வறுமைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டம் மிகவும் கொடியது அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.மத்தியானம் சமைக்கும் சோற்றினை இரவும் சாப்பிட்டு மறுநாள் காலையிலும் சாப்பிட்டு மிகுதி இருந்தால் சுடவைத்து மறுபடியும் மத்தியானம் சாப்பிடுவது.
நவராத்திரிகாலம்,திருவெண்பா,போன்றவை வந்தால் கோயிலில் பொங்கல் வைப்பார்கள். பல வன்னிச்சிறுவர்களுக்கு ஒரு நேர உணவை அளித்த பெருமை வன்னிக்கோயில்களையே சாறும்.அந்த வகையில் கடவுள் கருனை காட்டியுள்ளார்.
சிறுவனான சதீஸும் அவனது நண்பர்களும் பாடசாலை இடைவேளையின் போது ஒரு 5ரூபா கல்பணிஸை வாங்கி அதை 5 பேருக்கு பங்கு போடவேண்டும் என்ற நேரத்தில் வீதியோரம் அமர்ந்திருந்த ஒரு வயதான பாட்டி தம்பி எனக்கும் ஒரு துண்டு தருவீங்களா ரொம்ப பசிக்குது என்று கேட்ட போது.
எதுவும் சொல்லாமல் அந்தக் கல்பணிசை அந்த பாட்டியிடம் கொடுத்துவிட்ட வந்த சதீஸும் அவனது நண்பர்களுக்கும் இந்தக் குணத்தை கற்றுத்தந்தது வறுமைதான்.
மிக சின்னவயதிலே பல சிறுவர்கள் வறுமைகாரணமாக பாடசாலையை இடைநிறுத்தி காட்டில் போய் விறகுவெட்டி வந்து விற்பது,தோட்ட வேலை செய்வது என புத்தகம் பிடிக்கும் கைகளால் மண்வெட்டி பிடிக்கவைத்ததும் வறுமை.
ஆனால் என்னதான் வறுமை என்றாலும் மக்கள் பசிபட்டினியால் இறக்கவில்லை. ஒரு வேளை உணவையாவது கொடுத்துக்கொண்டு இருந்தது வன்னி மண். எவ்வளவோ பொருளாதாரத்தடைகள்,பொருற்கள் விலையேற்றங்களை சந்தித்த போதும் இங்கு வாழ்ந்த மக்களை வன்னிமண் ஒரு போதும் கைவிடவில்லை என்பதே விவசாய பூமியான இதன் சிறப்பு.
சதீஸ்க்கு ஆனைவிழுந்தான் வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது பக்கத்து வீடுகளின் நிறைய அவன் வயதுடைய நிறைய சிறுவர்கள் இருந்தார்கள் எனவே பாடசாலை போய் வந்ததும் மாலையில் ஜாலியாக அவர்களுடன் விளையாடுவது என்று அவனது பொழுதுகள் கழிந்ததன.
மனிதவாழ்வில் எமக்கு பல மனிதர்கள் உதவி செய்திருப்பார்கள்,அல்லது நாம் பலருக்கு உதவி செய்திருப்போம்.நாம் செய்யும் உதவி சிறியது என்றாலும் தக்க நேரத்தில் செய்யப்படுவதால் உரியவருக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
சதீஸ் வாழ்க்கையிலும் அவன் பலபேருக்கு உதவியிருக்கான் பல பேர் அவனுக்கு உதவியிருக்கின்றார்கள்.ஆனால் ஆனைவிழுந்தானில் ஒரு பசு செய்த உதவி மிகப்பெரியது..
ஆம் சதீஸ் குடும்பத்திடம் ஒரு பசுமாடு இருந்தது.அது கறக்கின்ற பாலை விற்பனை செய்துதான் சதீஸின் படிப்பு செலவுகள் உட்பட இதற செலவுகளை முழுமையாக ஈடு செய்யமுடியாவிட்டாலும் அரைவாசியாவது ஈடுசெய்யமுடிந்தது.
தன் உதிரத்தை பாலாக தருபவள் தாய்.அந்த கோமாதாவும் தன் உதிரத்தை பாலாக்கி வறுமையை ஓரளவு போக்க அவர்களுக்கு உதவியது அந்த வகையில் அதுவும் ஒரு தாய்க்கு நிகர்தான்.
பின்னாலில் சொந்த ஊருக்கு வந்து. சதீஸ் இளைஞன் ஆகும் வரையும் அந்த மாடு அவர்களிடம் இருந்தது வன்னியில் நடந்த இறுதியுத்தத்தில் தவறவிடப்பட்டுவிட்டது.
குடும்பத்தில் உழைக்கும் மனிதர்கள் அது தந்தையோ இல்லை,சகோதரனோ,இல்லை மாமாவோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்ற ஒரு பொறுப்புக்கு அப்பால்
நாடு அவர்களிடம் சுமத்திய பொறுப்பு மிகப்பெரியது.உழைக்கும் ஆண் எல்லைப்படையிலோ இல்லை போராளியாகவோ போய்விட்டால்.அவன் குடும்ப நிலையை யோசித்து பார்கவே முடியாது.
அதுவும் யுத்த களத்தில் அவர்கள் மரணித்துவிட்டால் அந்த குடும்பத்தின் நிலையை கற்பனையே செய்து பார்க்கமுடியாது. அதன் பின் கிடைக்கின்ற சிறிய உதவிகள் மற்றும் அந்த குடும்பத்து பெண்களின் உழைப்பிலும் அவர்கள் வாழ்க்கை நகரும்.
இப்படித்தான் சைக்கிள் திருத்தும் கடையில் வேலை செய்யும் ஒருவர் அவருக்கு ஜந்து பிள்ளைகள் மூத்த மகனுக்கு 12,13 வயது இருக்கும்.அடுத்த வேளை உணவுக்கு அவர் உழைத்து வந்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் அவரின் குடும்பம்.மிகவும் வறுமையில் வாடியது.ஒருவேளை உணவையாவது தன் பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும் என்று தினம் தினம் தன் பசி மறந்து உழைக்கும் மனிதர்.
யுத்தம் அவரை யுத்தகளம் நோக்கி அழைத்துச் சென்றது எல்லைப்படைவீரராக.அவர் அங்கு மரணித்துவிட்டார்.
அதன் பிறகு நன்றாக படிக்கின்ற எதிர்காலத்தில் ஒரு சிறந்த கல்விமானாக வரவேண்டிய அவரது மூத்த மகன்.தனது கல்வியை இடைநிறுத்தி தனது குடும்ப பொறுப்பை சுமந்தான்.13 வயதில் குடும்பத்தின் பொறுப்பை அவன் தலையில் சுமத்தியது யுத்தம்.
(தொடரும்)
இந்த தொடரின் முன்னைய பகுதிகளை படிக்க இங்கே கிளிக்-யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் தொடர்
|
6 comments:
முந்தைய பாகங்களை படித்துவிட்டு வருகிறேன் ராஜ் ...
தொடருங்கள்...
கருவும் களமும் ரணங்களை கிளறாமல் இருக்க விடாது...மருந்தாயும் அமையட்டுமே...
Painful experiences!
ம்ம்ம் இந்த யுத்தம் சொல்லித்தந்தது நம் பலரின் கனவை சிதைக்கும் வழிவகை பாவம் 13 வயதில் தொலையும் கனவு அவனுக்கு !ம்ம் அவன் தந்தையின் பாரம் யார் அறிவாரோ!எல்லைப்ப்டையில் போகும் அவலத்தை தந்த இனவாதிகள் நிலையை என்ன சொல்வது!
கோமாதா குலமாதா எனக்கும் அந்த ஜீவன் மீது இன்னும் இருக்கு நன்றியுணர்வு நானும் ஒரு கிராமத்தில் தேடிப்போனேன் சமாதான காலத்தில்!ம்ம்
வன்னி மண் ஓரு ஜீவநதிதான்!ம்ம் தொடர்கின்றேன்!
வேதனைக்குரிய நிகழ்வுகள்... தொடர்கிறேன்...
Post a Comment