வணக்கம் நண்பர்களே எப்படி சுகம்? நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி.திசைமாறிக்கொண்டு இருக்கும் வாழ்க்கை பயணத்தில் எதுவுமே நிரந்தரம் இல்லை அப்படி இருக்க இந்த வலைப்பதிவு மட்டும் எப்படி நிரந்தரமாக முடியும்.நிரந்தரமாக வலைப்பதிவு எழுதுவதை நிறுத்திவிடுவது என்ற முடிவில் தான் இந்தப்பக்கம் வரவில்லை.ஆனால் என் கஸ்டங்களை பகிர்ந்துகொள்ளவும் சந்தோசங்களை கொண்டாடவும்.என் மனசுக்கு பெரிய ஆறுதலாகவும் இருந்த இந்த வலைப்பதிவை மூடிவிட மனசு கேட்கவில்லை.
நான் அறிந்திராத நாடுகளில் இருந்து எல்லாம் எனக்கு நண்பர்களை பெற்றுத்தந்தது இந்த வலையுலகம் தான்.அதனால் நேரம் கிடைக்கும் பொழுதுகளில் மறுபடியும் எழுதலாம் என்று உங்களை தேடி வந்துவிட்டேன்.
வாழ்க்கையில் எத்தனை காதல்களை கடந்துவந்தாலும் முதல் காதல் ஒரு அழகான அனுபவம் தான் எப்போதும் மனசில் ஏதோ ஒரு மூலையில் அந்த நினைவுகள் இருக்கும்.ஆனால் பெரும்பாலும் பலருக்கு முதல் காதல் என்பது ஒருதலைக்காதலாகவே அமைந்துவிடுவதுண்டு.
அப்படி பாடசாலை நாட்களில் எனக்கு ஏற்பட்ட முதல் காதலின் நினைவு எப்பவும் மனசில் இருக்கு.ஒருதலையான காதலாக இருந்தாலும் ப்ரியா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒருத்தி.
நேற்று ப்ரியாவை ஏதேர்ச்சையாக பார்த்தேன் அதுவும் 6 வருடங்களின் பின் வாழ்நாளில் மீண்டும் பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்தேன் ஆனால் கடவுள் ஒரு விசித்திரமான படைப்பாளி.பார்க்கவைத்துவிட்டான்.சில நிமிடம் ப்ரியாவை நேசித்த அந்த 15 வயது பள்ளிப்பருவ ராஜ் மனசில் வந்து போனான் மீண்டும் மனசுக்குள் சுகமான அதே நேரம் ரணமான நினைவு வந்து போனது.
.
இனி தொடர்ந்து பதிவுகள் எழுதலாம் என்று இருக்கேன் எனக்கு அன்பும் ஆதரவும் வழங்கிய நீங்கள் தொடர்ந்தும் ஆதரவு வழகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்.எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கீகாரம் உங்கள் கைகளில் நண்பர்களே
|
17 comments:
vanga anna... oru murai fb la varuvathanga sonnirkal, anal varamal emathittirkal, ana innaiku vanthu iruppathhu makilchi... apparam priya paarthirkala santhosham... ethirpaarkkala... ninga sonnathu unmai tan muthal kadhallam once side love tan... kandippa engaiyachum ungala virumpum pen iruppal dont very... unga parangalai inga kottalam.. nanga padikka arvamayirukom...
அருமையாகச் சொன்னீர்கள்
பதிவுகள் நம் சுமை சுமக்கும் சுமைதாங்கிக்கற்கள்
போலத்தான் என நான் பல சமயம் நினைப்பதுண்டு
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடர்ந்து பதிவிடவும்
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ப்ரியாவை விட்டு பிரீங்சீங்க ,பதிவு ஊக்கம் தரும் 'க்ரியா 'வை கரம் பற்ற வாழ்த்துக்கள் !
அப்படி பாடசாலை நாட்களில் எனக்கு ஏற்பட்ட முதல் காதலின் நினைவு எப்பவும் மனசில் இருக்கு.ஒருதலையான காதலாக இருந்தாலும் ப்ரியா என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒருத்தி.
//ம்ம் எப்போதும் சொல்வதுதான் கடந்துவா கலங்கிவிடாதே!
ப்ரியாவை நேசித்த அந்த 15 வயது பள்ளிப்பருவ ராஜ் மனசில் வந்து போனான் மீண்டும் மனசுக்குள் சுகமான அதே நேரம் ரணமான நினைவு வந்து போனது.//ம்ம் காதல் ஒரு கண்ணாம்பூச்சி !
பார்போம் சந்தோசமோ சோகமோ உங்களிடம் தான் வருவேன் என் மனசை பகிர்ந்துகொள்ள அதுவரை பொறுத்திருங்கள்.//தலைவா வாங்க தொடர்ந்து விசில் ஊதக்காத்து இருக்கின்றோம் :)))))
ராஜ், எழுத்து ஆறுதல்தான். காதல் வெல்ல வாழ்த்துக்கள்.
எல்லாவற்றையும் மாற்றும் சக்தி மனதிற்கு உண்டு... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
@mahesh
நன்றி பாஸ்
@Ramani S
நன்றி பாஸ்
@Bagawanjee KA
நன்றி பாஸ்
@தனிமரம்
நன்றி பாஸ்
@T.N.MURALIDHARAN
நன்றி பாஸ்
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
வணக்கம்,ராஜ்!நலமா?///நல்லது,சுமைகளை இறக்கி வைக்கும் ஒரு களமாக பதிவுலகம்.முதல் காதல்..........ஈர்ப்பு என்று சொல்லலாமோ?மறக்க முடியாதது தான்.இரண்டுங் கேட்டான் வயது அது.இப்போது,உலகம்,அறிந்து,தெரிந்து,புரிந்து.........ஜமாய்டா ராஜா!!!!!முயற்சி வெற்றி பெறட்டும்,வாழ்த்துக்கள்!
@Subramaniam Yogarasa
நன்றி ஜயா
Post a Comment