Sunday, June 10, 2012

அன்பே எங்கே நீ.....பகுதி-4


ஏன் ராகவி உங்களுக்கு மேரேஜ் பண்ண விருப்பம் இல்லையா?இல்லை உங்கள் வீட்டில் பார்த்த மாப்பிளை பிடிக்கலையா?

மேரேஜ் விருப்பம் தான் ஆனால் எனக்கும் மனசு என்று ஒன்று இருக்குத்தானே அதில் என்ன விருப்பம் இருக்கு என்று வீட்டில் கேட்கவேயில்லை அதுதான் கவலையா இருக்கு

அப்ப நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்களா ராகவி
இல்லை சரன்
இனி.......


நமக்கு வரப்போறவர் எப்படி இருக்கனும் என்று ஒரு எதிர்பார்பு இருக்கும் தானே அதைவிட ஒருவருடன் நன்றாக பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பின் திருமணம் செய்தால் அது சிறப்பாக இருக்கும் அதற்கு சிறந்த வழி காதல் திருமணம் தான். நான் காதல் திருமணம் தான் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

இந்த வார்தை என் தேவதையின் வாயில் இருந்து வந்தது எனக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.

எப்படியாவது என் காதலை சொல்லிவிடவேண்டும் என்று மனம் துடித்தது ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் சொல்வது பொருத்தமாக இருக்காது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன்.

நாட்கள் சென்றன தினம் தினம் ராகவி என்னை பாடாய் படுத்தினாள்.அவள் அழகு தினம் தினம் அதிகரிப்பதை போல ஒரு பிரமை எனக்கு.


என் இரவுகளை நரகம் ஆக்கி என் உணர்வுகளை கொள்ளையடித்த கொள்ளைக்காரி என்று என் வாசல் வருவாள். என்று மனம் தவியாய் தவித்தது ஆனால் தவிக்கும் மனதிற்கோ காதலை சொல்ல தைரியம் இல்லை.

அந்த அழகு தேவதை என்னிடம் பேசும் போதெல்லாம் என் மனம் சொல்லிவிட துடிக்கும் காதலை ஆனால் உதடுகள் மறுத்துவிடும்.அவளது பேச்சை ரசிக்கும் கண்களுக்கு கூட அவள் கண்களை பார்க்க சக்தியில்லை.

அவள் விழிகளும் என்னிடம் ஏதேதோ சொல்ல துடிக்கும் ஆனால் அந்த விழிகளின் மொழியை படிக்க எனக்கு தெரியவில்லை. தெரியவில்லை என்பதைவிட புரியவில்லை என்பதே பொருத்தம் எந்த ஆண்மகனுக்குத்தான் பெண்களின் விழிகளின் மொழி புரிந்திருக்கு எனக்கு புரிய?


அழகில் அவள் ஒரு ராட்சஸி என்பதைவிட அழகில் அவள் ஒரு கொலைகாரி ஆம் என் உயிரை பறித்த பாவி அவள். அந்த பாவத்துக்கு அவளுக்கு தண்டனை என் முத்தங்கள் அளவற்ற முத்தங்களை அவளுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் முத்தம் கொடுக்க நினைக்கும் உதடுகளுக்கோ காதலை சொல்ல தெரியவில்லை.

தொலை தூரத்தில் அவள் வரும் போதே அவளை என் கண்கள் தேடும். நான் பார்பதை அறிந்துகொண்டும் காணாதது போல வெட்கத்துடன் கூடிய ஒரு நளினப் புன்னகையை அவள் உதடுகளில் தவழும்.அந்த புன்னகைக்காகவே காலம் எல்லாம் அவள் காலடியில் தவம் கிடக்கலாம்.


அவளிடம் ஒரு வெள்ளை நிற சுடிதார் இருந்தது அதில் அவள் வரும் போது எல்லாம் வழமையை விட பேரழகியாக தெரிவாள்
வெள்ளை நிற சுடிதாரில் ஒரு வெண்பஞ்சு மேகம் என்னைக் கடக்கும் போது

என் காதல் மனம் துடிக்கும். ஆனால் அவளின் மனமோ என் தவிப்பை கண்டும் காணாதது போல நடிக்கும்.

ஆனால் அவளிடம் காதலை சொல்ல தடையாக இருந்த பிரதான காரணி என் வருமை.அலுவலகத்தில் கிடைக்கும் சம்பளம் என் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. வேறு நல்ல வேலைக்கு முயற்சி செய்தாலும்.தகுதி இருந்தும் அனுபவம் இருக்கா என்று கேட்பார்கள். அனுபவம் என்பது வேலை கொடுத்தால் தானே வரும்?. இப்படி நான் சந்தித்த நேர்முக பரீட்சைகள் ஏராளம். ஆனாலும் நான் சோர்ந்து போவதில்லை என் தன்னம்பிக்கையுடன் போராடிக்கொண்டு இருக்கின்றேன்.ஏன் எனில் வாழ்க்கையில் நான் 100 முறை வெற்றியை ருசித்தவன் இல்லை 1000 முறை தோல்வியை சந்தித்தவன்.
என் பொருளாதார தேடலில் என்று நிலையான வருமானம் வருகின்றதோ அன்று ராகவியிடம் என் காதலை சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அலுவலகத்தில் என்னால் ராகவியிடம் சகஜமாக பேசமுடியவில்லை.இதை அவள் அறியாமல் இல்லை ஆனாலும் நானாக காதலை சொல்லட்டும் என்று காத்திருக்கின்றாள் போல .

ஒரு நாள் ராகவி திடீர் என்று அலுவலகத்துக்கு வருவதை நிறுத்திவிட்டாள். என்ன என்று விசாரித்ததில் அவள் பற்றிய எந்த தகவலும் இல்லை.நானும் பல இடங்களில் விசாரித்து பார்த்தேன் ஒரு தகவலும் இல்லை.என்றோ ஒரு நாள் அவளை மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன் ஒரு வருடமா இரண்டு வருடமா பத்து வருடங்கள் ஓடி மறைந்துவிட்டது.

இப்போது 2016 இல் ஓரளவு நல்ல வருமானம் ஒரு நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் அதிகாரியாக இருக்கின்றேன்.பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த திருமணம். அன்பான மனைவி,அழகான குழந்தை என்று என் வாழ்க்கை சந்தோசமாக இருக்கின்றது.இந்த பொருளாதார தேடலில் கடந்த பத்து வருடங்களில் ராகவியை நான் மறந்தே போய்விட்டேன்.ஆனாலும் என் மனதில் எங்கோ ஓர் மூலையில் இருந்த அவள் மீதான நினைவுதான். என் குழந்தைக்கு அவள் பெயரை வைக்கவேண்டும் என்று அடம் பிடித்து வைத்துவிட்டேன். என் மனைவியிடம் ராகவி பற்றி இதுவரை எதுவும் சொன்னது இல்லை.

இவ்வளவு வருடங்களுக்கு பிறகு கனவில் அவள் விம்பம் வந்ததன் காரணம் என்ன என்று புரியாமல் நான் தவித்தேன்.

ராகவி இப்போது எப்படி இருப்பாள் கல்யாணம் ஆகியிருக்குமா இல்லையா?
அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று என் மனம் தவித்தது.தீவிரமாக ராகவியை தேடத்தொடங்கினேன்.

(தொடரும்)

முன்னைய பகுதிகளை படிக்க-
பகுதி-1
பகுதி-2
பகுதி-3

முஸ்கி-இந்தக் கதையின் நிகழ்காலம் 2016 இல் நடப்பதாகவே சித்தரித்துள்ளேன்.
*********************************************************************************
முன்பு என் தளத்தில் வெளிவந்து பல வாசகர்களை என் தளத்திற்கு அள்ளித்தந்த, பதிவுலகில் என் பதிவுகளுக்கும் ஒரு அங்கிகாரம் தந்த,வெறும் கிரிக்கெட் பதிவராக மட்டுமே பதிவுலகில் அறியப் பட்ட என்னை பல்சுவைப் பதிவராக அடையாளம் காட்டிய ,விகடனில் முதன் முதலாக என் தளம் குட் ப்ளாக்காக தெரிவாக காரணமாக அமைந்த ”மறக்க முடியாத பாடசாலை நாட்கள்”தொடர் பல வாசகர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மீண்டும் புதுப் பொழிவுடன் மீள் பதிவாக விரைவில் வெளியாக இருக்கின்றது.அத்துடன் நண்பர் ஒருவரின் உதவியுடன் அதை ஒரு புத்தகமாக வெளியிடுவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது என்பதனை அன்புடன் அறியத்தருகின்றேன்.

*********************************************************************************

Post Comment

8 comments:

Unknown said...

நடை அருமை! தொடருங்கள்!

புலவர் சா இராமாநுசம்

தனிமரம் said...

ராகவியைத் தேடும் படலம் தொடங்கியாச்சா!

தனிமரம் said...

படங்கள் எல்லாம் ஓரே ஐஸ்வரியா மாயம்!!லொல்லு!

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!அருமையான வர்ணனை!தேடுங்கள் தேடுங்கள் கிடைக்காமலா போய் விடுவாள்,ராகவி???

Yoga.S. said...

புலவர் சா இராமாநுசம் said...

நடை அருமை! தொடருங்கள்!////வணக்கம்,ஐயா!உங்கள் தளம் பார்க்க எனக்கு முடியவில்லையே,ஏன்?துள்ளித்,துள்ளி படிக்கவே முடியவில்லை.என்ன செய்ய வேண்டும்?

Unknown said...

ம்ம்ம் இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்து உள்ளேன் 50 % பதிவுகளை படித்து விட்டேன் (இன்று முழுதும் வெட்டியா இருந்ததால )
எல்லாப் பதிவுகளும் சூப்பரா இருக்கு ஆனால் நானும் உங்கட காதல் பத்தின பதிவ தேடிட்டு இருக்கான் கண்ணே புடிக்க முடியல தக்காளி
அது எந்த பதிவு என்று சொல்லுங்களன்.(please help me)

K.s.s.Rajh said...

@ajatheer

மிக்க நன்றி பாஸ்
மன்னிக்கவேண்டும் பாஸ் அந்தப் பதிவு தற்காலியமாக என் தளத்தில் தற்போது இல்லை மீண்டும் மீள் பதிவாக வெளிவரும் காத்திருங்கள்

K.s.s.Rajh said...

அனைவருக்கும் நன்றி நண்பர்களே

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails