Thursday, May 09, 2013

சுரேஸ் ரெய்னா நல்லா வரவேண்டிய பையன்

சுரேஸ் ரெய்னா இந்திய கிரிக்கெட்டில் இன்நேரம் நட்சத்திரவீரர் ஆகியிருக்கவேண்டியவர்.
2005ம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் போட்டி அறிமுகம் கிடைத்தது முதல் போட்டியிலே சந்தித்த முதல் பந்திலே முரளியின் பந்துவீச்சில் ஆட்டம் இழப்பு.


அதன் பிறகு போராடி இந்திய அணியில் நிரந்தர இடம் என்ற நிலைக்கு   சில காலம் வந்தார். ஸிம்பாவேயில் நடைபெற்ற முக்கோணதொடருக்கு இந்திய அணிக்கு கேப்டனாக நியமனம் முழுவதும் இளம் வீரர்களைக்கொண்ட இந்திய அணியே அந்த தொடரில் கலந்துக்கொண்டது

குறிப்பிடதக்கவிடயம் இப்போதைய இந்திய அணியின் உப தலைவர் வில்லங்கம் பிடிச்ச கோழி சாரி விராட் கோலிதான் உபதலைவர் அந்த தொடருக்கு.

என்னாச்சோ ஏதாச்சோ அந்த தொடரில் இந்திய அணி சொதப்ப அதன் பின் சில போட்டிகளில் ரெய்னா சொதப்ப இந்திய அணியில் இடம் காலி. பிறகு மீண்டும் இடம் நீக்கம் என்று மாறி மாறி இருந்தது அணியில் இடம். அவர் ஒரு நிலையான இடத்தை அடையவில்லை தன்னை சரிவர நிரூபிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்


சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆகி ஜந்து வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் அறிமுகம் கிடைக்கின்றது அறிமுக டெஸ்ட்டிலே சதம் ஆனால் அதன் பிறகு சில போட்டிகளில் சொதப்பல்,

யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தால் ரெய்னா இடம் காலியாகின்றது டெஸ்ட் அணியில் யுவராஜ் சிங்கும் பிறகு நீக்கப்பட்டது வேறு கதை.

சர்வதேச இருபது ஒவர்,ஒருநாள்,டெஸ்ட் மூன்றுவகை போட்டிகளிலும் சதம் அடித்துள்ள ஒரே இந்திய வீரர் ரெய்னா மாத்திரம் தான்.


ஜ.பி.எல் போட்டிகளில் அடித்து நொருக்கும் ரெய்னா சொல்லிக்கொள்ளும் படி பிரமாண்டமான இனிங்ஸ் எதையும் சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக ஆடவில்லை.இந்திய அணியில் அனைத்துவகை போட்டியிலும் நிரந்தர இடம் கிடைத்து இருக்கவேண்டியவர்.

இந்திய அணியின் உபதலைவர் பதவி இவரிடம் வந்து இருக்கவேண்டியது.அதுவும் கிடைக்கவில்லை.திறமையிருந்தும் சரிவர ஜொளிக்கமுடியவில்லை உள்ளூர் போட்டிகளில் காட்டும் திறமையை சர்வதேச போட்டிகளிலும் காட்டினால் இந்திய கிரிக்கெட்டில் ரெய்னா ஒரு நட்சத்திர வீரராக ஜொளிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை வில்லங்கம் பிடிச்ச விராட் கோலியைவிட இந்திய அணியின் எதிர்க்கால தலைவர் பதவிக்கு ரெய்னா எவ்வளவோ மேல்

*********************************************************************************
ஜ.பி.எல் எப்போதும் இதை நான் ரசித்தது இல்லை.சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஜொலித்துக்கொண்டு இருந்த இந்திய இருபது ஒவர்,ஒருநாள் போட்டிக்கான அணியில் நிரந்தர இடம் கிடைத்து இருந்த யுவராஜ் ஜ.பி.எல் போட்டிகளில் சரிவர ஆடவில்லை விளைவு சாம்பியன் லீக் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அதே நேரம் ஜ.பி.எல் போட்டியில் சிறப்பாக ஆடும் தினேஸ் கார்த்திக் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.


யுவராஜ் சிங்கின் நீக்கம் நிச்சயம் இந்திய அணிக்கு இழப்புத்தான் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று
*********************************************************************************
ஜ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்தும் இலங்கை வீரர்கள் சொதப்பி வருக்கின்றார்கள்.

அதுவும் மத்யூஸ் இலங்கை அணியின் தலைவராக உள்ள இவர் புனேவாரியஸ் அணிக்கு தலைவராக நியமிக்க பட்டார்.சொதப்பல் ஆட்டம் காரணமாக தலைவர் பதவி மட்டும் இல்லை அணியில் இடமும் இல்லாமல் போய்விட்டது.


இலங்கை அணியின் தலைவராக எதிர்க்காலத்தில் என்ன சாதிக்க போகின்றார் என்பது நிச்சயம் சந்தேகமே.காரணம் சர்வதேச கிரிக்கெட்டில் மத்தியூஸ் ஆட்டம் அவ்வளவு பிரமாதம் என்று சொல்லமுடியாது

வேறு அணியில் இருந்து இருந்தால் மத்யூஸ் இன்னேரம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போயிருப்பார்.வேறு பொருத்தமான வீரர்கள் இல்லை எனப்தால் மத்தியூஸ் இலங்கை அணியின் தலைமை பதவியில் இருக்கின்றார்.ஆப்பு வெயிட்டிங் மத்யூஸ் 

*********************************************************************************
ராகுல் ராவிட் ஜ.பி.எல் போட்டியில் ஆடும் ஆட்டத்தை பார்க்கும் போது அவசரப்பட்டு ஒய்வு பெற்றுவிட்டரோ என்று எண்ணத்தோன்றுகின்றது 


ஆனால் சச்சின் இல்லை பற்றி ஒன்னும் சொல்லப்போவது இல்லை காரணம் சர்வதேச கிரிக்கெட்,ஜ.பி.எல் என்று தொடர்ந்து சொதப்பி வரும் சச்சின் கடந்த போட்டியில் 28 பந்தில் 48 ஒட்டம் விளாசியதை வச்சே கொஞ்சக்காலத்துக்கு பேச்சாக இருக்கும்.


ஒன்று மட்டும் தெளிவாக தெரிக்கின்றது பல ஜாம்பவான்களின் கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக்காலத்தில் சிறப்பாக அமைந்தது இல்லை அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையிலே ஒய்வை அறிவித்து உள்ளார்கள் அந்த நிலை சச்சினுக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
*********************************************************************************
பெங்களூர் அணிக்கு எதிராக அதிரடியா வென்ற பஞ்சாப் அணியில் டேவிட் மில்லரின் ஆட்டம் ஜ.பி.எல் வரலாற்றில் மிகச்சிறந்த இனிங்ஸ்களில் ஒன்று


என்னைக்கேட்டால்.கெயில்  ஆடிய 175 என்ற பிரமாண்டத்தைவிட மில்லரின் சதம் அற்புதம் என்றே சொல்வேன்.
*********************************************************************************
படங்கள்-கூகுள்




Post Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இரும்பு அரண் சிறிது வருடம் இருந்திருக்கலாம்...

மில்லர் - கில்லர்...!

கோகுல் said...

பையன் நல்ல வருவான்

Unknown said...

Nalla alasal nanpare. David miller's innings is awsome.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails