Friday, October 07, 2011

தோனி சொன்னது சரியா?

சாம்பியன் லீக் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விரைவில் தோற்று வெளியேரியது நல்லதுதான் ஏன் என்றால் அடுத்துவரும் இங்கிலாந்து தொடருக்கு தயாராக இது உதவுமாம்.







இதை சொல்லியவர் ஒரு காலத்தில்(இப்ப அப்படித்தான் சொல்லனும்)வெற்றிக் கேப்டன் தோனி. தெரியாமத்தான் கேட்குறன் தோனி அவர்களே நீங்களும் சுரேஸ் ரெய்னாவும் மட்டும்தான் இந்திய அணியில் விளையாடும் வீரர்களில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் விளையாடுபவர்களில் முக்கியமானவர்கள் உங்கள் இருவருக்கும் தான் இந்திய அணியில் தற்போது நிரந்தர இடம் உள்ளது.எனவே உங்களுக்கு இந்தியாவில் நடக்கவுள்ள இங்கிலாந்து தொடருக்கு தயாராக வேண்டும் என்றால் ஏன் நீங்கள் சாம்பியன் லீக் தொடரில் இருந்து ஓய்வு கேட்டு இருக்கலாம்தானே..அதைவிட்டு விட்டு உங்களை நம்பி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வைக்கின்றார்கள் நீங்களோ தோற்றதும் தோல்வி நல்லதுக்குத்தான்..இங்கிலாந்து தொடருக்கு தயாராக உதவும் என்கிறீர்கள்.அப்ப உங்களை நம்பி விளையாட வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ரசிகர்களும் உங்களுக்கு என்ன லூசாக தெரிகின்றார்களா?இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com......../nanparkal/நண்பர்கள்)

சரி நீங்கள் மட்டும் இங்கிலாந்து தொடருக்கு தயாரானால் போதுமா..சாம்பியன் லீக் தொடரில் விளையாடும் ஏனைய இந்திய அணியில் விளையாடும் வீரர்களான விராட் கோலி,சச்சின்,போன்றவர்கள் தயாராக வேண்டியது இல்லையா?ஒரு வேளை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி பெற்று இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் விளையாடாமல் போய் இருப்பீர்களா இல்லை ஏன் என்றால் உங்களுக்கு கல்லா கட்டினால் சரி.ஒரு வேளை சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வென்றிருந்து அடுத்து வரும் இங்கிலாந்து தொடரில் தோற்றால் சொல்லுவீர்கள் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் படுதோல்வி அடைந்தும் அடுத்த தொடருக்கு தயாராகாமல் சாம்பியன் லீக்கில் விளையாடியதே காரணம் என்று நிச்சயமாக நீங்கள் சொல்வீர்கள் ஏன் என்றால் கடந்தகாலத்தில் உங்கள் கருத்துக்கள் இப்படித்தான் இருக்கு.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com......../nanparkal/நண்பர்கள்)
இப்படி மொக்கை காரணங்களை கூறுவதில் தோனிக்கு நிகர் தோனிதான்.
இந்த விடங்களில் அவுஸ்ரேலிய அணியிடம் நிறைய பாடம் கற்றவேண்டும் தோனி அணி.அவுஸ்ரேலியாவை பாருங்கள் உள்ளூர் தொடர்களைவிட அவர்கள் தாய்நாட்டுக்காக ஆடுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.நீங்கள் ஜ.பி.எல்.போன்ற உள்ளூர் தொடர்களில் விளாசிவிட்டு சர்வதேசபோட்டிகளில் சறுக்கும் போது தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடியதே காரணம் என்று சொல்வீர்கள்..இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவாடிய பதிவு(www.cricketnanparkal.blogspot.com......../nanparkal/நண்பர்கள்)
இதற்கு சச்சின் கூட விதிவிலக்கு இல்லை என்பதே கவலை அளிக்கும் விடயம் சிறந்த உதாரணம்.உலகக்கிண்ணத்தொடர் முடிந்த கையோடு ஜ.பி.எல் போட்டிகளில் விளையாடிய சச்சின்.அடுத்து வந்த மேற்கு இந்திய தொடரில் தனக்கு ஓய்வு வேண்டும் என்று அந்தத்தொடரில் இருந்து விளகினார்.ஏன் மாஸ்டரே(சச்சின்)உங்களுக்கு ஓய்வு தேவை என்றால் ஜ.பி.எல்.தொடரில் இருந்து விலகியிருக்கலாம் தானே...அது முடியாதே கல்லா கட்டனுமே.


தோனியில் ஒரு விடயத்தை அவதானிக்கலாம் மொக்கையாக சொன்னாலும் சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் உள்ளூர் தொடர்களை சைக்கிள் கேப்பில் சாடி வருகின்றார்..ஆனால் அவரால் ஏன் நேரடியாக ஜ.பி.எல். போன்றதொடர்கள் சர்வதேசப்போட்டிகளை பாதிக்குது என்று தெரிந்தும் சொல்லமுடியவில்லை.
இதற்கு இந்திய கிரிக்கெட் சபையின் ஆதரவுடன் நடக்கும் போட்டிகளை சாடினால் தன் பதவிக்கு ஆப்பாகும் என்று தோனி பயப்படுகின்றாரோ தெரியவில்லை.ஒரு கேப்டன் என்பவர் துணிச்சலாக கருத்துக்களை சொல்லவேண்டும் .அதான் ஒரு கேப்டனுக்கு அழகு.
இந்த விடயத்தில் இலங்கை அணியின் முன்னால் கேட்டன் சங்கக்காரா,மற்றும் இந்திய அணியின் முன்னால் கேப்டன் கங்குலி,போன்றோரிடம் இருந்து தோனி நிறைய பாடம் கற்கவேண்டும்..




தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய அணி அடுத்து இந்தியாவில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கட்டாயம் வெற்றி பெறவேண்டும் இல்லை என்றால் இந்திய அணியின் முன்னால் கேப்டன் தோனி என்று அவர் அழைக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.அவுஸ்ரேலியா அணியை பாருங்கள் உலககோப்பையில் தோற்று வெளியேரினாலும் அவர்கள் மனம் தளரவில்லை.அடுத்த பங்களாதேன் தொடரில் சிறப்பாக வெற்றி பெற்றார்கள்..அடுத்து இலங்கையில் நடந்த தொடரில் இலங்கை அணிக்கு அதன் சொந்த மண்ணில் அடிகொடுத்தார்கள் இதுதான் அவுஸ்ரேலிய அணியின் சிறப்பம்சம்.
சச்சின் நீங்களுமா இப்படி? நீங்களாவது எடுத்துச்சொல்லுங்க 
எனவே இந்திய அணி அடுத்து நடக்கும் இங்கிலாந்து தொடரில் வெற்றி பெருமா இல்லை அதிலும் மண்ணைக்கவ்வி..அதற்கும் தோனி எதும் மொக்கை காரணங்களை சொல்லி..கோடிக்கணக்காக இந்திய அணியின் ரசிகர்களை ஏமாற்றுவார்களா?பொறுத்து இருந்து பார்ப்போம்.

இன்றைய தகவல்-1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியில் பங்கேற்காமல் இந்தியா வர வேண்டியிருந்தது.பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141 குவித்தார். அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.


அந்த நாள் ஞாபகம்..ரம்பானா ரம்பாதான்
என்னை ஞாபகம் இருக்கா இருந்தா உங்க வேலையை மறக்காம செய்திட்டு போங்க அட நான் கருத்துரை,ஓட்டு,இதைச்செய்ய சொன்னேன்.


பின் சேர்க்கை-இந்தப்பதிவிற்கு முதல் வைத்த தலைப்பை நண்பர்கள் சொன்னதால் மாற்றியுள்ளேன்

Post Comment

43 comments:

சக்தி கல்வி மையம் said...

தோனிக்கு நேரம் சரி இல்லையினு நினைக்கிறேன்..

எல்லாம் தப்பு தப்பா நடக்குது..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

என்னபன்றதுன்னு தெரியலனா வாயித்தக்கலக்குத்துன்னு இந்த போட்டில இருந்து விலகியிருக்கலாம், அதவுட்டுட்டு சும்மா வாய குடுத்துட்டு....

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
தோனிக்கு கொஞ்சம் குழப்பமா இருந்திருக்குமோ?
மறுபடியும் மறுபடியும் தன் தலையில ஆப்பு வந்திடும் என்று...

இன்று ஒரு தகவலை விட அதற்கு கீழே உள்ள படம் தான் கண்ணை குத்துது.

K.s.s.Rajh said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
தோனிக்கு நேரம் சரி இல்லையினு நினைக்கிறேன்..

எல்லாம் தப்பு தப்பா நடக்குது.////

அப்படி போலத்தான் இருக்கு பாஸ்..

K.s.s.Rajh said...

@
Dr. Butti Paul கூறியது...
என்னபன்றதுன்னு தெரியலனா வாயித்தக்கலக்குத்துன்னு இந்த போட்டில இருந்து விலகியிருக்கலாம், அதவுட்டுட்டு சும்மா வாய குடுத்துட்டு..////

சரியாகச்சொன்னீங்க டாக்டரே தோனி பல முறை இப்படி வாயை கொடுத்து...............நொந்து இருக்கார்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
இனிய காலை வணக்கம் பாஸ்,
தோனிக்கு கொஞ்சம் குழப்பமா இருந்திருக்குமோ?
மறுபடியும் மறுபடியும் தன் தலையில ஆப்பு வந்திடும் என்று...

இன்று ஒரு தகவலை விட அதற்கு கீழே உள்ள படம் தான் கண்ணை குத்துது///

காலை வணக்கம் பாஸ்..ஆமா தோனி குழம்பித்தான் போயிருப்பார் என்று நினைக்கின்றேன்.

அந்தப்படம் பாஸ் கிரிக்கெட் பிடிக்காதவங்களுக்காக..ரம்பானா ரம்பா தான்..ஹி.ஹி.ஹி.ஹி.ஹி............

SURYAJEEVA said...

spot fixing குறித்து சல்மான் படத் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் இன்னும் இந்த விளையாட்டை கட்டி கொண்டு என் மாரடிக்கிறீர்கள்... உருப்படியாக ஏதாவது எழுதலாமே

K.s.s.Rajh said...

@
suryajeeva கூறியது...
spot fixing குறித்து சல்மான் படத் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் இன்னும் இந்த விளையாட்டை கட்டி கொண்டு என் மாரடிக்கிறீர்கள்... உருப்படியாக ஏதாவது எழுதலாமே////

கிரிக்கெட் என்பது இன்று உலகில் பல மக்களை தன்னகத்தே கட்டிப்போட்டுள்ளது..எனவே கிரிக்கெட் பத்தியும் எழுதவேண்டியுள்ளது நண்பரே...

பாலா said...

ஒரு காலத்தில் வெற்றி கேப்டன் தோனி என்று சொல்லி இருக்கிறீர்களே? அவர் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? இல்லை உலகக்கோப்பைக்கு அப்புறம் அவர் எத்தனை தொடர்களை இழந்துள்ளார்? தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஐ‌பி‌எல் போன்ற பணம் கொழிக்கும் தொடர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது வேதனைக்குரியதே. அதற்காக ஒரேயடியாக குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை. கொஞ்சம் பாசிடிவாக சொல்லலாமே என்று நினைத்திருக்கலாம்.

கோகுல் said...

இந்த தம்பி ஏன் இப்படி பேசிப்பழகுதுன்னு தெரியல!

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
ஒரு காலத்தில் வெற்றி கேப்டன் தோனி என்று சொல்லி இருக்கிறீர்களே? அவர் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன? இல்லை உலகக்கோப்பைக்கு அப்புறம் அவர் எத்தனை தொடர்களை இழந்துள்ளார்? தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஐ‌பி‌எல் போன்ற பணம் கொழிக்கும் தொடர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது வேதனைக்குரியதே. அதற்காக ஒரேயடியாக குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை. கொஞ்சம் பாசிடிவாக சொல்லலாமே என்று நினைத்திருக்கலாம்////

நன்றி பாஸ்..

உலகக்கோப்பை வென்றதை மட்டும்
வைத்து பேசிக்கொண்டு இருப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை பாஸ்.
இந்திய அணி சந்தித்த மிக மோசமான தோல்விகளில் கடந்த இங்கிலாந்து தொடர் முக்கியத்துவம் பெறுகின்றது..தோனி தலைமையில் தொடர் வெற்றிகள் குவித்துவந்த இந்திய அணிக்கு அந்தத்தொடர் படுதோல்வி..அதைவிட ஜ.பி.எல்,சாம்பியன் லீக் போட்டிகளிலும் தோனி தலைமையில் பல வெற்றிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது.

ஆனால் இப்ப பாருங்க தோனியின் வெற்றிப்பாதையில் சறுக்கள் வந்துள்ளது எனவேதான் அப்படி குறிப்பிட்டுள்ளேன் நண்பரே.

K.s.s.Rajh said...

@
கோகுல் கூறியது...
இந்த தம்பி ஏன் இப்படி பேசிப்பழகுதுன்னு தெரியல////

அதான் பாஸ் எனக்கும் புரியலை

Akash said...

பாலா சொன்னது போல டோனி உலக கிண்ணத்தை வென்று இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை...உலக கோப்பைக்கு பிறகு இழந்தது ஒரே ஒரு டெஸ்ட் தொடரையும் ஒரே ஒரு ஒருநாள் தொடரையும் தான். அதற்க்குள் ஏன் இப்படி கடுமையான விமர்சனம்? இங்கிலாந்து தொடரை இழந்ததுக்கு டோனி யை மட்டும் காரணம் சொல்ல முடியாது.வீரர்களின் காயம் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தியது. பந்து வீச்சு வரிசையும் பலவீனமாக இருந்தது. தற்போது இந்திய அணி புதிய பந்து வீச்சாளர்கள் ஐ தேர்ந்து எடுக்க வேண்டி உள்ளது. எதிர் வரும் இங்கிலாந்து தொடருக்கு புதிய பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் போல தெரின்கின்றது. சிறந்த கேப்டன் என்பவர் வெற்றிகளை பெற்று கொடுப்பவர் மட்டுமே. சிறந்த கேப்டன் என்று நீங்க சொன்ன கங்குலியோ சங்ககாரவோ உலக கிண்ணத்தையோ வேறு முக்கியமான தொடர்களையோ வென்று கொடுக்கவில்லை.

Mohamed Faaique said...

கிரிக்கட் வீரர் கூடியது, 40-45 வயது வரைதான் விளையாடலாம். அதற்குள்ளாக அவர்கள் கல்லா கட்டினால்தான் உண்டு.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை`ண்டு சொல்வாங்களே.. அதுபோல ஒரு இக்கட்டாண சந்தர்ப்பம்தான் அவர்களுக்கு..

K.s.s.Rajh said...

@
Akash கூறியது...
பாலா சொன்னது போல டோனி உலக கிண்ணத்தை வென்று இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை...உலக கோப்பைக்கு பிறகு இழந்தது ஒரே ஒரு டெஸ்ட் தொடரையும் ஒரே ஒரு ஒருநாள் தொடரையும் தான். அதற்க்குள் ஏன் இப்படி கடுமையான விமர்சனம்? இங்கிலாந்து தொடரை இழந்ததுக்கு டோனி யை மட்டும் காரணம் சொல்ல முடியாது.வீரர்களின் காயம் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தியது. பந்து வீச்சு வரிசையும் பலவீனமாக இருந்தது. தற்போது இந்திய அணி புதிய பந்து வீச்சாளர்கள் ஐ தேர்ந்து எடுக்க வேண்டி உள்ளது. எதிர் வரும் இங்கிலாந்து தொடருக்கு புதிய பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் போல தெரின்கின்றது. சிறந்த கேப்டன் என்பவர் வெற்றிகளை பெற்று கொடுப்பவர் மட்டுமே. சிறந்த கேப்டன் என்று நீங்க சொன்ன கங்குலியோ சங்ககாரவோ உலக கிண்ணத்தையோ வேறு முக்கியமான தொடர்களையோ வென்று கொடுக்கவில்லை////

உங்கள் முதலாவது கேள்விக்கு பதில் மேலே நண்பர் பாலாவுக்கு சொன்னதுதான் அதைப்பாருங்கள்..
அதைவிட தோனி சாம்பியன் லீக் தொடரில் தோற்றதும் அவர் சொன்னது சரியா?அவர் என்ன செய்து இருக்கவேண்டும் சாம்பியன் லீக்கில் விளையாடாமல் அல்லவா இருந்து இருக்கனும்

இப்படி பலமுறை தோனி மொக்கை கருத்துக்களை கூறியிருக்கின்றார்.

என்னது கங்குலி..தொடர்களை வென்று கொடுக்கவில்லையா என்ன சொல்கின்றீர்கள் கங்குலி தலைமையில் உலகக்கிண்ணத்தை வெல்லவில்லைதான் 2003ல் இறுதிப்போட்டிக்கு வந்து அவுஸ்ரேலியாவிடம் தோற்றார்கள்.

ஆனால் கங்குலி வென்று கொடுத்த தொடர்கள் எத்தனை இருக்கு இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் கங்குலி பாகிஸ்தானில் வைத்து தொடர்ரை வென்ற முதலாவது இந்திய அணித்தலைவர் கங்குலிதான்..அதைவிட வெளிநாட்டு மண்ணிலும் இந்திய அணியால் வெற்றிகளை குவிக்க முடியும் என்று நிரூபித்துக்காட்டியவர் கங்குலி..இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லாம் அதை பட்டியல் படுத்த இடம் போதாது.

அதைவிட இந்தப்பதிவில் கங்குலியா,சங்கக்காரவா,தோனியா சிறந்த கேப்டன் என்று விவாதிக்கவில்லை..ஒரு கேப்டன் என்பவர் தனது கருத்தை தெளிவாகவும் துணிச்சலாகவும் சொல்லவேண்டும்..இந்தவிடயங்களில் கங்குலி,சங்கக்கார சிறப்பானவர்கள் எனவே இதைத்தான் தோனி கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொலியுள்ளேன்.

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
கிரிக்கட் வீரர் கூடியது, 40-45 வயது வரைதான் விளையாடலாம். அதற்குள்ளாக அவர்கள் கல்லா கட்டினால்தான் உண்டு.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை`ண்டு சொல்வாங்களே.. அதுபோல ஒரு இக்கட்டாண சந்தர்ப்பம்தான் அவர்களுக்கு.////

சரியாகச்சொல்லியுளீர்கள் இதான் கூழுக்கும் மீசைக்கும் ஆசை போல

40-45 வயசுவரை ஒரு சில வீரர்கள் விளையாடுவார்கள் பாஸ் பெரும்பாலும் 40 வயதுக்குள் ஓய்வு பெற்றுவிடுவார்கள்..

தனிமரம் said...

இவனுங்கள் எல்லாம் காசு என்பதுக்காக சாதாரண ரசிகர்களை முட்டாள் ஆக்கும் எண்ணத்துடன் கருத்துச் சொல்லுவினம் .
இந்த விளையாட்டைப்பற்றி நான் சொல்ல வெளிக்கிட்டால் வார்த்தைகள் சிலரை முகம் சுழிக்க வைக்கும்!

நிற்க ராச்! 

இதை பொதுவில் விவாதத்திற்கு விடுகின்றேன் உங்கள் தளத்தில் !
எல்லோரும் விளையாட்டுச் செய்தியைத் தரும்போது ஏன் உள்நாட்டு தடைகள விளையாட்டுக்கள் தெரிவதில்லையா?

நண்பா ஒரு குக்கிராமத்தில் பிறந்து பல தடைகளைத்தாண்டி சில அரசியல் வாதிகளின் சீண்டலில் நொந்து போன சுகாந்திக்கா ஜயசிங்க போன்ற சர்வதேச வீராங்கனைகளின் சாதனையையும் இன்று ஒரு தகவலில் சேர்த்து ஒரு தொடராக தரமுயலுங்கள்!

 நண்பர்களே தனிமரம் விளையாட்டுச் செய்திகளுக்கு டாக்குத்தர் போல் அலுப்பாரை அல்ல அரசியல் கடந்து நம் தேசத்தவரின் திறமைகளையும் பதிவு செய்யலாமே கிரிக்கெட்டில்தான் நாம் இன்னும் காலங்கழிக்கப் போறோமா அது என ஒரு ஒலிம்பிக்கா இல்லைத்தானே?
(கும்மச் சொன்னவர் நண்பன் ராச் !ஏய்தவரைவிட்டு தனிமரத்திற்கு செம்பை நெளிக்காதீர்கள்)

தனிமரம் said...

உள்ளத்தை அள்ளித் தந்த தாரகை படம் போட்டு காலையில் சிந்தனையைக் குடையைச் செய்வது முறையோ?இது தகுமோ?நீதியோ?

காட்டான் said...

வணக்கம் மாப்பிள பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்து முடித்துவிட்டேன்.. உங்களுக்கு தெரியும்தானே உந்த விளையாட்டைப்பற்றிய என் அறிவு ரம்பாவ பார்ததாலதான் இந்த கிறுக்கல் பின்னூட்டம்...!! ஹி ஹி

நிகழ்வுகள் said...

தோல்வி இன்றி வரலாறா ??? பாஸ் எந்த அணி தான் மோசமான தோல்விகளை எதிர்கொள்ளவில்லை ?இதெல்லாம் சகஜம்.. கங்குலி ஒன்னும் வெற்றிகளை மட்டுமே சுவைத்த வீரர் அல்ல.. கங்குலியின் வெற்றி பெறுபேறை விட டோனியின் பெறுபேறு சராசரியில் முன்னுக்கு நிற்கிறது..

நிகழ்வுகள் said...

ipl போட்டிகளை பொறுத்தவரை பல முடிவுகள் வேதனை தரும்.. இறுதி சில பந்துகளிலே போட்டியின் போக்கே மாறிவிடுகிறது.. இதற்க்கு திறமையை விட அதிஸ்ரம் தான் கை கொடுக்க வேண்டும்)

பாலா said...

நான் உலகக்கோப்பையை காரணம் காட்டியது, உலககோப்பை முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பதற்காக. அதே போல தோனி நான் தோல்வியே அடைய மாட்டேன் என்று சொல்லவில்லை. இப்படி ஒரு தொடரில் படுதோல்வி அடைந்ததற்கு கேப்டனை நீக்குவார்கள் என்றால் இந்தியா என்றோ பாகிஸ்தான் மாதிரி ஆகி இருக்கும்.

மேலும் எல்லோருமே கங்குலி போல, சங்கா போல புத்திசாலிகளாக இருப்பார்களா? எதையுமே பாசிடிவ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர் அப்படி சொல்லி இருக்கலாம்.

தோனி மீதான அபிமானத்தில் இதை கூறவில்லை. உங்கள் தலைப்பில் உள்ள கடுமைதன்மை இப்படி கூற வைக்கிறது. ஏதோ கேப்டன் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர் இப்படி கூறுகிறார் என்பதைப்போல சொல்கிறீர்கள்.

K.s.s.Rajh said...

@தனிமரம்

ஏன் பாஸ் இப்படி கோத்து விடுறீங்க

சரி விடுங்க மற்ற விளையாட்டை பத்தியும் எழுதினாப் போச்சு

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
உள்ளத்தை அள்ளித் தந்த தாரகை படம் போட்டு காலையில் சிந்தனையைக் குடையைச் செய்வது முறையோ?இது தகுமோ?நீதியோ?////

கிரிக்கெட் புடிக்காதவங்களுக்காகத்தான் அந்தப்படம்

K.s.s.Rajh said...

@
காட்டான் கூறியது...
வணக்கம் மாப்பிள பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்து முடித்துவிட்டேன்.. உங்களுக்கு தெரியும்தானே உந்த விளையாட்டைப்பற்றிய என் அறிவு ரம்பாவ பார்ததாலதான் இந்த கிறுக்கல் பின்னூட்டம்...!! ஹி ஹி///

அதுக்குத்தான் மாம்ஸ் ரம்மா படம் போட்டது

K.s.s.Rajh said...

@
நிகழ்வுகள் கூறியது...
தோல்வி இன்றி வரலாறா ??? பாஸ் எந்த அணி தான் மோசமான தோல்விகளை எதிர்கொள்ளவில்லை ?இதெல்லாம் சகஜம்.. கங்குலி ஒன்னும் வெற்றிகளை மட்டுமே சுவைத்த வீரர் அல்ல.. கங்குலியின் வெற்றி பெறுபேறை விட டோனியின் பெறுபேறு சராசரியில் முன்னுக்கு நிற்கிறது.////

பாஸ் பதிவை வடிவா பாருங்க இங்க நான் கங்குலியா,தோனியா சிறந்த கேப்டன் என்பதை விவாதிக்கவில்லை நான் சொன்னது..ஒரு கேப்டன் என்றால் அவர் சொல்லும் கருத்துக்கள் தெளிவாக இருக்கவேண்டும் என்பதே இந்த விடயத்தில் தான் கங்குலியையும்,சங்காவையும் உதாரணப்படுத்தியுள்ளேன்

K.s.s.Rajh said...

@
நிகழ்வுகள் கூறியது...
ipl போட்டிகளை பொறுத்தவரை பல முடிவுகள் வேதனை தரும்.. இறுதி சில பந்துகளிலே போட்டியின் போக்கே மாறிவிடுகிறது.. இதற்க்கு திறமையை விட அதிஸ்ரம் தான் கை கொடுக்க வேண்டும்////

ஆமா பாஸ் இந்த ஜ.பி.எல்.போட்டிகளால் சர்வதேசப்போட்டிகள் பாதிகப்படக்கூடாது

K.s.s.Rajh said...

@பாலா
///மேலும் எல்லோருமே கங்குலி போல, சங்கா போல புத்திசாலிகளாக இருப்பார்களா? எதையுமே பாசிடிவ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர் அப்படி சொல்லி இருக்கலாம்.////

பல முறை தோனி இப்படி கருத்துக்கள் கூறி பல்ப்பாகியுள்ளார்.

K.s.s.Rajh said...

@பாலா
///
நான் உலகக்கோப்பையை காரணம் காட்டியது, உலககோப்பை முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை என்பதற்காக. அதே போல தோனி நான் தோல்வியே அடைய மாட்டேன் என்று சொல்லவில்லை. இப்படி ஒரு தொடரில் படுதோல்வி அடைந்ததற்கு கேப்டனை நீக்குவார்கள் என்றால் இந்தியா என்றோ பாகிஸ்தான் மாதிரி ஆகி இருக்கும்////

நான் ஒரு தொடர் என்று சொல்லவில்லை பாஸ் இனிவரும் தொடர்களிலும் தோற்றால் முன்னால் கேப்டன் தோனி என்று அழைக்கும் நிலை வரலாம் என்றுதான் சொல்லியுள்ளேன்

K.s.s.Rajh said...

@பாலா
///தோனி மீதான அபிமானத்தில் இதை கூறவில்லை. உங்கள் தலைப்பில் உள்ள கடுமைதன்மை இப்படி கூற வைக்கிறது. ஏதோ கேப்டன் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக அவர் இப்படி கூறுகிறார் என்பதைப்போல சொல்கிறீர்கள்.////

தலைப்பு கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கு நண்பரே நானும் யோசித்தேன் இதோ இப்போது மாற்றி விடுகின்றேன்
நன்றி பாஸ்

பாலா said...

தலைப்பை மாற்றி இருக்க தேவை இல்லை. இருந்தாலும் கருத்துக்கு மதிப்பளித்ததற்கு நன்றி நண்பரே.

K.s.s.Rajh said...

@பாலா
இல்லை பாஸ் தலைப்பு கொஞ்சம் கடுமைதான் நன்றி..பாஸ்

Unknown said...

டோனிக்கே ஆப்பா

M.R said...

சமாளிப்பிகேஷன் வேற என்ன சொல்ல !

சென்னை பித்தன் said...

பாவம் தோனி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தேசத்திற்காக கிரிக்கெட் விளையாடுவதைவிட காசுக்காக விளையாடுவது கொடுமை, அதை கிரிக்கெட் வாரியமே ஊக்குவிப்பது கேவலம்!

K.s.s.Rajh said...

@
வைரை சதிஷ் கூறியது...
டோனிக்கே ஆப்பா?///
பாவம் பாஸ் தோனி

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
சமாளிப்பிகேஷன் வேற என்ன சொல்ல///
ஆமா பாஸ் அப்படித்தான் போல

K.s.s.Rajh said...

@
சென்னை பித்தன் கூறியது...
பாவம் தோனி///
ஆம் ஜயா

K.s.s.Rajh said...

@
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
தேசத்திற்காக கிரிக்கெட் விளையாடுவதைவிட காசுக்காக விளையாடுவது கொடுமை, அதை கிரிக்கெட் வாரியமே ஊக்குவிப்பது கேவலம்/////

சரியாகச்சொன்னீங்க தலைவரே

Nirosh said...

சரி இங்கிலாந்து உடனான போட்டிகள் முடிவடைந்த பின்னர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே...!!!

K.s.s.Rajh said...

@
Nirosh கூறியது...
சரி இங்கிலாந்து உடனான போட்டிகள் முடிவடைந்த பின்னர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே...!////

ஆமா பாஸ் பொறுத்து இருந்து பாப்போம்

”தளிர் சுரேஷ்” said...

அலோ ராஜ் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்னிக்குதான் உங்க வலைப்பூ பக்கம் வர முடிஞ்சது தோனியின் புலம்பல்களை பெரிசு படுத்தாதீங்க! அந்த நாள் ஞாபகம் போட்டோ சூப்பர்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails