Monday, January 02, 2012

சச்சினின் 100வது சதம் வரும் ஆனா வராது வடிவேல் காமடி போல் ஆகிவிட்டது

கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்த ஜாம்பவான் சச்சினின் 100வது சதம் இப்போது வடிவேல் காமடி போல் ஆகிவிட்டது.வரும் ஆனா வராது.
சச்சின் கடந்த வருடம் நடை பெற்ற உலகக்கிண்ண போட்டிகளின் போது தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மார்ச் 12 அன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 48 வது சதத்தை விளாசினார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் 51 சதம் அடித்துள்ளார் எனவே இரண்டையும் சேர்த்து சர்வதேச போட்டிகளில் அவரின் 99வது சதமாக இது அமைந்தது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)

அதுக்கு பிறகு சச்சினின் 100வது சதம் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சச்சின் 100வது சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்கப்பட்டது.பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி சொல்லியிருந்தார் சச்சினை 100வது சதம் அடிக்க விடமாட்டோம் என்று அப்ரிடி சொன்ன மாதிரியே நடந்தது சச்சினால் சதம் அடிக்க முடியவில்லைஇது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)
வரும் ஆனா வராது

அதன் பின் உலகக்கோப்பை இறுதிபோட்டி சச்சினின் சொந்த இடமான மும்பையில் இலங்கைக்கு எதிராக நடை பெற்ற போது சச்சினின் 100வது சதம் பெரிது எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த போட்டியிலும் சச்சின் ஏமாற்றிவிட்டார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)
இப்படியாக சச்சினின் 100வது சதம் மீதான எதிர் பார்பு ரசிகர்களிடன் அதிகரிக்க.உலகக்கோப்பைக்கு பிறகு நடை பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிடான தொடரில் சச்சின் கலந்து கொள்ளவில்லை அடுத்து இங்கிலாந்தில் நடை பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போதும் சச்சினால் சதமம் அடிக்க முடியவில்லை இதன் போது ஒரு முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்தும் சதம் பெற முடியாமல் ஆட்டம் இழந்தார்.

இப்படி சச்சின் 100வது சதம் மீதான எதிர்பார்பு அதிகரிக்க 
மீண்டும் இந்தியாவில் மேற்கிந்த தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் 94 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்து 6 ஓட்டங்களினால் மீண்டும் தனது 100வது சதத்தை தவறவிட்டார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)
தற்போது அவுஸ்ரேலியாவில் நடை பெற்றுவரும் டெஸ்ட் தொடரில் சச்சின் 100வது சதம் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பியது. முதல் போட்டியில் முதல் இனிங்சில் சச்சின் சிறப்பாக அதிரடியாக ஆடினார்.ஆனால் மீண்டும் 73 ஓட்டங்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்.இப்படியாக பல மாதங்கள் சச்சின் தனது 100வது சதம் பெற தடுமாறி வருகின்றார்.


நாளை நடை பெறும்(3/1/2012) அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்பு மீண்டும் கிளம்பியுளது நாளைய போட்டி நடை பெறும் சிட்னி மைதானம் சச்சினுக்கு மிகவும் பிடித்த மைதானம் என்று அவரே சொல்லியிருக்கின்றார். இங்கே சச்சின் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு இரட்டை சதமும் இரண்டு சதங்களும் அடித்துள்ளார். எனவே நாளைய போட்டியில் சச்சின் தனது 100வது சதத்தை இங்கே அடிக்க சந்தர்ப்பம் உண்டு.

அண்மைக்காலமாக முக்கிய போட்டிகல் தவிர ஏனைய ஒரு நாள் போட்டிகளில் சச்சினுக்கு ஓய்வு வழங்கப்பட்டு வருகின்றது ஆனால் சச்சினுக்கு தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் ஒய்வு வழங்காமல் வாய்ப்பு கொடுத்தால் அவர் இன்னும் இரண்டு சதங்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு நாள் போட்டிகளிலும் 50 சதம் அடித்த முதல் வீரராக சாதனை படைக்க வாய்புள்ளது.அவ்வாறு ஒரு நாள் போட்டிகளிலும் சச்சின் 50 சதம் அடிக்கும் பட்சத்தில் ஒரு நாள் போட்டிகள்,டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 50 சதம் அடித்த வீரராக சாதனை படைப்பார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)
எது எப்படியோ சச்சின் 100வது சதம் அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்பு எல்லோறிடமும் இருப்பது சச்சினுக்கு நெருக்கடிதான் அவரும் ஒரு சராசரி மனிதன் தானே அவர் மேல் அதிகளவான எதிர்பார்ப்பு இருக்கும் போது அவருக்கு நெருக்கடி வரத்தானே செய்யும்.


சச்சின் சத்தம் இல்லாமல் இன்னும் ஒரு சாதனையையும் நெருங்கி வருகின்றார் அதாவது இதுவரை சச்சின் 185 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் இன்னும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பட்சத்தில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரராக சாதனை படைப்பார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)
சச்சின் மீது அதிக எதிர்பார்பு வைத்து அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க கூடாது.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதப்பட்ட பதிவு (www.nanparkal.com)

அந்த வகையில் தவறி வரும் அவரது 100வது சதம் நாளை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அடிப்பாரா? முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்து வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் வெல்லுமா?  பொறுத்திருந்து பார்ப்போம்.
நான் தனிப்பட்ட ரீதியில் சச்சினின் ரசிகன் இல்லை ஆனாலும் ஒரு கிரிக்கெட் ரசிகனாக அவரது சாதனையைக் காண ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றேன்.

படங்கள்-கூகுள்

Post Comment

13 comments:

பால கணேஷ் said...

ஒரு இந்தியர் படைக்கும் உலக சாதனை என்ற வகையில் சச்சினின் ரசிகரோ ரசிகர் அல்லாதவரோ அந்த 100வது 100க்காக ஆவலுடன் தான் காத்திருக்கிறார்கள். அந்த ஆவல் பூர்த்தியாக வேண்டும் என நானும் வாழ்த்துகிறேன் ராஜ்!

மகேந்திரன் said...

ஒரு புதிய சாதனையை சச்சின் நிகழ்த்திக் காட்டட்டும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் அவருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

நிச்சயமாக சதம் அடிப்பார் ! வாழ்த்துவோம் ! நன்றி நண்பரே !

Unknown said...

இனிய ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

Yoga.S. said...

வணக்கம் ராஜ்! ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!(முன்பே சொல்லி விட்டேனா தெரியவில்லை.)கிரிக்கட்டில் ஆர்வமில்லை,எனினும் உங்கள் ஆசைக்காக சச்சின் சதம்?!(ரூபா கிடையாதா?ஹி!ஹி!ஹி!)அடிக்க இறைவன் அருளை வேண்டுகிறேன்!

Anonymous said...

நானும் சச்சினின் சதத்தை எதிர்நோக்குகிறேன். பார்க்கலாம் அடிபாரனு.....

காட்டான் said...

வணக்கம் ராசுக்குட்டி..!
என்னது சதம் எடுப்பரா? ஏன்யா நான் கேள்விப்பட்டவரை அவர் கோடீஸ்வரனாமே..!!ஹி ஹி ஹி

M.R said...

சதம் எடுப்பார் என நம்புவோம் நண்பா

த.ம 8

சென்னை பித்தன் said...

நன்று.

நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

Riyas said...

Good.. Keep going wel, Sachin will may Complete 100th in Australia.. Hope!

சுதா SJ said...

மச்சி.... நான் என்னத்த சொல்ல???? அவ்வ்வ்வ்

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

நிரூபன் said...

வணக்கம் மச்சான் சார்,
அடுத்த ஆஷஸ் போட்டியில் சச்சின் நிச்சயமாக சதம் அடிப்பார் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails