(18+...........)
”பணத்திமிர் உனக்கு" விஜயா இந்த வார்த்தைகளை சொன்னான். ஜீரணிக்க முடியவில்லை செவ்வந்தியால்.நான் என்ன பாவம் செய்தேன்.இந்த ஆண்களே இப்படித்தான் என்று ஒட்டு மொத்த ஆண்களையும் கடித்துக்கொண்டாள்.
செவ்வந்தி பெயருக்கு ஏற்ற அழகி.மலையில் இருந்து கருமை நிற அருவி ஒன்று பாய்ந்தால் எப்படி இருக்கும் அது போல அவள் தலையில் இருந்து இடுப்புவரை நீண்ட கருநீலக் கூந்தல்.உலகில் உள்ள அத்தனை காதல் மொழிகளையும் பேசும் அவள் விழிகள்.முத்தமிட்ட நெத்தியில உன் மார்புக்கு மந்தியில செத்துவிட தோனுதடினு பாடல் எழுதிய கவிஞன் ஒருவேளை இவளை பார்த்துதான் எழுதியிருப்பாரோ என எண்ணத்தோன்றும் அவள் முன் அழகு.அவள் இடை,நடை,உடை எல்லாமே அழகு அழகு அழகு வர்ணிக்க வார்த்தைகள் அற்ற பேரழகி.
செவ்வந்தியின் தந்தை பெரும் செல்வந்தர்.அழகு,பணம் அளவுக்கு அதிகமாக அவளிடம் இருந்தாலும் ஒரு போதும் அவள் கர்வப்பட்டது இல்லை இது எதுவும் நிரந்தரம் இல்லை அழியக்கூடியது தூய்மையான அன்பு மட்டுமே அழிவற்றது என எண்ணுபவள்.தன் அழகு,பணத்தின் மீது ஆசைபடாத ஒருவன் தான் கணவனாக வரவேண்டும் என்று நினைத்திருந்தாள்.
விஜய் அவளுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவன்.அமைதியான சுபாவம் யாருடனும் அதிகமாக பழகமாட்டான் அதுவும் பெண்கள் என்றால் கேட்கவே வேணாம் மருந்துக்கும் பழகமாட்டான் தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பான்.
அந்தக் கல்லூரியில் செவ்வந்திதான் குயின்.பல ரோமியோக்களின் கனவுக்கன்னி எஸ்.எம்.எஸ், ஈ-மெயில்,போன் கோல்,நேரில் என பல லவ் அப்ளிகேசன்கள் அவளுக்கு வரும்.அதை எல்லாம் செவ்வந்தி கண்டுகொள்வதே இல்லை.
ஒரு முறை விஜய் அவளிடம் காதலிப்பதாக சொன்னபோது அவளால் நம்பமுடியவில்லை.அப்பாவியாக இருப்பானே பெண்கள் என்றாலே பேசக்கூட மாட்டானே இவனா என்னை லவ் பண்ணுவதாக சொன்னான் என்று பலமுறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.
விஜயின் காதலை ஆரம்பத்தில் செவ்வந்தி மறுத்தாலும் பின் ஏற்றுக்கொண்டாள்.
கல்லூரிப்படிப்பு முடிந்ததும் செவ்வந்தி தந்தைக்கு உதவியாக அவர்களது கம்பனியை கவனித்துகொண்டாள்.விஜய் ஒரு தனியார் கம்பனியில் வேலை செய்தான்.இவர்கள் காதலுக்கு செவ்வந்தியின் தந்தை எதிர்த்தாலும் பிறகு விஜயின் குணத்தினால் கவரப்பட்டு சம்மதித்தார்.
காதலனாக இருக்கும் போது செவ்வந்தி செவ்வந்தி என்று சுற்றி வந்த விஜயின் செயல் பாடுகள் கல்யாணம் ஆனதில் இருந்து மாறத்தொடங்கியது.முதல் இரவில் ஆரம்பித்தது பிரச்சனை.
என்னதான் காதலித்து திருமணம் முடித்திருந்தாலும் செவ்வந்திக்கு ஏதோ இன்றுதான் விஜயை பார்பது போல இருந்தது.
பெண்மைக்கே உரிய நாணத்துடனும்,எதிர்காலம் பற்றிய கனவுகளுடனும் அவள் அந்த அறையினுள் நுழைந்தாள்.அங்கே விஜய் தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
என்ன சார் கல்யாணக் களைப்பில் தூங்கிவிட்டீங்களா?எந்திரிங்க என்று விஜயை எழுப்பினாள்.
இப்ப எதுக்கு தூங்கிகிட்டு இருக்கிறவனை ஏன் எழுப்புற என்று கோபத்துடன் விஜய் கேட்க
இன்னைக்கு நமக்கு பெஸ்ட் நைட் பா என்று கொஞ்சலுடன் செவ்வந்தி சொல்ல
அதுக்கு இப்ப என்னா? உடனே எல்லாம் பண்ணனுமா ஆளைவிடு நான் தூங்கனும்.பேசாமல் படுத்து தூங்க
என்ன விஜய் இப்படி சொல்லுற எந்திரி என்று அவள் அவன் அருகில் வந்தாள்
இங்க பாரு செவ்வந்தி கோபத்தில் நான் ஏதாவது சொல்லிடப்போறேன் அப்பறம் உன் மனசு வேதனைப்படும்
இப்ப மட்டும் என்ன? நான் எவ்வளவு கனவுகளுடன் வந்தேன் நம்ம வாழ்க்கையை தொடங்க சந்தோசமாக நாலு வார்த்தை பேசாமல் நீ பாட்டுக்கு தூங்கனும் என்கிற?
சீ ஒரே இம்சை என்று விஜய் வெளியில் போய்விட்டான்.
விஜய் கோபத்துடன் வெளியில் போவதை அவதானித்த செவ்வந்தியின் தந்தை என்னம்மா என்ன மாப்பள இந்த நேரத்தில் எங்க போறார் என்று கேட்க
இல்லப்பா அவர் ப்ரண்டுக்கு ஆக்சிலண்ட் ஆகிடுச்சாம் அதான் போன் வந்திச்சி போகின்றார் என்று வாயில் வந்த பொய்யை சொல்லி தந்தையை சமாளித்தாள்.
தொடர்ந்து விஜயின் நடவடிக்கைகள் சரியாக இல்லை திருமணமாகி ஒரு மாதம் ஆகிவிட்டது.பகலில் அன்பாய் இருக்கு விஜய் இரவு ஆனால் எரிந்து விழ ஆரம்பித்தான் இந்த ஒரு மாதத்தில் அவன் விரல் கூட அவள் மேல் படவில்லை.அவளிடம் அவன் மனம் விட்டு பேசினாலும் இந்த விடயத்தை கதைக்கும் போது அவன் கோபமாகிவிடுவான்.இதனால் செவ்வந்தி ஒன்றுமே பேசுவது இல்லை தன் தலைஎழுத்தை நினைத்து நொந்துகொண்டாள்.
வெளியில் யாரிடமும் சொல்லமுடியாது.மனதிக்குள்ளே அழுது கொண்டு இருந்தாள்
அன்றும் வழமை போலவே விஜய் இவளிடம் எதுவும் பேசாமல் சாப்பாடு எடுத்துவை செவ்வந்தி என்றான்.
அவள் ஏதும் பேசாமல் சாப்பாடு வைக்க சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்து பேசாமல் தூங்கிவிட்டான்.செவ்வந்திக்கு கோபம் வந்துவிட்டது.ஏன் என்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையை நாசம் பண்ணின விஜய் சொல்லு என்று சற்று கோபத்துடன் செவ்வந்தி கேட்கவும்.
எதுவும் பேசாமல் ஒரு புன்னகையை மட்டும் விஜய் வெளிப்படுத்த.சிரித்து மழுப்பாத நாம ரெண்டு பேரும் கணவன் மனைவிதானே.என்ன பிரச்சனை என்று சொல்லு விஜய் என்று செவ்வந்தி கேட்க
உனக்கு பணத்திமிர் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டு வெளியில் போய்விட்டான்.
இதைத்தான் செவ்வந்தியால் ஜீரணிக்க முடியவில்லை அழுது அழுது அவள் அழகிய முகம் சிவந்து போய் இருந்தது.
மறுநாள் மத்தியானம் விஜய் வீட்டுக்கு வந்தான்.நேராக செவ்வந்தியிடம் வந்த அவன் சாரிம்மா. உன்னை மிகவும் காயப்படுத்திவிட்டேன்.உன் எதிர்பார்பை என்னால் பூர்த்தி செய்யமுடியாது.என்று தேம்பித் தேம்பி அழுதான்
அழுகாத விஜய் என்ன ஆச்சு உனக்கு என்ன பிரச்சனை அவன் தலையை கோதிய படி ஆறுதலாக கேட்டாள்.
அன்று ஒரு நாள் காலேஜில் நீ மயங்கி விழுந்த போது ஹாஸ்பிட்டலுக்கு போனம்ல
ஆமா காலயில் சாப்பிடாமல் வந்திட்டன் அதுநாள மயங்கிவிழுந்தன் அது நடந்து பல வருடம் ஆகிவிட்டதே அதுக்கும் இதுக்கும் என்ன பிரச்சனை
அதுக்கும் இதுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை செவ்வந்தி அன்றைக்கு நானும் சும்மா மெடிக்கல் செக்கப் பண்ணிப்பார்கலாம் என்று நானும் செக் பண்ணினேன் அப்பதான் தெரிந்தது எனக்கு ஒரு பெண்ணை திருப்த்தி படுத்த ஏலாது என்று.அன்றில் இருந்து உன்னிடம் இதை எப்படி சொல்வது என்று நரக வேதனை அனுபவித்து வருகின்றேன் கல்யானத்தின் போதாவது சொல்லாம் என்று இருந்தேன் ஆனால் என்னால் சொல்லமுடியவில்லை என்னை மன்னிச்சிரு நான் உன் வாழ்க்கையை நாசம் ஆக்கிவிட்டேன்.
அப்படி சொல்லாத விஜய் ஏன் செக்ஸ் மட்டும் தான் வாழ்கையா?அதையும் தாண்டி வாழ்க்கை எவ்வளவோ இருக்கு.நமது அறுபது வருட வாழ்க்கையில் எத்தனை முறை நாம் செக்ஸ் வைத்துக்கொள்வோம் அந்த சில காலங்களுக்காக நமது மொத்த வாழ்க்கையை நாசம் பண்ணவேண்டுமா?
முதலிரவில் நீ என்னிடம் எதுவுமே பேசாமல் தூங்கிவிட்டது எனக்கு சற்று கோபம் வந்துவிட்டது மற்றும் படி வேறு ஒன்றும் இல்லை.இனிமேல் இது பற்றி நாம் எதுவும் பேசவேண்டாம்.நீ என் கொழந்தடா என்று அவனை இறுக்க அணைத்துக்கொண்டாள்.
செவ்வந்திக்கு சின்ன வயதில் ஏற்பட்ட கார் விபத்தினால் அவளது பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டதையும் திருமணத்துக்கு முன் டாக்டரிடம் இது பற்றி ஆலோசனை கேட்டபோது அவளால் இயல்பாக ஒரு ஆணுடன் இணைய முடியாது என்ற விடயத்தையும் அவள் தெரிந்துகொண்டாள்.ஆனால் இதை எப்படி விஜயிடம் சொல்வது என்று தவித்துகொண்டு இருந்தவளுக்கு.விஜய்க்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு என்று தெரிந்ததும் இனி தன் குறையை ஏன் சொலுவான் என்று நினைத்துக்கொண்டாள் செவ்வந்தி
ஆனால் அவள் திருமணத்துக்கு முன் டாக்டரிடம் செக் பண்ணிய மெடிக்கள் ரிப்போட்டை விஜய் பார்த்துவிட்டதையும்.அவள் மனதில் குற்ற உணர்வு வரக்கூடாது என்பதற்காக தன் மீது பழியை போட்டுக்கொண்ட விஜயின் காமம் கடந்த காதலை செவ்வந்தி அறிந்திருக்க நியாயம் இல்லை.
*********************************************************************************
முஸ்கி-விடுகதை படம் பார்த்த போது அதில் ஹீரோயின் பிரகாஸ் ராஜ்சிடம் ஒரு வசனம் சொல்வார் தம்பதிகளுக்கு இடையில் செக்ஸ் மட்டும் தான் வாழ்க்கையா?அதையும் தாண்டி எவ்வளவோ இருக்கு என்று.
அதை மையக் கருத்தாக வைத்து இந்த சிறுகதையை எழுதினேன்.என்னடா ராஜ் இப்படியான கதை எல்லாம் எழுதுறான் என்று கலாச்சார காவலர்கள் செம்பை தூக்கினால் நிர்வாகம் பொறுப்பு இல்லை.
*********************************************************************************
|
8 comments:
நன்றாக இருக்கின்றது இப்படி ஐடியலான பெண் மனைவியாகக்கிடைத்தால் நல்லதுதான்
@Kiruththikan Yogaraja
நன்றி பாஸ்
கதை சொல்லும்பாணி பழைய வடிவில் இருந்தாலும், கரு சூப்பர். (நான் சொன்னது கதைக்கரு!)
Super. Nalla iruku. My site: http://newsigaram.blogspot.com
@செங்கோவி
ஹி.ஹி.ஹி.ஹி........நன்றி பாஸ்
@சிகரம் பாரதி
நன்றி சகோ
ராஜ் நீ ரொம்பவும் வித்யாசமா சிந்திச்சு எழுதரப்பா!...
ஹீரோ கேரக்ட்டர் ரொம்ப நல்லா சித்தரிச்சு இருக்க! அருமை!
நல்லதொரு கதைக்களம்! அருமை!
Post a Comment