Thursday, January 03, 2013

நல்ல நண்பர்கள் யார்?(பகுதி-2)

வடிவேல் ஒரு படத்தில் சொல்வார் பீர் சாப்பிடுறபோது இருந்த பிரண்ட்சிப் பிகரை பார்த்த உடன் எங்கடா போயிடுச்சினு.நண்பர்களுக்கு இடையில் இந்தவிடயம் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்று பிகரை கண்டதும் பிரண்டை கட் பண்ணுறது.ஆனாலும் எல்லோறும் அப்படி இல்லை குறிப்பிட்ட சிலர்தான் அப்படி இருபார்கள்.


நண்பன் ஒருவனுக்கு காதல் வந்துவிட்டாலே கூட இருக்கும் நண்பர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும் அளவுக்கு அவனுங்க அக்கப்போறு இருக்கும்.
அதுவும் ஒரே ரூமில் தங்கியிருந்து படிக்கும் நண்பர்களாகவோ இல்லை வேலைசெய்யும் நண்பர்களாகவே இருந்தால் அவ்வளவுதான் இரவிலும் நமக்கு தூக்கம் இருக்காது

எங்கடா இருந்தது இந்த திறமை எல்லாம் என்று கேட்கும் அளவுக்கு பல வைரமுத்துக்களும்,கண்ணதாசன்களும் அவனுங்களில் தோன்றுவார்கள் கவிதை அருவியா கொட்டும். ஒரு நோட் புக் வைச்சிருப்பாங்க அதுலதான் அந்த காவிய காதல் கவிதைகள் பதியப்படும்.

அந்த கவிதையில் ஒருவரியை எடுத்து கூகுளில் போட்டு தேடினால் அது யாரோ எழுதின ஒரு கவிதை என்று கூகுள் சொல்லும்.

என்னடா நம்ம நண்பன் எழுதின கவிதையை கூகுள் யாரோ எழுதினதா சொல்லுதேனு கூகுள் கூட நாம கோவிச்சிக்கிட்டு உத்து பார்த்தால் உண்மை புரியும். அதாவது கூகுள்ள தேடி அதுல பல பேர் எழுதின கவிதைகளை எடுத்து ஒவ்வொறு கவிதைகளில் இருந்தும் ஒவ்வொறு வரியை சுட்டு இவனுங்களே ஒரு கவிதையை உருவாக்குவான்கள் என்ன ஒரு ஜடியா.

அப்பறம் இரவிரவா SMS அனுப்பிகிட்டேயிருப்பான்க அப்படி என்னதான் ஒலகமகா SMS அனுப்புரானுங்கனு பார்த்தால் அதுல ஒன்னும் இருக்காது


இவன் -ஹாய்

அவள்-ஹாய் ஸ்வீட்டி

இவன் -என்ன செய்யுற

அவள்-சாப்பிடபோறேன்பா  ,நீ என்ன செய்யுற

இவன் -இவ்வளவு லேட்டாகி சாப்பிட்டால் உடம்பு என்னத்துக்கு ஆகும் (அக்கறையாமாம்)

அவள்-ஹே இப்ப 8.30 தான் 

இவன் -டின்னர் எல்லாம் 7.00க்கே முடிச்சிடனும்

அவள்-நீ என்ன செய்யுற என்று கேட்டேன் சொல்லவேயில்லை

இவன்-நாளைக்கு எக்‌ஷாம் நோட்ஸ் எடுத்துகிட்டு இருக்கேன்
(ஆனால் சனியன் சகிலா படம் பார்த்துகிட்டு இருக்கும் கம்பியூட்டர்ல)

அவள்-சாரிப்பா டிஸ்டப் செய்திட்டேனா நீ படி குட்நைட்

இவன் -ஹே இல்லப்பா ப்ராக்டிக்கல் எக்‌ஷாம் தான் நோ ப்ராப்ளம் (சகிலா படம் பார்த்திட்டு என்ன ப்ராக்டிக்கலோ................அவ்வ்வ்வ்)

அவள்-ஒஒ அப்பறம்

இவன் -அப்பறம் 

அவள்-நான் சாப்பிட போறேன் பா சாப்பிட்டு SMS போடுறேன் bye da

இவன் -ஒ எனக்கும் சேர்த்து சாப்பிடு 
(பரதேசி பதினஞ்சி பரோட்டாவை முழுங்கீயிருக்கும் இவனுக்கு சேர்த்து அந்தப்பொண்ணு சாப்பிடனுமாம்)

அவள்-உனக்கு சேர்ந்து நான் எப்படி சாப்பிடுவது

இவன் -நான் அங்கதானே இருக்கேன் உன்னிடம்


ஸ்சப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா............... முடியிறமாதிரி இருக்கிற இந்த SMS  சாட்டிங் முடியாது இப்படியே நீண்டு கொண்டு போகும் அந்தம்மா சாப்பிட்டு வந்த பிறகும் தொடரும் இப்படியே இரவிரவா இவனுங்க பண்ணுற அலப்பறை தாங்க முடியாது.

நிசப்த்தமான  இரவுப்பொழுதுகளில் டிக்கி டிக்டி என்று இவனுக்கு மெசேஜ் டைப்பன்னுற சத்தத்திலே நமக்கு பாதி தூக்கம் போயிடும்.ஒரு டச் மாடல் போன் வாங்கித்தொலையுங்கடானாலும் வாங்க மாட்டானுங்க சும்மா இரு மச்சி அந்தக்காசுக்கு அவளுக்கு ஏதும் கிஃப்ட் வாங்கி கொடுக்காலம் என்று மொக்கை போடுவான்க 

அப்பறம் நண்பர்களாக எங்கையாவது போவாம் என்று ப்ளான் பண்ணினால் இவனுங்க வரமாட்டான்க இரு மச்சி என் ஆள்கிட்ட கேட்டுட்டு வாரேன் என்று    போனைப்போடுவாங்க 

ப்ரண்ஸ் வெளியால போக கூப்பிடுறாங்க போயிட்டு வரட்டா

அந்தம்மா அங்க இருந்து சம்மதம் சொன்னாத்தேன் நம்மாளு வருவாரு ஏன்னா உண்மையா இருக்காராம் 

அந்தம்மாவும் பார்த்து பத்திரமா போயிட்டுவானு சொல்லும் அப்பறம் தான் வருவான்கள் ஏண்டா பக்கத்தில இருக்குற பார்க்கிற்கு போக இம்புட்டு அக்கப்போறா.சரி நம்ம கூட வந்திட்டாங்க என்றாலும் பார்க்கில் நாங்க எல்லாம் சுத்தி பார்க்கும் போது ஒரு இடத்தில் போய் அமர்ந்துகொண்டு அந்தம்மாவுக்கு போனை போட்டு பேசிகிட்டே இருப்பான்க. பிறகு என்ன இதுக்கு வந்தனு கேட்டால் இல்ல மச்சி அவள் எங்க இருக்க? என்ன செய்யுற ?என்று கேட்டுகிட்டேயிருந்தால் அதுதான் சொன்னேன்.என்ன கொடுமைங்க சரவனன்.

சரி தெய்வீக காதலாக்கும் அப்படினு நினைச்சால் அதுவும் இல்லை எங்களுக்கு தெரியவே பரதேசி பல பிகருகளை லவ்வியிருக்கும் ஆனால் எங்க கிட்டயே சொல்லும் பாருங்க இதுதான் மச்சான் நான் லவ்பண்ணும் முதல் பொண்ணு என் காதல் உண்மைக்காதல்டா. காதல்னாலே உண்மைதான் அதை ஏன் அடிக்கொருதரம் என் காதல் உண்மைக்காதல் உண்மைக்காதல் என்று சொல்லிக்கிற அப்ப உன்காதலையே உனக்கு நம்பிக்கையில்லையா என்று கேட்டால்.

என்ன மச்சி இப்படி எல்லாம் பேசுற என்று நம்ம கூட கோவிச்சுக்கிருவான்க ஸ்சப்பா.................

இப்படித்தான் என் நண்பன் ஒருத்தன் ஒரு முறை சொன்னான்

 டேய் உன் தங்கச்சியை பார்க்க நாளைக்கு போறேன் என்று?

எனக்கு ஏதுடா தங்கச்சி எனக்கு தங்கச்சி யாரும் இல்லையேடா

என் ஆளைத்தான் உன் தங்கச்சி என்றேன்

நீ லவ் பண்ணுற பொண்ணுங்க எல்லாம் எனக்கு தங்கச்சினா ஊர் உலகத்துல இருக்கிற எல்லாப் பொண்ணுங்களும் எனக்கு தங்கச்சியா இருக்கனுமே?

அத்தோடு அவன் லவ் கதைகளை என்கிட்ட கதைக்க மாட்டான் ஹி.ஹி.ஹி.ஹி.........

நண்பர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம்

(இன்னும் பேசுவோம் நட்பு பற்றி அடுத்த அடுத்த பகுதிகளில்)

இந்த தொடரின் முன்னய பகுதியை படிக்க இங்கே கிளிக்-நல்ல நண்பர்கள் யார்?

அப்பறம் இது எனது 250வது பதிவாகும்
படங்கள் -கூகுள்
*********************************************************************************
பதிவர்  மதி சுதா அவர்களின், தந்தையார் அவர்கள்,நேற்று காலமாகிவிட்டாராம் 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, மதிசுதாவின் குடும்பத்தினருக்கு, இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வோம்

*********************************************************************************

Post Comment

12 comments:

Athisaya said...

வணக்கம் நண்பா.அனுபவித்து எழுதியுள்ளீா்கள்.நானும் இந்த இம்சைகளை ்) அனுபவித்ததுண்டு.வாழ்த்துக்கள் நண்பா.தொடா்ந்தும் பேசுங்கள் .சந்திப்போம்.

Athisaya said...

சுதா அண்ணாவின் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய இறையை பிராத்திக்கிறேன்.

K.s.s.Rajh said...

@Athisaya
வணக்கம் சகோதரி நீண்டநாட்களுக்கு பிறகு பதிவுலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி

தனிமரம் said...

ம்ம் இந்த நண்பர்கள் ஒரு புறம் என்றால் நண்பிகள் தொல்லை இருக்கே கடவுள் ஆக்கிவிடுவார்கள் தங்கள் காதல் என்ற இம்சைக்கு! தொடர்கின்றேன்!

தனிமரம் said...

250 பதிவு இன்னும் பல பதிவு கான வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

மதிசுதா குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

kk said...
This comment has been removed by the author.
kk said...

சரி தெய்வீகக்காதல் என்றால் அதுவும் இல்லை பரதேசி எங்களுக்குத்தெரியவே பலபேரை லவ்வியிருக்கும்...சூப்பர்பாஸ் தொடர்ந்து எழுதுங்க வாசிக்கிறேன்

நெற்கொழுதாசன் said...

போட்டுத்தாக்குங்க,அப்பவாவது திருந்துவாங்களா என்று பார்ப்போம்.
இவங்கட அக்கப்போர் தாங்க முடியாது பாஸ்.பேசாமல் என் தற்கொலைக்கு காரணம் இவன் என்று எழுதி வச்சிட்டு போகலாம் என்கிற அளவுக்கு இருக்கு இங்கே...............அக்காலை ஆறுமணிக்கு ஸ்கைப்பில சொல்லு சொல்லு என்று ஆரம்பிச்சா மாலை ஆறுமணி மட்டும் அதே சொல்லு ம்ம்ம்ம் சொல்லு தான்.

Mahesh said...

நல்லா ஸ்வாரஸ்யமா போகுது!
தொடருங்க்அ!
எல்லாமே அனுபவிச்சு எழுத்ர மாதிரி இருக்கு! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...



K.s.s.Rajh said...

@நெற்கொழுதாசன்

ஹா.ஹா.ஹா.ஹா..........

K.s.s.Rajh said...

@mahesh

ஆமாம் நண்பா சிலது அனுபவங்கள் தான் நான் நண்பர்களின் மொக்கைகளை சொன்னேன்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails