Saturday, October 15, 2011

தோனி தோனிதான் தோல்வியில் இருந்து மீண்டது இந்தியா ஒரு பார்வை

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது கடந்த இங்கிலாந்து தொடரில் இருந்து தோல்விகளை சந்தித்துவந்த இந்திய அணிக்கு இந்த வெற்றி பெரும் உட்சாகத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.




டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். பார்தீவ் பட்டேல், ரஹானே ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.கம்பீர் ஆரம்பத்துடுப்பாட்டவீரராக களம் இறங்கவில்லை.
4-வது ஓவரிலேயே 9 ரன்களில் பார்தீவ்பட்டேல் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அவரது ரன் அவுட்டானது ரஹானே அடித்த பந்து எதிர் முனையில் நின்ற பந்துவீச்சாளரின் கைகளில் பட்டு அப்படியே விக்கெட்டைதாக்கியது எனவே கிறீஸ்க்கு வெளியே நின்ற பார்த்தீப் பட்டேல் துரதிஸ்ட வசமாக ரன் ரவுட்டானார்.இதில் பந்து 
பந்து வீச்சாளரது கையில் பட்டதா என்று 3வது நடுவரை அனுகியே ஆட்டம் இழப்பு வழங்கப்பட்டது.தொடர்ந்து கம்பீர் களமிறங்கினார். டெஸ்ட் போட்டிகள் போன்று விளையாடிய ரஹானே 41 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத பதிவு-(www.cricketnanparkal.blogspot.com) nanparkal/நண்பர்கள்
அடுத்துவந்த கோலி கம்பீருடன் இணைந்து நிதானமாக ஆடினார் ஆனால் கம்பீர் இடைக்கிடையில் பவுண்டரிகளை விளாசிக்கொண்டு இருந்தார்.பின் கம்பீரும் 32 ஓட்டங்களைப்பெற்று இருந்த போது டெர்ன்பேச் இன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ரெய்னா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோர் உயர்ந்தது.கோலி 37 ஓட்டங்களைப்பெற்றபோது பட்டேல் பந்துவீச்சில் பீட்டசன்னிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.




அடுத்து வந்த கேப்டன் தோனி தன் பொறுப்பை உணர்ந்து சிறபாக ஆட அவருக்கு ரெய்னாவும் நல்ல ஓத்துழைப்பு வழங்க இந்திய அணியின் ஸ்கோர் அதிரடியாக உயர்ந்தது.
ரெய்னா 55 பந்துகளில் 61 ஓடங்களைப்பெற்றுக்கொடுத்து ஃபின் பந்துவீச்சில் பெய்ர்ஸ்டவ் விடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.கேப்டன் தோனி ஆட்டம் இழக்காமல் 87ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார் [இன் வரிசையில் அவ்ந்த வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 22 பந்துகளில் 27 ஓட்டங்களைப்பெற்று ரன் அவுட்டானார்.தோனி ரெய்னாவின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி 7விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப்பெற்றது.இதில் ஒருவிடயம் 35 ஓவர்களில் 150 ஓட்டங்களைப்பெற்றிருந்த இந்திய அணி கடைசி 15 ஓவர்களில் 150 ஓட்டங்களைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத பதிவு-(www.cricketnanparkal.blogspot.com) nanparkal/நண்பர்கள்
பந்து வீச்சில் இங்கிலாந்து தரப்பில்
ஃபின் 1விக்கெட்டையும்,டெர்ன்பேச் 1விக்கெட்டையும், ஸ்வான் 1விக்கெட்டையும், பட்டேல் 1விக்கெட்டையும் கைப்பற்றினர் ஏனைய 3 விக்கெட்டுக்கள் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டது.




301 என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்கமுடியாமல் அடுத்தடுத்துவிக்கெட்டுகளை இழந்தது ஆரம்பத்துடுப்பாட்டவீரர் கேப்டன் அலிஸ்டர் குக் மட்டும் 60 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார்,அதற்கு அடுத்த படியாக பீட்டர்சன் 19 ஓட்டங்களையும்,பின் வரிசையில் ஃபின் ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தால்.இங்கிலாந்து அணி
இங்கிலாந்து 36.1 ஓவர்களில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத பதிவு-(www.cricketnanparkal.blogspot.com) nanparkal/நண்பர்கள்
பந்துவீச்சில் இந்திய தரப்பில்-
அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும்,பிரவின் குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்,ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்பட்டது.




இந்தியாவின் வெற்றியும் இங்கிலாந்தின் தோல்வியும்
இந்தபோட்டியில் இந்திய கேப்டன் தோனி மிகசிறப்பாக தன் பங்களிப்பை வழங்கினார்..குறிப்பிட்டுச்சொன்னால் கடந்த உலககோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு தோனி ஆடிய போட்டிகளில் அவரின் சிறப்பான இனிஸாக இதைக்குறிப்பிடலாம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத பதிவு-(www.cricketnanparkal.blogspot.com) nanparkal/நண்பர்கள்
கீப்பிங்கிலும் கலக்கிய தோனி 1ஸ்டெம்பிங்,ஒரு கேட்ச் பிடித்தார்.
நேற்றய போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தோனிதான் தேர்வு செய்யப்பட்டார்.
சச்சின்,சேவாக்,யுவராஜ் சிங்,சகீர்கான்,ஹர்பஜன் சிங்,போன்ற முன்னனி வீரர்கள் விளையாடாத போதும் இளம்வீரர்களுடன் இந்திய அணி சிறப்பான வெற்றியைப்பெற்றது.துடுப்பாட்டத்தில் பிரச்சனையில்லை.ரெய்னா,கோலி,தோனி,கம்பீர்,பார்த்தீவ் பட்டேல் போன்றோர் இருந்தாலும் பந்து வீச்சில் சகிர்கான்,ஹர்பஜன் விளையாடாதது இந்திய பந்துவீச்சி பலவீனமாக இருக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது ஆனால்.இளம் பந்துவீச்சாளர்கள் தங்கள் பங்களிப்பை சிறபாக வழங்கினர்.இந்திய அணியின் பந்துவீச்சி சிறப்பாக அமைந்ததே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத பதிவு-(www.cricketnanparkal.blogspot.com) nanparkal/நண்பர்கள்
இங்கிலாந்து தரப்பில் அண்டர்சன்,ஸ்டூவட் பிராட்விளையாடாதது நிச்சயம் பந்துவீச்சில்அவர்களுக்கு பின்னடைவே.காரணம் கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய துடுப்பாட்ட வரிசையை இவர்கள் இருவரும் சிதறடித்தனர்.
எனவே இவர்கள் விளையாடாதது பின்னடைவுதான்


 குக்,பீட்டர் சன் கீஸ்வெட்டர்,திராட்,போன்றோர் விளையாடினாலும்,பெல்,மைக்பிரயர் இவர்கள் விளையாடியிருந்தால் சிலவேளை இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்திருக்கும்..இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் மைக்பிரயர் நெருக்கடியான தருணங்களில் சிலவேளை சிறப்பாக ஆடக்கூடியவர்.பெல் மிகசிறந்த ஒரு துடுப்பாட்டவீரர்.நெருக்கடியான தருணங்களில் இங்கிலாந்தை தனதுடுப்பாட்டத்தினால் மீட்பவர்.
எனவே அண்டர்சன்,ஸ்டூவர் பிராட்,இயன் பெல்,மைக்பிரையர்,இவர்கள் விளையாடியிருந்தால் இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்திருக்கலாம்.
இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் களவெடுத பதிவு-(www.cricketnanparkal.blogspot.com) nanparkal/நண்பர்கள்
எது எப்படியோ முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏனைய போட்டிகளிலும் வென்று தொடரைக்கைப்பற்றுமா இல்லை..ஏனைய போட்டிகளில் இங்கிலாந்து வென்று தொடரை வெல்லுமா பொறுத்திருந்து பார்ப்போம்.


முஸ்கி-இன்று வரவேண்டிய என் உயிர் நீ தானே தொடர் கதையின் அடுத்த பகுதி நாளை வருகின்றது.நேற்றய இந்திய இங்கிலாந்து போட்டி பற்றி பதிவு போட நினைத்தால் தொடர்கதையை நாளைக்கு வெளியிடுகின்றேன் மன்னிக்கவேண்டும் நண்பர்களே.


வயசு கூட கூட இவங்க அழகு மட்டும் குறையுதே இல்லை
ஹாய் உங்கள் வேலையை மறக்காமல் செய்திட்டு போங்க அதான் கருத்துரை,ஓட்டு
இன்றைய தகவல்-சீயான் விக்ரம் நடித்த முதல் படம் என் காதல் கண்மணி 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது

Post Comment

34 comments:

காந்தி பனங்கூர் said...

சொந்த மண்ணில் தோனி வென்றே ஆக வேண்டும். இதே வெற்றி அடுத்த்டுத்த போட்டிகளிலும் தொடர இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

காந்தி பனங்கூர் said...

ஐஸ்வர்யா ராயின் சமீபத்திய புகைப்படங்களை நீங்க பாக்கல்ன்னு நினைக்கிறேன் பாஸ்... முடிந்தால் பாருங்க பாஸ். அப்புறம் சொல்லுங்க பாஸ் அவங்க அழகா இருக்காங்கன்னு. ஹி ஹி ஹி

K.s.s.Rajh said...

@
காந்தி பனங்கூர் கூறியது...
சொந்த மண்ணில் தோனி வென்றே ஆக வேண்டும். இதே வெற்றி அடுத்த்டுத்த போட்டிகளிலும் தொடர இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்////

பொறுத்திருந்து பார்ப்போம் பாஸ் அடுத்த போட்டிகளில் என்ன நடக்குது என்று

K.s.s.Rajh said...

@ காந்தி பனங்கூர் கூறியது...
ஐஸ்வர்யா ராயின் சமீபத்திய புகைப்படங்களை நீங்க பாக்கல்ன்னு நினைக்கிறேன் பாஸ்... முடிந்தால் பாருங்க பாஸ். அப்புறம் சொல்லுங்க பாஸ் அவங்க அழகா இருக்காங்கன்னு. ஹி ஹி ஹி////

ஹா.ஹா.ஹா.ஹா.
இப்ப அவங்க ப்ரக்ணட்டா இருக்காங்க இப்ப எப்படி அவங்க அழகாயிருபாங்க...ஹி.ஹி.ஹி.ஹி.......

M.R said...

ஜெயித்தது சந்தோசமே நண்பா

தமிழ் மணம் மூன்றாவது வாக்கு

எனது தளத்தில் தாங்கள் அளித்த விடைக்கு பதில் தந்துள்ளேன் நண்பா

K.s.s.Rajh said...

@
M.R கூறியது...
ஜெயித்தது சந்தோசமே நண்பா

தமிழ் மணம் மூன்றாவது வாக்கு

எனது தளத்தில் தாங்கள் அளித்த விடைக்கு பதில் தந்துள்ளேன் நண்பா////

அடுத்த போட்டிகளில் என்ன செய்கின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

உங்கள் பதிலை பார்த்தேன் பாஸ்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நல்ல ஆரம்பம் நண்பா, தொடரனும்..
நான் பதிவ சொல்லல, வெற்றிய சொன்னேன்..

K.s.s.Rajh said...

@Dr. Butti Paul
////
நல்ல ஆரம்பம் நண்பா, தொடரனும்..
நான் பதிவ சொல்லல, வெற்றிய சொன்னேன்./////
ஹி.ஹி.ஹி.ஹி..பொறுத்திருந்து பார்ப்போம்

நான் நல்லா எப்பவோ அரம்பிச்சுட்டன் ஹி.ஹி.ஹி.ஹி

SURYAJEEVA said...

தோற்றால் தோணி நீ நாசமாய் போக என்று திட்டுவதும், வெற்றி பெற்றால் தோனியை தலையில் வைத்து கொண்டாடுவதும் சாதாரணமானவனாக இருந்தால் சரி ஒரு நல்ல பதிவராய் வேண்டாம் என்பது என் எண்ணம்... மேலும் இது பெரிய சூதாட்டம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்..

தனிமரம் said...

நாளைய பதிவில் சந்திப்போம்!

Unknown said...

பழி வாங்குன சந்தோசம் எழுத்தில தெரியுதே ஹி ஹி ஹி

Mohamed Faaique said...

ஆஹா... இந்தியா ஜெய்ச்சுடுச்சா... அப்போ தோணிக்கு எதிரா போட்டோ கொம்மண்ட் போட நெனச்சிட்டு இருந்ததெல்லாம் வேஸ்ட்டா...

ச்சே.. வர வர இந்திய அணிய நம்பவே முடியலப்பா....

K.s.s.Rajh said...

@suryajeeva
/////
தோற்றால் தோணி நீ நாசமாய் போக என்று திட்டுவதும், வெற்றி பெற்றால் தோனியை தலையில் வைத்து கொண்டாடுவதும் சாதாரணமானவனாக இருந்தால் சரி ஒரு நல்ல பதிவராய் வேண்டாம் என்பது என் எண்ணம்... மேலும் இது பெரிய சூதாட்டம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்////

நல்ல கருத்து பாஸ்

ஆனால்
கிரிக்கெட்டை ரசிக்கும் நிறைய வாசகர்கள் இருக்கின்றார்கள் எனவே அவர்களுக்காக கிரிக்கெட் பற்றி எழுதவேண்டியுள்ளது..ஒரு அணிதோல்வியடையும் போது ஏன் தோல்வி என்பது பற்றியும் அதன் கேப்டன் வீரர்கள் பற்றியும் எழுதவேண்டியுள்ளது அதே நேரம் அந்த அணி தோல்வியில் இருந்து மீளும்போது அதை பற்றியும் எழுதவேண்டியதேவையுள்ளது நண்பா...ஏன் என்றால் என்தளத்தில் கிரிக்கெட் பதிவுகளை ரசிக்கவும் நிறைய வாசகர்கள் வருகின்றார்கள் எனவே அவர்களின் எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது அல்லவா.மற்றபடி நான் ஒரு காலமும் தோனியை நாசமாக போக என்று திட்டியது இல்லை நான் அவரது ரசிகனும் இல்லை நான் பொதுவான ஒரு கிரிக்கெட் ரசிகனாக தோல்வியை பற்றி மட்டும் இல்லை அவரது வெற்றிகளை பற்றியும் எழுதவேண்டியுள்ளது அப்போதுதான் என் தளத்திற்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களை அவர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யவேண்டியுள்ளது..

பலதரப்பட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவதற்கு அவர்களின் ரசனைக்கு ஏற்ப பலதரப்பட்ட பதிவுகளை எழுதவேண்டியுள்ளது நண்பா என்ன செய்ய

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
நாளைய பதிவில் சந்திப்போம்/////

ஓக்கே பாஸ் நாளைக்கு வாங்க

K.s.s.Rajh said...

@
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
பழி வாங்குன சந்தோசம் எழுத்தில தெரியுதே ஹி ஹி ஹி..////

அப்படியில்லை பாஸ் இந்திய அணி தோல்விஅடையும் போது பல விமர்சணங்களை முன்வைத்தவன் நான் எனவே அவர்கள் வெற்றி பெரும் போதும் அதை பற்றி எழுதவேண்டும் அல்லவா அவ்வளவுதான் மற்றும் படி நான் இந்திய அணியின் ரசிகன் கிடையாத்ய்..பொதுவான ஒரு கிரிக்கெட் ரசிகன் அவ்வளவுதான்

K.s.s.Rajh said...

@
Mohamed Faaique கூறியது...
ஆஹா... இந்தியா ஜெய்ச்சுடுச்சா... அப்போ தோணிக்கு எதிரா போட்டோ கொம்மண்ட் போட நெனச்சிட்டு இருந்ததெல்லாம் வேஸ்ட்டா...

ச்சே.. வர வர இந்திய அணிய நம்பவே முடியலப்பா../////

ஹா.ஹா.ஹா.ஹா.விடுங்க இன்னும் 4 போட்டி எஞ்சியிருக்குதானே ஒரு வேளை இந்தியா தோற்றால் போடுங்க

சக்தி கல்வி மையம் said...

மற்ற போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.,

Unknown said...

மாப்ள நான் போட்ட வீடியோ பதிவ தோனி பாத்திருப்பாரோ டவுட்டு ஹிஹி!...வாழ்த்துக்கள்!

K.s.s.Rajh said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

பொறுத்திருந்து பார்ப்போம்

K.s.s.Rajh said...

@
விக்கியுலகம் கூறியது...
மாப்ள நான் போட்ட வீடியோ பதிவ தோனி பாத்திருப்பாரோ டவுட்டு ஹிஹி!...வாழ்த்துக்கள்!/////

பார்த்திட்டார் போலதான் இருக்கு ஹி.ஹி.ஹி.ஹி............

Unknown said...

All the best india!!!

Unknown said...

Itho en vote ungaluku than!!!

Riyas said...

ஒக்கே,, தொடர்ந்து பார்ப்போம்..

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Anonymous said...

பாஸ் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டோனி சிறப்பாகவே செயற்பட்டார் ..அவர் இறுதி மூன்று போட்டிகளில் எடுத்த ஓட்டங்களாக 50,78,69

K.s.s.Rajh said...

@s.jaffer.khan

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@
s.jaffer.khan கூறியது...
Itho en vote ungaluku than!!/////

நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

@
Riyas கூறியது...
ஒக்கே,, தொடர்ந்து பார்ப்போம்./////

ஆமா பாஸ் தொடர்ந்து பார்ப்போம்

K.s.s.Rajh said...

@
Cpede News கூறியது...
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com/////

தகவலுக்கு நன்றி நான் உங்கள் தளத்தை பார்க்கின்றேன்

K.s.s.Rajh said...

@
கந்தசாமி. கூறியது...
பாஸ் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டோனி சிறப்பாகவே செயற்பட்டார் ..அவர் இறுதி மூன்று போட்டிகளில் எடுத்த ஓட்டங்களாக 50,78,69/////

ஆனால் கடந்த போட்டில் இதைவிட சிறப்பான இனிங்சைஆடியிருந்தார் அதான் அப்படி குறிப்பிட்டேன்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

நிரூபன் said...

கிரிக்கட் பதிவுக்கு நன்றி பாஸ்.

K.s.s.Rajh said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு

தேங்ஸ் பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
கிரிக்கட் பதிவுக்கு நன்றி பாஸ்/////

நன்றி பாஸ்

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails