வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களின் பின் பதிவுலகில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி நீண்ட இடைவெளிக்கு பின் அதுவும் ஒரு தொடர்மூலம் சந்திப்பது மகிழ்ச்சி.
ஆட்டோகிராப்
இது சுயசரிதை இல்லை சுயசரிதை எழுதும் அளவுக்கு எல்லாம் நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லை.என் இருபத்து ஜந்து வருட வாழ்கைப்பயணத்தில் நட்பு,காதல்,சோகம்,மகிழ்ச்சி என்று என்னைக் கடந்து சென்ற மறக்கமுடியாத மனிதர்களின் நினைவுப் பகிர்வு.ஆனால் என் வாழ்கைபயணத்தில் மறக்கமுடியாத எல்லோறையும் பற்றி இந்த தொடரில் குறிப்பிடப்போவது இல்லை காரணம் அவர்கள் சார்ந்து அவர்களுக்கு என்னால் ஏதும் கஸ்டங்கள் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக.இதனால் சிலரை பற்றிய நினைவுகளை இந்த தொடரில் முழுமையாக தவிர்த்துவிடுகிறேன்.
அத்துடன் எனது வாழ்கை பயணத்தை பதிவு செய்தாலும் சில இடங்களில் பெயர்கள் மாற்றி குறிப்பிடவேண்டியிருப்பதால் சில பெயர்கள் மாற்றப்பட்டு இருக்கும்.யாருடைய மனமும் புண்படா வண்ணம் இந்த தொடர் இருக்கும் யார் மனமாவது புண்படும் பட்சத்தில் குறிப்பிட்ட பகுதிகள் தொடரில் இருந்து நீக்கப்படும்.யாரையும் புண்படுத்துவதோ காயப்படுத்துவதோ இந்த தொடரின் நோக்கம் இல்லை.என் வாழ்கை பயணத்தில் என்னைக் கடந்து சென்ற மறக்கமுடியாதவர்கள் பற்றிய ஒரு நினைவுப்பகிர்வு.அவ்வளவுதான்
நமது வாழ்கைப்பயணம் எப்பவும் சுவாரஸ்யமானது எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது.எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் என்று தெரியாமல் சில நேரங்களில் சிலதை செய்துகொண்டு இருப்போம் இப்ப கூட இதை எழுதிக்கொண்டு இருக்கும் நேரம் அதிகாலை2.20 மணி நேற்றய பொழுது முழுவதும் தூக்கம் வரவில்லை.
தூக்கம் இல்லாமைக்கு பல காரணங்கள் இருக்கும் ஆனால் ஒரு இருபத்து ஜந்து வயது இளைஞனுக்கு தூக்கம் பறிபோனால் இரண்டு காரணங்கள் பிரதானப்படுத்தலாம் ஒன்று காதல் தோல்வி இரண்டு எதிர்காலம் பற்றிய பயம் இதை தவிற பிரதானமாக பெரிதாக வேறு காரணங்கள் இருக்காது எனக்கு தூக்கம் பறிபோனதுக்கு இரண்டாவது காரணம்.எதிர்காலம் பற்றிய பயம்.
ஒரு சீராக போய்க்கொண்டு இருக்கும் வாழ்கைப்பயணம் பல நேரங்களில் திசைமாறிவிடும்.கடவுளைப்போல சிறந்த திரைக்கதை வித்துவான் யாரும் இல்லை.சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடவுளுக்கே கொடுக்கலாம். என் வாழ்கைப்பயணத்தில் கடவுள் எழுதிய திரைக்கதையில் இந்த இருபத்து ஜந்து வருடத்தில் சுவாரஸ்யமான,சந்தோசமான சோகமான,ரணமான பகுதிகளை ஏற்படுத்தி சென்ற மனிதர்கள் பற்றிய ஒரு நினைவுப் பகிர்வு இந்த ஆட்டோகிராப்.
முதல் போட்டியாளர்
புத்துவெட்டுவான்.என் வாழ்கைப்பயணத்தில் மறக்கமுடியாத ஒரு ஊர்.7 வயது சிறுவனாக இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தேன் 1997இல்.1998இன் இறுதிவரை இரண்டு வருடம் குழந்தைப்பருவத்தின் மகிழ்ச்சியான தருனங்கள் பலதை அள்ளித்தந்த இடம்.அங்கே எனக்கு அறிமுகமான நண்பி பிரதீபா. யாருடனும் எதற்கும் போட்டி போடுவதை நான் விரும்புவது இல்லை.என்னால் என்ன முடியுமோ அதை மட்டுமே செய்வது என் வழக்கம் இப்போது.ஆனால் அப்போது சின்னவயதில் அப்படி இல்லை.அது அந்த வயதுக்கே உரிய போட்டித்தன்மை மனசில் இயல்பாக இருக்கும்.வகுப்பில் யார் முதலாம் பிள்ளையாக வருவது என்று போட்டி எனக்கும் பிரதீபாவுக்கும் அதிகமாக இருக்கும்.ஆனால் பெரும்பாலும் ஜெயிப்பது என்னவோ நானாகத்தான் இருப்பேன்.
என்னதான் போட்டியாளர் என்றாலும் ஒரு ஆழமான நட்பு இருந்தது அருமையான ஒரு நண்பி.பின் கால ஒட்டத்தில் காணாமல் போய்விட்டார்.பல வருடங்களுக்கு பின் கிட்டதட்ட 12 வருடங்களுக்கு பிறகு 2009ம் ஆண்டில் ஒரு நாள் அகதிமுகாமில் ஏதேர்சையாக பார்த்தேன்.ஆனால் என்னால் அடையாளம் காணமுடியவில்லை.அவளாகத்தான் நீங்க .............ராஜ் தானே என்றாள்.நானும் ஆம் ராஜ் தான் நீங்க யார்? என்றேன்.நான் தான் பிரதீபா என்னை ஞாபகம் இல்லையா என்றாள்.ஏன் ஞாபகம் இல்லை பிரதீபா என்ற பெயர் நன்றாக ஞாபகம் இருக்கிறது ஆனால் அடையாளம் கண்டு பிடிக்கமுடியவில்லை சாரி என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் கதைத்துவிட்டு வந்தேன்.அதன் பிறகு மீண்டும் சந்தித்தது இல்லை என் முதல் போட்டியாளர் என்பதற்கு அப்பால் நான் நட்பாக பழகிய முதல் பெண்ணும் கூட.அந்த வகையில் பிரதீபா என்றும் மறக்கமுடியாத ஒரு நண்பி.
பப்பி லவ்
புத்துவெட்டுவான் என்றதும் சட்டென நினைவுக்கு வரும் ஒரு பெயர் காயத்திரி.1997 இல் அப்போது எனக்கு 7 வயது காயத்திரிக்கும் கிட்டதட்ட அதே வயதுதான் என்னைவிட ஒரு வகுப்பு குறைவாக படித்தாள்..ரொம்ப அழகாக பொம்மை மாதிரி இருப்பாள்.................ராஜ்......................ராஜ் என்று என் பெயரை சொல்லி அவள் அழைக்கும் போது ரொம்ப க்யூட்டாக இருக்கும்.உண்மையை சொன்னால் ஆனால் சின்ன வயதில் வரும் பப்பி லவ் என்பார்களே அந்த பப்பி லவ்வை முதலில் என் மனதில் விதைத்துவிட்டு போனவள் காயத்திரிதான்.ஆனால் 1997 ம் ஆண்டின் கடைசிப்பகுதியில் அவள் குடும்பம் புத்துவெட்டுவானைவிட்டு வேறு ஒரு ஊரிற்கு இடம்பெயர்ந்துபோய்விட்டார்கள்.அதன் பிறகு நான் மீண்டும் அவளை பார்ததே இல்லை இன்றுவரை. கிட்டதட்ட 17 வருடங்கள் ஆகிவிட்டது இப்போது மீண்டும் பார்த்தால் கூட நிச்சயமாக அடையாளம் காணமுடியாது.ஆனால் சின்னவயதில் மனசில் பதிந்து போன அந்த முகம் காலத்துக்கும் நினைவில் நிற்கும் பசுமையாக.
(நினைவுகள் தொடரும்)
|
17 comments:
அதிகாலை 2.20 என்றாலும் பால்க்கோப்பிதான் எனக்கு!ஹீ
நீண்ட..... காலத்தின் பின் ஒரு தொடர் நல்ல விடயம் தொடரட்டும் ராஜ் வலையில்!
வருடங்கள் 17 இன்னும் தாண்டி ஒரு புதிய தொடர் இன்னும் எழுதலாம் தலைப்பு தரவா!தலைவா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@தனிமரம்
வாருங்கள் பாஸ் நீண்ட காலத்துக்கு பிறகு சந்திப்பது மகிழ்ச்சி.நீண்டகாலத்துக்கு பிறகு எழுதுவதால் என்ன எழுதுவது என்று தெரியல அதுதான் ஒரு தொடருடன் களம் இறங்கியுள்ளேன்
@ தனிமரம் said...
வருடங்கள் 17 இன்னும் தாண்டி ஒரு புதிய தொடர் இன்னும் எழுதலாம் தலைப்பு தரவா!தலைவா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////
ஹி.ஹி.ஹி.ஹி.............
ராஆஆஆஜ்! நீண்ட இடைவெளிக்கப்புறம் பாக்கறேன் உங்க்ளை... சுகந்தன்னே? ஆட்டோகிராப் நினைவுகள் எல்லார்ட்டயும் இருக்கும்னாலும் அதை சுவாரஸ்யமா பகிர்ந்துக்கறதுதான் கடினம். அழகா சொல்லியிருக்கீங்க. தொடர்கிறேன்.
நீண்ண்ண்ட நாட்கள் கழித்து வந்துள்ளீர்கள்... ஆரம்ப ஆட்டோகிராப் சுவாரஸ்யம்... தொடர்ந்து வருகிறோம்...
http://www.nanparkal.com/ வலைப்பூ என்னாச்சி...? முகநூல் மூலம் தான் இந்த தளம் தெரியும்...
வணக்கம்.மீண்டுமொருசந்திப்பில் மனதிற்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்..உங்கள் பயணங்களில் கலந்து கொள்கிறேன்.
@பால கணேஷ்
வாங்கபாஸ் வணக்கம் பாஸ் நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
@திண்டுக்கல் தனபாலன்
நீண்டநாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி பாஸ் அந்த தளம் டொமைன் பிரச்சனையில் முடங்கிவிட்டது
@Athisaya
வணக்கம் நீண்டநாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
வணக்கம்,தம்பி!நல்லா இருக்கீங்களா?///புதிய தொடர்,புடம் போட்ட தங்கம் போல் மிளிர்கிறது!முன்னைய எழுத்துக்களுக்கும்,இப்போதைய எழுத்துக்கும் வித்தியாசம் தெரிகிறது.எழுத,எழுத இன்னும் மேம்படும்.///முக நூலுக்கு டாட்டா காட்டியாச்சு.இங்கே தொடர்வேன்.முடிந்தால் பேசியிலும்.
இன்றைய வீரகேசரி(இணையப் பத்திரிக்கை)யில் ம.தி சுதா வின் "மிச்சக் காசு" விமர்சனமும்,குறும்படமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.வாழ்த்துக்கள் ம.தி.சுதா!!!
@Subramaniam Yogarasa
வாருங்கள் ஜயா சந்தோசம் முகநூல் இல்லாட்டி என்ன நாம இங்கே கும்மியடிப்போம்
@Subramaniam Yogarasa
வாருங்கள் ஜயா சந்தோசம் முகநூல் இல்லாட்டி என்ன நாம இங்கே கும்மியடிப்போம்
@Subramaniam Yogarasa
////இன்றைய வீரகேசரி(இணையப் பத்திரிக்கை)யில் ம.தி சுதா வின் "மிச்சக் காசு" விமர்சனமும்,குறும்படமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.வாழ்த்துக்கள் ம.தி.சுதா!!!//// ஆம் நானும் வாசித்தேன் நல்ல ஒரு அங்கீகாரம் அவருக்கு வாழ்த்துக்கள் சுதா அண்ண
Post a Comment