நட்பு பற்றி இந்த தொடரில் பேசுவோம் இது சில பகுதிகளைக்கொண்ட ஒரு குறும் தொடராக இருக்கும்
குத்தினவன் நண்பனாக இருந்தாலும் அதைவெளியில் சொல்லக்கூடாது.சுந்தரபாண்டியன் படத்துல நம்ம சசிக்குமார் ஒருவசனம் பேசுவார்.இதுதான் உண்மையான நட்பு.வெருமனே முகத்துக்கு முன் மட்டும் சிரித்து பேசி மச்சான் நான் அப்படி இருப்பேண்டா இப்படி இருப்பேண்டா உனக்கு ஒன்னுனா உசிரையும் கொடுப்பேண்டா என்று சொல்லும் நண்பர்களின் பசப்பு வார்த்தைகளின் மயங்கி அட இவன் தான் உண்மையான நண்பன் என்று நினைச்சால் அவ்வளவுதான்.நண்பர்களின் வார்த்தைகளை விட அவர்களது மனதை படிக்க தெரிந்திருந்தால் நண்பர்களுக்கு இடையில் பிரச்சனைகள் எப்போதும் வராது.
மனிதமனம் விசித்திரமானது அது ஒரு சுயநலவாதி.ஆனால் அது தேடுகின்ற உறவுகள் மட்டும் சுயநலம் அற்றதாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும் போது ஏமாற்றமே மிஞ்சி நிற்கும் இதுதான் யதார்த்தம்.
உதாரணமாக இரண்டு நண்பர்கள் இருக்கின்றார்கள் இணைபிரியாத நண்பர்கள் ஒருவனின் தங்கை மீது மற்றவனுக்குகாதல் வருகின்றது.நண்பனின் தங்கை என்ற நினைப்பு அவனுக்கு கொஞ்சமும் வரவில்லை அவளைக்காதலிக்கின்றான்.அவளும் காதலிக்கின்றாள்.இருவரும் திருமணம் செய்துகொள்கின்றார்கள் இங்கே நட்பைவிட சுயநலமே மேலோங்கி நிற்கின்றது.
தன் நண்பன் தனக்கு துரோகம் செய்துவிட்டான் தன் தங்கையை காதலித்துவிட்டான் என்ற ஏமாற்றமே மற்ற நண்பனுக்கு மிஞ்சி நிற்கும் அதுவே கோபமாக மாறி அவர்கள் நட்பில் விரிசலை ஏற்படுத்திவிடும்.ஒருவேளை அவன் தன் நண்பனை மன்னித்து ஏற்றுக்கொண்டாலும் அந்த நட்பில் விரிசல் இருக்கத்தான் செய்யும்
சுயநலம் இல்லாத நண்பர்களே தேடுவது கடினமான காரியம்.ஏன் என்றால் மனிதர்கள் எல்லோறும் ஏதோ ஒரு விதத்தில் சுயநல வாதிகள் தான்.ஆனாலும் கிடைப்பார்கள் பிடல் காஸ்ரோவிக்கு ஒரு சேகுவாரா கிடைத்ததை போல சுயநலம் இல்லாத மனிதர்களும் நண்பர்களாக கிடைப்பார்கள்.
நண்பர்கள் என்றால் என்னேரமும் ஒற்றுமையாகத்தான் இருக்கனும் மாற்றுக்கருத்து சொல்லக்கூடாது என்று இல்லை தட்டிக்கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்து கண்டிக்கவேண்டிய இடத்தில் கண்டிக்கவேண்டும் அதுவே நல்ல நண்பனுக்கு அழகு.
ஒருவன் வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றான் அவனுக்கு ஒரு நல்லவேலை கிடைக்கின்றது.ஆனால் அவனது நன்பன் இவனுக்கு இப்படி ஒரு வேலை கிடைப்பதா என்று அந்த கம்பனியில் அவனை பற்றி இவன் இதுக்கு தகுதியில்லாதவன் இவனால் இந்த வேலை செய்யமுடியாது என்று இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லிவிடுகின்றான் இதானால் முதலாமானவனுக்கு வேலைகிடைக்கவில்லை.
ஆனால் அவனது வேலைக்கு வேட்டு வைத்தவன் மிக சாதாரனமாக எதுவும் நடக்காதது போல பழகுகின்றான்.தன் நண்பன் தான் தன் வேலைக்கு வேட்டு வைத்தான் என்று தெரிந்தும் அது பற்றி அவனிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவனுடன் தொடர்ந்து பழகுகின்றான் காரணம் அவன் நட்பு தூய்மையானது.
ஆனால் இப்படியான நண்பர்களுடன் பழகுவதைவிட அவர்கள் நட்பை மெல்ல மெல்ல குறைத்துக்கொள்வதே சிறந்தது.காரணம் நண்பர்களுக்கு இடையில் பொறாமை வந்துவிட்டால் அந்த நட்பின் வலு குறைந்துவிடம் எப்படா மற்றவன் காலைவாரலாம் என்றுதான் சிந்திப்பார்கள் எனவே நண்பர்களுக்கு இடையில் பொறாமை வந்துவிட்டது என்று தெரிந்தால் அந்த நட்பை மெல்ல மெல்ல குறைத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
(நட்பு பற்றி இன்னும் பேசுவோம் அடுத்த அடுத்த பகுதிகளில்)
படங்கள்-கூகுள்
நண்பர்கள் தளத்தின் வாசகர்கள் அனைவருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
|
25 comments:
நன்றாக இருந்தது...
இந்த தொடரையாவது முழுமையாகப் படிக்க காலம் கைகூடுமோ தெரியவில்லை
@♔ம.தி.சுதா♔
நேரம் கிடைக்கும் போது படியுங்கள் நன்றி பாஸ்
எனக்காக எதையும் செய்யும் நட்புகளை பெற்றிருக்கிறேன் ராஜ். அதேசமயம் என்னை முதுகில் குத்திய துரோக நட்புகளையும் சந்தித்திருக்கிறேன். சரியான நண்பர்களை இனம் கண்டு கொள்வதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. தொடருஙகள் இந்த அலசைலை. நன்றாக இருக்கிறது. உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
முகம் நக நட்பு நட்பல்ல! வள்ளுவன் வாக்கு !
எந்த விதமான சுயநலமும் இல்லாமல் பழகுவது தான் நட்பு. அப்படி இல்லாதவர்கள் நாம் நண்பர்கள் என்ற சொல்லவே தகுதி அவர்கள்..
ஆனால் ஒரு சந்தேகம்... இது நீண்ட நாளாக எனக்கு மண்டையைக் குடைகின்ற கேள்வி.. நண்பனின் தங்கையைக் காதலிப்பது தவறா? அது எப்படி துரோகம் நண்பனுக்கு செய்யும் ஆகும்? இந்தக் காரணத்துக்காக பல காதல்கள் பிரிந்திருக்கின்றன... பல நட்புக்களும் பிரிகின்றன... இது எப்படி நியாயம்?
@பால கணேஷ்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்
@புலவர் சா இராமாநுசம்
நன்றி ஜயா
@பூங்கோதை
////எந்த விதமான சுயநலமும் இல்லாமல் பழகுவது தான் நட்பு. அப்படி இல்லாதவர்கள் நாம் நண்பர்கள் என்ற சொல்லவே தகுதி அவர்கள்..
ஆனால் ஒரு சந்தேகம்... இது நீண்ட நாளாக எனக்கு மண்டையைக் குடைகின்ற கேள்வி.. நண்பனின் தங்கையைக் காதலிப்பது தவறா? அது எப்படி துரோகம் நண்பனுக்கு செய்யும் ஆகும்? இந்தக் காரணத்துக்காக பல காதல்கள் பிரிந்திருக்கின்றன... பல நட்புக்களும் பிரிகின்றன... இது எப்படி நியாயம்?////
என்னைக்கேட்டால் நண்பனின் தங்கையை காதலிப்பது நட்புக்கு செய்யும் துரோகம் தான். காரணம் நம்பி நண்பன் வீட்டுக்குள் விட்டால் அவன் தங்கையை காதலிப்பது அந்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் இல்லையா பாஸ்? எனவே நண்பனின் தங்கையை காதலிப்பது நண்பனுக்கு செய்யும் துரோகம் தான்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பர்கள்.... வித்தியாசமாக இருக்கே - சரி எதுக்கும் தொடர்ந்து வந்து தெரிந்து கொள்கிறேன்.
///காரணம் நம்பி நண்பன் வீட்டுக்குள் விட்டால் அவன் தங்கையை காதலிப்பது அந்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் //// நம்பி வீட்டுக்குள் விட்டால் திருடத் தான் கூடாது... அப்ப காதலிப்பதும் திருட்டு, கொலை போன்று தவறான செயலா? அது ஒரு உணர்வு.. அது எங்கும் எப்படியும் வெளிப்படலாம்... சரி.. தன் தங்கையை ஒருவன் காதலிக்கக் கூடாது என்று ஒருவன் நினைத்தால் அவனும் எந்தப் பெண்ணையும் காதலிக்கக் கூடாது... தன் தங்கை என்றால் ஒரு நியாயம் அடுத்தவன் தங்கை என்றால் இன்னொரு நியாயமா?
@முத்தரசு
வாங்க பாஸ் நன்றி பாஸ்
@பூங்கோதை
///////காரணம் நம்பி நண்பன் வீட்டுக்குள் விட்டால் அவன் தங்கையை காதலிப்பது அந்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் //// நம்பி வீட்டுக்குள் விட்டால் திருடத் தான் கூடாது... அப்ப காதலிப்பதும் திருட்டு, கொலை போன்று தவறான செயலா? அது ஒரு உணர்வு.. அது எங்கும் எப்படியும் வெளிப்படலாம்...
////நீங்கள் சொல்வதை பார்த்தால் காதல் ஒரு உணர்வுதானே அப்படி என்றால் நண்பனின் மனைவி மீதும் காதல் வந்தால் அது தவறு இல்லையா? அது எப்படி தவறோ அதே போல நம்பி வீட்டுக்குள் விட்டால் அவன் தங்கச்சியையே காதலிப்பதும் நட்புக்கு செய்யும் துரோகம் தான்
@பூங்கோதை
////////சரி.. தன் தங்கையை ஒருவன் காதலிக்கக் கூடாது என்று ஒருவன் நினைத்தால் அவனும் எந்தப் பெண்ணையும் காதலிக்கக் கூடாது... தன் தங்கை என்றால் ஒரு நியாயம் அடுத்தவன் தங்கை என்றால் இன்னொரு நியாயமா?////உங்கள் கருத்து விதண்டாவாதமாக இருக்கு நண்பரே நண்பனின் தங்கையை காதலிப்பது தவறு என்று சொல்பவன் தன் நண்பனின் தங்கையை காதலித்தால் அது தவறுதான்.ஆனால் ஏன் வேறு பெண்களை காதலிக்க கூடாது உலகில் உள்ள எல்லாப்பெண்களின் சகோதரர்களும் நண்பர்களாகவா இருக்கின்றார்கள் இல்லையே பாஸ்
///அப்படி என்றால் நண்பனின் மனைவி மீதும் காதல் வந்தால் அது தவறு இல்லையா? /// நண்பா... இது தான் எனக்கு விதண்டாவாதமாகத் தெரிகிறது. திருமணமான பெண்ணைக் காதலிப்பதை எமது சமூகமும் கலாச்சாரமும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் வாதாட வேண்டுமென்பதற்காக வாதாடவில்லை... நீண்டகாலமாக எனக்கு இது ஒரு அதிருப்தியான கருத்து .. அவ்வளவு தான்
/// எல்லாப்பெண்களின் சகோதரர்களும் நண்பர்களாகவா இருக்கின்றார்கள் இல்லையே பாஸ்/// காதல் என்ப
து ஒரு தவறான நடத்தை என நினைப்பவர்கள் மட்டுமே தன் நண்பன் தங்கையைக் காதலிப்பதை எதிர்ப்பார்கள் என்பது என் கருத்து. அதனால் தான் அவர்கள் காதலிக்கக் கூடாது என்றேன்....
உண்மையான நண்பனாக இருந்தால், அவனுக்கு தன் நண்பனைப் பற்றி நல்லெண்ணமே இருக்கும். அவனைப் பற்றி புரிந்து கொண்டவனாக இருப்பான்... தன் தங்கையை யாரோ ஒருத்தனுக்கு கொடுப்பதை விட, தன் நண்பனுக்கு கொடுப்பது எவ்வளவோ மேல் என்று தான் கருத வேண்டும்...
தன் நண்பன் தங்கையைக் காதலித்து விட்டான் என்பதற்காக நண்பனை வெறுப்பவன் ஒரு பச்சைச் சுயந்லவாதி..அவன் நண்பனே இல்லை தன் நண்பனின் உணர்வுகளை மதிக்காதவன்...
நண்பரே... தவராகப் புரிந்து கொள்ளாதீர்கள்...நான் மேலே போட்டிருக்கும் கருத்துக்கள் உங்கள் பதிவுக்கு எதிரான கருத்துக்கள் இல்லை..நண்பர்கள் என்றால் அவர்களுக்கிடையில் பரஸ்பரம் விட்டுக் கொடுப்பும் ஏற்றுக் கொள்ளும் தன்மையும் இருக்க வேண்டும். அடிப்படையாக எமக்குள் ஒரு கருத்தை வளர்த்துவிட்டு அதைக் காரணம் காட்டி ஒருவரை மட்டும் துரோகியாக்கி விடுகிறோம். இருபுறமும் உள்ள தவறை பார்க்க மறந்து விடுகிறோம்..
@பூங்கோதை
////உண்மையான நண்பனாக இருந்தால், அவனுக்கு தன் நண்பனைப் பற்றி நல்லெண்ணமே இருக்கும். அவனைப் பற்றி புரிந்து கொண்டவனாக இருப்பான்... தன் தங்கையை யாரோ ஒருத்தனுக்கு கொடுப்பதை விட, தன் நண்பனுக்கு கொடுப்பது எவ்வளவோ மேல் என்று தான் கருத வேண்டும்...
தன் நண்பன் தங்கையைக் காதலித்து விட்டான் என்பதற்காக நண்பனை வெறுப்பவன் ஒரு பச்சைச் சுயந்லவாதி..அவன் நண்பனே இல்லை தன் நண்பனின் உணர்வுகளை மதிக்காதவன்...////அது சரிதான் பாஸ் ஆனால் அந்த காதலித்த நண்பனும் சுயநயலமாகத்தானே செயல் பட்டு இருக்கான் அவனுக்கு நட்பைவிட தனது காதல்தானே பெரிதாக தெரிகின்றது அதுவும் சுயநலம் தானே அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன் சுயநலம் இல்லாத நட்பு வேண்டும் என்று.
நண்பனின் தங்கையை காதலிப்பது சரியா தவறா என்று ஒவ்வொறு வருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் ஆனால் நட்பில் சுயநலம் வருவதற்கு இந்தவிடயமும் ஒரு காரணம் அதைத்தான் நான் சுட்டிக்காடியுள்ளேன்.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா
////.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா//// சரி இன்னும் ஒரே ஒரு உண்மை சொல்றேன்... நான் நண்பன் இல்லை நண்பி....ஹா...ஹா...ஒரே குழுமத்தில் இருக்கும் நண்பியைக் கூடவா தெரியாமல் இருப்பீங்க... :)
@பூங்கோதை
////////.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா//// சரி இன்னும் ஒரே ஒரு உண்மை சொல்றேன்... நான் நண்பன் இல்லை நண்பி....ஹா...ஹா...ஒரே குழுமத்தில் இருக்கும் நண்பியைக் கூடவா தெரியாமல் இருப்பீங்க... :////ஹா.ஹா.ஹா.ஹா.....
மன்னிக்கவேண்டும் அக்கா நான் புனைபெயர் என்று நினைத்துவிட்டேன்
நல்ல தொடர் நட்பு பற்றி தொடரட்டும் விரிவாக கருத்துடன் பின் வருகின்றேன்!இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
////உண்மையான நண்பனாக இருந்தால், அவனுக்கு தன் நண்பனைப் பற்றி நல்லெண்ணமே இருக்கும். அவனைப் பற்றி புரிந்து கொண்டவனாக இருப்பான்... தன் தங்கையை யாரோ ஒருத்தனுக்கு கொடுப்பதை விட, தன் நண்பனுக்கு கொடுப்பது எவ்வளவோ மேல் என்று தான் கருத வேண்டும்...
தன் நண்பன் தங்கையைக் காதலித்து விட்டான் என்பதற்காக நண்பனை வெறுப்பவன் ஒரு பச்சைச் சுயந்லவாதி..அவன் நண்பனே இல்லை தன் நண்பனின் உணர்வுகளை மதிக்காதவன்...////அது சரிதான் பாஸ் ஆனால் அந்த காதலித்த நண்பனும் சுயநயலமாகத்தானே செயல் பட்டு இருக்கான் அவனுக்கு நட்பைவிட தனது காதல்தானே பெரிதாக தெரிகின்றது அதுவும் சுயநலம் தானே அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன் சுயநலம் இல்லாத நட்பு வேண்டும் என்று.
நண்பனின் தங்கையை காதலிப்பது சரியா தவறா என்று ஒவ்வொறு வருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் ஆனால் நட்பில் சுயநலம் வருவதற்கு இந்தவிடயமும் ஒரு காரணம் அதைத்தான் நான் சுட்டிக்காடியுள்ளேன்.உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா//நண்பனின் தங்கை மீது காதல் வந்தால் நண்பர்கள் வில்லன்கள் ஆவார்கள் என்னைப்பொறுத்த வரை குடும்பம் வேற நட்பு வேற என் அனுபவம் நட்பை இன்னும் மன்னிக்கவில்லை 16 வருடம் ஒரு சில நட்பு இன்னும் கெஞ்சுகின்றார்கள் யாரோ ஒரு நண்பன் தங்கை தானே உனக்கு என்ன என்று அந்த வீட்டில் சாப்பிட்ட சாப்பாடுச்சுவை இன்னும் என் நாக்கில் இருக்கே இவர்கள் போல நட்பு எல்லாம் கேவலம்!ம்ம்
அன்னா இன்னும் கொண்ஜம் பதிவை விரிவா +விலக்கமா எழுத முயற்ச்சி எடுகவும்!
ஆல்ரெடி நல்லாதாண் இருக்கு!
ஆனாளும் ஒரு ஃபீல் மிஸ்ஸிங்!
அதுனாளச்சொன்னேன்!
தொடருங்க்அள் தொடர்கிரேண்!
@தனிமரம்
உண்மைதான் நண்பனின் தங்கையை காதல் செய்வதை என்னாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது நன்றி பாஸ் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@mahesh
கண்டிப்பாக எழுதமுயற்சி செய்கின்றேன் நன்றி நண்பா
Post a Comment