இதயத்தின் ஏதோ ஒரு மூலையில்
உன் மீதான என் காதலின்
நினைவுகள் பொக்கிஷமாக
என் பள்ளிக்காலத்தில்
மனதில் கருவான என் முதல் காதலுக்கு
பொட்டு வைக்காத உன் நெற்றியும்
சிரித்தால் சின்னக்குழிவிழும் கன்னமும்
கல கலவென பேசும் உன் சுபாவமும்
மெல்லிய உன் குரலும்
உயிரை பறிக்கும் உன் பார்வையும்
என என் பதினைந்து வயதில்
நான் பார்த்த தேவதை நீ.................
உன் விழிகளை சந்தித்த
ஒவ்வொறு நொடியும் மரணித்தேன்.
மறுநிமிடமே மீண்டும் பிறந்தேன்
எல்லாம் உன் விழிகளின் விந்தையடி
நாள்தோறும் உன்னை பார்க்க வேண்டும்
என ஏங்கிய என் விழிகளும்,இதயமும்
உன்னிடம் காதலை சொல்ல நினைக்கும்
ஆனால் உன்னை பார்ததும்,
அமைதியாக இரு(ற)ந்துவிடும்
கூடவே ஊமையாகிவிடும் என் மொழிகளும்
அந்த ஒவ்வொறு தருணமும்
ஆனந்த அவஸ்தையடி பெண்ணே
என் காதலை கடைசிவரை நான்
(நேரடியாக)உன்னிடம்
சொல்லாமலே போய்விட்டேனே...........
என்ற வருத்தம் எனக்கு எப்போதும்
இதயத்தில்
கால ஒட்டத்தில் மறந்து போன
உன் மீதான காதலும், உன் நினைவுகளும்
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில்
என் காலம் உள்ளவரையில்
My best wishes for you
படம்-கூகுள் தேடலில் பெறப்பட்டது
இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-
|
7 comments:
ம்ம்.. சொல்லாமல் போன காதல், இன்னும் உயிரோடு இருக்கிறது..
///இதயத்தின் எங்கோ ஒரு மூலையில்.../// நிச்சயமாக.. ஆனால் சுகமான நினைவாக் மட்டும் இருந்தால் சரி, அது உறுத்திக் கொண்டிருக்க விடக்கூடாது ராஜ்.
உணார்வின் வரிகள் அருமை..
எங்கிருந்தாலும் வாழ்க...
@பூங்கோதை செல்வன்
நன்றி
@திண்டுக்கல் தனபாலன்
வரவுக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்
இரவு வணக்கம்,ராஜ்!நலமா?///படம்-கூகுள் தேடலில் பெறப்பட்டது.////வெள்ளைக்காரியோ?ஹ!ஹ!ஹா!!!!
காதல் வந்தால் கவிதையும் வரும் போல?(ஏன் அப்ப எனக்கு வரல?):v
ம்ம்ம்.காதல் ஒரு மயக்கம் தான் !
Post a Comment