தலைப்பு என்ன மார்கமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா கடைசியில் சொல்லுகின்றேன்
V கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அகசியம் வலைப்பதிவின் ஒனர் பதிவர் வரோ அண்ணன் இயக்கத்தில் தயாராகிவரும் குறுந்திரைப்படம் இலவு பெயரே வித்தியாசமாக இருக்கின்றது படத்தில் நிறைய வித்தியாசமான விடயங்கள் இருக்கும் என்று எதிர்பார்பு அதிகரிக்கின்றது
இப்போது இலவு குறும்படத்தின் ப்ரமோ பாடல் வெளியாகியிருக்கின்றது பாடலின் ஒவ்வொறு வரிகளும் அழகாக இருக்கின்றது
இரோஷன் புவிராஜ், தர்ஷனன் அருட்செல்வன் வரிகளுக்கு கவினாளி சிறீஸ்கந்தராஜா பாடியுள்ளார்.
தொடர்ந்திடும் தனிமையே, என்னை விட மறுக்குதே,
உன் இதழ் வார்த்தைகள் அறை எங்கும் ஒலிக்குதே
என்று ஆரம்பிக்கும் பாடலின் இடையில் சில வரிகள் தென்னிந்திய பாடல்களுக்கு நிகரான அருமையான வரிகள் குறிப்பாக இந்த வரிகள் அற்புதம்
‘சோறு தண்ணி உறக்கம் மறந்தேன் ராசா உன் நினைவாஅட- படலை தாண்டி ஓடி வாறன் போவோம் சிறு புயலாமஞ்சள் தாலி அது தேவையில்லை- உன் கூட வரவாஎன் புருசன் என நீயும் போதும் வாடா என் முறையா
இந்த பாடலினைக்காண இங்கே
.படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்
தலைப்பு- இந்த பாடலின் இறுதியில் பாருங்கள் இயக்குனர் எங்கள் தல வரோ அவர்கள் ஒரு சீனில் வந்து போகின்றார் பொதுவாக கே.எஸ்.ரவிக்குமார்தான் தன் படங்களில் கடைசி சீனில் வருவார் ஆனால் அண்ணன் ப்ரமோ பாடலிலே கடைசி சீனில் வந்து கே.எஸ்.ரவிக்குமாருக்கு சவால்விடும் காட்சி அது
|
2 comments:
வணக்கம்,ராஜ்!நலமா?///விமர்சனத்துக்கு நன்றி! 'தல'(வரோ) யும் கடேசியில வருதா?பார்ப்போம்!
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
Post a Comment