பவர் ஸ்டார் ஜெயிலுக்கு போய்விட்டதால் அவரை வைத்து படம் இயக்கும் ராமநாராயணன் டி.ஆரை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
இதை பல இணையதளங்களில் பவருக்கு பதில் டெரர்ஸ்டார் என்று எல்லாம் கிண்டல் செய்து போட்டு இருக்கின்றார்கள்.
ஏன்யா டி.ஆரும் பவரும் ஒன்னா? கொஞ்சம் கர்வம் அதிகம் தான் டி.ஆருக்கு இருந்திட்டு போகட்டுமே ஒரு படத்தில நடிச்சதுமே பந்தா பண்ணித்திரியும் நடிகர்கள் மத்தியில் இசை,நடிப்பு,ஒளிப்பதிவு,இயக்கம்,எடிட்டிங்,பாடல் ஆசிரியர்,பாடகர்,படத்தொகுப்பு,தயாரிப்பு என்று சினிமாவில் அத்தனை வேலைகளையும் செய்யும் நிஜமான சகலகலா வல்லவன் டி.ஆருக்கு கொஞ்சம் கர்வம் இருந்துவிட்டு போகட்டுமே
ஒரு கலைஞனை கிண்டல் என்ற போர்வையில் ஒவராக கேவலம் செய்யக்கூடாது.பொதுவாக தனிப்பட்ட ரீதியில் டி.ஆர் ஸ்டைலை கிண்டல் செய்வார்கள் அது ஒரளவு பரவாயில்லை ஆனால் பவருடன் ஒப்பிட்டு கிண்டல் செய்வது டீ.ஆர் போன்ற கலைஞனை அவமதிக்கும் செயலாகும்
சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
(மைதிலி என்னைக்காதலி படத்தில் இடம் பெற்ற பொன் மானை நான் கான பாடல் வரிகள்)
இப்படி எத்தனை அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார் டி.ஆர்
அடுக்கு மொழி,கர்வ பேச்சு இவை மட்டும் தான் டி.ஆர் அடையாளம் இல்லை இவைக்களைத்தாண்டி தமிழ் சினிமாவின் நிஜமான சகலகலா வல்லவன். பவருடன் டி.ஆரை ஒப்பிடாதீர்கள் டி.ஆர் கிட்டயும் பவரால் வரமுடியாது
|
9 comments:
மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்தான்...
நான் இதை ஆமோதிகிறேன்.. Really I appreciate your view. I do always respect T.R.'s extra ordinary ability in all those areas especially in lyrics/music in which he was the Best.
I always feel Sorry for T.R. whenever somebody making fun of him just because his overtalking...
Goodus to you
உண்மைதான் சகோ! இன்னிக்க்கும் பல பாடல்கள் அதன் இசையோடு பிடிக்கும் என் கலெக்ஷன்ல டிஆர் கலெக்ஷன்ன்னு தனியே உண்டு
சரியாகத்தான் சொன்னீங்க சகோ!.
டிஆர் பாடல்கள் இன்ரும் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றவைகள்தான்.
நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!
டி ஆர் ஒரு திரைப்படகலைஞனாக மாபெரும் சாதனையாளர்
ஹா ஹா டி ஆர் மாதிரியே டென்ஷன் ஆயிட்டாரு ராஜ்
திரைத் துறையில் அங்கீகாரம் பெற டி,ஆர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.அண்மையில் சண் டி.வி சுப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் அவரின் கடந்த கால நிகழ்வுகள் இரை மீட்கப்பட்டது பலரும் பார்த்திருக்க வாய்ப்பிருந்திருக்காது..எந்த ஒரு கலைஞனுக்கும் இந்த மாதிரி ஒரு நிலை ஏற்படக் கூடாது.எவ்வளவு அவமானங்கள்?துணிந்து எதிர் கொண்ட டி.ஆர்...................கிரேட்!உதவிய சகோதரிகளுக்கும் சல்யூட்!!!
ஒரு கலைஞனுக்காக குரல் எழுப்புவதை பாராட்டுகிறேன். கலைஞர்கள் வாழும் போது மதிக்கப் பட வேண்டியவர்கள். பகிர்வுக்கு நன்றி தம்பி
உண்மைதான் நண்பரே.திறமை இருக்கும் இடத்தில் கர்வம் இருப்பதில் தவறில்லை.
Post a Comment