Saturday, October 06, 2012

யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -பகுதி-1

இலங்கையின் வடபகுதியில் கிளிநொச்சி நகரத்தில் 1996 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள் காலை பத்து மணி இருக்கும்.


”பரந்தனுக்கு ஆமி வந்திட்டானாம். இன்னும் என்ன செய்யுறீங்க”பக்கத்து வீட்டு மாமா சொல்லிவிட்டு விரைவாக தனது வீட்டை நோக்கி சென்றார்.
சந்தைக்கு போன அப்பாவும் பரபரப்பாக வீட்டுக்கு வந்தார் என்ன செய்யுறீங்க கையில கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளிக்கிடுங்க சொல்லிவிட்டு அப்பா முக்கியமான பொருற்களை எடுத்துக்கொண்டு இருந்தார்.

அம்மா,சித்தி,அண்ணா,எல்லோறும் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு அவசர அவசரமாக வீதிக்கு வந்து பார்த்தால். மூட்டை முடிச்சுக்களுடன் ஊரே காலியாகிக்கொண்டு இருந்தது.அவசர அவசரமாக வெளியேருவதற்கு காரணம் இருந்தது. பரந்தன் என்பது வெகு தொலைவில் உள்ள ஊர் இல்லை.


வடக்கே யாழ்ப்பாணம் நோக்கிய A9 வீதியில்  கிளிநொச்சி நகரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் பரந்தன்.அங்கே ஆமி வந்துவிட்டதால் கிளிநொச்சியில் உள்ள மக்கள் விரைவாக கிளிநொச்சியை விட்டு வெளியேர வேண்டிய தேவையிருந்தது.

மதியம் பன்னிரண்டு மணியளவில்  என்னையும் சித்தியின் குழந்தைகள் எல்லோறையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அப்பாவும்,சித்தப்பாவும்..முறுகண்டியில் உள்ள இன்னும் ஒரு சித்தி வீட்டில் விட்டு விட்டு.நடந்து வந்து கொண்டு இருந்த அம்மா,சித்தி,அண்ணா போன்ற உறவிணர்களை அழைத்து வருவதற்காக அப்பாவும் சித்தப்பாவும் சென்றுவிட்டனர்  
(முறுகண்டி என்பது கிளிநொச்சியில் இருந்து தெற்கே ஒரு 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர்)

மாலை 5 மணியளவில் எல்லோறும் வந்து சேர்ந்தனர்.அடுத்து என்ன செய்வது இங்கே இருக்க முடியுமா? இல்லை இங்கும் ஆமி வந்துவிடுவானா என எல்லோறும் ஆளாலுக்கு கதைத்துக்கொண்டு இருந்தார்கள்.

என் பெயர் சதீஸ் 7 வயது சிறுவனான நான் சந்தித்த முதலாவது இடப்பெயர்வு இதுதான். எனக்கு ஒரு வயது இருக்கும் போது ஒரு முறை இடம் பெயர்ந்தாக அம்மா முன்பு  சொல்லியதாக ஞாபகம் ஆனாலும் எனக்கு விபரம் தெரிந்து நான் சந்தித்த முதலாவது இடப்பெயர்வு இதுதான்.

எங்கள்  குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம் தான்.அப்பா ஊரில் பெரிய விவசாயி எனவே கஸ்டம் என்றால் என்ன என்று நான் அறிந்தது இல்லை.


என்னதான் நான் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் என்றாலும் என் தந்தை ஒரு விவசாயி என்பதால் பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் என்னிடம் அவ்வளவுவாக  நட்பாக இருக்க மாட்டார்கள் இதை முகத்துக்கு நேர என்னிடம் சொல்வார்கள்.அதுக்கு காரணம்

என் பள்ளிக்கூடத்தில் சமூகத்தில் அந்தஸ்த்தில் உள்ள பலரின் பிள்ளைகள் என்னுடன் படித்தார்கள் படிப்பிலும் சரி,விளையாட்டிலும் சரி  நான் அவர்களுக்கு எந்த விதத்திலும் குறையாதவனாக இருந்தது இல்லை.

என் தந்தைஒரு விவசாயி என்று சொல்ல நான் என்றும் தயங்கியது இல்லை ஆனால் பள்ளிகூடத்தில் ஆசிரியர் ஓவ்வொறு மாணவர்களின் சுய அறிமுகம் செய்யச்சொல்லும் போது நான் என் தந்தை ஒரு விவசாயி என்று சொல்லும் போது ஏதோ செய்யக்கூடாத ஒரு தொழிலை அவர் செய்வதை போல ஏனைய மாணவர்கள் பார்பது எனக்கு  மனதில் வலியை ஏற்படுத்த தவறவில்லை.அப்போது நான் நினைத்துக்கொண்டேன் படிப்பிலும் சரி,விளையாட்டிலும் சரி  நான் அவர்களுக்கு எந்த விதத்திலும் குறையாதவனாக இருக்க கூடாது என்று.இது பின்னாலில் நான் உயர்தரம் படிக்கும் காலம் வரை தொடர்ந்தது.

வறுமை என்றால் என்ன,பசி என்றால் என்ன,பட்டினி என்றால் என்ன என்று எதுவும் எனக்கு தெரியாது.ஆனால் இவை எல்லாவற்றையும் நான் எதிர்கொள்ளப்போகின்றேன். இதுவரை வாழ்ந்த இந்த 7 வருடம் தான் நான் சந்தோசமாக இருந்த காலம். இனி எனக்கு அந்த சந்தோசம் கிடைக்கவே போவது இல்லை என்று. விதி எழுதிய கணக்கை நான் அறிந்திருக்கவில்லை.

சதீஸ் சாப்பிட வா என்று அம்மா அழைக்கவும் சாப்பிடச்சென்றேன் சோறும்,சம்பலும் எல்லோறுக்கும் அம்மா பரிமாறிக்கொண்டு இருந்தார்.மீன் இல்லையாம்மா என்று நான் அப்பாவியாக கேட்கவும். மாமா சொன்னார். மருமகனே இனி இதுதான் மீன் எல்லாம் கிடையாது பேசாமல் சாப்பிடு.
மாமாவை அம்மா முறைத்துவிட்டு என்னிடம் சொன்னார் நாளைக்கு வாங்கி சமைப்போம் இப்ப இதை சாப்பிடு என்று.

முறுகண்டியில் இப்போது நாங்கள் இருக்கின்ற இடம் எங்கள் காணிதான். அதில் சித்தி ஒருவரின் குடும்பமும்.மாமாவும் இருக்கின்றார்கள்,இப்போது நாங்களும் ,எங்கள் இன்னும் ஒரு மாமா,சித்தி என்று அதிகமான பேர் என்பதால் புதிதாக தகரத்திலானா பல வீடுகள் முளைத்தன.

சில நாட்களில் ஊருக்கு மீண்டும் போய்விடலாம் என்று எல்லோறும் நினைத்திருந்தனர்.ஆனால் மீண்டும் 5 வருடங்களுக்கு பிறகுதான் கிளிநொச்சிக்கு போவோம். என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.அதைவிட இப்ப இருக்கின்ற முறுகண்டியில் இருந்தும் நாளை மீண்டும் இடம்பெயரவேண்டும் என்றும் நினைக்கவில்லை.

அன்று பின்னேரம் பொழுது புலர்ந்த நேரம் பலத்த வெடிச்சத்தத்துடன் ஷெல் ஒன்று நாங்கள் இருந்த காணியில் விழுந்தது.


அழுகுரல்கள் பலமாக கேட்டது ஆனாலும் எழுந்து ஒருவரை ஒருவர் பார்க்கமுடியாத சூழல். ஒரே புகை மயமாகவும் அதைவிட அடுத்தடுத்த ஷெல்கள் வரும் என்ற பயத்தினாலும்.எல்லோறும் அசைவற்று படுத்துக்கிடந்தோம்

சிறிது நேர அமைதிக்கு பின் வேறு ஷெல்கள் வரவில்லை என்பதால்
அம்மா,அப்பா,சித்தப்பா,மாமா என்று ஓவ்வொறுவராக ஓவ்வொறுவரையும் தேடத்தொடங்கினார்கள்
(தொடரும்)


ஷெல்கள்-எறிகனைகள்,
மூட்டை முடிச்சுக்கள்-பொருற்கள்
முறுகண்டி-இது பேச்சு வழகில் சொல்வது எழுதும் போது முறிகண்டி என்று எழுதப்படும்

படங்கள்-கூகுள் தேடலில் பெறப்பட்டவை
இந்த தொடர் பற்றிய அறிமுகப் பதிவை படிக்க இங்கே கிளிக்-யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -தொடர் அறிமுகம்

முஸ்கி-சதீஸ் என்ற ஒருவர் கதை சொல்வதாக இந்த தொடர் நகர்ந்து செல்கின்றது.மற்றும் படி இதில் குறிப்பிடப்படும் சதீஸ் நான் இல்லை.



Post Comment

15 comments:

தனிமரம் said...

பரந்தன் ஊடாக இடப்பெயர்வு சந்திக்கும் சதிஸ் உடன் கதையோடு நானும் பயணிக்கின்றேன். இன்னும் மறக்கமுடியாதத ஊர் எனக்கும் ஒரு காலத்தில்!ம்ம் தொடருங்கள் 

தனிமரம் said...

வறுமை என்றால் என்ன,பசி என்றால் என்ன,பட்டினி என்றால் என்ன என்று எதுவும் எனக்கு தெரியாது.ஆனால் இவை எல்லாவற்றையும் நான் எதிர்கொள்ளப்போகின்றேன். இதுவரை வாழ்ந்த இந்த 7 வருடம் தான் நான் சந்தோசமாக இருந்த காலம். இனி எனக்கு அந்த சந்தோசம் கிடைக்கவே போவது இல்லை என்று. விதி எழுதிய கணக்கை நான் அறிந்திருக்கவில்லை.
//யார் தான் ஈழத்தில் பிறந்த கணக்கை அறிய முடிந்தது நம் காலத்தில் அடுத்த சந்ததியாவது சந்தோஸமாக இருக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை பசியின் கொடுமை அதிகம் ஒருகாலத்தில்  என் சொந்த அனுபவம் !ம்ம்

தனிமரம் said...

பேச்சு வழக்கு மொழியை கைபிடி டிஸ்கியில் விளக்கம் கொடுப்பது நல்லது என்பது என் கருத்து. தொடர்கின்றேன் எப்போதும் நமக்கு இப்பதேவையே யுத்தம் இல்லாத உலகம் தான்!

துரைடேனியல் said...

நல்லாருக்குறீங்களா ராஜ்? ரொம்ப நாள் கழிச்சி பாக்குறேன். உலகத்திலேயே பெரிய பாவம் ஈழத்தில் பிறப்பதுதான் போலிருக்கிறது. கனக்கும் மனதோடு காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்காக.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றும் கூட "எங்கள் தொழில் விவசாயம்" என்று சொல்ல தயங்குபவர்கள் உண்டு... (உலகில் சிறந்த தொழிலை செய்வது தெரியாமல்...ம்...)

முதல் பகுதியே மனசு வருத்தப்படுகிறது...

தொடர்கிறேன்...

K.s.s.Rajh said...

@தனிமரம்

நிச்சயமாக பேச்சு வழக்கு மொழிக்கு விளக்கம் கொடுக்கின்றேன்

நன்றி பாஸ்

K.s.s.Rajh said...

@துரைடேனியல்

வாங்க பாஸ் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி

K.s.s.Rajh said...

@திண்டுக்கல் தனபாலன்

உண்மைதான் பாஸ்

சுதா SJ said...

ஹாய் ராஜ்... தொடக்கமே ஆவலாய் நகருது... ரெம்ப எதார்த்தமாய் கதையை நகர்த்துகின்றீர்கள் வாழ்த்துக்கள் :))
இனி நானும் சதீசுடன் பயணிக்க தயாராகி விட்டேன்..

எங்களுக்கு யுத்தம் தந்த வலி இலகுவில் மறக்கவா முடியும் ஈழதமிழன் வாழ்க்கையோடு இடம்பெயர்வும் பின்னி பினைந்தது அல்லவா -:( இடம்பெயர்வு என்ற அரக்கனிடன் இருந்து தப்பியவர்கள் யார்...??! :'((

ராஜ் உன் தொடர் ஈழதமிழனின் துயரில் 50% ஆவது சொல்லும் என எதிர் பார்க்கின்றேன்.. நம்புகின்றேன்..
நல்ல விடயத்தை தொடரின் கருவாய் எடுத்து இருக்கின்றாய் வாழ்த்துக்கள் ^_^

K.s.s.Rajh said...

@துஷ்யந்தன்

தொடர்ந்து வாருங்கள் பாஸ் சேர்ந்து பயணிப்போம் 50 வீதம் என்ன என்னால் முடிந்தளவு பதிவு செய்ய முயற்சி செய்கின்றேன்

Robert said...

வேதனையையும்,வலியையும் தரும் பதிவு என்றாலும் குறைந்த பட்சம் இந்த சோகத்தையாவது பகிர்வோம் என்ற நினைப்புடன்,தொடருங்கள் சகோ.....

K.s.s.Rajh said...

@Robert
நன்றி பாஸ்

Yoga.S. said...

இரவு வணக்கம்,ராஜ்!///சதீஸ் என்ற ஒருவர் கதை சொல்வதாக...........................////"நான் அவனில்லை" எண்டு சொல்லுறார்!

K.s.s.Rajh said...

@Yoga.S.
ஏன் ஜயா இப்படி கோர்த்துவிடுறீங்க......

நான் அவன் இல்லை ஹி.ஹி.ஹி.ஹி.........

Yoga.S. said...

K.s.s.Rajh said...
@Yoga.S.
ஏன் ஜயா இப்படி கோர்த்துவிடுறீங்க......

நான் அவன் இல்லை ஹி.ஹி.ஹி.ஹி........./////அதத் தானடாப்பா நானும் சொன்னனான்,ஹ!ஹ!ஹா!!!!!

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails