Sunday, October 13, 2013

சச்சின் தீராத காதலுடன் 24 ஆண்டுகள் பயணித்த பயணம் முடிகின்றது

மனம் வலிக்கத்தான் செய்க்கின்றது அந்த செய்தியை கேட்டதும் சச்சின் 200வது டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெருகின்றார் என்று.

சர்வதேச போட்டிகளில் 24 ஆண்டுகள் பயணம்  முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட ஒட்டங்கள்,100 சதங்கள்,200வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் உலகின் முதல் கிரிக்கெட் வீரர்.சச்சின் சாதனைகளை பட்டியல் இட இந்த ஒரு பதிவு போதாது.இனி ஒரு கிரிக்கெட் வீரர் இதை எல்லாம் நெருங்குவார் என்றால் அது கஸ்டமான ஒரு விடயமே.


நீண்டகாலத்துக்கு சச்சின் சாதனைகள் இந்த உலகில் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை


சச்சின் டெண்டுல்க்கர் இந்த பெயர் ஒரு தனி மனிதனுடைய பெயர் இல்லை ஒரு தேசத்தை விளையாட்டில் பெருமைப்படுத்திய பெயர்.கோடிக்கணக்கான இளைஞர்களின் ரோல் மாடலின் பெயர்.கிரிக்கெட் என்ற விளையாட்டு இந்த உலகில் இருக்கும் வரை இந்த பெயரும் இருக்கும் சாதனைகள் படைப்பதில் சாதனை படைத்தவர்.


என்னை பெரிதாக சச்சின் கவர்ந்தது இல்லை நான் ஒரு தீவிர கங்குலி ரசிகனாக இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகனாக சச்சின் மேல் பெரிய மரியாதை உண்டு.இப்போது விராட் கோலியையும்,தவானையும்,தோனியையும் ரசிக்கும் ரசிகர்களுக்கு தெரியாது சச்சின் அருமை.சச்சின் ஒரு வரலாறு இந்திய கிரிக்கெட் பெருமை அடைந்தது சச்சினால் என்றால் மிகையாகாது.


ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் தன் துடுப்பால் பதில் சொன்னவர்.ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும் சச்சினுக்கு பிரதியீடு இல்லை.ஒரு ரசிகனாக இல்லாவிட்டாலும் இந்த ஜாம்பவானின் கடைசி போட்டியை பார்பதற்கு கவலையுடன் காத்திருக்கின்றேன்  வரும் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது 200வது டெஸ்ட் போட்டியை சச்சின் விளையாட இருக்கின்றார்


சச்சின் பல சாதனைகளை படைத்திருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் ஒரு முச்சதம் கூட அடித்ததில்லை அவரது அதிகபட்ச டெஸ்ட் ஒட்டம் 248* தான் அதுவும் பங்களாதேஸ் அணிக்கு எதிராக.ஒரு ரசிகனாக இல்லாவிட்டாலும் என் நீண்டநாள் ஆசை டெஸ்ட் போட்டிகளில் சச்சின் ஒரு முச்சதம் அடிக்கவேண்டும் என்று இன்னும் இரண்டு போட்டிகள் மாத்திரமே இருக்கின்றது இந்த ஜாம்பவானின் கிரிக்கெட் பயணம் நிறைவு பெற பொறுத்திருந்து பார்ப்போம் அந்த போட்டிகளில் என்ன செய்யப்போகின்றார் என்று.

சச்சின் காலத்தில் கிரிக்கெட் ரசிகர்களாக இருந்ததே நமக்கு எல்லாம் பெருமைதான் ஒவ்வொறு கிரிக்கெட் ரசிகனுக்கும் இதைவிட பெருமை ஏதும் இல்லை

Post Comment

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தமாகத்தான் இருக்கிறது... வாழ்வே கிரிக்கெட் - இந்தளவு ஈடுபாடு உள்ள இவரைப் போல் உலகத்தில் யாரும் இருக்க முடியாது...

Unknown said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது,ராஜ்!என்ன செய்ய?எல்லோருக்கும் குறிப்பிட்ட வயதில் ஓய்வு தேவைப்படுகிறதே?

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails