Tuesday, January 24, 2012

வை திஸ் கொலை வெறி டி?


உன்னை பார்த நொடியில்
தொலைந்துவிட்டேன்
என்று பொய் சொல்ல முடியவில்லை!
ஆம் நான் இறந்தே விட்டேன்.


அழகு என்றால் என்ன?
ஆண்டவனிடம் கேட்டேன்
அவன் உன்னைக்காட்டினான்
அவ்வளவு அழகா நீ

தெரியவில்லையே எனக்கு!
எப்படி தெரியும்?
உயிரற்றவனுக்கு ஏது பார்வை?

என் மனம் உன்னிடம் 
ஆனால் உன் மனமோ வெற்றிடம்
அதை எப்போ தருவாய் என்னிடம்?

விடை தெரியாத இந்த கேள்விக்கு
விடை தெரிந்தவள் நீ தான்
உன்னால் பதில் சொல்ல முடியாது.
ஆனால் தினம் தினம்
தொலைந்து போகின்றவன்
நான் அல்லவா?

உன் மெளன மொழிகளை
மொழிபெயர்க்க என்னிடம்
வார்தைகள் இல்லை
உன்னால் என் தாய்மொழியே
மறந்து போனதடி சகியே!

ஒரு வார்த்தை சொல்லிவிடு!
ஓராயிரம் வருடங்கள்
வாழ்வேன் நான்.
இல்லை என்று சொன்னால்
தாங்காது என் மனம்
அது தூங்காது தினம் தினம்.

இறுதிவரை சொல்லவில்லை!
நான் உன் மனசில் இருந்தேனா?
இல்லையா என்று.
தவித்தேன் நான்
ஆனால் இன்னும் ஒருவனின்
மனைவியாய் நீ!

அன்பே என் தாடிக்குப்பின்னால்
நீ இருப்பது போல
உன் கணவனின் தாடிக்குப்பின்னாலும்
ஒரு பெண் இருப்பாள் கேட்டுப்பார்?
*********************************************************************************
முஸ்கி-இது ஒரு கவிதை ஹி.ஹி.ஹி.ஹி

முஸ்கி-இது யாரை நினைத்தும் எழுதப்பட்டது இல்லை.(அட உண்மைதாங்க)


முஸ்கி-பதிவிற்கும் தலைப்புக்கும் சம்மந்தம் என்ன என்று கேட்கலாம்.தனுஷ் சொன்னது போல யோசிக்க எல்லாம் இல்லை வாயில் வந்த வார்த்தையை வைத்து எழுதியதுதான் கொலைவெறிப்பாடல் என்று.அதே போல வாயில் வந்த வார்த்தைகளை கோர்த்துள்ளேன் நான் கவிதையாக(டேய் கவிதையா இல்லையா என்று நாங்க சொல்லனும் என்று நினைக்கிறது யாருப்பா இங்க உங்க மைண்ட் வாய்ஸ் இங்க கேட்குது)


முஸ்கி-இல்லை பதிவுக்கு தலைப்பு பொருந்துகின்றது என்று நினைத்தால் ஓக்கே மிக்க மகிழ்ச்சி


முஸ்கி-இல்லை பதிவுக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் இல்லை என்று நினைத்தால் பிரபல பதிவர்களுக்கு புரியும். ஏன் இப்படி தலைப்பு வைக்கப்பட்டது என்று.அட அதுக்குத்தானுங்க ஹிட்ஸ்க்குத்தான் இல்லாட்டி இதை கவிதை என்று ஒத்துக்கொள்வதே பெரிய விடயம் இதை எல்லாம் யார் படிப்பார்?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


முஸ்கி-கவிதையை விட முஸ்கி நீளமாக இருக்கு என்று நினைக்கிறீங்களா இதுதான் முஸ்கியில் மொக்கை போடுவது ஹி.ஹி.ஹி.ஹி
*********************************************************************************
நேற்றய தினம் நான் எழுதிய பதிவை படிக்க இங்கே கிளிக்-காதலிப்பவர்கள் போடும் மொக்கைகள் காதலில் விழுந்த நண்பர்களால் பதிவராக மாறிய பதிவர்
*********************************************************************************

Post Comment

50 comments:

முத்தரசு said...

வணக்கம்

கவிதை அழகு

முத்தரசு said...

முஸ்கி போட்டு எதையுமே சொல்லவோ / கேட்கமுடியாமல் செய்தததை அன்போடு கண்டிக்கிறேன்

முத்தரசு said...

படம் அழகு இருந்தாலும் அஞ்சலி அளவுக்கு இல்லப்பா

தனிமரம் said...

காதலில் உயிர் அற்றுப்போனவன் இப்படி எல்லாம் புலம்புவானா??? ஏதோ கொஞ்சம் புரியுது கவிதை அதைக் கொல்லுது முஸ்கி கொலைவெறி ஹீ ஹீ 

தனிமரம் said...

கணவர்கள் எல்லாம் தாடி வைத்த காலம் ஹான்சிகா காலம் இப்போது கிளீன் சேவ் இலியானா காலம் இதில் போய் எந்த மனைவி கேள்வி கேட்பாள் தாடிக்குப் பின் இருக்கும் கேடி யார் என்று லாஜிக் உதைக்கு தம்பி குடும்பத்தில் கும்மியடிக்க கிளப்பிறீங்க புரளியை .. அவ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

இந்த படத்தில் இருப்பவர் மாதிரியா உங்க ஆள் ?? அவ்வ்வ்வ் ஒரு டவுட்டு ஹீ ஹீ

Unknown said...

கவிதை நன்றாக உள்ளதே! இதை
ஏன் கொலை வெறியாடு சேர்த்தீர்கள்?

புலவர் சா இராமாநுசம்

குறையொன்றுமில்லை. said...

ராஜ் கவிதையும் நல்லாவே எழுத வருதே. வாழ்த்துகள்.

rajamelaiyur said...

என்ன நடக்குது இங்க . அவன் ஏன் வந்தான்
இப்படிக்கு
பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போடுவார் சங்கம்

rajamelaiyur said...

உண்மையில் கவிதை அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நமக்கு போட்டியா ஒரு ஆளா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆட்டோகிராப் மாதிரி பழசை கிளரனா அவ்வளவு தான்...

உண்மையை உணர்த்தும் உண்மையான காதல் கவிதை...

Yoga.S. said...

வணக்கம் ராஜ்!கவிதை?ஓ.கே!ஓ.கே!!!(அவரே சொல்லுறார்,எனக்கேன் வம்பு?)ஹிட்ஸ் அடிக்க வாழ்த்துக்கள்!(அவரே சொல்லுறார்!)காதலில் விழவில்லை என்று நம்புகிறேன்!(இதுவும் அவர் தான்!)மொத்தத்தில் தனுஷ் போல்?!கொலவெறி!!!!!!!!!!!!!!!!!!!!

பாலா said...

நீங்க என்னதான் சொன்னாலும் நம்ப முடியல... என்னமோ நடக்குது. வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

பதிவை விட முஸ்கி பெரிசு!
காதல் வந்தாலே இப்படித்தான்.
நன்று

நிரூபன் said...

யோவ்...
உமக்கு நோய் முத்திட்டு ஐசி!

கூடிய சீக்கிரத்தில ஒரு பொண்ணை பார்த்து தீர்வு காணுங்க

அப்புறமா மொழிபேர்க்க என்பது மொழி பெயர்க்க...என்று வந்தால் நல்லா இருக்குமே

K.s.s.Rajh said...

@மனசாட்சி
////வணக்கம்

கவிதை அழகு
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ மனசாட்சி கூறியது...
முஸ்கி போட்டு எதையுமே சொல்லவோ / கேட்கமுடியாமல் செய்தததை அன்போடு கண்டிக்கிறேன்
////

ஹி.ஹி.ஹி.ஹி.....

K.s.s.Rajh said...

@ மனசாட்சி கூறியது...
படம் அழகு இருந்தாலும் அஞ்சலி அளவுக்கு இல்லப்பா
////

நம்ம அஞ்சலிக்கு அழகுக்கு முன்னாடி இந்த நடிகை எல்லாம் தூசி

K.s.s.Rajh said...

@
தனிமரம் கூறியது...
காதலில் உயிர் அற்றுப்போனவன் இப்படி எல்லாம் புலம்புவானா??? ஏதோ கொஞ்சம் புரியுது கவிதை அதைக் கொல்லுது முஸ்கி கொலைவெறி ஹீ ஹீ
////

ஹி.ஹி.ஹி.ஹி..........

K.s.s.Rajh said...

@ தனிமரம் கூறியது...
கணவர்கள் எல்லாம் தாடி வைத்த காலம் ஹான்சிகா காலம் இப்போது கிளீன் சேவ் இலியானா காலம் இதில் போய் எந்த மனைவி கேள்வி கேட்பாள் தாடிக்குப் பின் இருக்கும் கேடி யார் என்று லாஜிக் உதைக்கு தம்பி குடும்பத்தில் கும்மியடிக்க கிளப்பிறீங்க புரளியை .. அவ்வ்வ்வ்வ்வ்வ்
////

ஹி.ஹி.ஹி.ஹி....நான் ஒரு புளோவில எழுதினேன் பாஸ் லாஜிக் எல்லாம் ஏன் பாக்கிறீங்க டாகுதர் படங்கள் எல்லாம் லாஜிக் பாத்தா பாக்கிறீங்க........

K.s.s.Rajh said...

@தனிமரம் கூறியது...
இந்த படத்தில் இருப்பவர் மாதிரியா உங்க ஆள் ?? அவ்வ்வ்வ் ஒரு டவுட்டு ஹீ ஹீ
////

ஹி.ஹி.ஹி.ஹி. ஆள் எல்லாம் இல்லை பாஸ்
இது ஆர்யாவுடன் ஒரு படத்தில் நடிச்ச பொண்ணு

Mohamed Faaique said...

உங்க கவிதையை பார்க்கும் போதே, கடைசியில் முஸ்கி, டிஸ்இ, விஸ்கியெல்லாம் எதிர் பார்த்தோம். எத்தன பேர பாத்துட்டோம்...

Mohamed Faaique said...

கவிதையை இடது மூலையில் எழுதாமல், நடுவில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...

K.s.s.Rajh said...

@
புலவர் சா இராமாநுசம் கூறியது...
கவிதை நன்றாக உள்ளதே! இதை
ஏன் கொலை வெறியாடு சேர்த்தீர்கள்?

புலவர் சா இராமாநுசம்
////

மிக்க நன்றி ஜயா
நன்றாக இருக்குமா இல்லையா என்ற பயத்தில் தான் அப்படி ஒப்பிட்டேன்

K.s.s.Rajh said...

@ Lakshmi கூறியது...
ராஜ் கவிதையும் நல்லாவே எழுத வருதே. வாழ்த்துகள்.
////

நன்றி மேடம்

K.s.s.Rajh said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
என்ன நடக்குது இங்க . அவன் ஏன் வந்தான்
இப்படிக்கு
பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கமெண்ட் போடுவார் சங்கம்
////

வை திஸ் கொலை வெறி? பாஸ்

K.s.s.Rajh said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
உண்மையில் கவிதை அருமை
////

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
நமக்கு போட்டியா ஒரு ஆளா....
////

ஹா.ஹா.ஹா.ஹா தல உங்கள் கவிதைக்கு கிட்டயே என்னால் வரமுடியாது

Marc said...

அருமை கவிதை வாழ்த்துகள்

K.s.s.Rajh said...

@ கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
ஆட்டோகிராப் மாதிரி பழசை கிளரனா அவ்வளவு தான்...

உண்மையை உணர்த்தும் உண்மையான காதல் கவிதை...
////

மிக்க நன்றி பாஸ் நீங்களே சொல்லிட்டீங்க கவிதைனு இது போதும்

K.s.s.Rajh said...

@
Yoga.S.FR கூறியது...
வணக்கம் ராஜ்!கவிதை?ஓ.கே!ஓ.கே!!!(அவரே சொல்லுறார்,எனக்கேன் வம்பு?)ஹிட்ஸ் அடிக்க வாழ்த்துக்கள்!(அவரே சொல்லுறார்!)காதலில் விழவில்லை என்று நம்புகிறேன்!(இதுவும் அவர் தான்!)மொத்தத்தில் தனுஷ் போல்?!கொலவெறி!!!!!!!!!!!!!!!!!!!!
////

ஹி.ஹி.ஹி.ஹி. பல கேட்டை போட வேண்டியிருக்கு இல்லாட்டி புரளியை கெளப்பிவிடுவார்கள்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
பாலா கூறியது...
நீங்க என்னதான் சொன்னாலும் நம்ப முடியல... என்னமோ நடக்குது. வாழ்த்துக்கள்.
////

ஹா.ஹா.ஹா.ஹா.அட நம்புங்க பாஸ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@ சென்னை பித்தன் கூறியது...
பதிவை விட முஸ்கி பெரிசு!
காதல் வந்தாலே இப்படித்தான்.
நன்று
////

ஹா.ஹா.ஹா.ஹா. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை பாஸ்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@
நிரூபன் கூறியது...
யோவ்...
உமக்கு நோய் முத்திட்டு ஐசி!

கூடிய சீக்கிரத்தில ஒரு பொண்ணை பார்த்து தீர்வு காணுங்க

அப்புறமா மொழிபேர்க்க என்பது மொழி பெயர்க்க...என்று வந்தால் நல்லா இருக்குமே

////

ஹி.ஹி.ஹி.ஹி........

திருத்திவிட்டேன் நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@Mohamed Faaique

ஹி.ஹி.ஹி.ஹி....
நன்றி பாஸ்

இனி நடுவில் எழுதுகின்றேன் பாஸ் மிக்க நன்றி

K.s.s.Rajh said...

@ dhanasekaran .S கூறியது...
அருமை கவிதை வாழ்த்துகள்
////

நன்றி பாஸ்

Yaathoramani.blogspot.com said...

இதுதான கவிதை
மீண்டும் மீண்டும் ரசித்துப் படித்தேன்
ஒவ்வொரு தாடிக்குள் ஒரு கதை இருக்கும்
ரகசியத்தை சொல்லிப் போனது அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Tha.ma 8

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா ராஜ் இயற்றிய கவிதையா? சூப்பர்... அப்படியே காதல் வழியுது:)).

முற்றும் அறிந்த அதிரா said...

அதுசரி, உங்களுக்குத்தான், காதல் ஒருதலைக்காதலாகிவிட்டது என தாடி வளர்க்கிறீங்க அது ok.

ஆனா அதெதுக்கு, உன் கணவரையும் கேட்டுப்பார் அவருக்கும் ஆரும் இருப்பினம் என, சும்மா இருக்கிற சங்கையெல்லாம் ஊதி விடுறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

Anonymous said...

y dis kolaveri...?

கவிதையை தனியாக பதிவிடுங்களேன்....நல்லா வந்திருக்கு...வாழ்த்துக்கள்

பி.அமல்ராஜ் said...

வணக்கம் பாஸ்,

இன்றுதான் உங்கள் முதலாவது கவிதையைப் படிக்கிறேன். கவிதை அழகாக இருக்கிறது. எதற்க்காக முஸ்கி எல்லாம் போட்டு இந்தமாதிரி ஒரு அவையடக்கம். உங்கள் கவிதை பற்றி ஒரே ஒரு சின்ன கருத்து/அறிவுரை சொல்லணும் போல் இருக்கிறது.. சொல்லலாமா விடலாமா என ஜோசிக்கிறன். சந்தம் அமைப்பு தொடர்பாக... சரி. வாழ்த்துக்கள்.

MaduraiGovindaraj said...

இது கொலை வெறி இல்லை,நல்ல கவிதை வரி!

MaduraiGovindaraj said...

முடியவில்லை மொழிப்போர்!

Yoga.S. said...

athira கூறியது...

அதுசரி, உங்களுக்குத்தான், காதல் ஒருதலைக்காதலாகிவிட்டது என தாடி வளர்க்கிறீங்க அது ok.

ஆனா அதெதுக்கு, உன் கணவரையும் கேட்டுப்பார் அவருக்கும் ஆரும் இருப்பினம் என, சும்மா இருக்கிற சங்கையெல்லாம் ஊதி விடுறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).////SOME THING WRONG??????

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா..ஹா..ஹா.. கடவுளே யோகா அண்ணனுக்கு என்ன ஆச்சு?:))) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

நான் பெண்குலத்துக்கே சப்போர்ட் பண்ணுகிறேன் அவ்வ்வ்வ்வ்வ்:)).. விடமாட்டமில்ல:))).

முற்றும் அறிந்த அதிரா said...

// நிரூபன் கூறியது...
யோவ்...
உமக்கு நோய் முத்திட்டு ஐசி!

கூடிய சீக்கிரத்தில ஒரு பொண்ணை பார்த்து தீர்வு காணுங்க//

கரிச்சட்டி யானையைப் பார்த்துச் சொன்னதாம் “நீ கறுப்பு” என, அந்தக்கதையாயெல்லோ இருக்கு இந்தக் கதை... ஹையோ ஹையோ... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)).

Thusi said...

அழகான வரிகள்............
அருமையாக இருக்கிறது,
தொடருங்கள் ராஜ்...............

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails