மைக்கல் கிளார் தலைமையிலான ஆஸ்ரேலிய அணியை தோனி தலைமையிலான இந்திய அணி அடித்து துவைத்து காயப்போட்டுள்ளது டெஸ்ட் தொடரை 4-0 என்று முழுமையாக கைப்பற்றியது.
ஷேர்வோர்ன்,மெக்ராத்,பொண்டிங்,கில்கிறிஸ்ட்,ஹைடன்,பொண்டிங்,பிரட்லி,என்று ஜாம்பவான்கள் யாரும் ஆஸ்ரேலிய அணியில் இல்லை. ஒரு இளமை துடிப்போடு கூடிய ஆஸ்ரேலிய அணிதான் இந்தியாவுடன் வாங்கி கட்டியது.அதுவும் மைகல் கிளார்க்,சேன் வாட்சன் இன்னும் சிலர் தவிற வேறு யாரும் இந்திய மண்ணின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அற்றவீரர்களே.
சுழல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க கூடிய இந்திய ஆடுகளங்களில் அணியில் சுழல் பந்துவீச்சாளர்கள் அவசியம் தேவை ஆனால் முதலாவது டெஸ்ட்டில் ஒரு சுழல் பந்துவீச்சாளருடன் மைகல் கிளார்க் களம் இறங்கும் போதே நினைத்தேன் நல்லா வாங்கி கட்டப்போகின்றார்கள் என்று.அதுவே நடந்தது..
கடந்த இங்கிலாந்து தொடரில் கூட முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும் மொண்டி பனேசரை அணிக்குள் எடுத்து இந்தியாவை துவைத்து எடுத்தார் இங்கிலாந்து கேப்டன் குக்.
ஆனால் மைகள் கிளார்க் அப்படி ஏதும் செய்யவில்லை.இரண்டு,மூன்று சுழல் பந்துவீச்சாளருடனாவது மைக்கல் கிளார்க் விளையாடி இருந்தால் ஓரளவு இந்திய அணியை சமாளித்து இருக்கலாம்..உலக தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் யாரும் தற்போது ஆஸ்ரேலிய அணியில் இல்லை ஷேன் வோர்னுடன் அந்த சகாப்தம் முடிந்துவிட்டது.பார்போம் எதிர்காலத்தில் ஆஸ்ரேலிய சுழல் பந்துவீச்சு எப்படி இருக்கப்போகின்றது என்று.
ஆஸ்ரேலிய துடுப்பாட்டம் இந்த தொடரின் படு மோசம் மைக்கல் கிளார்க் தவிர யாரும் பார்மில் இல்லை.பெரும்பாலும் பந்துவீச்சாளர்களே இந்த தொடரில் துடுப்பாட்ட வீரர்களாக மாறியிருந்தார்கள்
இன்னும் ஒரு பிரச்சனை ஆஸ்ரேலிய அணியில் இருக்கு அணியில் என்பதைவிட ஆஸ்ரேலிய கிரிக்கெட் சபையிடம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.ஆம் அதிரடி என்ற பெயரில் எடுக்கும் வீணான சில நடவடிக்கைகள் உதாரணமாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்று மனரீதியாக சோர்வடைந்த அணியில். ஆலோசனை கூறவில்லை என்று சப்பை காரணத்துக்காக ஷேன் வாட்சன்,மிச்சல் ஜோன்சன்,உட்பட நான்கு வீரர்களை அடுத்த போட்டியில் இருந்து அதிரடியக நீக்கியது.
இப்படியான செயல்பாடுகளினால் வீரர்கள் மனரீதியாக சோர்வடைந்துவிடுவார்கள்.
ஆஸ்ரேலியாவின் மிகச்சிறந்த மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் மைக் ஹசி கடந்த இலங்கை தொடரின் போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வை அறிவித்ததும்.அடுத்து நடந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் இருந்து அவரை நீக்கியது. என்று ஆஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் அதிரடி நடவடிக்கைகள் பல நேரங்களில் அவர்களுக்கு பாதகமாகத்தான் அமைக்கின்றது.இப்படியான நடவடிக்கைகளை அவர்கள் குறைத்துக்கொள்ளவேண்டியது ஆஸ்ரேலிய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதாகும்.
எவ்வளவு பெரிய வீர்ராக இருந்தாலும் சில போட்டிகளில் சிறப்பாக ஆடவில்லையாயின் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற ஆஸ்ரேலிய அணியின் நிர்வாகத்தில் நீண்டகாலம் விளையாடிய,ஷேர்ன் வோர்ன்,மெக்கார்,கில்கிறிஸ்ட்,ஸ்ரிவோக்,பொண்டிங் போன்றவர்கள் உண்மையிலே ஜாம்பவான்கள் தான்.
மைக்கல் வோகன் தலைமையிலான் இங்கிலாந்து அணி என்று பொண்டிங் தலமையிலானான ஆஸ்ரேலிய அணிக்கு ஆசிஸ் தொடரில் மரண அடி கொடுத்ததோ அன்றே ஆஸ்ரேலியாவின் வீழ்ச்சிப்பாதை ஆரம்பித்துவிட்டது
பல ஜாம்பவான்கள் ஒரே நேரத்தில் ஒய்வு பெற்றது அவர்களுக்கு நிகரான மாற்றுவீரர்கள் இன்னும் கண்டுப்பிடிக்கபடாமையும்,ஆஸ்ரேலிய அணி நிர்வாகத்தின் அதிரடி முடிவுகளும் என்று மெல்ல மெல்ல ஆஸ்ரேலிய கிரிக்கெட் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றது.இது விரைவில் சரி செய்யப்படாவிட்டால் மேற்கிந்திய தீவுகளின் நிலை ஆஸ்ரேலியாவுக்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
அனேகமாக நினைக்கின்றேன் மைக்கல் கிளார்க்கின் தலைமைப்பதவி ஆட்டம் கண்டுள்ளது.அவருக்கு ஆப்பு வெயிடிங்.
அசத்தியது தோனி அணி
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் அதுக்கு எல்லாம் முற்றுப்புள்ளிவைத்துள்ளது.அதுவும் இளம் வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கு.குறிப்பாக தவான்,புஜார,முரளிவிஜய்,ஜடேஜா,அஸ்வின் என்று அசத்தினார்கள்.
முரளிவிஜய் இந்த தொடரின் மூலம் ஆரம்ப துடுப்பாட்ட வீராக தனது இடத்தை அணியில் சில காலத்துக்கு உறுதி செய்து உள்ளார்.கம்பீர்,சேவாக் இனி இருவரும் அணிக்குள் வருவது கஸ்டம் தான்.ஒருவர் வரலாம் இருவரும் ஒரேயடியாக வருவது இயலாத காரியம்.அதுவும் தவான் முதல் போட்டியிலே அசத்திய நிலையில் அடுத்த போட்டிகளில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என நினைக்கின்றேன் ஒரு நாள் போட்டிகளிலும் இந்த நிலை தொடர சந்தப்பம் உண்டு
வெளிநாட்டு ஆடுகளங்களிலும் இப்படியே இளம் வீரர்கள் சிறப்பாக செயல் படும் இடத்து இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் பொறுத்திருந்து பார்போம்.
அடுத்து சச்சின் இவராக இவர் மரியாதையை இவரே கெடுத்துக்கொள்வார் போல சச்சினை அணியில் இருந்து நீக்குவது என்பது கடினமான முடிவு
தோனியோ,தேர்வுக்குழுவோ அப்படி ஒரு முடிவை எடுக்க யோசிப்பார்கள்.இதையே சாதகமாக பயன்படுத்தி சச்சின் அணியில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றாரோ என்றுதான் எண்ணத் தோன்றுக்கின்றது அண்மைகாலமாக பெரிதாக பிரகாசிக்காத சச்சின் கெளரவமாக ஒதுங்கி இளம் வீரர்களுக்கு வழிவிடலாம்.
198 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை சச்சின் விளையாடியுள்ளார் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் 200 டெஸ்ட் போட்டிகளின் விளையாடிய முதல் வீரராக சச்சின் சாதனை படைப்பார்.அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடரில் இந்த சாதனையை படைத்த கையுடன் சச்சின் ஒய்வு பெறலாம்.இனியும் அவர் அணியில் ஒட்டிக்கொண்டு இருப்பது அவரை போன்ற ஜாம்பவான்களுக்கு அழகில்லை.பார்போம் என்ன செய்கின்றார் என்று.
********************************************************************************
தோனி ஆளுங்களை கொஞ்சம் உசுப்பேத்திவிடலாம்னு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மெக்ராத்,ஷேன் வோர்ன்,பிரட்லீ,மைத்யூ கெய்டன்,அடம் கில்கிறிஸ்ட்,ரிக்கி பொண்டிங்,ஸ்ரிவோக் என்று ஜாம்பவான்கள் ஆஸ்ரேலிய அணியில் இருந்த போதே போடர்&கவாஸ்கர் கோப்பையை கையில் ஏந்தியவர்தான் எங்க தல
ஆனால் பில்லக்கா ஆஸ்ரேலிய அணியை பந்தாடிவிட்டு தோனிக்கு பந்தாவ பாரு
எனக்கு தோனியிடம் பிடித்தது அவரது சிரிப்பு வென்றாலும் தோற்றாலும் எப்பவும் கூலாக இருப்பது அவரது சிறப்பு.
ஆனால் தாதா என்னதான் சிறந்த கேப்டனாக இருந்தாலும் சிரிப்பை மட்டும் மனுசன் முகத்தில் பார்க்கவேமுடியாது வென்றாலும் தோற்றாலும் மனுசன் ஆக்ரோசமாகத்தான் இருப்பார் அதுவே அவரது ப்ளஸ் அதே சமயம் மைனஸும் அதுதான்.
ஆனால் தாதா என்னதான் சிறந்த கேப்டனாக இருந்தாலும் சிரிப்பை மட்டும் மனுசன் முகத்தில் பார்க்கவேமுடியாது வென்றாலும் தோற்றாலும் மனுசன் ஆக்ரோசமாகத்தான் இருப்பார் அதுவே அவரது ப்ளஸ் அதே சமயம் மைனஸும் அதுதான்.
தாதா போல வருமா?
********************************************************************************
முஸ்கி-நீண்ட நாட்களாக கிரிக்கெட் பத்தி ஒன்று எழுதவில்லை(நீ பதிவே
இப்ப எல்லாம் எழுதுவதில்லை என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் நான் கேட்ச்
பண்ணிடேன்)இனி கிரிக்கெட் பற்றிய பதிவுகளை இடைக்கிடையில்
தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கேன்
|
10 comments:
நல்ல அலசல் நண்பரே...
தாதாவின் மீது இருக்கும் பிரியம் வியப்பை தருவதில் சந்தேகமில்லை.... தொடர வாழ்த்துக்கள்...
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
பில்லக்கா அணியாக இருந்தாலும் வாஷ்அவுட் ஆக்குவது என்பது ஒரு சாதனைதான். அதுவும் ஆஸ்திரேலியா போன்ற அணியை வாஷ்அவுட் ஆக்குவது என்பது சாதாரணமல்ல. அந்த வகையில் தோனி திறமைசாலிதான்.
என்ன இருந்தாலும் தாதா மாதிரி வருமா?
@பாலா
ஹா.ஹா.ஹா.ஹா........அது சும்மா தோனி ஆளுகளை கடுப்பேத்த அவ்வ்வ்வ்வ்வ்
வாங்க பாஸ் நீண்டநாளைக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி
2000ம் ஆண்டில் இருந்தே கிரிக்கெட் பார்ப்பது குறைந்து விட்டது தற்பொழுது பேப்ப்பரில் படிப்பதோடு முடிந்து விட்டது. அருமையான பதிவு தெண்டுல்கர் ஆஸி அணியில் இருந்தால் எப்போதே கழட்டி விட பட்டு இருப்பார்
தாதாவை எப்போ பாக்க போறீங்க
@சக்கர கட்டி
////
2000ம் ஆண்டில் இருந்தே கிரிக்கெட் பார்ப்பது குறைந்து விட்டது தற்பொழுது பேப்ப்பரில் படிப்பதோடு முடிந்து விட்டது. அருமையான பதிவு தெண்டுல்கர் ஆஸி அணியில் இருந்தால் எப்போதே கழட்டி விட பட்டு இருப்பார்//// நன்றி பாஸ்
@கோகுல்
சந்தர்ப்பம் அமையாமலா போயிடும் பார்ப்போம்
நலமா நண்பரே!
@புலவர் இராமாநுசம்
நலம் ஜயா நீங்கள் எப்படி சுகம்
Post a Comment