தமிழக அரசியல்வாதிகளை ஒரு ஈழத்தமிழனாக எப்போதும்
நான் நம்பியது இல்லை அவர்களின் அரசியல்
சதுரங்கத்தில் எங்கள்
விடயத்தை எப்படி எல்லாம் காய்நகர்த்துவார்கள்
என்று கடந்த கால வரலாறுகள் பல உண்டு
அரசியல்
இலாபத்துக்காக ஈழத்தமிழன் என்ற விடயத்தை கையில்
எடுப்பது அவர்களுக்கு கைவந்த கலை.ஒரு
ஈழத்தமிழனாக அவர்கள் மீது எனக்கு
எப்போதும் அபிமான இருந்தது இல்லை.
அது ஜெயலலிதா மேடமாக இருண்டாலும் சரி,கலைஞர் ஜயாவாக இருந்தாலும் சரி வைகோவாக இருந்தாலும் சரி எந்த ஒரு தமிழக அரசியல் வாதி மீதும் எனக்கு அபிமானம் இல்லை
தற்போது
கமல் சார் பிரச்சனையில் அரசியல்
காரணம் இருக்கா இல்லையா என்று
உறுதியாக எனக்கு தெரியாது.இந்த விஸ்வரூபம் படம் தடை விதிக்கபட்டமை தொடர்பாக பலவிதமாக
செய்திகள் வருகின்றன.
நான் கமல் சார் ரசிகன்
கிடையாது.கமல் சாரால் எனக்கு
ஒருரூபாய் இலாபம் இல்லை.
ஆனால் ஒரு தனிமனிதன் தன்
படைப்பை வெளியிட தமிழக அரசு எதிர்த்து
நிற்பது வேதனையான ஒன்று.கமல் சார்
விடயத்தில் கருத்து சுகந்திரம் கேள்விக்குறியாகி
நிற்கின்றது.
இஸ்லாமியர்களை
புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக
கூறித்தான் இந்த பிரச்சனை ஆரம்பித்தது
நேற்று கமல் சார் இஸ்லாமிய
அமைப்புக்களிடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்
சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க சம்மதித்துள்ளார்.
ஆனால் மெல்ல மெல்ல இந்த
பிரச்சனை அரசியல் ரீதியாக மாறிவருகின்றது
போல தெரிகின்றது.ஏற்கனவே தமிழக அரசியல்
சதுரங்கத்தில் பலரை துன்பம் மறந்து
சிரிக்கவைத்த வடிவேல் என்ற கலைஞன்
காணாமல் போய்விட்டார்.அப்படி
ஒரு நிலை கமல் சாருக்கு வரக்கூடாது
கமல் சாரால் இந்தியாவுக்கே பெருமை
உலகம் வியக்கும் கலைஞன் அவர். 50 வருடங்களுக்கு
மேலாக சினிமாவில் இருப்பவர் சினிமாவை சுவாசித்து தன் சம்பாத்தியத்தை எல்லாம்
சினிமாவிலே முதலீடு செய்து தமிழ்
சினிமாவை உலக அரங்கில் உயர்த்த
பாடுபடும் கலைஞன். கமல் சார்
பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்
என்று நம்புகின்றேன்.
கமல் என்ற கலைஞனின் மீது இருக்கும் மதிப்பு பல மடங்கு உயர்வதை தவிர்க்கமுடியவில்லை என் ஆதரவு எப்பவும் கமல் சாருக்குத்தான். நம்பிக்கையுடன் இருங்கள் சார் எல்லா பிரச்சனைகளும் கடந்து போகும்.
நண்பர்கள் வலைத்தளம் தனது முழுஆதரவை கமல் சாருக்கு ஆதரவாக பதிவு செய்துகொள்கின்றது
|
8 comments:
எந்த ஒரு தனி மனிதனின் முயற்சியும் முதலீடும் காத்திரமானது.எனக்கும் எந்த ஒரு நடிகரிலும் அதீத தனிப்பட்ட ஈடுபாடு இல்லாத போதும் ஒரு கலைஞனின் கனவு,அதற்குப்பின்னான அத்தனை உழைப்பும் திட்டமிட்டு சாகடிக்கப்படுவது கண்டு மனம் கொதிக்கவே செய்கிறது.எனது ஆதரவையும் வெளிப்படுத்துகிறேன்.நன்றி சொந்தமே இந்தப்பதிவிற்காய்.நிச்சயம் இக்கலைஞனின் கனவு பலித்தே தீரும்.
கவலைபடாதே நண்பா. நிச்சயமாக இந்த படத்தை தமிழ்நாட்டிலேயே பார்போம்.
வணக்கம்,ராஜ்!உண்மையை,உண்மையாய் வரைந்தி(கொட்டியி)ருக்கிறீர்கள்!எதிலெல்லாம் அரசியல் செய்வது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது,தமிழ் நாட்டில்&உலகில்!!!
எனது ஆதரவும் கமலுக்குத்தான் ஒரு படைப்பாளி சுதந்திரமாக இயங்கவிடவேண்டும்!
@Athisaya
நன்றி சகோ
@DiaryAtoZ.com
நன்றி சகோ
@Yoga.S.
நன்றி ஜயா
@தனிமரம்
நன்றி பாஸ்
Post a Comment