Thursday, February 14, 2013

அபிநயாவின் காதலன் -காதலர் தின சிறப்பு சிறுகதை

முற்குறிப்பு-இந்த கதை ஒரு உண்மைச்சம்பவத்தினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது இந்த கதைக்கான கரு மாத்திரமே உண்மைச்சம்பவம் உரையாடல்கள் இடங்கள்,வர்ணனை, கதையின் முடிவு எல்லாம் கற்பனையே

அபிநயாவின் காதலன்
மாயவனின் செல்போன் சினுக்கியது.எடுத்து பார்த்தவன் இவளா என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டு ஹலோ என்றான்.

ஹலோ மாயவா நான் அபிநயா?

சொல்லுங்க அதான் நம்பரை பார்கவே தெரியுதே

நான் ஏன் போன் எடுத்தேன் என்றால்

வேறு என்னத்துக்கு எடுக்கபோறீங்க அதே பழய கதைதானே.

இல்லை மாயவா நான் சொல்லுறதை ஒரு நிமிடம் கேளுங்க ப்ளீஸ்

நீங்க சொல்லுறதை கேட்க எனக்கு விருப்பம் இல்லை போனைவையுங்கள் ப்ளீஸ் 

சட்டென போனைக் கட் பண்ணினான் மாயவன்.

யார் அபிநயா?யார் மாயவன் ஏன் அவளிடம் அப்படி கோபப்படுக்கின்றான் அவள் செய்த தவறு என்ன 

ஜந்து வருடங்களுக்கு முன்
*********************************************************************************
கிளிநொச்சி நகரத்தின் பிரதான பாடசாலைகளில் அதுவும் ஒன்று உயர்தர வகுப்பின் ஆரம்ப நாட்கள் அபிநயா புதிதாக அந்த பாடசாலைக்கு வந்திருந்தாள்.

பொதுவாகவே பசங்கள் புதிதாக வரும் மாணவியரை அழகை வைத்துத்தான் எடைபோடுவார்கள் பார்த்த உடன் பளிச் என்று தெரியும் பெண்களுக்கு எப்பவும் பாடசாலைகளில் மவுசு கூடத்தான்

ஆனால் அபிநயா பார்த்தவுடன் கொள்ளை கொள்ளும் பேரழகியில்லை.
பொதுவாகவே கலர் கொஞ்சம் குறைவாக இருக்கும் பெண்கள் அழகு இல்லை என்ற ஒரு மாயயை உருவாக்கியவர் யாரோ?


ஒரு பெண்ணின் அழகு என்பது அவள் கலரில் இல்லை என்பதை பலரும் உணர்ந்துகொள்வது இல்லை.

ஆனால் உற்று நோக்கினால் அபிநயாவும் அழகிதான் அவள் கண்களுக்கு ஒரு வசீகரம் இருக்கும்.ஏதோ ஒரு சோகம் கலந்த ஏக்கம் அவள் கண்களில் அவள் கண்கள் ஏதேதோ சொல்லத்துடிக்கும்.

யாருடனும் அதிகமாக பேசாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பாள்.பாடசாலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே மாயவன் அவளை கவர்ந்துவிட்டான் அவனது செயல்பாடுகள் அவளை வெகுவாக ஈர்த்தது.எத்தனையோ ஆண்கள் வகுப்பில் படித்தாலும் அவன் மேல் ஏன் இவ்வளவு ஈர்ப்பு என்று அவளுக்கு புரியவில்லை.ஆனால் அந்த ஈர்ப்பு காதலாக பரிணமிக்க அதிகநாட்கள் எடுக்கவில்லை.

ஆனால் அந்தக் காதலை அவனிடம் சொல்ல அபிநயாவுக்கு தைரியம் இருக்கவில்லை.காலையில் இருந்து மாலைவரை பாடசாலை, டீயூசன் என்று அவனை பார்த்துக்கொண்டேயிருக்க சந்தப்பம் கிடைக்கும் அவனுடன் நட்பாக கதைப்பாள் அவனும் கதைப்பான் ஆனால் அவள் காதலை சொன்னது இல்லை.


அவள் இரவுப்பொழுதுகள்  அவள் நாணத்தை பறிக்கும் கள்வனாக கனவுகளில் மாயவன் வந்து போய்க்கொண்டு இருந்தான் அப்போது எல்லாம் நேரில் எப்போதடா என்று கேட்பாள் விரைவில் என்பான் எல்லாம் கனவில் மட்டுமே.

காலங்கள் ஓடியது பாடசாலை வாழ்க்கையும் முடிந்தது ஒவ்வொறுவரும் ஒவ்வொறு திசைகளில் போயினர்.அபிநயாவுடன் கூடவே சொல்லப்படாத அவள் காதலும் மாயவனைவிட்டு பிரிந்தனர்.
*********************************************************************************
தற்போது புலம்பேர் தேசம் ஒன்றில் வாழும் அபிநயா மீண்டும் மாயவனின் தொடர்பு கிடைக்கும் என்று நினைத்திருக்கவில்லை கால ஓட்டத்தில் அவன் நினைவுகள் மறைந்தாலும் ஏதோ ஒரு மூலையில் சொல்லப்படாத அந்த காதலின் ரணங்கள் அவளினுள் இருந்துகொண்டேயிருந்தது.அவளால் மாயவனை மறக்கமுடியவில்லை.அவன் பற்றி தேடத்தொடங்கினால் எங்கு இருப்பான் எப்படியிருப்பான் என்று அவள் பெண் மனம் காதலால் துடித்தது.

நீண்டகாலத்து முன் பிரிந்த பழயநண்பர்களை சேர்த்துவைக்கும் ஊடகமாக தற்போது பேஸ்புக் பரிணமித்துள்ளது உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நண்பனுடன்.சாட்டிங்கில் நலம் விசாரிக்கவும் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் உதவும் பேஸ்புக் இன்று இன்றியமையாத தேவை போல ஆகிவிட்டது.

பேஸ்புக்கில் மாயவனைக் கண்டு பிடித்தாள் அபிநயா உடனே ரிக்குவஸ்ட் கொடுத்து ப்ரண்டாகி சாட்பண்ணினால் ஒன்றாக படித்தவர்கள் என்ற முறையில் ஆரம்பித்த சாட்டிங் பின் போன் நம்பர்கள் பரிமாறிக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.


ஜந்துவருடங்கள் சொல்லாமல் இதயத்தில் தேக்கிவைத்திருந்த அவள் காதலை எல்லாம் மாயவனிடம் சொன்னாள்.ஆனால் அவனது பதில் இல்லை உங்களை பிடிக்கவில்லை என்று இருந்தது.அவளும் எவ்வளவோ தனது காதலை புரியவைக்க முயன்றும் அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

அவளது தொலைபேசி அழைப்புக்களை துண்டித்துவிடுவான் அவள் அவனுக்கு போன் செய்தால் கடும் வார்த்தைகளால் திட்டிவிடுவான்.

மெல்ல மெல்ல அவளுடன் கதைப்பதை அவன் தவிர்த்துவிட்டான்.இன்று முழுவதும் அவளுடன் அவன் கதைப்பதில்லைஅபிநயாவும் கொஞ்சம் கொஞ்சமாக அவனை மறக்க பழகிவிட்டாள்

இனியும் அவனை நினைத்துக்கொண்டு இருக்காமல் அவள் கண்ணீரை துடைக்க அவளை புரிந்துகொண்ட ஒருவனுக்காக அவள் காத்திருக்கின்றாள் ஆனால் மனதில் ஏதோ ஒர் மூலையில் எமக்கு ஏற்பட்ட முதல் காதலின் வலி இருந்துகொண்டேயிருக்கும்.அதற்கு அபிநயாவும் விதிலக்கு இல்லை.

காதல் சிலருக்கு இலகுவாக கிடைத்துவிடும் சிலருக்கு கடைசிவரை கிடைக்காமலே போய்விடும் ஆனால் காதலை சந்திக்காத மனிதர்கள் எவறும் இருக்கமாட்டார்கள்.எல்லோர் வாழ்விலும் ஒரு காதல் கடந்து போயிருக்கும் கடந்த காலங்களை தூக்கி எறிந்துவிட்டு நிகழ்காலத்தில் வாழப்பழகவேண்டும்.கடவுள் எம்மிடம் இருந்து ஒன்றை எடுத்துக்கொள்கின்றார் என்றால் அதைவிட சிறப்பாக ஒன்று எமக்காக இந்த உலகில் இருக்கு என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை சந்தோசமாக வாழ்வோம் 

காதலில் இருந்தவர்களுக்கும் காதலித்துக்கொண்டு இருப்பவர்களுக்கும், இனிமேல் காதலிக்க போகின்றவர்களுக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

படங்கள் (நடிகை தன்ஷிகா உடையது)--கூகுள்


Post Comment

3 comments:

jgmlanka said...

கதை மனதை டச் பண்ணுது... சொல்ல வேண்டிய காலத்தில் சொல்லாமல், கையை விட்டு போன காதலுக்காக ஏங்குவது அர்த்தமற்ற ஒன்று...
இதை ஒரு உவமானக் கதை மூலமாக (அதுவும் உண்மை தழுவியது..) அழகாக கூறியிருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை (சிவப்பு எழுத்துக்கள்)

வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

ம்ம் காதல் புரிந்துகொள்(ல்) ள முடியாத ஒரு காலகட்டம் பள்ளிப்பருவம் .மாயவன் நிலையை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருகலாம்.

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails