இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஆசிஸ் தொடரின் 3வது டெஸ்ட் கிரிக்கெட் உலகில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகவும் பலராலும் உற்று நோக்கப்படும் போட்டியாகவும் இருக்கும் காரணம் ஆஸ்ரேலிய அணியின் கேப்டன் மைக்கல் க்ளார்க் மற்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் அலிஸ்டர் குக் இருவருக்கும் இந்தப்போட்டி 100வது டெஸ்ட் போட்டியாகும் இது ஒரு சிறப்பான விடயம்.
2004ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மைக்கல் க்ளார்க் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 168 இனிங்சில் 7940 ஒட்டங்களை குவித்துள்ளார் இதில் 26 சதங்களும் 27 அரைச்சதங்களும் அடங்கும் ஒரு இனிங்சில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு எதிராக 329* ஒட்டங்களை குவித்துள்ளார்.
அதே போல குக் 2006ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 177 இனிங்சில் 7833 ஒட்டங்களை குவித்துள்ளார் இதில் 25 சதங்களும் 33 அரைச்சதங்களும் அடங்கும் அதிகபட்சமாக ஒரு இனிங்சில் இந்தியாவுக்கு எதிராக 294 ஒட்டங்களை குவித்துள்ளார்
குக் ஆரம்பதுடுப்பாட்டவீரர்,மைக்கல் க்ளார்க் மத்திய வரிசைசை துடுப்பாட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு சுவாரஸ்யம் இருவரும் தங்கள் அறிமுக டெஸ்டிலே சதம் விளாசியுள்ளனர்.
மைக்கல் க்ளார்க் தனது அறிமுக டெஸ்டிலே (இந்தியாவுக்கு எதிராக )151 ஒட்டங்கள் விளாசினார்(முதல் இனிங்சிஸ்).
குக் தனது அறிமுக டெஸ்டில்(இந்தியாவுக்கு எதிராக)104 ஒட்டங்களை விளாசினார்(இரண்டாவது இனிங்சிஸ்)
100வது டெஸ்ட்டில் இருவரும் சதம் அடித்தால் மேலும் சுவாரஸ்யம் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குது என்று
|
0 comments:
Post a Comment