நினைவுகள் பின் நோக்கிச்செல்கின்றன
என் நினைவுகளில் நீ எங்கையோ எஞ்சியிருப்பதால்
உன் பார்வைகளில் பாவி நான் சிறைப்பட்டு இருந்த போதுதான்
என் வாழ்க்கைச்சக்கரம் வசந்தமாக சுழன்றது
சக்கரத்துக்கு அச்சாணியாய் நீ இருந்தாய்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வலி நிறைந்த இந்த வாழ்க்கையில்
கொஞ்ச காலம் என் வாழ்வில் வசந்தங்களைத் தந்தவளே
அதற்காக என்றும் உனக்கு என் நன்றிகள்.
காதல் அழகான சித்திரவதைகள் நிறைந்த சிறைக்கூடம்
அதில் என்னை நீ சிறைவைத்த போது.வலிக்கவில்லை
அந்தச்சிறையில் இருந்து நான் விடுதலையானதும்
என் இந்த ஜென்மமே வீணாய்ப்போனது போல ஒரு உணர்வு.
ஆனால் என் இந்த ஜென்மம் புனிதப்பட்டதே
உன்னை சந்தித்தால்தான்.இதற்கு இறைவனுக்கு நன்றி
என்னை கையெடுத்து கடவுளை கும்பிடவைத்தவள் நீ
அந்தக்கடவுளுக்கே பிடிக்கவில்லை உன் மேலான என் காதல்.
காத்து இருக்கின்றேன் மீண்டும் ஒரு ஜென்மத்திலும்
உன்னை காதலிக்க அப்போதும் கடவுள் சதி செய்தால்\
சாமன்யன் நான் என்ன செய்ய முடியும்?........................
மிஞ்சிபோனால் அதற்கு அடுத்த ஜென்மத்திலும் காதலிக்க முடியும்
தூரத்தே தெரியும் நீலா நீ என்று தெரிந்தும்.
உன்னைத்தேடியது என் தவறா?
நிலவை ரசிக்க ஆம்ஸ்ரோங்காக இருக்கவேண்டியது இல்லை
ஆனால் அதன் அருகே செல்ல ஆம்ஸ்ரோங்கால் முடியும்
என்னால் முடியாதே?இது இந்த ஏழைக்காதலனுக்கு அப்போது புரியவில்லை.
நீ எங்கே இருந்தாலும் உனக்காக இறைவனிடம் பிராத்திக்கும்
ஒரு ஜீவன் இங்கே இருக்கின்றது.அதன் மனதில் காதல் இப்போது இல்லை
ஆனால் உன்மேலான காதலின் காயத்தின் தழும்புகள் மாறாமல் உன் நினைவை மீட்டுக்கொண்டேயிருக்கின்றன.............இனியும் மீட்டுக்கொண்டேயிருக்கும்................
முஸ்கி-இப்போது நவராத்திரி காலம் .என் நினைவுகள் பாடசாலைக்காலத்தை ஞாபகப்படுத்தி விட்டது அது சரி அப்படி ஞாபகப்படுத்தினால் பாடசாலையில் நவராத்திரி கொண்டாடினதைத்தானே எழுதனும் என்று நீங்கள் கேட்பது புரியுது....இப்படி ஒரு நவராத்திரி காலப்பகுதியில் தான் என் காதல் அப்போது துளிர்விட்ட காலம்..ஹி.ஹி.ஹி.ஹி....
சூப்பர் கவிதை. பாஸ் |
|
49 comments:
தம்பி ராச் ஒரு பால்கோப்பி கிடைக்குமா?
பாடசாலை நினைவுகளை ஒரு காதலின் வழியே வசணக்கவிதை வடிவில் வடித்து ஞாபகச் சிதறல்களை சீண்டி விட்டீர்கள்!
நாவராத்திரிப் பூசையில் அவங்க வீட்டில் இருந்தா சக்கரைப் பொங்கள் செய்து வந்தாங்கள்?
////Mohamed Faaique சொன்னது…
சில எழுத்துக்களை போல்ட்'ஆக இருக்கு,,, அதை சேர்த்து பார்த்த பிரேமினி'னு வருது... எதாவது இந்தப் பேருக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கா??? இல்ல... அது தற்செயலானதா?
// அவுக இன்னும் அவாள மறக்கேல்ல ..;-)
நவராத்திரிப்பூசையில்(பள்ளிக்கூடத்தில்)அவங்கதான் வெண்தாமரைக் கண்டு (கண்டுகொண்டேன்) என்று நவராத்திரி பாமாலை பாடும்போது நீங்கள் தான் ஐயருக்குப் பக்கத்தில் இருந்தீங்களோ ஆண்டாள் கேட்ட மதுசூதனன் போல்! ஹீ ஹீ
யோ முகமட் நான் உங்கள் பின்னூட்டத்துக்கு இரசிகன்யா நல்ல நகைச்சுவையாளர் நீங்க வாழ்த்துக்கள்!!!!
கவிதை அருமை.. நவராத்திரிக்கு உங்களுக்கு இப்பிடியும் ஞாபகம் வருமா..!!?
வாழ்வில் வலி சுமந்த நினைவுகள் மீளவும் ஒரு பதிவாகப்போட்டு என் அதிகாலைப் பொழுதையும் மீண்டும் பாடசாலை ஞாபங்களைத் தீண்டி தனிமரம் பாடசாலைக்காலங்களை நினைக்கவும் வைத்துவிட்டீர்கள்! துயரத்திலும் ஒரு சந்தோசம் போல மீண்டு வாருங்கள் சரண்யா மோகன் காத்திருக்கின்றார் (மகேபொம்பத்தா) ராச் என்ற கண்சிமிட்டலுடன்!
@
தனிமரம் கூறியது...
தம்பி ராச் ஒரு பால்கோப்பி கிடைக்குமா?
இன்னைக்குத்தான் பாஸ் உங்களுக்கு என் தளத்தில் காப்பி கிடைக்குது...சாருக்கு ஒரு பால் காப்பி...............................
@
தனிமரம் கூறியது...
பாடசாலை நினைவுகளை ஒரு காதலின் வழியே வசணக்கவிதை வடிவில் வடித்து ஞாபகச் சிதறல்களை சீண்டி விட்டீர்கள்////
அப்ப கவிதை என்று ஏற்றுக்கொண்டு விட்டீங்க ரைட்டு
@
Mohamed Faaique கூறியது...
சில எழுத்துக்களை போல்ட்'ஆக இருக்கு,,, அதை சேர்த்து பார்த்த பிரேமினி'னு வருது... எதாவது இந்தப் பேருக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கா??? இல்ல... அது தற்செயலானதா?
ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.................
@
தனிமரம் கூறியது...
நாவராத்திரிப் பூசையில் அவங்க வீட்டில் இருந்தா சக்கரைப் பொங்கள் செய்து வந்தாங்கள்?.//////
ஹி.ஹி.ஹி.ஹி..........
(பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு அவரது ஸ்டைல்தான்)
@
நிகழ்வுகள் கூறியது...
////Mohamed Faaique சொன்னது…
சில எழுத்துக்களை போல்ட்'ஆக இருக்கு,,, அதை சேர்த்து பார்த்த பிரேமினி'னு வருது... எதாவது இந்தப் பேருக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கா??? இல்ல... அது தற்செயலானதா?
// அவுக இன்னும் அவாள மறக்கேல்ல ..;-////
ஹி.ஹி.ஹி.ஹி.ஹி.ஹி(பதில் சொல்லமுடியாத கேள்விகளுக்கு அவர் ஸ்டையில் பதில் புன்னகை)
@
தனிமரம் கூறியது...
நவராத்திரிப்பூசையில்(பள்ளிக்கூடத்தில்)அவங்கதான் வெண்தாமரைக் கண்டு (கண்டுகொண்டேன்) என்று நவராத்திரி பாமாலை பாடும்போது நீங்கள் தான் ஐயருக்குப் பக்கத்தில் இருந்தீங்களோ ஆண்டாள் கேட்ட மதுசூதனன் போல்! ஹீ ஹீ///
ஆகா அண்ணன் என்னமா சிந்திக்குறார் சிந்தனை சிகரம் தனிமரம் என்று இன்று முதல் நான் பட்டம் வழங்குகின்றேன்..டாகுத்தருக்கு வழங்கிய டாகுத்தர் பட்டம் போல...
@
காட்டான் கூறியது...
யோ முகமட் நான் உங்கள் பின்னூட்டத்துக்கு இரசிகன்யா நல்ல நகைச்சுவையாளர் நீங்க வாழ்த்துக்கள்!!!///
மாம்ஸ் நீங்க இப்படி அவரைச்சொல்லி சொல்லி காமடி பன்னுறீங்களா இல்லை உண்மையா சொல்லுறீங்களா?ஹி.ஹி.ஹி.ஹி.....
@
காட்டான் கூறியது...
கவிதை அருமை.. நவராத்திரிக்கு உங்களுக்கு இப்பிடியும் ஞாபகம் வருமா..!!////
ஆமா மாம்ஸ் ஒவ்வொறு மனுசனுக்கும் ஒவ்வொறு பீலிங்..
@
வாழ்வில் வலி சுமந்த நினைவுகள் மீளவும் ஒரு பதிவாகப்போட்டு என் அதிகாலைப் பொழுதையும் மீண்டும் பாடசாலை ஞாபங்களைத் தீண்டி தனிமரம் பாடசாலைக்காலங்களை நினைக்கவும் வைத்துவிட்டீர்கள்! துயரத்திலும் ஒரு சந்தோசம் போல மீண்டு வாருங்கள் சரண்யா மோகன் காத்திருக்கின்றார் (மகேபொம்பத்தா) ராச் என்ற கண்சிமிட்டலுடன்///
சில விழாக்கள் சில சம்பவங்களை ஞாபகப்படுத்தி விடுகின்றன பாஸ் என்ன செய்வது..சரன்யா சொல்வது போல இருந்தால் எப்படி இருக்கும் ஹி.ஹி.ஹி.ஹி..............
நல்ல வரிகள்
முதல் காதலும்,முதம் மு....................ம் இறக்கும் வரை நினைவிருக்கும்!(அனுபவம் ஹி!ஹி!ஹி!)நடத்துங்க!ஹி!ஹி!!ஹி!!!
@
கார்த்தி கேயனி கூறியது...
நல்ல வரிகள்/////
நன்றி பாஸ்
@
Yoga.s.FR கூறியது...
முதல் காதலும்,முதம் மு....................ம் இறக்கும் வரை நினைவிருக்கும்!(அனுபவம் ஹி!ஹி!ஹி!)நடத்துங்க!ஹி!ஹி!!ஹி!!////
ஆம் ஜயா எம்மால் என்றும் மறக்கமுடியாது எங்கயோ ஒர் இடத்தில் அது இருந்து கொண்டேயிருக்கும்..
நவராத்திரி நாட்களில் அழகுப் பெண்களை சைட் அடிக்காத வயசுப் பையன் உண்டா?
உங்கள் காதல் வாழ்க
மச்சான்! நீங்கள் இப்படி வருந்துவது எனக்கு கவலையாக இருக்கு! நீங்கள் அவரை மறக்க முடியாமல் தவிக்கிறீர்கள்! என்னுடைய ஐடியாவ கேட்டீர்கள் என்றால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும்!
சொல்லுங்கள் நான் என்ன செய்யணும்!
@
சென்னை பித்தன் கூறியது...
நவராத்திரி நாட்களில் அழகுப் பெண்களை சைட் அடிக்காத வயசுப் பையன் உண்டா?////
ஆமா ஜயா....அது ஒரு காலம்..
@
kobiraj கூறியது...
உங்கள் காதல் வாழ்க//////
ஹி.ஹி.ஹி.ஹி.ஹி...
நவராத்திரி காலம் இல்லை இல்லை காதல்
இன்று என் வலையில் ..
மகாபாரதத்தில் மங்காத்தா
@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
வணக்கம் மச்சான் சார்! சகோதரி பிரேமினியை மறக்க முடியாமல் நீங்கள் தவிப்பது எங்களுக்கும் வருத்தமாக உள்ளது!
உங்கள் ப்ரேமம் இனியும் பிரேமினி பக்கம் தானா? உங்களுக்கா பிரார்த்திக்கிறேன்////
மணிசாரே வருத்தப்படுறீங்களா விடுங்க பாஸ் எல்லாம் காலத்தினால் சரியாகி விடும்....
பிரிந்த காதல் ஒன்று சேராதோ இன்னும்
பிறந்துகொண்டே இருக்கும் புதிய நவரார்த்திரியில்!...வாழ்த்துக்கள் சகோ எல்லா நலனும் பெற்றிட .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
@
Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
மச்சான்! நீங்கள் இப்படி வருந்துவது எனக்கு கவலையாக இருக்கு! நீங்கள் அவரை மறக்க முடியாமல் தவிக்கிறீர்கள்! என்னுடைய ஐடியாவ கேட்டீர்கள் என்றால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியும்!
சொல்லுங்கள் நான் என்ன செய்யணும்/////
நன்றி மச்சான் சார் உங்கள் புரிந்துணர்வுக்கு....அது என்னமோதெரியலை பாஸ்...இடையில்...குறிப்பிட்ட நாட்கள் வரும் போது சில நினைவுகள் வந்து விடுகின்றது...விடுங்க எல்லாம் சரியாகிவிடும்..
நாளைக்கு ஒரு மொக்கை பதிவு போட்டால் போச்சி..எல்லோறும் ஜாலியா சிரிப்போம்
@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
நவராத்திரி காலம் இல்லை இல்லை காதல்////
ஹா.ஹா.ஹா.ஹா.......
@
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
இன்று என் வலையில் ..
மகாபாரதத்தில் மங்காத்தா////
இதோ இப்பவே வந்துட்டேன்
@
அம்பாளடியாள் கூறியது...
பிரிந்த காதல் ஒன்று சேராதோ இன்னும்
பிறந்துகொண்டே இருக்கும் புதிய நவரார்த்திரியில்!...வாழ்த்துக்கள் சகோ எல்லா நலனும் பெற்றிட .மிக்க நன்றி பகிர்வுக்கு .../////
உங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம்
போல்ட்;ஆ இருக்கும் எழுத்துக்கள் போல்ட்'ஆ உங்க மனசில் பதிஞ்சுடுச்சு போல!
உங்களிடத்தில் இருந்து பார்த்தால்
உங்கள் வரிகளில் இழைந்தோடும் சோகமும்,ஒரு வித இயலாமையையும் உணர முடிகிறது.
நவராத்திரி என்றால் காதல் ஞாபகமா!
என்ன இருந்தாலும் ஆறாத வடுவாக மனதினில் காதல் வலி... தீர்க்கமுடியாத மருந்தாய் காலம்.. சேம் பிளட் நண்பா
நினைவுகளீனூடே பின் நோக்கிச் சென்று, அவளின் அன்பினையும், அவள் அருகே இருக்கையில் எழுதும் உணர்வுகளையும் கனவாய் இறுதியில் வலியைத் தந்து போன எச்சமான நினைவுகளையும் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
இன்றைய தகவலும் கலக்கல் பாஸ்.
எங்க ரெண்டு நாளா ஆள காணோம்னு யோசிச்சேன், பீல் பண்ண போயிருந்தீங்களா?
@
கோகுல் கூறியது...
போல்ட்;ஆ இருக்கும் எழுத்துக்கள் போல்ட்'ஆ உங்க மனசில் பதிஞ்சுடுச்சு போல!
உங்களிடத்தில் இருந்து பார்த்தால்
உங்கள் வரிகளில் இழைந்தோடும் சோகமும்,ஒரு வித இயலாமையையும் உணர முடிகிறது////
ஆமா பாஸ் கிளீன் போல்டாகி விட்டேன் அப்போது
மாய உலகம் கூறியது...
நவராத்திரி என்றால் காதல் ஞாபகமா////
ஹி.ஹி.ஹி.ஹி.ஹி............
@
நிரூபன் கூறியது...
நினைவுகளீனூடே பின் நோக்கிச் சென்று, அவளின் அன்பினையும், அவள் அருகே இருக்கையில் எழுதும் உணர்வுகளையும் கனவாய் இறுதியில் வலியைத் தந்து போன எச்சமான நினைவுகளையும் சொல்லி நிற்கிறது இக் கவிதை////
அப்ப கவிதை என்று ஏற்றுக்கொள்கின்றீர்களா?
@
நிரூபன் கூறியது...
இன்றைய தகவலும் கலக்கல் பாஸ்////
தேங்ஸ் பாஸ்
@
Dr. Butti Paul கூறியது...
எங்க ரெண்டு நாளா ஆள காணோம்னு யோசிச்சேன், பீல் பண்ண போயிருந்தீங்களா?/////
ஆமா டாகுத்தரே........
காயத்தினால் பழக்கப்பட்ட மனசு, காலத்தால் மாறாது சகா. . .அவள் போன துயரமே பெரித்டாய் போக அடுத்து வரும் துயரமெல்லாம் அதன் மேல் படர, காதல் தொலைந்த பின் காலத்துக்கும் சோகங்களைத் தாங்கும் இதயமென பக்குவப்பட்டு விடுகின்றது மனசு. நம்ம தான் சொல்லிக்கிறோம் காலத்தால் காதல் மறந்து போகுமுன்னு, மறந்து போகாது சகா, மறத்துப் போகும், வடுவாய் மனதுக்குள். . .காதல் நம்முள் என்றும் சாகப்போவதில்லை. . .
காதல் கரை புரண்டு ஓடுதே?
@பிரணவன்
சரியாகச்சொன்னீங்க பாஸ்
@சி.பி.செந்தில்குமார்
பாஸ் நீங்கள் என் தளத்திலா நம்பவே முடியவில்லை மிகவும் சந்தோசமாக இருக்கு..நல்வரவு பாஸ்..
Post a Comment