ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் படம் துப்பாக்கி.
மில்ட்ரியில் இருக்கும் விஜய் லீவில் ஊருக்கு வருகின்றார்.இவரும் போலிஸான இவர் நண்பன் சத்யனும் கண்முன்னால் ஒரு குண்டுச்வெடிப்பை பார்கின்றனர்.அந்தக் குண்டை வைத்த நபரை விஜய் பிடித்துவிடுகின்றார்.
அவரிடம் விசாரிக்கும் போது.இன்னும் பல இடங்களில் குண்டு வைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரிகின்றது.விஜய் அந்தத்திட்டத்தை எப்படி முறியடிக்கின்றார்.அந்த தீவிரவாதக்கும்பலை எப்படி ஒழித்துக்கட்டுகின்றார் என்பதை விஜயின் வழமையான நகைச்சுவை,ஆக்சன் கலந்து சொல்லியிருக்கின்றார் முருகதாஸ்.
ஏற்கனவே பல படங்களில் அர்ஜுன்,சரத்குமார்,விஜயகாந்,செய்த வேலையை இந்தப்படத்தில் விஜயை செய்யவைத்து இருக்கின்றார்.என்ன கொஞ்சம் வித்தியாசமாக முயன்று இருக்கின்றார். மற்றும் படி கதை ஒன்றும் புதியது இல்லை.அக்சன் கிங் அர்ஜுனின் படங்களை பார்பதை போல ஒரு உணர்வு வருவதை தவிர்க்கமுடியவில்லை.
வழமையாக இப்படியான படங்களில் ஹீரோயினுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது.ஆனாலும் கிடைத்த வாய்புக்களில் பின்னிஎடுத்துள்ளார் காஜல்.விஜய் பொண்ணூபார்க்க வந்து முதல் முறை பிடிக்கவில்லை என்று சொல்வதும்.பிறகு அவர் மீண்டும் பிடிக்கும் என்று சொல்லும் போது கஜோல் மறுப்பதும்.பிறகு காஜல் பிடித்திருக்கு என்று சொல்லும் போது விஜய் மறுப்பதும் இதற்கிடையில் விஜயின் சீனியர் ஆப்பீசரான ஜெயராம் காஜலை பொண்ணுப்ப்பார்க்க வருவதும் அவர் காஜலை லவ்வுவதும் எனது நகைச்சுவையாக காஜல்,விஜய் காதலை சொல்லியுள்ளார்கள்.
காஜல் ரசிகர்களுக்கு செம விருந்து,பாடல் காட்சிகளில் பட்டையை கெளப்புகின்றார் கஜோல் அதுவும் கூகுள்,கூகுள் பண்ணிப்பார்த்தேன் பாட்டுல ஆண்ட்ரியாவின் குரலுக்கு காஜலின் ஆட்டம் செம செம................
படத்தில் விஜய் ஒரு வசனம் சொல்வார் அரையடி கூந்தல் உள்ள பொண்ணுங்களே வெளியில் கிளம்பும் போது ஒருமணித்தியாளம் தலை சீவுராளுக ஆறடி கூந்தல் உள்ள பொண்ணு எத்தனை மணித்தியாளம் தலை சீவுவாள்.வெளியில் கிளம்ப மணித்தியாலக்கணக்காக ஆகும் அதனால எனக்கு இந்த பொண்ணு பிடிக்கலை என்று. தியேட்டரின் செம வரவேற்பு இந்த சீனுக்கு(நிறையா பேர் பாதிக்கப்பட்டுள்ளாய்ங்க போல ஹி.ஹி.ஹி.ஹி.....)
அப்பறம் ஜெயராம் விஜய்க்கு ஒரு பொண்ணைப்பேசி அவளை பார்க்க வரச்சொல்லுவார் அங்கே போகும் விஜயும்,கஜாலும்.அந்தப்பொண்ணை பார்த்ததும் காஜல் சொல்லுவார் இவளை எங்கோ பார்த்த மாதிரி இருக்கேனு
உன் போன்ல இண்டர்நெட் இருக்கா அதுல இந்த.........................இந்த வெப்சைட்டுக்கு போ என்று ஒரு கில்மா வெப்சைட் பெயர் சொல்லுவார்.அதுல போய் பார்கும் போது அந்தப்பெண்ணின் போட்டோ விபரம் எல்லாம் இருக்கும்.
காஜல் சொல்லுவார் இவள் ஒரு மேட்டர் எனவே இந்தபெண்ணு உனக்கு வேணாம் என்று. ஆனால் விஜய் காஜலை கடுப்பேத்த எனக்கு இந்தப்பொண்ணு பிடித்திருக்கு என்று சொல்லுவார் பிறகு அந்தப்பெண்ணு விஜயை வேணாம் என்று சொல்வதும் அதுக்கு காஜல் ஒரு மேட்டருக்கு கூட உன்னை பிடிக்கவில்லை என்று கலாய்பதும் கலக்கல்.
இந்த சீன் நகைச்சுவயையாக படத்தில் இருந்தாலும் இதில் இருந்து முருகதாஸ் சொல்லவரும் விடயம் பொண்ணுங்களும் அதிகமாக கில்மா வெப்சைட் பாக்கிறாங்க என்று ஹி.ஹி.ஹி.ஹி.......(நோட் திஸ் பாயிண்ட் )
துப்பாக்கி அனைவரும் ஒரு தடவை பார்க்கலாம் படம் ரசிக்கும் படியுள்ளது
துப்பாகியுடன் வேறு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் ஆகாத படியால் துப்பாக்கி தேறிவிடும்.ஆனால் மெகா ஹிட்,சூப்பர் ஹிட்டாகும் என்று எல்லாம் சொல்லமுடியாது.
ஆக மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு சரவெடி
|
7 comments:
செம ஹிட்...
ரசிக்க வைக்கும் விமர்சனம்...
tm1
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
படம் அருமை என்று தான் அனைவரும் சொல்றிங்க .. ஓகே பார்த்துடுவோம்
இதையும் படிக்கலாமே :
துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா ?
விமர்சனத்த விடுங்க.. காஜல் படங்கள் ஒவ்வொன்னும் சூப்பர்ப்..
@"என் ராஜபாட்டை"- ராஜா
அனைவரும் பார்க்க கூடிய படம் தான் பாஸ்
@Dr. Butti Paul (Real Santhanam Fanz)
ஹி.ஹி.ஹி.ஹி........கஜாலுக்காகத்தானே நான் படமே பார்த்தேன்
Post a Comment