பல ஆண்டுகளைத் தாண்டி காவியமாக ரசிகர்கள் மனதில் நிற்கும் படம் அலைகள் ஒய்வதில்லை அந்த அளவுக்கு கடல் படத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.பாரதிராஜா பாரதிராஜா தான்.
கடல் படம் பார்க்கும் போது இது மணிரத்னம் படமா? சந்தேகமாக இருக்கீது ரஹ்மான் இசையா அதுவும் சந்தேகமாயிருகீது.வழமையாக மணிரத்னம்,ரஹ்மான் கூட்டனியில் வெளிவரும் படங்கள் பாடல்கள் நச்சினு மனசில் நிற்கும் அனால் இதுல ஒன்னுமே புரியல.
கெளதம் கார்த்திக் |
அப்பறம் 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அரவிந்தசாமி மீண்டும் கடல் படத்தின் மூலம் இரண்டாவது இனிங்சை ஆரம்பித்து இருக்கார்.மனுசன் அப்படியே இருக்கார் இப்பவும் ஹீரோவாக நடிக்கலாம் போல
அரவிந்சாமியை இனி பல படங்களில் பார்கலாம் போல இது அவரது ரசிகர்களுக்கு சந்தோசம் தரும் விடயம்
கெளதம் கார்த்திக் நடிப்பில் தேறிவிடுவார் அடுத்த அடுத்த படங்களை சிறப்பாக தேர்வு செய்து நடித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.
துளசி நடிகை ராதாவின் இரண்டாவது மகள் ஏற்கனவே முதலாவது மகள் கார்த்திகா கோ படத்தின் மூலம் அறிமுகம் ஆகிவிட்டார்.முன்பு சகோதரிகளாக தமிழ் சினிமாவை கலக்கிய அம்பிகா,ராதா அளவுக்கு இவர்கள் சினிமாவில் சாதிப்பார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்
துளசி |
பொதுவாக தமிழ் சினிமா ஹீரோயின்கள் படத்தில் தனக்குத்தானே சிரிச்சு கொள்வார்கள்.சிறுபிள்ளைத்தனாமாக சிரிச்சுக்கொண்டு பார்பவர்களை கடுப்பேத்துவார்கள். உதாரணமாக சந்தோச சுப்பரமணியம் ஹாசினி கேரக்டர் பலரால் ரசிக்க பட்டாலும் அப்படி ஒரு லூசுத்தனமாக ஒரு பெண் இருப்பாளா என்றால் டவுட்டுத்தேன்.
அது மாதிரி ஒரு லூசுத்தனமாக கடல் படத்தில் துளசி வருகுது போகுது ஆனால் மணிரத்னம் சார் அதுக்கு ஒரு விளக்கம் கொடுக்கிறார் பாருங்க அங்க நிற்கிறார் மணிரத்னம்.
அதாவது ஹீரோவிடம் துளசி இருக்கும் ஹாஸ்டலின் மதர் சொல்வார்..
நல்லா பழகுவா கலகலனு இருப்பா ஆனால் மனசு மட்டும் குழந்தை மாதிரி சைக்காலஜிக்கா சொல்லனும்னா சின்ன வயசில் ஏற்பட்ட ஏதோ ஒரு சம்பவத்தால் அவள் ஆழ் மனசு வளரவில்லை அது குழந்தைத்தனத்துடன் நின்றுவிட்டது என்று.
படம் சுத்தமாக மோசம் என்று சொல்லமுடியாது முன்பகுதியில் அலுப்புதட்டினாலும் பின்பகுதியில் ஒரளவு பார்க்ககூடியமாதிரி இருக்கு.
சச்சின் எல்லா போட்டிகளிலும் சதம் அடிக்கனும் என்று எதிர்பார்பது ரசிகனின் எதிர்ப்பார்ப்பு ஆனால் அவரால் அடிக்கமுடிவதில்லை என்றால் ஏமாற்றம்தான்
அது போல மணிரத்னம் படங்கள் எப்பவும் ரோஜா,உயிரே,பம்பாய் போன்று சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாதே.
ஆனாலும் இன்னும் சிறப்பாக இந்த படத்தை கொடுத்திருக்கலாம் படத்தில் கெளதம் கார்த்திக்கைவிட அர்ஜுன்,அரவிந்தசாமி இவர்களுக்குத்தான் அதிகமுக்கியத்துவம் இருக்கு.ஆனால் அவர்களும் இல்லாவிட்டால் படம் சொதப்பியிருக்கும்.
கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக்,ராதாவின் இளைய மகள் துளசி தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை சிறப்பாக சாதிக்க வாழ்த்துக்கள்.சாதிப்பார்கள் பெற்றோரின் பெயரை காப்பாற்றுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்
*********************************************************************************
இந்த உலகைவிட்டு மறைந்த சகபதிவர் டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்.
இந்த உலகைவிட்டு மறைந்த சகபதிவர் டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்தனைகள்.
*********************************************************************************
|
9 comments:
பகிா்விற்கு நன்றி நண்பா...பொறுத்திருந்து பாா்ப்போம்....!சந்திப்போம் சொந்தமே!
...ம்ஹீம்... இருவரும் தேறுவதற்கு கஷ்டம்...
டோண்டு ராகவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
சக பதிவரின் ஆன்மாஅ சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@Athisaya
வரவுக்கு நன்றி
@திண்டுக்கல் தனபாலன்
ம்ஹீம்... இருவரும் தேறுவதற்கு கஷ்டம்...
டோண்டு ராகவன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...////
எல்லோறும் அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்
@ராஜி
////
சக பதிவரின் ஆன்மாஅ சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்////
எல்லோறும் அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்
@river livejobs
தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்...////
தகவலுக்கு நன்றி
ராகவன் ஆத்மா சாந்தியடைப்பிரார்த்திப்போம்!
டோண்டு சாருக்கு அஞ்சலிகள்!
கடல் அலசல் கலக்கல்! இரண்டு வாரிசுகளும் சாதிப்பார்களா? பார்க்கலாம்!!
Post a Comment