இந்தப்பதிவு நேற்று(நவம்பர்-1) ஜஸ்வர்யாராயின் பிறந்த நாள் அன்று வெளிவந்திருக்க வேண்டிய பதிவு நேரம் இன்மையால் நேற்று வெளியிட முடியவில்லை இன்று வெளி வருகின்றது.
பெண்ணே உனது மெல்லிடை பாத்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலை சுத்தி போனேன்
ஆஆஆ அவனே வள்ளலடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்த்து
என்னை வதைப்பது கொடுமையடி.......
மேலே உள்ள வரிகள் ஜஸ்வர்யா ராய்க்காகவே வைரமுத்து எழுதிய வரிகள் என்று தான் நினைக்கத்தோன்றுகின்றது.இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ பேரழகிகள் தோன்றியிருக்கலாம் ஆனால் ஜஸ்வர்யா ராய் போல ஒரு பேரழகி போன்றுவது என்றால் மீண்டும் மறுஜென்மத்திலும் ஜஸ்வர்யா ராயே பிறந்து வந்தால் தான் உண்டு.
1973 ஆம் ஆண்டு பிறந்த ஜஸ்வர்ய ராய் 1994ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றார்.இதுவரை எத்தனையோ பேர் உலக அழகி பட்டம் வென்று இருக்க்கின்றார்கள்.இந்தியாவில் இருந்தே சுஷ்மிதா சென்,லாரா தத்தா போன்றோர் இருக்கின்றார்கள்.
ஆனால் உலக அழகி என்றதும் உடனே உங்களுக்கு ஞாபகத்துக்கு வருவது யார்?
இதுதான் ஜஸ்வர்யா ராயின் தனிச்சிறப்பு.
உயிர் அற்ற தாஜ்மகால் அழகா இல்லை உயிர் உள்ள தாஜ்மகால் அழகா? |
நடிகர்களை விட நடிகைகளுக்குத்தான் நான் ரசிகன்.தேவயானி,சிம்ரன்,ஜோதிகா ,கரீனா கபூர்,என்று பட்டியல் நீளம்.ஆனால் எத்தனை நடிகைகளுக்கு ரசிகனாக இருந்தாலும் ஜஸ்வர்யா ராயின் மிக மிக மிக................... தீவிரமான ரசிகன் நான்.
தாளம்,குரு,தூம்-2,ஜோதா அக்பர்,போன்ற படங்களை எத்தனை தடவை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது குறைந்த பட்சம் ஒரு 50 தடவையாவது பார்த்திருப்பேன்.
அதுவும் தாளம் படத்தில் ”காதல் யோகி காதல் யோகி ......” என்ற பாடலில் அனில் கபூருடன் ஜஸ் மேடம் ஆடும் போது. ஆ என்று மேடத்தையே பார்த்து கொண்டு இருக்க பக்கத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர் கவனம் வாய்க்குள் ஈலையான்(ஈ)போகப்போகுது என்ற போதுதான் நான் சுய நினைவுக்கு வந்தேன் ஹி.ஹி.ஹி.ஹி......
இதுதான் அந்தப்பாட்டு நீங்களும் பாருங்கள் உங்களுக்கே புரியும்
தாளம் படத்தில் இன்னும் ஒரு பாடல் எங்கே என் புன்னகை யார் கொண்டு போனது பாடலில் நம் மனசை ஜஸ் கொண்டு போகின்றார்.
ரஹ்மான் இசையில் மனதை மயக்கும் பாடல்களுடன் முக்கோண காதல் கதையை கொண்ட படம் தாளம் இன்னும் படம் பார்க்காதவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.நிச்சயம் எல்லோறுக்கும் பிடிக்கும்.
ஒரு ரசிகனாக ஜஸ்வர்யா ராய் பற்றி எழுதுவது என்றால் ஒரு பதிவு போதாது.அவ்வளவு ரசனை சின்னவயதில் இருந்து இன்றுவரை அந்த ரசனை துளியும் மாறவில்லை இனியும் மாறாது.இன்னும் ஒரு ஜென்மத்திலும் மேடம் ஜஸ்வர்யா ராயாகவே பிறக்கவேண்டும். அப்போதும் நான் அவரது ரசிகனாக இருக்கவேண்டும்.
லேட்டாக சொன்னாலும் லேட்டஸாக சொல்கின்றேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்/wish your happy birthday beauti
ful(Aishwarya Rai )
அன்புடன்
ஜஸ்வர்யா ராய்
ரசிகன்
************************************************************************************************************
படங்கள்-கூகுள்
வீடியோ-youtube
************************************************************************************************************
************************************************************************************************************
படங்கள்-கூகுள்
வீடியோ-youtube
************************************************************************************************************
|
2 comments:
தம்பி ரொம்ப ரசிச்சு இருக்கீங்க போல ஹஹஹா இன்று எனது தளத்தில் http://chakkarakatti.blogspot.in/2012/11/blog-post_1.html
ரசனையை ரசித்தேன்...
நன்றி...
tm2
Post a Comment