Monday, January 07, 2013

நல்ல நண்பர்கள் யார்?(பகுதி-3)

நண்பர்களுக்கு இடையில் கேலிகள்,கிண்டல்கள் சகஜமான ஒன்று ஆனால் அதை ஒரு மூன்றாம் நபருக்கு முன்னால் செய்தால் அது நண்பனை கேவலப்படுத்துகின்றேன் என்று நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்கின்றோம்.
அதுவும் அந்த மூன்றாம் நபராக ஒரு பெண் இருந்துவிட்டால் போதும் அவளிடம் கடலை போடுவதற்காக தன் நண்பனையே கேலி செய்யும்,நண்பனை பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும் பேர்வழிகளும் நிறையவே நம்மிடையே உண்டு.


நண்பனில் ஏதும் குறையிருந்தால் இல்லை அவனது செயல்பாடுகள் ஏதும் சரியில்லை என்றால் முதலில் நண்பனிடம் சுட்டிக்காட்டுங்கள் அதைவிட்டுவிட்டு மூன்றாம் நபரிடம் நண்பனை கேவலப்படுத்தவேண்டிய தேவை என்ன? இதனால் எந்த இலாபமும் நமக்கு கிடைக்க போவது இல்லையே வீணான மனஸ்த்தாபங்கள் தான் ஏற்படும்.

நண்பன் கேவலப்படுவதை எந்த உண்மையான நண்பனும் விரும்பமாட்டான்.அப்படி யாரும் விரும்பினால் அவர்கள் நட்பு என்ற சொல்லுக்கு தகுதியற்றவர்கள் நிச்சயம் அவர்களின் நட்பை குறைத்துக்கொள்வது சிறந்தது.

வாழ்க்கையில் சாதித்த பலரின் சரித்திரங்களை புரட்டினால் நிச்சயம் அவர்களுக்கு நல்ல நண்பர்களின் ஒத்துழைப்பு இருந்திருக்கும்.நட்பு என்ற வார்த்தைக்கு வலிமை அதிகம்.ஆனால் பலரும் அதை உணர்ந்துகொள்வது இல்லை அற்ற காரணங்களுக்காக நண்பர்களை பகைத்துக்கொள்பவர்கள் தான் நம்மிடையே அதிகம்.

எத்தனை வருடம் பழகுகின்றோம் என்பது பெரியவிடயம் இல்லை எப்படி பழகுகின்றோம் என்பதுதான் பெரியவிடயம்.

நண்பர்களுக்கு இடையில் புரிந்துணர்வு மிக மிக முக்கியமானதாகும் ஒருவன் நண்பனை பற்றி தவராக சொல்கின்றான் என்றால் இல்லை அவன் அப்படியானவன் இல்லை என்று நம்பும் அளவுக்கு நண்பர்களுக்கிடையில் புரிந்துணர்வு வேண்டும்.இந்த புரிந்துணர்வு இல்லாமையால் பலவருடம் பழகிய நண்பர்கள் கூட பிரிந்த கதை எல்லாம் ஏராளம்.


ஆண் பெண் நட்பு சமூகத்தில் இதை மட்டும் ஏன் தவறாக பார்க்கின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலாகத்தான் இருக்கவேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் காலம் எல்லாம் நல்ல நண்பர்களாக இருக்க முடியாதா? இந்த கேள்விக்கு பதில் இருக்கமுடியும் என்பதே ஆனாலும் சமூகத்தின் கண்ணோட்டத்தில் பெரும்பாலும் அந்த நட்பு கலங்கமானதாகவே பார்க்கப்படுகின்றது.இதனால் நல்ல நட்பை இழந்த நண்பர்கள் ஏராளம்.இந்த நிலை மாறவேண்டும் 


நட்பு என்பது எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு அற்புதமான ஒன்று இந்த உலகில் நண்பர்கள் இல்லாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது அதுதான் நட்பின் சிறப்பு.

சில நண்பர்கள் எப்படா நண்பனின் காலை வாரலாம் என்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள்,முகத்துக்கு நேராக புகழ்ந்தும், போகவிட்டு கேவலமாக பேசும்  இவர்களால் வீணான பிரச்சனைகள் தான் வரும்.எனவே இப்படியான நண்பர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுவதே சிறந்தது.

நல்ல நண்பர்கள் அமையப்பெற்ற ஒவ்வொருவரும் அதிஸ்டசாலிகள் தான் நல்ல நட்பு வாழ்கையை உயர்த்தும் நம் சோகங்களை நம் கஸ்டங்களை தாங்கும்,வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல நிலையை அடைய நல்ல நண்பர்களும் நமக்கு தேவை



நல்ல நண்பர்களை இனம் காண முதல் நீ நல்ல நண்பனாய் இரு.ஆம் பிறர் எதை உனக்கு செய்யக்கூடாது என்று நினைக்கின்றாயோ அதை நீ பிறருக்கு செய்யாதே. 

நாம் நல்ல நண்பனாக இருப்போம் நல்ல நட்பு தானாக தேடி வரும் அப்படி தேடிவரும் நட்பின் மனதை படிக்க தெரிந்திருந்தால் நாம் ஒவ்வொறுவரும் நல்ல நண்பர்கள்தான்
(முற்றும்)










Post Comment

5 comments:

தனிமரம் said...

நிச்சயம் நல்ல நண்பனாக இருக்கக் கற்றுக்கொண்டால் நல்ல நட்புக்களைப் பெறமுடியும்.நிறைவான ஆராட்சிப் பதிவு.

தனிமரம் said...

நல்ல நட்புக்களுடன் பால்க்கோப்பி குடிப்பதும் ஒரு சுகம்தான் எனக்கு.:))))

K.s.s.Rajh said...

@தனிமரம்
நன்றி பாஸ்

கலைவிழி said...

நன்றாக சொன்னீர்கள் ராஜ்,

எந்தவித எதிர்பார்ப்பும் முன் பின் தொடர்பும் இன்றி வரும் உறவு நட்பு. சிறந்த நட்பு அமைவது ஒரு வரம். இந்த ஆண், பெண் நட்பு குறித்து தவறாக கணிப்பவர்கள் நம் சமூகத்தில் அதிகம் உண்டு. இவர்கள் கிணற்று தவளை போன்றவர். இவர்களைப் பற்றி பேசிப் பயனில்லை.
சுவாரசியமாக அளவான ஆக்கம். உங்கள் பதிவுகள் பலதை படித்தாலும் இன்றுதான் கருத்திடும் சந்தர்ப்பம் கிடைத்தது.

K.s.s.Rajh said...

@கலைவிழி

நன்றி சகோதரி

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails