பொதுவாகவே பெண்கள் பசங்க அளவுக்கு வெளிப்படையாக இருக்கமாட்டார்கள் என்று சொல்வார்கள்.அவள் தனது ஆசைகளை ஆண்களைப்போல வெளிப்படையாக பேசுவது இல்லை.
ஒரு பையனுக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கின்றது என்றால் அவன் அவளிடம் காதலை சொன்னால் அவனை தைரியசாலியாகவும் சினிமா ஹீரோ கணக்காகவும் பார்கும் நண்பர் கூட்டம் அதே ஒரு பெண் ஒரு பையனிடம் வலியவந்து காதலை சொன்னால் அவளை அந்த மாதிரி பெண்ணாக பார்பது நியாயமா? எல்லோறையும் பொதுவாக குற்றம் சொல்லவில்லை ஆனால் இப்படி இல்லை என்றும் யாரும் மறுக்க முடியாது
இது சரக்கு மச்சான் அதான் தானாக வந்து வலியுது.இதுதான் பெரும்பாலும் நண்பர் கூட்டங்களிடையே ஒருவனிடம் ஒரு பெண் வலிய வந்து காதலை சொன்னால் அவள் பற்றிய பார்வையாக இருக்கின்றது
என் நண்பன் ஒருவனை ஒரு பெண் காதலித்தால் அவள் அவனிடம் காதலை சொன்னபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.நண்பர்களிடம் கதை வந்தது இப்படி ரவியை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) விஜி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலிக்கிறாளாம்.ஒரே இம்சையாம் ரவிக்கு இரவிரவாக போன் பண்ணி தொல்லை கொடுக்கின்றாளாம் என்று
அப்ப ஒரு நண்பன் சொன்னான் அவள் சரக்கு மச்சான். அவள் படிக்கும் போதே அவளை ஒருத்தனும் கணக்கு எடுக்கமாட்டாங்க.அவளின் காதலை நீ ஏற்றுக்கொண்டால் உன்னை கேவலமாக பார்பாங்கள் அது எல்லாம் ஒரு பிகர் என்று அவளும் அவளின் காதலும் நல்லா பேச்சுக்கொடுத்துவிடு என்று இலவச ஆலோசனையை அள்ளி வழங்கினான்.
இன்னும் ஒருவன் சொன்னான் இல்லை மச்சி அவள் இப்ப இருக்கிற இடம் நல்லம் அவள் காதலை ஏற்றுக்கொண்டால் உனக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று.
இப்படி மாறி மாறி நண்பர்களால் ஆலோசனைகள் அவனுக்கு கொடுக்கபட்டன.இறுதியில் அந்த பெண் ஒரு நாள் போன் எடுக்கும் போது ஒரு நண்பன் இங்க கொண்டா நான் கதைக்கிறேன் என்று ரவியிடம் போனை வேண்டி கதைத்தான் என்ன கதைச்சானோ தெரியவில்லை அதுக்கு பிறகு அவள் போன் எடுப்பதேயில்லை ரவிக்கு.
இதுவே ரவிக்கு விஜி மேல் காதல் வந்து இருந்தது என்றால் நண்பர்கள் என்ன செய்து இருப்பார்கள் நாங்க இருக்கோம் மச்சான் நீ தைரியமாக ரை பண்ணு
ஆனால் அவள் காதலை சொன்னதால் அவள் சரக்கு. என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்
ஒரு பெண்ணுக்கு காதல் வந்தால் அவள் அதை வெளிப்படுத்த கூடாதா?ஆணோ பெண்ணோ இதயம் ஒன்றுதானே.முதலில் நமது சமூக அமைப்பில் பெண்கள் பற்றி இருக்கும் பார்வை மாறவேண்டும் ஒரு பெண் ஒருவனிடன் நட்பாக பழகினாலே காதல் என்று கதைக்கும் சமூகத்தில் ஒரு பெண் வலிய வந்து அவள் காதலை சொன்னால் அவளை சரக்கு என்றுதானே சொல்வார்கள்.
படங்கள்-கூகுள் படங்களுக்கும் பதிவுக்கும் சம்மந்தம் இல்லை
முஸ்கி-சரக்கு என்றால் அந்த மாதிரியான பெண்கள் என்று அர்த்தம்,இந்தியாவில் சரக்கு அடித்தல் என்றால் மது அருந்துதல் என்று பொருள் படும் ஆனால் இலங்கையில் சரக்கு அடித்தல் என்றால் வேறு அர்த்தம்
|
13 comments:
உண்மை உண்மை... நாம திருந்திறது கஸ்ரம்தான்...ஆனால் மிஸ்பண்ணியபின் எல்லாம் தானாகவே புரிந்துவிடும்
சரக்கு என்றும் பாவிப்பார்கள் ஐட்டம் என்றும் பாவிப்பார்கள்
மலையாளத்தில் கூட சரக்கு என்றால் நீங்கள் சொல்லும் அர்த்தம் தான்... நன்றி நண்பரே...
@Kiruththikan Yogaraja
////
உண்மை உண்மை... நாம திருந்திறது கஸ்ரம்தான்...ஆனால் மிஸ்பண்ணியபின் எல்லாம் தானாகவே புரிந்துவிடும்
சரக்கு என்றும் பாவிப்பார்கள் ஐட்டம் என்றும் பாவிப்பார்கள்////
சில இடங்களில் மாஞ்சான் என்றும் சொல்வார்கள் நிறைய சொற்பிரயோகங்கள் இருக்கு பாஸ்
@ஸ்கூல் பையன்
////
மலையாளத்தில் கூட சரக்கு என்றால் நீங்கள் சொல்லும் அர்த்தம் தான்... நன்றி நண்பரே..////
அப்படியா தகவலுக்கு நன்றி
ஆவ்வ்வ்வ்......ராஜ்.. மிக்க நன்றி.. இப்படி ஒரு பதிவு ஆண் பதிவரிடம் இருந்து வருவதே பெண்விடுதலையின் ஓர் வடிவம் தான். இந்தப் பதிவு என் மனதைத் தொட்டுவிட்டது. நான் இந்த விடயம் பற்றிப் பலதடவை மனதுக்குள் புழுங்கியிருக்கிறேன்.
தம்பி, என் சொந்த அனுபவத்தில் கூட, நானாகத் தான் என் கணவனிடம் காதலை வெளிப்படுத்தியிருந்தேன்.. ஆனால் நல்லவேளை.. என் கணவருக்கு அந்த நேரத்தில் அப்படியான நண்பர்கள் இருக்கவில்லை..
இந்த விடயம் வாலிபர்களால் சிந்திக்கப்பட வேண்டியதே.. பெண்களின் சிறுசிறு பிரச்சனைகளுக்கு எல்லாம் எப்பொழுது குரல் கொடுக்க ஆரம்பிக்கிறோமோ.. அப்பொழுது பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக போராட ஆரம்பிக்கிறோம் என்று நம்புகிறேன்.. எனவே எமக்காக குரல் கொடுக்கும் உங்களுக்கு ஹட்ஸ் ஒஃப்... மிக்க நன்றி...பாராட்டுக்கள்..தொடருங்கள்..
@பூங்கோதை
நன்றி அக்கா உங்கள் கருத்து மேலும் இப்படியான விடயங்கள் பற்றி எழுதத்தூண்டுக்கின்றது ஏதோ எங்களால் முடிந்ததை செய்வோம்
நியாயமான கேள்விதான்.... எதுவும் வலியக் கிடைப்பின் அதன் அருமை தெரிவதில்லை, கஸ்டப்பட்டு எடுக்கும்போதுதான் அருமை தெரிகிறது.
ஒரு புத்தகம்கூட காசு கொடுத்து வாங்கினால்ல்... பத்திரமாக வைப்போம், அது இலவசமாக கிடைக்கிறதெனில் மரியாதை இருப்பதில்லை அதுக்கு...
உண்மைதான் சமூகம் அப்படி!ம்ம்
இதை படிக்கையில் நெஞ்சம் பற்றி எரிகிறது..இந்த ஆண் வர்க்கம் அடங்கவே அடங்காது..இவர்களுக்கு பெண்கள் என்றாலே கேலி கூத்தாகி விட்டது..காதலைச் சொன்னால் மட்டுமா..ஒரு ஆணிடம் பேசினாலே போதும்..கல்லை போடுது இது item , piece ,பிகர் என்று என்னவெல்லாம் பெயர் வைக்கிறார்கள்..தலை குனிந்து போகும் போதும் பெண்ணின் பாதத்தை பார்த்தே கவிதை சொன்ன இளைஞர் கூட்டம் இன்று எங்கோ போய்க் கொண்டிருக்கிறது..இந்த அரக்க கூட்டத்திடம் இருந்து எப்போதும் எம் இனத்திற்கு விடுதலை இல்லை..
@athira
நன்றி அக்கா
@தனிமரம்
நன்றி பாஸ்
@ஆதிரா
////
இதை படிக்கையில் நெஞ்சம் பற்றி எரிகிறது..இந்த ஆண் வர்க்கம் அடங்கவே அடங்காது..இவர்களுக்கு பெண்கள் என்றாலே கேலி கூத்தாகி விட்டது..காதலைச் சொன்னால் மட்டுமா..ஒரு ஆணிடம் பேசினாலே போதும்..கல்லை போடுது இது item , piece ,பிகர் என்று என்னவெல்லாம் பெயர் வைக்கிறார்கள்..தலை குனிந்து போகும் போதும் பெண்ணின் பாதத்தை பார்த்தே கவிதை சொன்ன இளைஞர் கூட்டம் இன்று எங்கோ போய்க் கொண்டிருக்கிறது..இந்த அரக்க கூட்டத்திடம் இருந்து எப்போதும் எம் இனத்திற்கு விடுதலை இல்லை../////
உங்கள் சிறப்பான கருத்துரக்கு நன்றி சகோ,ஒட்டு மொத்தமாக எல்லா ஆண்களையும் குற்றம் சொல்லிவிடமுடியாது.பெரும்பாலும் பெண்கள் கூட பெண்களுக்கான சுகந்திரத்திற்கு தடையாக இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கு நம் சமுதாய அமைப்பில் நம் சமுதாய அமைப்பு மாறும் வரை முழுமையான பெண் சுகந்திரம் என்பது கேள்விக்குறியே
வணக்கம்,ராஜ்!///காலாதி காலமாக தொடர்வது தான்.மறு ஜென்மத்திலாவது திருந்துவார்களோ,என்னமோ?
Post a Comment