Tuesday, October 18, 2011

ஒரு அறிவிப்பு,வேதனைகள்,நன்றிகள், வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கம் பதிவுலகில் நிரூபன் என்ற பெயர் அனேகமாக எல்லோறுக்கும் தெரிந்திருக்கும் நாற்று தளத்தின் ஓனர் பதிவுலகில் தன் எழுத்துக்களால் நிறைய வாசகர்களை கட்டிப்போட்டவர்..இவரின் பதிவுகள் பல்சுவையானவை பலதரப்பட்ட விடயங்களை கலந்து கட்டி பதிவுஎழுதுவதில் இவருக்கு நிகர் இவர்தான்.
நான் நினைக்கின்றேன் விளையாட்டு தவிர ஏனைய அனைத்து விடையங்களையும் இவர் தன் பதிவுகளின் ஊடாக அலசியிருக்கின்றார்.

நேற்று இவரது பதிவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்..இது இவரது வாசகர்களுக்கு நிச்சயம் மனவேதனையே



அவரின் அறிவிப்பு
பதிவுலகிலிருந்தும், உங்களிடமிருந்தும் விடை பெறலாம் என முடிவெடுத்துள்ளேன். டிசம்பர் மாதத்தின் பின்னர் பல் சுவைப் பதிவுகள் எழுதுவதனை நிறுத்தவுள்ளேன். ஈழ வயல் தொடர் மாத்திரம் டிசம்பர் மாதத்தின் பின்னர் என் வலையினூடாக  உங்களை நாடி வரும்.  என் வழமையான பின்னூட்டப் பணி எனக்கு நேரம் கிடைக்கும் சமயத்தில் நான் பதிவெழுதாத சந்தர்ப்பத்திலும் தொடரும் என்பதனையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

குறுகிய காலத்தினுள் பதிவுலகினுள் பல திசைகளை நோக்கி என்னைப் பயணிக்கச் செய்த (10 மாதங்களினுள்) உங்கள் அனைவரையும் தலை தாழ்த்தி வணங்குகிறேன். 
என் கூடவே இருந்து உறுதி தந்து பயணிக்க வைத்த உங்கள் அனைவருக்கும் இந் நேரத்தில் என் சிரம் தாழ்த்திய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 
எனக்கு எப்பொழுதும் பேராதரவு வழங்கும் உங்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து ஆனந்தக் கண்ணீரோடு இப் பதிவினை நிறைவு செய்கிறேன்!


இது இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதிவுலகைவிட்டு விலக எடுத்திருக்கும் முடிவு .ஆனாலும் இவரது வாசகர்கள் இவரது பல்சுவைப்பதிவுகளை இனி காணமுடியாதே.


தான் மட்டும் பதிவுலகில் வளர்ந்தால் போதாது சகபதிவர்களும் வளரவேண்டும் என்று சக பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை பதிவுலகில் ஓர் அங்கிகாரம் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் இவரது எண்ணம் போற்றுதலுக்குறியது அதற்கு சான்று இவர் பதிவுகளில் இடம் பெரும் பதிவர் அறிமுகம் பல புதிய பதிவர்கள் பற்றியும்,அவர்களின் வலைப்பதிவு பற்றியும் இவர் தன் பதிவின் கடைசியில் குறிப்பிடுவார்,இதனால் இவரது தளத்திற்கு வரும் வாசகர்கள்.அந்த புதிய பதிவர்களின் தளத்திற்கும் 
செல்ல வாய்ப்புண்டு..இது நிச்சயம் போற்றுதலுக்குறியதுதான்..


என் பதிவுலக பயணத்தில் என் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தவர்.
நான் பதிவுலகில் அடையாளம் காணப்படாமல் இருந்த போது என் சில கிரிக்கெட் பதிவுகள் மாத்திரம் ஹிட்டானது ஏனைய பதிவுகள் கண்டு கொள்ளப்படவில்லை அப்போது என் பாடசாலைக்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் நாயகன் முத்தையா முரளிதரனை நான் ஒரு முறை சந்தித்து இருந்தேன் அதை ஒரு பதிவாக எழுதினால் என்ன என்று எழுதினேன் குறிப்பிட்டுச்சொன்னால் பெரிதாக ஒருவரும் என் பதிவுகளை படிக்கவில்லை என்று கவலை அடைந்த நான் இந்த முரளிதரன் பற்றிய பதிவுடன் பதிவுலகில் இருந்து விடை பெற எண்ணியிருந்தேன்.


அந்தத்தொடரின் முதல் பகுதியில் தான் எனக்கு நிரூபன் அவர்களின் அறிமுகம் கிடைத்து..உன் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றது தொடர்ந்து கிரிக்கெட் மட்டும் எழுதாதே பலதரப்பட்ட விடயங்களை கலந்து கட்டி எழுது...பதிவுலகில் நீ ஒரு இடத்துக்கு நிச்சயம் வருவாய் என்று என்னை ஊக்கப்படுத்தி பல ஆலோசனைகளை வழங்கினார்.


பதிவர் லோஷன் அண்ணாவின் கிரிக்கெட் பதிவுகளில் கவரப்பட்டு நானும் எனக்கு தெரிந்த கிரிக்கெட் விடயங்களை எழுதவேண்டும் என்றுதான் நான் பதிவுலகில் வந்தேன் ஆனால் எனக்கு பதிவுலகம் பற்றி ஓன்றும் தெரியாது..இதனால் நான் பதிவுலகில் அடையாளம் காணப்படாமலே இருந்தேன்.அந்த நேரத்தில் 
 நிரூபன் அவர்களின் ஆலோசனைகள் என் பதிவுலக வளசிசியில் பெரும் பங்காற்றியது.




அதற்காக அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.இதை என் 100வது பதிவில் சொல்லாம் என்று இருந்தேன் ஆனால் நேற்றய இவரின் முடிவால் இதில் சொல்கின்றேன்
நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும்.என் தனிப்பட்டரீதியாகவும் அவருக்கு மனமார்ந்த நன்றிகள்




அத்தோடு
நிரூபன் பாஸ் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக இருக்கின்றார் அவருக்கு நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றது.


அவரின் பல்சுவைப்பதிவுகளை இனிபடிக்கமுடியாது என்று கவலையடையும்..அவரின் பல வாசகர்கள் போலவே நானும் ஒரு வாசகனாக..
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

Post Comment

69 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

எங்கிருந்தாலும் சிறப்புடன் வாழ்க ......மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு ......

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நிருபனின் சேவை நமக்கு தேவை. அவர் ஒதுங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நிருபனின் முடிவால் மனமுடைந்த ஒரு வாசகன்.

செங்கோவி said...

நிரூபனின் முடிவு, நமக்குப் பேரிழப்பு தான். யாருக்கும் என்ன பிரச்சினை என்றாலும் ஓடோடி வந்து, உதவும் நல்ல எண்ணம் உள்ளவர் அவர்.

செங்கோவி said...

கல்விக்காகவும், கலியாணத்திற்காகவுமே விலகுவதாக அவர் சொல்வதால், வாழ்த்தி வழியனுப்புவதைத் தவிர ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவரது இயல்பிற்கு, எங்கிருந்தாலும் நன்றாகவே இருப்பார். வாழ்க வளமுடன்.

பால கணேஷ் said...

நிரூபனை வாழ்த்தி வழியனுப்புவோம். காலம் கனிந்தால் மீண்டும் நம்முடன் இணைவார் என்ற நம்பிக்கையுடன்...

சம்பத்குமார் said...

நண்பர் நீருபனின் அடுத்தகட்ட வாழ்க்கை சீரோடும் சிறப்போடும் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்

M.R said...

ஆமாம் நண்பரே , நானும் வாசித்தேன்.
நம் குடும்பத்தில் ஒருவர் பிரிந்து போவது போல உள்ளது .இருந்தாலும் நண்பர் செங்கோவி சொல்வது போல காரணம் என்றால் நாம் அவரை வாழ்த்தி அனுப்புவோம். அவருக்கு பின்னாலில் நேரம் இருந்தால் நம்முடன் தொடர்பு வைக்கட்டும் .

இங்கும் சொல்கிறேன் நிரூபா வாழ்த்துக்கள்.ஒய்வு கிடைக்கும் பொழுது வாருங்கள் ,எங்களை தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள்.

வேதனையுடன்
ரமெஷ்

தனிமரம் said...

நீங்கள் நன்றியைச் சொல்லி விட்டீர்கள் தனிமரம் இன்னும் சில வாரங்களில் சொல்ல இருந்தேன் அதற்குள் சில மாற்றங்கள் ம் !
நிரூபன் பதிவுலகில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்  அவரின் வெளியேறல் ஒரு வாசகனாக நண்பனாக எனக்கும் வருத்தும் அளிக்கின்றது!

Unknown said...

அவருடைய முடிவு வருத்தம் என்றாலும் அவரை வாழ்த்தி வழி அனுப்புவது நம் கடமை அவர் விரைவில் நம்மை பதிகள் மூலம் சந்திப்பார் என்ற நம்பிக்கையில்

K.s.s.Rajh said...

@இராஜராஜேஸ்வரி

உங்கள் வாழ்த்துக்கள் அவரைச்சென்று அடையட்டும்.நன்றி சகோதரி

தனிமரம் said...

தனிமரத்தின் வளர்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து ஹேமா,சிவா,நிரூபன் போன்றோரின் உதவியால் தான் நானும் பலரிடம் அறிமுகம் ஆனது அந்தவகையில் நிரூபனுடன் அவர்சார்ந்த பதிவுகளில் முட்டிமோதி கருத்துக்கள் மூலம் அதிக நட்பாக இருந்த எனக்கு அவர் செய்த உதவிகள் மறக்க முடியாதவை! 
ஒரு சகோதரனாக சகபதிவாளனாக அவரின் அடுத்த கட்ட வாழ்க்கை சுபீட்ச்சமாக இருக்க நானும் வாழ்த்துகின்றேன்!

K.s.s.Rajh said...

@அம்பாளடியாள்
///// அம்பாளடியாள் கூறியது...
எங்கிருந்தாலும் சிறப்புடன் வாழ்க ......மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு ./////

நன்றி மேடம் உங்கள் வாழ்த்துக்கள் அவரைச்சென்று அடையட்டும்

K.s.s.Rajh said...

@Dr. Butti Paul
////
நிருபனின் சேவை நமக்கு தேவை. அவர் ஒதுங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நிருபனின் முடிவால் மனமுடைந்த ஒரு வாசகன்/////

உண்மைதான் டாக்டர் ஒரு வாசகனாக எனக்கும் மிகுந்த கஸ்டமாக இருக்கின்றது

தனிமரம் said...

தனிமரம் நேசன் என்றும் அவருடன் கூடவரும் ஒரு வாசகன் இதை வேதனையுடன் கூறிக்கொள்கின்றேன்!
நிரூபன் எனக்கு பதிவுலகில் ஒரு குரு!

K.s.s.Rajh said...

@செங்கோவி
////
செங்கோவி கூறியது...
நிரூபனின் முடிவு, நமக்குப் பேரிழப்பு தான். யாருக்கும் என்ன பிரச்சினை என்றாலும் ஓடோடி வந்து, உதவும் நல்ல எண்ணம் உள்ளவர் அவர்////

/////கல்விக்காகவும், கலியாணத்திற்காகவுமே விலகுவதாக அவர் சொல்வதால், வாழ்த்தி வழியனுப்புவதைத் தவிர ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவரது இயல்பிற்கு, எங்கிருந்தாலும் நன்றாகவே இருப்பார். வாழ்க வளமுடன்.//////

ஆமா பாஸ் மிகுந்த நல்ல மனம் படைத்த அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள் சென்றுசேரட்டும்

K.s.s.Rajh said...

@கணேஷ்
/////
கணேஷ் கூறியது...
நிரூபனை வாழ்த்தி வழியனுப்புவோம். காலம் கனிந்தால் மீண்டும் நம்முடன் இணைவார் என்ற நம்பிக்கையுடன்./////

உங்கள் வாழ்த்து அவரைச்சென்று சேரட்டும்

K.s.s.Rajh said...

@சம்பத்குமார்
////
சம்பத்குமார் கூறியது...
நண்பர் நீருபனின் அடுத்தகட்ட வாழ்க்கை சீரோடும் சிறப்போடும் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்//////

நன்றி பாஸ் உங்கள் வாழ்த்துக்கள் அவரைச்சென்று சேரட்டும்

K.s.s.Rajh said...

@M.R
/////ஆமாம் நண்பரே , நானும் வாசித்தேன்.
நம் குடும்பத்தில் ஒருவர் பிரிந்து போவது போல உள்ளது .இருந்தாலும் நண்பர் செங்கோவி சொல்வது போல காரணம் என்றால் நாம் அவரை வாழ்த்தி அனுப்புவோம். அவருக்கு பின்னாலில் நேரம் இருந்தால் நம்முடன் தொடர்பு வைக்கட்டும் .

இங்கும் சொல்கிறேன் நிரூபா வாழ்த்துக்கள்.ஒய்வு கிடைக்கும் பொழுது வாருங்கள் ,எங்களை தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள்.

வேதனையுடன்
ரமெஸ்/////

ஆம் நண்பரே அவரை வாழ்த்தி அனுப்புவோம்

K.s.s.Rajh said...

@தனிமரம்
நன்றாக சொல்லியுள்ளீர்கள் நேசன் அண்ணா.
பதிவுலகில் பலரின் வளர்ச்சியில் நிரூபன் பாஸ் உடைய பங்கு அளப்பெரியது..அவரை வாழ்த்து அனுப்புவோம்...ஒரு வாசகனாக நிறையவே நாங்கள் மிஸ்பண்ணுகின்றோம்.

K.s.s.Rajh said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

ஆம் பாஸ் வாழ்த்தி அனுப்புவோம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நிரூபனின் இந்த முடிவு அவரின் முன்னேற்றத்துக்கு தான். ஆனால் நமக்கு அவரின் பதிவுகள் கிடைக்காமல் போவது வருத்தமே....

சென்னை பித்தன் said...

தனித்துவம் மிக்க ஒரு பதிவர் விலகுவது வேதனைதான் என்றாலும் அவரது சொந்தக்காரணங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.அவருக்கு என் வாழ்த்துகள்.நல்வாழ்வு அமையட்டும்.

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி
பதிவை வாசித்தேன் ஒரு காத்திரமான படைப்பாளி எங்கள் நிரூபன்..

நாங்கள் எல்லாம் அவர் சேர்த்து வைத்த சொத்தைத்தானே அனுபவிக்கிறோம்(அவர் சேர்த்து வைத்த வாசகர் வட்டத்தை சொல்கிறேன்..)நிரூபனின் வாசகர் வட்டத்துக்குள் இருப்பவர்களை அவர் மதிக்கும் விதமே அலாதியானது (இந்த நிரூபனின் அண்ணேக்கு அவர் பதிவுலகில் செய்த உதவிகளை மறக்கமுடியாது)அவரின் சில பதிவில் கருத்து மோதல் வந்தால் அவர் அதை எடுத்துக்கொள்ளும் விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது(அடுத்த நாள் லைன்ல வந்து அண்ணே நிக்கிறீங்களான்னு என்னை சொந்த அண்ணன் போல் பழகுவார்) அவர் பதிவுலகில் இருப்பார் இந்த மொய்க்கு மொய் என்னும் வட்டத்துக்குள் இருந்து மீண்டு வரவேண்டுகிறேன் அவரின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு ஒரு அண்ணனாக எனது வாழ்த்துக்களும் ஆசிகளும் எப்போதுமே இருக்கும்... நன்றியுடன் நிரூபனின் அண்ணே!!!(உங்கட மாமா)

காட்டான் said...

என்ன நேசன் நிரூபன் உங்கட குருவா..!!!?? அப்ப நான் ஒத்துக்கொள்கிறேன் வாத்தியார் பிள்ளை மக்கு என்னும் பழமொழியை.. ஹி ஹி ஹி

SURYAJEEVA said...

அவர் தான் ஈழ வயல் பற்றி தொடர்ந்து எழுதுவேன்னு சொல்லிட்டாறேப்பா, அப்புறம் எதுக்கு கண்ணீர் விடறீங்க... புரியலையே

K.s.s.Rajh said...

@suryajeeva
////
suryajeeva கூறியது...
அவர் தான் ஈழ வயல் பற்றி தொடர்ந்து எழுதுவேன்னு சொல்லிட்டாறேப்பா, அப்புறம் எதுக்கு கண்ணீர் விடறீங்க... புரியலையே/////

அப்படியில்லை நண்பா அவரது பல்சுவைப்பதிவுகள் சுவாரஸ்யமானவை.அதை மிஸ்பண்ணுகின்றோம்

Unknown said...

நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்

kaialavuman said...

வித்யாசமானத் தலைப்புகளால் கவர்ந்திழுப்பாரே!!! ஈழம் பற்றிய பல அறிய தகவல்கள் தந்துள்ளார் (ஈழவயல் தொடரும் என்று கூறியுள்ளாரே நல்லது).

Yoga.S. said...

வணக்கம்! நானும் பார்த்தேன்.அவர் ஒன்றும் எங்களை மறந்துவிட மாட்டார்.அவரே சொல்லியிருக்கிறாரே,பதிவுகள் வராது,ஆனால் கருத்துக்கள் தொடருமென்று?அதுவும் முன்னேறுவதற்காகத் தானே கைவிடுகிறார்?

Anonymous said...

சகோ நிரு நீங்கள் ஒதுங்க விரும்பினாலும் இந்தப் பதிவுலகம் உங்களை எழுதாமல் இருக்க விடாது. எழுத்தாளர் என்பது எப்பொழுதுமே ஒற்றையடிப்பாதை.இங்கு வந்துவிட்டால் எழுதினால் தான் ஆத்ம திருப்தியுடன் அன்று இரவு நாம் தூங்கலாம்.எழுதாவிட்டால் அது நரகத்தில் உழல்வது போலவே இருக்கும்.உங்களைப்போலவே இம்முடிவை நானும் ஏற்கனவே எடுத்து அதை பின் கைவிட்ட அனுபவசாலி.

Mohamed Faaique said...

நிரூபன் ப்திவுலகை விட்டு போக மாட்டார்...(இன்ஷா அல்லாஹ்)

ஆமா.... அடுத்த கட்டம்’னா என்ன’னு கொஞ்சம் தெளிவா சொல்ல வேணாமா??? நம்மள மாதிரி ச்சின்ன பசங்களுக்கு புரியுர மாதிரி

குறையொன்றுமில்லை. said...

நிரூபனை வாழ்த்தி வழி அனுப்புவோம்.எங்கிருந்தாலும் வாழ்க.

K.s.s.Rajh said...

@Mohamed Faaique

மேல செங்கோவி பாஸ் கமண்ட்ல சொல்லியிருக்கார் பாருங்க...

அம்பலத்தார் said...

நிரூபன் போன்றவர்களின் ஆற்றல் வீணாக முடங்கிப்போய்விடக்கூடாது. அவர்தனது எதிர்காலத்திற்கும் தனது குடும்பத்திற்கும் தேவையான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு சீரும் சிறப்புமாக வாழவேண்டும். ஆயினும் அதேநேரத்தில் சிறிதளவாவது தனது பதிவுலக ரசிகர்களுக்காகவும் ஒதுக்குவார் என எண்ணுகிறேன்.

வலையுகம் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

இங்கு வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

ம.தி.சுதா said...

என்னைப் பொறுத்தவரைக்கம் உறுதியாகச் சொல்ல மடியும் நிருபனால் இங்கிருந்து விலத்த முடியாது...

இது ஒரு போதை விடப் போறம் விடப் போறம் என்று சொன்னாலும் விடாது.. உதாரணத்திற்கு பல பதிவர்கள் இருக்கிறார்கள் நான் உட்பட...

பலருக்கு பல உதவிகள் செய்த நிருபன் என்றும் சாதிப்பார்...

நிரூபன் said...

அனைவருக்கும் வணக்கம்
எல்லோரும் நலமா இருக்கிறீங்களா?

நிரூபன் said...

பதிவுலகில் நிரூபன் என்ற பெயர் அனேகமாக எல்லோறுக்கும் தெரிந்திருக்கும் நாற்று தளத்தின் ஓனர் பதிவுலகில் தன் எழுத்துக்களால் நிறைய வாசகர்களை கட்டிப்போட்டவர்.//

ஹே..ஹே...
கிழிஞ்சுது...
எங்கே கட்டிப் போட்டனான்..

என்ன ஜெயிலுக்கையா போட்டிருக்கேன்.

ஹே...

நிரூபன் said...

நேற்று இவரது பதிவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்..இது இவரது வாசகர்களுக்கு நிச்சயம் மனவேதனைய//

அதுக்காக பதிவெல்லாம் போடுறீங்களா...

உங்கள் அனைவரின் அன்பும் என்னைப் புல்லரிக்கச் செய்கிறது.

நிரூபன் said...

என் பதிவுலக பயணத்தில் என் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருந்தவர்.
நான் பதிவுலகில் அடையாளம் காணப்படாமல் இருந்த போது என் சில கிரிக்கெட் பதிவுகள் மாத்திரம் ஹிட்டானது ஏனைய பதிவுகள் கண்டு கொள்ளப்படவில்லை//

கொஞ்சம் பச்சத் தன்ணீர் குடித்திட்டு வந்து பேசு மச்சி..

உன்னோட வளர்சிக்கு காரணம் நனா?
என்னய்யா....

நான் ஏதோ ஒரு சில ஐடியாக்களைச் சொன்னேன்.
உழைப்பும், உள உரதோடு செயற்பட்டு முன்னேறியதும் உங்கள் வேலை..

ஹே...ஹே...
ஆமா எம்புட்டுத் தூரம் வளர்ந்திட்டீங்க.
வீட்டுக் கூரைக்கு மேல இருக்கிற மாங் கொப்பை எட்டிப் பிடிக்கிற அளவிற்கு?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

அதற்காக அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.இதை என் 100வது பதிவில் சொல்லாம் என்று இருந்தேன் ஆனால் நேற்றய இவரின் முடிவால் இதில் சொல்கின்றேன்//

இதுக்கெல்லாம் நன்றியா.

போ மச்சி....
எனக்கு சர்ண்யா கூட ஒரு படம் எடுக்கனும்
அதுக்கு ஏதாவது பண்ணு..

ஹே...

நிரூபன் said...

அத்தோடு
நிரூபன் பாஸ் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக இருக்கின்றார் அவருக்கு நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றது.//

ஆமா அதென்ன வாழ்க்கையின் அடுத்த கட்டம்?

நான் என்ன ஜெயிலுக்கா போறேன்.

ஹே....

நிரூபன் said...

அத்தோடு
நிரூபன் பாஸ் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போக இருக்கின்றார் அவருக்கு நண்பர்கள் தளம் சார்பாகவும் அதன் வாசகர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றது.//

வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கெல்லாம் வயசாகலை பாஸ்...

நான் இன்னும் சின்னப் பையன்,
நம்புங்கப்பா.

நிரூபன் said...

@

இராஜராஜேஸ்வரி கூறியது...
நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்//

நன்றி அம்மா.

நிரூபன் said...

@

அம்பாளடியாள் கூறியது...
எங்கிருந்தாலும் சிறப்புடன் வாழ்க ......மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு .....//

நன்றி அக்கா.

நிரூபன் said...

Dr. Butti Paul கூறியது...
நிருபனின் சேவை நமக்கு தேவை. அவர் ஒதுங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நிருபனின் முடிவால் மனமுடைந்த ஒரு வாசகன்//

அண்ணே, மனமுடைந்து மதில் மேற ஏறி நின்றிடாதீங்க.

நான் எப்பவும் உங்க கூடத் தான் இருப்பேன்.
பிரிவெல்லாம் நிரந்தரம் இல்லைத் தானே.

நிரூபன் said...

செங்கோவி கூறியது...
நிரூபனின் முடிவு, நமக்குப் பேரிழப்பு தான். யாருக்கும் என்ன பிரச்சினை என்றாலும் ஓடோடி வந்து, உதவும் நல்ல எண்ணம் உள்ளவர் அவர்//

என்னய்யா பேரிழப்பு,
நான் என்ன ஆர்மியில இருக்கேனா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி பாஸ்.

நிரூபன் said...

செங்கோவி கூறியது...
கல்விக்காகவும், கலியாணத்திற்காகவுமே விலகுவதாக அவர் சொல்வதால், வாழ்த்தி வழியனுப்புவதைத் தவிர ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அவரது இயல்பிற்கு, எங்கிருந்தாலும் நன்றாகவே இருப்பார். வாழ்க வளமுடன்.//

கலியாணத்திற்காக விலகுறேனா...

எங்கேயப்பா இது சொன்னேன்.

நல்லாத் தான் புனையுறாங்க நம்மாளுங்க.

நிரூபன் said...

கணேஷ் கூறியது...
நிரூபனை வாழ்த்தி வழியனுப்புவோம். காலம் கனிந்தால் மீண்டும் நம்முடன் இணைவார் என்ற நம்பிக்கையுடன்..//

நன்றி அண்ணே.

நிரூபன் said...

சம்பத்குமார் கூறியது...
நண்பர் நீருபனின் அடுத்தகட்ட வாழ்க்கை சீரோடும் சிறப்போடும் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார//

யாரப்பா எனக்கு கலியாணம் என்ற ஒரு புரளியைக் கிளப்பி விட்டது.

முடியலையே

உங்கள் அன்பிற்கு நன்றி பாஸ்.

நிரூபன் said...

M.R கூறியது...
ஆமாம் நண்பரே , நானும் வாசித்தேன்.
நம் குடும்பத்தில் ஒருவர் பிரிந்து போவது போல உள்ளது .இருந்தாலும் நண்பர் செங்கோவி சொல்வது போல காரணம் என்றால் நாம் அவரை வாழ்த்தி அனுப்புவோம். அவருக்கு பின்னாலில் நேரம் இருந்தால் நம்முடன் தொடர்பு வைக்கட்டும் .

இங்கும் சொல்கிறேன் நிரூபா வாழ்த்துக்கள்.ஒய்வு கிடைக்கும் பொழுது வாருங்கள் ,எங்களை தொடர்பை வைத்துக் கொள்ளுங்கள்.

வேதனையுடன்
ரமெஷ்//


அண்ணே நான் உங்க கூடத் தான் இருப்பேன்.

உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி அண்ணே.

நிரூபன் said...

தனிமரம் கூறியது...
நீங்கள் நன்றியைச் சொல்லி விட்டீர்கள் தனிமரம் இன்னும் சில வாரங்களில் சொல்ல இருந்தேன் அதற்குள் சில மாற்றங்கள் ம் !
நிரூபன் பதிவுலகில் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் அவரின் வெளியேறல் ஒரு வாசகனாக நண்பனாக எனக்கும் வருத்தும் அளிக்கின்றது!//


உங்களுக்கும் வருத்தமா?
ஒரு பனடோல் பாக்கட்டை வாங்கி அனுப்பிடுறேன்.
கவலைப்படாதீங்க பாஸ்..
உங்கள் அன்பிற்கு நன்றி.

நிரூபன் said...

தமிழ்வாசி - Prakash கூறியது...
நிரூபனின் இந்த முடிவு அவரின் முன்னேற்றத்துக்கு தான். ஆனால் நமக்கு அவரின் பதிவுகள் கிடைக்காமல் போவது வருத்தமே...//

வருத்தப்பட வேணாம் பாஸ்,

வாரத்திற்கு இரண்டு பதிவாச்சும் போட்டிடுவம் இல்லே..

நன்றி பாஸ்.

நிரூபன் said...

சென்னை பித்தன் கூறியது...
தனித்துவம் மிக்க ஒரு பதிவர் விலகுவது வேதனைதான் என்றாலும் அவரது சொந்தக்காரணங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.அவருக்கு என் வாழ்த்துகள்.நல்வாழ்வு அமையட்டும்.//

நன்றி ஐயா..

நிரூபன் said...

காட்டான் கூறியது...
வணக்கம் ராசுக்குட்டி
பதிவை வாசித்தேன் ஒரு காத்திரமான படைப்பாளி எங்கள் நிரூபன்..

நாங்கள் எல்லாம் அவர் சேர்த்து வைத்த சொத்தைத்தானே அனுபவிக்கிறோம்(அவர் சேர்த்து வைத்த வாசகர் வட்டத்தை சொல்கிறேன்..)நிரூபனின் வாசகர் வட்டத்துக்குள் இருப்பவர்களை அவர் மதிக்கும் விதமே அலாதியானது (இந்த நிரூபனின் அண்ணேக்கு அவர் பதிவுலகில் செய்த உதவிகளை மறக்கமுடியாது)அவரின் சில பதிவில் கருத்து மோதல் வந்தால் அவர் அதை எடுத்துக்கொள்ளும் விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது(அடுத்த நாள் லைன்ல வந்து அண்ணே நிக்கிறீங்களான்னு என்னை சொந்த அண்ணன் போல் பழகுவார்) அவர் பதிவுலகில் இருப்பார் இந்த மொய்க்கு மொய் என்னும் வட்டத்துக்குள் இருந்து மீண்டு வரவேண்டுகிறேன் அவரின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு ஒரு அண்ணனாக எனது வாழ்த்துக்களும் ஆசிகளும் எப்போதுமே இருக்கும்... நன்றியுடன் நிரூபனின் அண்ணே!!!(உங்கட மாமா//

மாம்ஸ் இப்படி ஓர் அபிப்பிராயமா உங்களிடம் என்னைப் பற்றி..
மிக்க நன்றி மாம்ஸ்.

புல்லரிக்கிறது.
முடிந்த வரை கூடவே இருக்கப் பார்க்கிறேன்.

நிரூபன் said...

suryajeeva கூறியது...
அவர் தான் ஈழ வயல் பற்றி தொடர்ந்து எழுதுவேன்னு சொல்லிட்டாறேப்பா, அப்புறம் எதுக்கு கண்ணீர் விடறீங்க... புரியலையே//

அது!!!!!!!!!!!!!!!!!!!

நிரூபன் said...

விக்கியுலகம் கூறியது...
நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணே.

நிரூபன் said...

கூகிள்சிறி கூறியது...
சகோ நிரு நீங்கள் ஒதுங்க விரும்பினாலும் இந்தப் பதிவுலகம் உங்களை எழுதாமல் இருக்க விடாது. எழுத்தாளர் என்பது எப்பொழுதுமே ஒற்றையடிப்பாதை.இங்கு வந்துவிட்டால் எழுதினால் தான் ஆத்ம திருப்தியுடன் அன்று இரவு நாம் தூங்கலாம்.எழுதாவிட்டால் அது நரகத்தில் உழல்வது போலவே இருக்கும்.உங்களைப்போலவே இம்முடிவை நானும் ஏற்கனவே எடுத்து அதை பின் கைவிட்ட அனுபவசாலி.
//

நன்றி பாஸ்.,
யோசிப்போம்.

நிரூபன் said...

Mohamed Faaique கூறியது...
நிரூபன் ப்திவுலகை விட்டு போக மாட்டார்...(இன்ஷா அல்லாஹ்)

ஆமா.... அடுத்த கட்டம்’னா என்ன’னு கொஞ்சம் தெளிவா சொல்ல வேணாமா??? நம்மள மாதிரி ச்சின்ன பசங்களுக்கு புரியுர மாதிர//

அது தான் பாஸ் எனக்கும் புரியலை.
நான் சொன்ன கல்வி படிப்பு என்ற காரணத்தை விட கல்யாணம் என்றோர் புரளியைக் கிளப்பி விட்டிருக்காங்கப்பா.

முடியலை...

நன்றி பாஸ்.

நிரூபன் said...

Lakshmi கூறியது...
நிரூபனை வாழ்த்தி வழி அனுப்புவோம்.எங்கிருந்தாலும் வாழ்க.//

நன்றி பாஸ்..

நிரூபன் said...

அம்பலத்தார் கூறியது...
நிரூபன் போன்றவர்களின் ஆற்றல் வீணாக முடங்கிப்போய்விடக்கூடாது. அவர்தனது எதிர்காலத்திற்கும் தனது குடும்பத்திற்கும் தேவையான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு சீரும் சிறப்புமாக வாழவேண்டும். ஆயினும் அதேநேரத்தில் சிறிதளவாவது தனது பதிவுலக ரசிகர்களுக்காகவும் ஒதுக்குவார் என எண்ணுகிறேன்//

நன்றி ஐயா...
யோசிக்கிறேன்.

நிரூபன் said...

ஹைதர் அலி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே//

நன்றி பாஸ்.

நிரூபன் said...

ஹைதர் அலி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே//

நன்றி பாஸ்.

நிரூபன் said...

ஹைதர் அலி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே//

நன்றி பாஸ்.

நிரூபன் said...

@♔ம.தி.சுதா♔

என்னைப் பொறுத்தவரைக்கம் உறுதியாகச் சொல்ல மடியும் நிருபனால் இங்கிருந்து விலத்த முடியாது...

இது ஒரு போதை விடப் போறம் விடப் போறம் என்று சொன்னாலும் விடாது.. உதாரணத்திற்கு பல பதிவர்கள் இருக்கிறார்கள் நான் உட்பட...

பலருக்கு பல உதவிகள் செய்த நிருபன் என்றும் சாதிப்பார்...//

காலம் நேரம் தான் இதனைத் தீர்மானிக்க வேண்டும்
உங்கல் அன்பிற்கு நன்றி மச்சி.

நிரூபன் said...

பாசத்திற்கும், நேசத்திற்கும் உரிய உறவுகளே,
உங்கள் அன்பும், ஆதரவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

வாரத்தில் என்னால் முடிந்தால் இரு பதிவுகளாவது எழுதி உங்களோடு இணைந்திருக்க முயற்சி செய்கிறேன்.

இப் பதிவினூடாகவும், தனிப்பட்ட முறையிலும், பேஸ் புக், மின்னஞ்சல் வாயிலாகவும் உங்களின் பேராதரவினையும், அன்பினையும் என் மீதுள்ள உங்களின் எதிர்பார்ப்பினையும் வெளிப்படுத்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் இரு கரம் கூப்பிய சிரம் தாழ்த்திய நன்றிகளை மாத்திரம் காணிக்கையாக்குகிறேன்.

Riyas said...

நிரூபனின் எழுத்துக்களை ரசிப்பதில் நானும்.. அவரின் அடுத்த கட்ட பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..

நேரம் கிடைக்கும் போது பதிவுகள் எழுதுங்கள் நிரூபன்..

பிளாக் மட்டும் வாழ்க்கையல்ல, இருந்தாலும் பிளாக்கையும் வாழ்க்கையில் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டு விட்டோம்..

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails