பாஸ்வேட் மிகவும் முக்கியமான ஒன்று எமது பாஸ்வேட் யாருக்கும் தெரிந்துவிட்டால் பிறகு பிரச்சனைதான்.பாஸ்வேட்டை கண்டு பிடிப்பதற்கு தொழில்நுட்ப அறிவு நிச்சயம் தேவை ஆனால் தொழில்நுட்ப அறிவு தேவையில்லாமல் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தாலே நாம் பாஸ்வேட்டை கண்டு பிடித்துவிடலாம் எப்படி சொல்கின்றேன் பொறுமை.
அதாவது நம்ம பசங்கள் பெரும்பாலும் ஞாபக மறதி பிடிச்சவங்க பேஸ்புக், ப்ளாக்கர் என்று எல்லா எக்கவுண்டுக்கும் ஒரே பாஸ்வேட்தான் செட் செய்து வைச்சிருப்பாங்க அவங்களின் ரசனையை கவனித்தால் பாஸ்வேட் கண்டு பிடிப்பது ஈசி.
அதாவது அவனுங்களின் முன்னால் காதலிகள் பெயர்களை இல்லை அவனுங்க டாவடிக்கும் பிகருகளின் பெயர்களை அறிந்துகொள்ளவேண்டும் அப்பறம் அந்த பிகருகளின் பிறந்த திகதி ஆண்டு இப்படியானவற்றையும் அறிந்துகொள்ளவேண்டும் இதை அறிந்துகொள்வது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை கொஞ்சம் பேச்சுக்கொடுத்து மச்சி உன் காதல் கதைகளை கொஞ்சம் சொல்லுடா என்றால் நம்ம பசங்க உஷார் ஆகி உடனே எடுத்துவிடுவான்கள் அப்படியே அவள் பிறந்த நாள் எப்படா என்றால் சொல்லிடப்போறாங்க அப்பறம் அதைவைத்து ஒரு கணக்கு போட்டால் பாஸ்வேட்டை கண்டுபிடிச்சிடலாம்
உதாரணமாக ஒருத்தனின் முன்னால் காதலி பெயர் Rammiya அவள் பிறந்த திகதி 1989 -2-14 என்றால்
நாம் அதை பலமுறைகளில் திருப்பி திருப்பி எழுதிபார்க்கவேண்டும் உதாரணமாக 1989214 rammiya ,rammmiya 1421989,1421989rammmiya,2141989rammiya வேண்டும் என்றால் ஸ்டார் போன்ற குறியீடுகளையும் சேர்த்து எழுதவேண்டும் 1989214 rammiya*,*1989214 rammiya*, இதில் ஏதாவது ஒன்றுதான் அவனின் பாஸ்வேட்டாக இருக்கும் மாறிமாறி முயற்சி செய்தால் கண்டு பிடித்துவிடலாம்.
முன்னால் காதலி பெயர்கள் என்று மட்டும் இல்லை அவங்களுக்கு பிடித்த நடிகைகளின் பெயர்களோ இல்லை கிரிக்கெட் வீரர்களின் பெயர்களோ இப்படி எழுதிப்பார்க்கவேண்டும் அவன் அதிகம் எதை பற்றி பேசுகின்றான் என்று அறிந்துகொண்டால் வேலை இலகு.
(அப்படினா கங்குலி பெயரையோ இல்லை தேவயானி,சரன்யாமோகன் பெயரையோ எழுதி பார்த்தால் என் பாஸ்வேட்டை கண்டுபிடித்துவிடலாமா என்று எவம்லே கேட்குறது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
ரெடி ஸ்டாட் மீயூசிக்.................அசத்துங்க
இது ஒரு மொக்கை மரணமொக்கை பதிவு என்று கடைசியில் சொல்லத்தான்வேண்டுமா?இப்படி முயற்சி செய்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் நான் சும்மா ஒரு மொக்கை போடுவோம் என்று நினைத்தேன் அதேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................
*********************************************************************************
ஒரு காலத்தில் பதிவுலகில் எவ்வளவு பிசியாக இயங்கினோம்.பதிவு போட்டுவிட்டு மைந்துவின் தளத்தில் ஹன்சி பற்றி ஒரு பதிவை படித்துவிட்டு அப்படியே நிரூபன் அவர்களின் நாற்றில் ஒரு காரசாரமான விவாதம் செய்துவிட்டு,விக்கி மாம்ஸ் தளத்தில் ஏதாவது எடக்கு மொடக்கான கமண்ட் போட்டுவிட்டு,சி.பி அண்ணனின் திரை விமர்சனம் படித்துவிட்டு துஷியின் தளத்தில் ஏதாவது கலாய்த்து கமண்ட் போட்டுவிட்டு,தனிமரம் ப்ளாக்கில் ஒரு கமண்ட் போட்டுவிட்டு,பாலகணேஸ் பாஸ் பதிவில் ராஜேஸ்குமார் பற்றிய பதிவு படித்துவிட்டு சுரேஸ் அண்ணன் வீடு தளத்தில் சகிலா பட விமர்சனம் படித்துவிட்டு அவ்வ்வ்வ்வ்வ் அண்ணே மன்னிச்சூ.....
தமிழ்வாசி,வேடந்தாங்கல்,கவிதைவீதி,கானாமல் போன கனவுகள்,அகாதுகா அப்பாடக்கர்ஸ்,தமிழ் ஆதி என்று பல தளங்களில் கும்மி அடித்துவிட்டு பின் செங்கோவி அண்ணன் தளத்தில் நள்ளிரவு கடந்தும் கும்மி தொடரும்....................அது ஒரு காலம் இப்ப எல்லாம் பதிவுலக பக்கம் வரவே மனம் வரவில்லை.மேலே நான் குறிப்பிட்ட பல பதிவர்களும் எழுதுவதை குறைத்துக்கொண்டார்கள் இல்லை ஒதுங்கிவிட்டார்கள்......(சி.பி அண்ணன் விதிவிலக்கு அவருக்கு பதிவுகோமியா போல சாப்பிடாமல் கூட இருப்பார் போல அண்ணன் பதிவு போடாமல் இருக்கமாட்டார் போல அவ்வ்வ்வ்வ் அண்ணே மன்னிச்சூ)
மீண்டும் இப்போது மெல்ல மெல்ல பழய பதிவர்கள் பலர் எழுதத்தொடங்கிவிட்டார்கள் என்பது சந்தோசமான விடயம் நாஞ்சில் மனோ அண்ணன் மீண்டும் ப்ளாக்கை தூசி தட்டியுள்ளார்,விக்கி மாம்ஸ் தூசி தட்டுவதாக அறிவித்தார்,தமிழ்வாசி அண்ணன் அவர்கள் இரண்டாவது இனிஸ்சை ஆரம்பித்துவிட்டார்....இதனால் நானும் மீண்டும் பதிவுலகில் சீராக இயங்கலாமா என்று யோசித்து வருகின்றேன் பார்போம் சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் அந்த பழய கும்மிகளை தொடர்வோம்
ஒரு புதிய தொடரையும் விரைவில் நண்பர்கள் தளத்தில் எதிர்ப்பாருங்கள்
*********************************************************************************
|
7 comments:
ஒரு வாட்டி முகநூலில் முகம் பதித்து விட்டால், மீள்வது கஷ்டம்... உங்களை முகநூலில் அதிகம் பார்க்கிறேன்...
எல்லாம் முகநூல் தான் - பாப்போம்
மொக்கையிலும் மொக்கையான விசயம் பாஸ்வேட் குழப்பம் :))) என் பாஸ்வேட் எல்லாம் சினேஹா பேரில் இல்லையப்பா:))))
புதிய தொடருக்கு வாழ்த்துக்கள் மூத்தவர்கள் தொடர்ந்து எழுதுவது என்றும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று!
@திண்டுக்கல் தனபாலன்
////ஒரு வாட்டி முகநூலில் முகம் பதித்து விட்டால், மீள்வது கஷ்டம்... உங்களை முகநூலில் அதிகம் பார்க்கிறேன்...////உண்மைதான் பாஸ் முகநூலில் அதிகம் நேரம் செலவிடுவதால் பதிவுலகில் ஆர்வம் குறைந்துவிட்டது இனி மீண்டும் பதிவுலகில் பட்டைய கிளப்புவோம் நன்றி பாஸ்
@முத்தரசு
////
எல்லாம் முகநூல் தான் - பாப்போம்////ஆம் உண்மைதான் மீண்டும் பதிவுலகில் பட்டைய கிளப்புவோம் என்று நினைக்கின்றேன் பார்ப்போம்
@தனிமரம்
////
மொக்கையிலும் மொக்கையான விசயம் பாஸ்வேட் குழப்பம் :))) என் பாஸ்வேட் எல்லாம் சினேஹா பேரில் இல்லையப்பா:))))//// விஜய் பெயரில் இருக்கு போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment