விஷாலின் சமர்,கார்த்தியின் அலைக்ஸ்பாண்டியன்,சந்தானம்,பவர் கூட்டணியில் கலக்கிய கண்ணா லட்டு தின்ன ஆசையா.இந்த ரேசில் ஜெயிச்சது பவர் தான்.
எத்தனை கேலிகள் கிண்டல்களை தாங்கிய பவர் தன் மைனஸ்சையே ப்ளஸாக மாற்றி ஒரே படத்தில் பலரது வாயை மூடிவிட்டார். தொடர்ந்து இப்படியான படங்கள் நடித்தால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக பவர் வருவதை யாராலும் தடுக்கமுடியாது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு குலுங்க வைக்கும் ஒரு முழுநீள நகைச்சுவைப்படம் பார்த்த திருப்தி பவர்,சந்தாணம் அடிக்கும் லூட்டியில் கவலைகள் எல்லாம் மறைந்து ஓடுகின்றது.
கண்ணா லட்டு தின்னஆசையா ஹீரோயின் விஷாகா பல விளம்பரப்படங்களில் பார்த்து இருக்கேன் இதற்கு முன் ஒரு படத்தில் அவர் நடித்திருந்தாலும் அந்தப்படத்தை நான் பார்க்கவில்லை.கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் செமையாக இருக்கார். நல்ல எதிர்காலம் இருக்கும் தமிழ் சினிமாவில்
பல நடிகைகளின் படங்களை பார்த்த பின்புதான் நான் அவங்களின் ரசிகனாக மாறியிருக்கேன் ஆனால் விளம்பரப்படங்களை பார்த்து ஒருவரின் ரசிகன் ஆனேன் என்றால் அது இவருக்குத்தான்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா யாரும் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படம் பவர்,சந்தானம் வயிறுகுலுங்க சிரிக்கவைப்பார்கள் தவறவிடாதீர்கள்.
அலைக்ஸ்பாண்டியன்
டாகுதர் தன் பாதையை மாத்திக்கிட்டு வித்தியாசமான படங்களில் நடிக்க வெளிக்கிட்டதால் சுறா போன்ற காவியங்கள் இனி வெளிவராதோ என ஏங்கிய ரசிகர்களுக்கு. நான் இருக்கேன் கவலையைவிடுங்க என்று கிளம்பியிருக்கார் கார்த்தி.
அடுத்த டாகுத்தர் ஆகும் ஆசை வந்துவிட்டது போல கார்த்திக்கு.
சந்தானம் இருப்பதால் படம் பார்க்கும் நமக்கு சேதாரம் கொஞ்சம் குறைவு சந்தானமும் இல்லைனா ஆத்தி நினைச்சு கூட பார்க்கமுடியாது.அனுஸ்கா எல்லாம் ஏன் இன்னும் படம் நடிக்குறாங்க சாரி நடிக்குறாங்கனு தப்பா சொல்லிபுட்டேனோ ஏன் படத்தில் வந்து போறாங்கனு தெரியலை ஓ அவங்க தான் இந்த படத்தில் ஹீரோயினோ
இனிமேல் கார்த்தி படம் பாப்பியா பாப்பியா என என்னை நானே சொந்து கொள்கின்றேன் இந்த பீலிங் உங்களுக்கும் இருந்தால் நீங்களும் அலைக்ஸ் பாண்டியனால் பாதிக்கப்பட்டவர்களே.
சமர்
த்ரிஷாவின் தீவிர ரசிகன் என்னாலையே இந்த படத்தை முழுமையாக பார்க்கமுடியவில்லை.
த்ரிஷா ரசிகனும் இல்லாமல்,விஷால் ரசிகனும் இல்லாமல் இந்த படம் பார்க்க போனவங்களின் நிலைமையை நினைச்சால் பரிதாபமாக இருக்கு.
எங்களுக்கு அலைக்ஸ் பாண்டியன்,சமர் போன்ற காவியங்களை வேண்டாம் கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற கவலைகளை மறந்து சிரிக்கும் படங்களே போதும்.
படங்கள்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை
|
6 comments:
வணக்கம்,ராஜ்!!!!!!!!ரொம்ப நன்றிப்பா!பவர் பவரை காட்டியிருக்கார்!///கில்மா படம்,அப்புறம் காவியங்களெல்லாம் நமக்கெதுக்கு?
@Yoga.S.
வணக்கம் ஜயா
என்னது கில்மாப்படமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Good post.
@Jayadev Das
நன்றி சகோ
இன்னும் படம் பார்க்கவில்லை பவர் ஸ்டார் என்கிறாங்க பார்க்கலாம் நேரம் வரும் போது :))) இப்ப எல்லாம் படம்பார்க்கும் ஆசையே போய்விட்டது சுறா சீடி வாங்கியதில்:))))))
@தனிமரம்
நன்றி பாஸ்
Post a Comment