Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் விமர்சனம்-என் பார்வையில்

பல சர்ச்சைகளைத்தாண்டி விஸ்வரூபம் வெளியாகியுள்ளது.எத்தனை பிரச்சனகளை கமல் எதிர்கொண்டார்.பிரச்சனைகளிலும் ஒரு நன்மை படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

எங்க ஊர்களில் விஸ்வரூபம் படம் பார்த்த பலர் என்ன படம் இது ஒன்னுமே புரியல என்று சொல்வதை அவதானிக்ககூடியதாக இருந்தது.

அப்பறம் பல விமர்சனங்களும் புரியாமலே கமல் ஸ்டைலிலே இருந்தன.சரி நாம கொஞ்சம் மாத்தியோசிப்போம் என்று இலகுவாக புரியும் படி என் பார்வையில் விஸ்வரூப விமர்சனம்

கமல்,இயக்கி நடித்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம்

கதை-அமேரிக்காவில் கதக் என்ற நடனம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் கமல் பெண்மை கலந்த சுபாவம் கொண்டவராக கமல் அவரின் மனைவியாக பிராமணப் பெண்பூஜாகுமார்.


பூஜாகுமாருக்கு அவர் வேலை செய்யும் இடத்தில் முதலாலிமேல் ஒரு ஈர்ப்பு,காதல் இதனால் கமலை ஏதாவது குற்றம் சுமத்தி அவரைவிட்டு விலக நினைக்கின்றார்.அதற்காக ஒரு டிடக்டிவ்வை கமலை கண்காணிக்க சொல்லிகின்றார்.

பூஜாகுமார் கமலை கண்காணிக்க சொன்ன டிடக்டிவ் ஒரு உண்மையை கண்டு பிடிக்கின்றார் அதாவது கமல் பிராமனர் இல்லை அவர் ஒரு இஸ்லாமியர் என்று.அந்த சந்தப்பத்தில் அந்த டிடக்டிவ் கொல்லப்படுக்கின்றார்.அதன் பின் பூஜாகுமாரின் முதலாலி அதாவது பூஜாகுமாருக்கு காதல் வந்ததே அந்த முதலாலி பூஜாகுமார் வீட்டுக்கு வந்து டிடக்டிவ் இறந்தது தொடர்பாக விவாதிக்கிறார். 


பிறகு கமலையும் பூஜா குமாரையும் தீவிரவாதிகள் கடத்திச்செல்கின்றார்கள்
அங்கே பூஜாகுமாரின் முதலாலி தீவிரவாதிகளுடன் சம்மந்தப்பட்டவர் என்ற விடயம் பூஜாகுமாருக்கு தெரியவருக்கின்றது.

பிறகு என்ன வழமையான தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்ன சொல்லுவார் வில்லன்களிடம் கையை கட்டுபோட்டு அடிக்கிறியே கையை கட்டை அவுட்டுவிட்டு அடிடா பார்ப்பம் என்று.ஆனால் அவர்கள் கைக்கட்டை அவுக்காமல் அடிக்கின்றார்கள்.

அப்போது தொழவேண்டும் கைக்கட்டை அவுக்கும் படி கமல் கேட்க அவுட்டுவிடுக்கின்றார்கள் அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கமல் பறந்து பறந்து தீவிரவாதிகளை பந்தாடுகின்றார்.அதுவரை சாப்டாக பெண்மை கலந்த தன்மையுடன் இருந்த தன் கணவன் பாய்ந்து பாய்ந்து அடிப்பதை பூஜாகுமாருக்கு ஆச்சரியம்.

அப்பறம் என்ன  நடந்தது கமல் யார்? என்பதை திரையில் காண்க.

பூஜாகுமார்-நீண்ட இடவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் காணமுடிக்கின்றது காதல் ரோஜாவே என்று முன்பு ஒரு படம் நடித்திருந்தார் 

பூஜாகுமார்

அப்பறம் ஆண்ட்ரியாவும் நடித்திருக்கின்றார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கமல் நடிப்பு சொல்லவா வேண்டும் பெண்மைத்தன்மை கலந்த வேடத்தில் மனுசன் கலக்கியிருக்கின்றார்.


படம் நன்றாக இருக்கு.ஒரு ஆங்கிலப்படத்தை பார்த்தது போன்ற உணர்வு அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள் மத்தியில் தமிழ் சினிமா அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் கமலுக்கு பாராட்டுக்கள்.


எப்படி இலகுவாக புரியும் படி விமர்சனம் இருந்திச்சா?





Post Comment

0 comments:

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails