அந்த இரவு இப்படி ரணமாக விடியும் என்று அவள் சற்றும் நினைத்திருக்கவில்லை அன்பான கணவன் அழகான குழந்தைகள் என்று ரதியின் வாழ்கை பயணம் அழகாக சென்று கொண்டு இருந்தது.இந்த 10 வருட திருமணவாழ்வில் அவளுக்கு கிடைத்த மிகப்பெரும் அதிர்ச்சி இது.வயிற்று வலி என்று ஆஸ்பத்திரிக்கு போன அவள் கணவனுக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதாகிவிட்டது உடனடியாக மாற்றவேண்டும் இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர் சொன்னது அவள் காதில் எதிரோலித்துக்கொண்டேயிருந்தது.
பணம் ஒன்றும் பிரச்சனையில்லை வெளிநாட்டுக்கு வந்து இந்த 10 வருடங்களில் இருவரும் உழைத்த காசு அவர்கள் வாழ்க்கை தேவைகளுக்கு போக கொஞ்சம் சேமிப்பில் இருக்கு.அதைவிட மருத்துவ காப்புறுதி இருக்கு எனவே ஆப்ரேசன் செலவுக்கு பணம் பிரச்சனையில்லை ஆனால் சிறுநீரகம் தானமாக தருவது யார் என்பதுதான் பிரச்சனை?
அவளும் சரி அவள் கணவனும் சரி வெளிநாட்டு வாழ்கையில் நிறைய பணம் சம்பாதித்தார்களே தவிற நல்ல நண்பர்களை சம்பாதிக்கவில்லை.அவர்களும் அவர்கள் குடும்பமுமே அவர்கள் உலகம் வெளியில் யாரையும் தெரியாது?இவளது ப்ளட் குறூப்பும் அவள் கணவன் ப்ளட் குறூப்பும் வேறு என்பதால் இவளது சிறுநீரகம் பொருந்தாது என்று சொல்லிவிட்டனர் டாக்டர்கள்
கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது ரதிக்கு வட் இஸ் நெக்ஸ்ட்? என்று பலமுறை அவளே தன்னைக்கேட்டுக்கொண்டாள்
அம்மா அப்பாவுக்கு என்னம்மா? என்று நச்சரிக்கும் குழந்தைகளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது
ஆழந்த சிந்தனையில் இருந்த ரதியின் செல்போன் ஒலித்தது எதிர்முனையில் ஒரு ஆண்குரல்
ஹலோ ரதி
யா ரதி?
யு?
ஜ ஆம் ரகு
யா டெல் மீ
கான் ஜ ஸ்பீக் டு தமிழ்
யா?
உங்கள் ஹஸ்பெண்டுக்கு இப்ப எப்படி இருக்கு?
டு ஹிட்னியும் பெயிலியர் ஆகிடுச்சாம் உடனடியாக ஆப்ரேசன் பண்ணும்?
பண்ணிடவேண்டியதுதானே?
டொனேட்டர் யாரும் இல்லை அதான் யோசனையாக இருக்கு?
ஆமா நீங்கள் யாரு ஏன் அது எல்லாம் கேட்கிறீங்க?
நான் வேனும்னா டொனேட் பண்ணவா?
ஹலோ நீங்க யாருங்க?
நான் ரகு
பெயர் ஒக்கே பட் who are you for me?
ப்ரண்ட் என்று வைச்சிக்கொள்ளுங்க?
ஹலோ என்ன ஜோக்கா?
இல்லை ரதி நிஜமாத்தான் நான் என் ஒரு ஹிட்னியை டொனைட் பண்ணுறன்
ஹாஸ்பிட்டல் வாங்க நானும் வாரன் டாக்டர் கிட்ட பேசுவோம்
ஹலோ எந்த ஹாஸ்பிட்டல் என்று எப்படி உங்களுக்கு தெரியும்?
அது எல்லாம் தெரியும் வாங்க? பட் ஒரு கண்டிசன்
சொல்லுங்க?
ஆப்ரேசன் முடியும் வரை நான் யார் என்று கேட்டுக்கொண்டு இருக்ககூடாது நான் யாராக இருந்தால் என்ன உங்களுக்கு நல்லதுதானே செய்யுறன் இதுக்கு ஒக்கேனா நான் ஹிட்னி டொனேட் பண்ணுறன்?
அவன் யார் என்று அறியனும் என்ற ஆவலைவிட கணவனின் உயிரை காப்பாற்றுவதுதான் பெரிதாக தெரிந்தது.சரி என்று சொல்லிவிட்டாள்
தங்யூ என்று சொல்லிவிட்டு இவள் பதிலுக்காக காத்திருக்காமல் போனை துண்டித்துவிட்டான்.
அவசர அவசரமாக கிளம்பி ஆஸ்பத்திரிக்கு போனாள்.ஆனால் அவன் கடைசிவரை இவளிடம் நேரடியாக பேசவில்லை.ஆனால் சொன்னபடியே தனது ஒரு ஹிட்னியை தானமாக வழங்கினான்
ரதிக்கு எல்லாம் ஒரு கனவு போல இருந்தது.ஆனாலும் கணவனின் ஆப்ரேசன் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததில் ஒரு திருப்த்தி
நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ ரொம்ப கஸ்டப்பட்டியா ரதி
கேட்கனும் என்று நினைச்சேன் யாரு ஹிட்னி டொனேட் பண்ணினது? என்று கணவன் ரதியை பார்த்து கேட்கவும் தான்
ரதிக்கு அட ஹிட்னி டொனேட் பண்ணின அந்த முகம் தெரியாத ரகுவை மறந்துவிட்டோமே என்று.
அது வந்துங்க யாரோ ஒருத்தன் போன் பண்ணினான் அவனே எல்லாம் பேசினான் கடைசியில் யார் என்று சொல்லாமே போய்விட்டான் நானும் மறந்தே போய்விட்டேன் என்றாள்
என்ன சொல்லுற ரதி?
ஆமாங்க அவர் யார் என்றே தெரியல?
எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கார் இப்படி அசால்ட்டா சொல்லுற முதல்ல ஹாஸ்பிட்டல்ல போய் விசாரிக்கனும் அவர் யார் என்று?
அடுத்த நாள் இருவரும் ஹாஸ்பிட்டலில் போய் விசாரித்துப்பார்த்தார்கள் அவர் பெயரும் விலாசமும் இருந்தது.அந்த விலாசத்தில் போய் பார்த்தால் அங்கே அப்படி யாரும் இல்லை அது போலி அட்ரஸ்.
ரதிக்கும்,அவள் கணவனுக்கும் பெரிய கவலை யார் என்று சொல்லாமல் போய்விட்டாரே என்று.சில நாட்களில் அவர்கள் அதை மறந்துவிட்டார்கள்.
ஆனால் ரதிக்கு மட்டும் அவன் யார் என்று ஒரே குழப்பம்? யோசித்துக்கொண்டேயிருந்தால்.ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு கொரியர் ஒன்று வந்திருந்தது.அதில் வாழ்த்துக்கள் ரதி ஆப்ரேசன் சக்சஸ் புல்லா முடிந்ததுக்கு.இப்ப எப்படி இருக்கார் உங்கள் கணவர் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் அன்புடன் ரகு .என்று ஒரு சீட்டில் எழுதியிருந்தது.அதனுடன் கொஞ்சம் சாக்லேட்டுக்களும் இருந்தது.
அந்த சாக்லேட்டை எடுத்துபார்த்தால் அது அவளது பேவரிட் சாக்லேட் ஆனால் வெளிநாட்டுக்கு வந்த பின் அதை காணக்கிடைக்கவில்லை அப்பாடா இந்த சாக்லேட் எல்லாம் இப்பவும் வருதா? எவ்வளவு நாளாகிவிட்டது இந்த சாக்லேட்டை பார்த்து கல்லூரியில் படிக்கும் போது சாப்பிட்டது என்று ஒரு சாக்லேட்டை பிரிக்கவும் அவளுக்கு சட்டென கல்லூரி ஞாபகம் வந்தது இது........ இது......இந்த......இந்த.......சாக்லேட்டை அவன் தானே எனக்கு தருவான் சதீஸ்.....ஆம் அவனே தான்
அவள் ஞாபகம் 12 வருடங்களுக்கு பின்நோக்கி சென்றது
ஏய் ஏன் எனக்கு எப்பவும் சாக்லேட் தார.
இல்லை சும்மாதான்
என்ன சும்மா? எப்பவும் தார என்ன காரணம்?
இல்லை ஒரு வேளை நான் உன்னைவிட்டு போனாலும்,நீ என்னைவிட்டு போனாலும் இந்த சாக்லேட்டை எங்க பார்த்தாலும் உனக்கு என் ஞாபகம் வரும்ல அதுக்குத்தான்.
ஏன் இப்படி எல்லாம் பேசுற லூசா நீ? ஆமா லூசுதான் உன் மேல லூசு
போடாங்....................
இல்லை ரதி நீ என்னை விரும்புரியோ இல்லையோ எனக்கு தெரியாது பட் எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும் உன் கூட நான் வாழனும்.
நீ நல்லா சினிமாப்படம் பார்த்து கெட்டுப்போயிட்ட அதான் சினிமா டயலாக் எல்லாம் அடிக்கிற இந்த கல்லூரி வாழ்கை முடிந்ததும் நான் உன் ஞாபகத்திலையே வரமாட்டேன்.
போடீ........... எப்பவும் நான் உன்னை மறக்கமாட்டேன் ஆனால் கண்டிபாக நீ மறந்திடுவ ரதி.அட்லீஸ் இந்த சாக்லெட்டை பார்க்கும் போதாவது நான் உன் ஞாபகத்தில் வருவேனே அதுக்குத்தான் இதை தினமும் உனக்கு தருகிறேன்
சரி சரி பார்கலாம் யார் மறக்குறது என்று.
பார்போம் பார்ப்போம்
ஆனால் சதீஸ் இந்த காதல் என்று சொல்லிகிட்டு என்கிட்ட ஏதும் கேட்காத ப்ளீஸ்?
சரி உன் ஆசை அதுதான் என்றால் ஒக்கே இனிமேல் நான் உன்முன்னால் வரமாட்டேன்
நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லைடா
நீ எந்த அர்தத்தில் சொன்னாலும் பரவாயில்லை
ஆனால் ஒன்று உன்னை மட்டுமே நினைச்சிகிட்டு உனக்காகவே இந்த உலகத்தில் எப்பவும் இருப்பன் உனக்கு ஒரு கஸ்டம்னா உடனே வருவது நானாகத்தான் இருக்கும்.
அதுக்கு பிறகு அவள் சதீஸை பார்கவேயில்லை
அப்ப என் ஹஸ்பெண்டுக்கு ஹிட்னி டொனேட் பண்ணினது சதீஸ்தானா.ரகுனு சொன்னானே கள்ளன் பெயரை மாத்தி சொல்லியிருக்கான் அப்ப அவனும் யூகேல தான் இருக்கானா? எப்படி நான் சதீஸை மறந்தேன் அவன் குரலை கேட்டபோது கூட ஞாபகம் வரவில்லையே.....................
சாரிடா என்று அவளுக்குள்ளே சொல்லிகொண்டாள்.
அப்பறம் என்ன நினைத்தாளோ பார்சலில் இருந்த அத்தனை சாக்லேட்டையும் சாப்பிட்டுவிட்டாள்
(யாவும் கற்பனை)
|
4 comments:
நல்லது...
மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?
http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html
நல்ல கதை!யாவும் கற்பனை!!அதிலும்,நல்ல கற்பனை!!!
நல்ல கதை..
யாவும் கற்பனை தானே??? கதை சூப்பர்!
Post a Comment