...
தொடர்கிறேன்...
tm4
வறுமையும் யுத்தமும் எத்தனை சோகங்களை தந்துவிட்டது பலருக்கு!
யுத்தத்தின் அவலம் பற்றி தொடருங்கள்.
@புலவர் சா இராமாநுசம்
வருகைக்கு நன்றி ஜயா
@திண்டுக்கல் தனபாலன்
உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி நண்பரே
@தனிமரம்
உண்மைதான் பாஸ்
@செங்கோவி
வருகைக்கு நன்றி பாஸ்
Post a Comment