இன்று நடிகர் திலகம் செவாலியர் சிவாஜிகணேசன் அவர்களில் பிறந்த நாளாகும் அதனைமுன்னிட்டு நான் முன்பு எழுதிய சிவாஜி பற்றிய பதிவை மீள்பதிவாக தருகின்றேன்.
நான் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் ரசிகன் என்றால் போடா நீ அந்தக்காலத்து ஆள் என்பார்கள்.ஆனால் இந்தக்கால இளைஞனான எனக்கும் என்னைப்போல தற்போதய இளைஞர்கள் பலருக்கும் சிவாஜியை நிச்சயம் பிடிக்கும்.தமிழ் சினிமாவில் நடிப்புக்கு வரவிலக்கணம் எழுதிய நடிப்புலக மாமேதை அவர்.இங்கே சிவாஜியின் வரலாறு பற்றி சொல்லப்போவது இல்லை காரணம் அது எல்லோறுக்கும் தெரிந்ததுதான் கணேசனாக பாராசக்தியில் அறிமுகமாகி தன் அற்புத நடிப்பால் உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகர் செவாலியர் சிவாஜி சார்.
சரி இந்தக்கால பையனான எனக்கு எப்படி சிவாஜியை பிடிக்கும் நான் எப்படி அவரது ரசிகன் ஆனேன் என்பதை சொல்கின்றேன்.
நான் 4ம் வகுப்பு படிக்கும் போது 1997ம் ஆண்டு ”கர்ணன்”படம் பார்கும் சந்தர்ப்பம் கிடைத்தது பாடசாலையில் ஒரு விழாவில் கர்ணன் படம் போட்டார்கள்.எனக்கு அப்பவே இதிகாச கதைகள் மேலும் வரலாற்று கதைகள் மேலும் தீவிர தேடல் அதிகம்.அதனால் அந்தப்படத்தை ரசித்துப்பார்த்தேன் ஆனால் அதில் கர்ணனாக நடித்தவரின் பெயர் தெரியாது.வீட்டில் வந்து கேட்ட போது அவரது சிவாஜி கணேசன் என்றார்கள்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
சிவாஜி கணேசன் என்ற பெயர் நான் முன்பே அறிந்திருந்தேன் காரணம் எங்கள் வீட்டில் அம்மா,அம்மாவின் தங்கைகள்,மாமா,எல்லோறும் சிவாஜியின் தீவிரமான ரசிகர்கள்,எனவே எங்கள் வீடுகளில் அடிக்கடி சிவாஜி என்ற பெயர் உச்சரிக்கப்படும்.எனவே கர்ணன் படம் பார்ததும்.அதில் நடித்தவர் சிவாஜி என்று தெரிந்ததும் அவர் நடிப்பு மேல் ஒரு ஈர்ப்பு வந்தது.அதற்குப்பின் அவர் நடித்த புராணப்படங்கள்,வரலாற்றுப்படங்கள்.எங்க போட்டாலும் உடனே போய் பார்த்துவிடுவேன் பெரும்பாலும் கோவில் திருவிழாக்களில் போடுவார்கள்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
நான் 7,8 வகுப்பு படிக்கின்ற போது எல்லாம் சுந்தரகாண்டம் அனைத்து பகுதிகளையும்(பகுதி பகுதியாக இந்த நூல் வந்தது)இராமாயணம்,மகாபாரதம்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் வரலாறு,போன்ற நூல்களை முழுமையாக வாசித்துவிட்டேன்.அப்போது எங்கள் பாடசாலையில் நூலகத்தில் இருக்கும் நூல்களை இரண்டு நாட்களுக்கு வீட்டிற்கு கொண்டு சென்று வாசிக்கலாம்.நான் பெரும்பாலும் எடுத்துச்சென்று வாசிக்கும் புத்தகங்கள் இதிகாசம்,வரலாற்று நூல்கள் தான்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
நூலக பொறுப்பாசிரியர் கூட என்னிடம் கேட்பார் இதை நீ வாசிக்க எடுத்து செல்கின்றாயா? இல்லை வீட்டில் யாரும் வாசிக்க எடுத்துச்செல்கின்றாயா? என்று நான் தான் வாசிக்க எடுத்துச்செல்கின்றேன் என்று சொன்னால் அவர் ஆச்சரியமாக பார்ப்பார்.இது ராஜ் இன் நண்பர்கள் தளத்தில் எழுதிய பதிவு(www.nanparkal.com)
என்னதான் கர்ணன்,வீரபாண்டிய கட்டப்பொம்மன் பற்றி வாசித்தாலும் அதை படமாக சிவாஜி சாரின் நடிப்பில் பார்கின்ற போது அது ஒரு தனி ரசனைதான்.
சிவாஜி சார் இறந்த போது எங்கள் மாமா கண்ணீர்விட்டு அழுதார்.அப்பதான் நான் தெரிந்து கொண்டேன் அட எங்கோ இருக்கும் ஒரு மனிதனுக்காக ஒரு நடிகனுக்காக இவர்கள் கவலை அடைக்கின்றார்களே.எனவே நான் இப்படி யாருக்கும் ரசிகராக இருக்க கூடாது என்று தீர்மாணித்துக்கொண்டேன்.இன்றுவரை எல்லா நடிகர்களின் படங்களும் பார்ப்பேன் ஆனால் யாருக்கும் தீவிர ரசிகன் இல்லை.ஆனால் நடிகைகள் மட்டும் விதி விலக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்.
தமிழ் சினிமாவை ரசித்து பார்க்க தொடங்கிய பிறகு எல்லா நடிகர்களின் படங்களும் பார்க்கும் போது கண்டிப்பாக சிவாஜி சாரின் படங்களையும் தேடித்தேடி பார்பதுண்டு.
இப்போது கூட சிவாஜி சார் நடித்த எனக்குப்பிடித்த சில படங்கள் டீ.வியில் போட்டால் அதை பார்க்க தவறுவதில்லை.எனக்கு சிவாஜி சார் ஹீரோவாக நடித்த படங்களைவிட தற்போதய தலைமுறை நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்திருப்பார் பாருங்க அப்படியான படங்கள் மிகவும் பிடிக்கும்.உதாரணமாக ஓன்ஸ்மோர்,பூப்பரிக்க வருகின்றோம்,விடுதலை,படையப்பா இப்படியான படங்களில் அவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.
எனக்கு பிடித்த நான் மிகவும் ரசித்த சிவாஜி சார் நடித்த படங்கள் சில
இதில் அவர் ஹீரோவாக நடித்த படங்களும் உள்ளடங்கும் வேறு நடிகர்களில் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்த படங்களும் உள்ளடங்கும்
- வசந்த மாளிகை(என் ப்ரண்ட் சிலரின் லவ் ஊத்திகிட்ட போது கூட இந்த படத்தை எல்லோறும் சேர்ந்து பல முறை பார்த்தோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்)
- விடிவெள்ளி
- நீதி
- படித்தால் மட்டும் போதுமா
- வீரபாண்டிய கட்டப்பொம்மன்
- ராஜ ராஜ சோழன்
- கர்ணன்
- பராசக்தி
- திரிசூலம்
- நவராத்திரி
- ஜெனரல் சக்கரவர்த்தி
- தங்கப்பதக்கம்
- கூண்டுக்கிளி
- கெளரவம்
- வெள்ளை ரோஜா(பிரபுவுடன் இணைந்து நடித்திருப்பார்)
- தாவனிக் கனவுகள்(பாக்கியராஜ் இயக்கிய இந்தப்படம் தான் நடிகர் பார்தீபன் திரையில் முதன் முதலில் தோன்றிய படம் தபால் காரனாக ஒரு காட்சியில் சிவாஜி சாருடன் நடித்திருப்பார்)
- விடுதலை(ரஜனிகாந்துடன் இணைந்து நடித்திருப்பார்)
- முதல் மரியாதை
- படிக்காதவன்(ரஜனி காந்துடன் இணைந்து நடித்திருப்பார்)
- தேவர் மகன்(கமலுடன் இணைந்து நடித்திருப்பார்)
- ஜள்ளிக் கட்டு(சத்யராஜுடன் இணைந்து நடித்திருப்பார்)
- படையப்பா(ரஜனிகாந்துடன் இணைந்து நடித்திருபார் சிவாஜி சாரின் கடைசிப்படம் )
விஜயுடன் நடித்த ஒன்ஸ்மோர்,அஜயுடன்(அஜித் இல்லை இவர் நடிகர் அஜய் என்று ஒருவர்) நடித்த பூப்பறிக்க வருகின்றோம்,அர்ஜுனுடன் நடித்த மன்னவரு சின்னவரு,முரளியுடன் நடித்த என் ஆசை ராசாவே,பிரபுவுடன் நடித்த பசும் பொண்,இப்படி சிவாஜி சார் கேரக்டர் ரோலில் நடித்த பல படங்களும் அவர் ஹீரோவாக நடித்த பல படங்களும் எனக்கு பிடிக்கும்.
சிவாஜி சாருக்கு கிடைத்த சில விருதுகள்
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
பத்ம ஸ்ரீ விருது (1966)
பத்ம பூஷன் விருது (1984)
செவாலியே விருது (1994)
தாதா சாகேப் பால்கே விருது (1997)
1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் மேயராக ' கௌரவிக்கப்பட்டார்.
ஆனால் ஒரு முறை கூட நடிகர் திலகத்துக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு கவலை தரும் விடயம்.
1927 அக்டோபர் 1 ம் திகதி பிறந்த இந்த நடிப்புலக மாமேதை 2001 ஜுலை 21ம் திகதி மறைந்தார்
தமிழ் சினிமாவின் என்றும் மறக்கப்பட முடியாத நடிப்பிற்கு இலக்கணம் வகுந்தவர் மதிப்பிற்குறிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
அவருக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்.
முஸ்கி-இந்தப்பதிவை முன்பு எழுதிய போது இதை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததன் மூலம் தான் அகில ஒலக அஞ்சலி ரசிகர்கள் கழக தலிவர்களில் ஒருவரும், நண்பர்களால் செல்லமாக சின்னவீடு சுரேஸ் என்று அழைக்கப்படுகின்ற பதிவர் வீடு சுரேஸ்குமார் அண்ணன் எனக்கு அறிமுகமானார்#வரலாறு முக்கியம் அமைச்சரே
*********************************************************************************
விரைவில் உங்கள் நண்பர்கள் தளத்தில் ”யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்”புதிய தொடர் எதிர்பாருங்கள்
*********************************************************************************
|
11 comments:
காலை வணக்கம்,ராஜ்!நடிகர் திலகம் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்தது பெரிய விஷயம்!வேறு எவரும்(பதிவரும்)இது வரை கண்டு கொள்ளவில்லையே?நன்றி!!!
திலகத்தை நினைவுகூர்ந்ததற்கு நன்றி
அடடா 1997 நாலாம் வகுப்பு... அப்ப நம்மள விட இளையவரான நீங்க இன்னும் சிவாஜிகணேசனையும் நாகேஷையும் ரசிக்கிறீங்க.. இரண்டு பேரையும் நினைவு கூர்ந்ததுதிற்கு நன்றி...
அவரைப்பற்றி எழுத ஒரு பதிவு போதுமா...?
நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
@Yoga.S.
நன்றி ஜயா
@ஜோ/Joe
நன்றி பாஸ்
@மொக்கராசு மாமா
ஆமா பாஸ் நான் சின்னப்பையன்
@திண்டுக்கல் தனபாலன்
நன்றி பாஸ்
சிவாஜி நாள் நினைவு சூப்பர்!ம்ம்
அடப்பாவி ராஜ் அடுத்த தொடர் ஆரம்பிக்கின்றாயா !ஹீ சந்தோஸம் உன்னால் முடியும் தம்பி நிஜமாக !சூப்பராக எழுது வலைக்கு விரைவில் விடுமுறை என்றாலும் வாசிப்பேன் தொடரை மொய்க்கு மொய் வைக்க மாடேன்!ஹீ நீ அறிவாய் /ஹீ வாழ்த்துக்கள்§முடிந்தால் வரும் ஆண்டில் விமர்சனம் தாங்கி வரும் தனிமரம்!ஹீ!!!மீண்டும் வாழ்த்துக்கள் ராஜ்!ம்ம்ம்
@தனிமரம்
நன்றி பாஸ்
Post a Comment