வரும் 6ம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாக இருக்கும் மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படுகின்ற ஜ.சி.சி சாம்பியன் 1998ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடரில் கிண்ணத்தை இதுவரை வென்ற அணிகள்
1998
குரோனியே தலைமையிலான தென்னாபிரிக்க அணியும்,பிரைன் லாரா தலைமையிலான அணியும் இறுதிப்போட்டிக்கு வந்தன குரோனியே தலைமையிலான தென்னாபிரிக்க அணி கிண்ணத்தை வென்றது
2000
சவ்ரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியும்,ஸ்ரிபன் ப்ளமிங் தலைமையிலான நியூஸ்லாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு வந்தன இதில் நியூஸ்லாந்து அணி கிண்ணத்தை வென்றது
2002
சவ்ரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியும்,சனத் ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்கு வந்தன.ஆனால் மழைகாரணமாக இறுதிப்போட்டி தடைப்பட அடுத்தநாள் மீண்டும் போட்டி நடைபெற்றது அப்போதும் மழையால் போட்டி தடைப்பட இரண்டு அணிகளும் கூட்டாக கிண்ணத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது
2004
மைக்கல் வோகன் தலைமையிலான இங்கிலாந்து அணியும்,பிரைன் லாரா தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் இறுதிப்போட்டிக்கு வந்தன இதில் மேற்கிந்திய அணி கிண்ணத்தை வென்றது
2006
பிரைன் லாரா தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியும் ரிக்கிபொண்டிங் தலைமையிலான ஆஸ்ரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு வந்தன.ஆஸ்ரேலிய அணி கிண்ணத்தை வென்றது
2009
ரிக்கி பொண்டிங் தலைமையிலான ஆஸ்ரேலிய அணியும் டானியல் விக்டோரி தலைமையிலான நியூஸ்லாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு வந்தன ஆஸ்ரேலிய அணி கிண்ணத்தை வென்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டித்தொடர் இம்முறை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெருக்கின்றது பொறுத்திருந்து பார்போம் இம்முறை எந்த அணி கிண்ணத்தை வெல்லப்போகின்றது என்று.
|
2 comments:
நாம தா..........ன்.....!
எனது கணிப்பு இங்கிலந்தாக இருக்கலாம்
Post a Comment