Thursday, December 12, 2013

சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்தின் டாப்-10 ஸ்டில்கள்(எனக்கு பிடித்த)

நான் எந்த நடிகருக்கும் ரசிகன் இல்லை எல்லோறுடைய படங்களும் பார்ப்பேன் என்று பொதுவாக சொன்னாலும் உண்மையில் நான் ஒரு தீவிரமான ரஜனி சார் ரசிகன்.ஆனால் ரஜனிசாரை யாரும் விமர்சித்தால் அங்கே சண்டைபோடுவது போன்ற சல்லித்தனாமான வேலைகள் எல்லாம் செய்வது இல்லை எனக்கு அவரை பிடிக்கும் என்பதற்காக எல்லோறுக்கும் பிடிக்கனும் என்று இல்லையே.சின்னவயசில் அவரை போலவே தலைமுடியை கோதுவது வசனம் பேசுவது என்று சாதாரனமாக ஆரம்பித்த ரசனை இன்றுவரை தொடர்கிறது.


நான் முதன் முதலில் பார்த்த ரஜனி சார் படம் ஜானி,அதிக தடவை பார்த்த படம் பாட்ஷா கிட்டத்தட்ட 130 தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன்(தொடர்ச்சியாக பார்க்கவில்லை ஒட்டு மொத்தமாக இதுவரை 130 தடவைக்கு மேல்)அண்மையில் கூட கடந்தவாரம் ஒரு முறை பார்த்தேன் வேறு எந்தப்படத்தையும் நான் இத்தனை தடவை பார்தது இல்லை (ஜோதா அக்பர் பார்த்திருக்கேன் ஒரு 25 தடவை அது கிருத்திக்ரோசனுக்காக இல்லை ஜஸ்வர்யா ராய்க்காக.)ஆனால் பாட்ஷாவை தவிற வேறு எந்த ரஜனிசார் படமும் 5 ,6 தடவைக்கு மேல பார்தது இல்லை.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டைல் சக்கரவர்த்திக்கு.# Happy birthday sir

இன்று எனக்கு மிகவும் பிடித்த ரஜனி சாரின் ஸ்டில்களை அதாவது நிறைய இருக்கு டாப்-10 ஸ்டில்களை தொகுத்துள்ளேன் 

1)மறக்கமுடியுமா இந்த ஸ்டில்லை படையப்பா பட்டய கிளப்பிய தலைவர் ஸ்டைல்

2)எத்தனை மாஸ்படங்கள் வரட்டும் பாட்ஷா பாட்ஷாதான் 


3)அருணாச்சலம் படத்தில் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்

4)பாபா படம் பெரியளவு எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை அந்த நேரத்தில் பல விமர்சனம் வந்த போது கண்ணா நான் யானை இல்லை குதிரை விழுந்தால் உடனே எந்திரிச்சுக்குவன் என்று சொன்னபோது 
சொன்ன மாதிரியே சந்திரமுகியில் பட்டையை கெளப்பியிருப்பார்

5)புகழ் பணம் எல்லாம் இருந்தாலும்,அது நிரந்தரம் இல்லை எல்லாம் மாயை என்று எளிமையை விரும்பியாக சூப்பர்ஸ்டார் இமயமலைப்பயணத்தில்



6)எந்திரன் பட இசைவெளியீட்டு விழாவின் என் தலைவி ஜஸ் உடன் தலைவர்

7)மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு இருந்த போது தனக்காக கலங்கிய ரசிகர்களுக்கு வெளியிட்ட ஸ்டில் 


8)பத்தவைச்சிட்டியே பரட்ட.........மறக்ககூடிய படமா வில்லனாக பல படங்கள் நடிச்சிருந்தாலும் இந்தப்படத்தில் செம வில்லத்தனம் செய்திருபார்

9)இந்த ஸ்டில் முத்து படம் திரும்பி நிற்பது ரகுவரன் ரஜனிகாந் வில்லனாக நடிசிருக்கார் ரஜனிக்கு பலர் வில்லனாக நடிச்சிருக்கிறார்கள் ஆனால் என்னைக்கேட்டால் ரஜனிக்கு வில்லனாக சரியான தேர்வு ரகுவரன் தான் ரஜனி ரகுவரன் இணைந்த படங்கள் மாஸ்டர் க்ளாஸ்


10) சமகால போட்டியாளராக இருந்தாலும் இவர்கள் நட்பு போற்றத்தக்கவிடயம்


பொதுவாக டாப்-10 படங்களைத்தான் வரிசைப்படுத்துவார்கள் நான் ஒரு வித்தியாசத்துக்காக டாப்-10 போட்டோக்களை தொகுத்துள்ளேன்.இனி நான் ரசிப்பவர்களின் பிறந்த தினத்தன்று இப்படி டாப்-10 போட்டோக்களை தொகுக்கலாம் என்று இருக்கிறேன்

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அட்டகாசம் நண்பரே...

பி.அமல்ராஜ் said...

சூப்பர் பாஸ்!

K.s.s.Rajh said...

@பி.அமல்ராஜ்

நன்றி பாஸ்

Unknown said...

உங்கள் விருப்பத் தேர்வுகள்,நன்று ராஜ்!!!

ராஜி said...

super

இங்கேயும் கிளிக் செய்து படிக்கலாமில்லே!

கிரிக்கட் நண்பர்கள்
Related Posts with Thumbnails