உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை பல படங்கள் பார்த்திருக்கேன்.
எவ்வளவோ மொக்கை படங்கள் எல்லாம் சகிச்சிகிட்டு மூச்சு திணற திணற பார்த்திருக்கேன்.
அந்த வகையில் தாண்டவமும் பார்த்தேன்.
இதை சொல்லியே ஆகனும் உலகத்து யாரும் இப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது.அவ்வளவு.....................
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே........

முடியலை நீங்க என்ன படம் எடுத்தாலும் அதை நாங்க பார்க்கனும் என்ற நினைப்பிலா படம் எடுக்குறீங்க. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படம் எடுங்கய்யா.விஜய்யின் மதராசப்பட்டினம் படம் பார்த்திட்டு நல்லா இருக்கு இவரது படங்கள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
(மதராசப்பட்டினம் படத்தின் மையக்கதையான ஓரு வெள்ளைக்காரப்பெண் இந்திய இளைஞனை காதலிப்பது போன்ற கதையில் பல வருடங்களுக்கு முன் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் நாடோடித்தென்றல் அப்படினு ஒரு படம் வந்ததும் குறிப்பிடத்தக்கது).

படம் பார்பதைவிட கொடுமை படத்துக்கு கொடுக்கும் பில்டப்புக்கள் ஸ்சப்பா ஓலகமகா பில்லப்புடா சாமி.அண்மையில் முகமூடினு ஒரு படம் வந்திச்சு இன்னும் ஒரு ஒலக பட இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அந்தப்படத்தின் இசைவெளியீட்டில் ஒருத்தர் சொன்னாரு மிஷ்கின் 2014 ஹாலிவூட் படங்கள் இயக்குவாராம்.அதுனா உண்மைதான் ஆங்கிலப்படங்கள் பலதை சுட்டு அதை தமிழில் ஓலகப்பட ரேஞ்சுக்கு பில்டப்பொடுத்து தமிழில் வெளியிட்டு எங்களை சாவடிக்காமல்,பேசாமல் ஆங்கிலத்திலே வெளியிட்டால் ரீமேக் என்று சொல்லி சாமாளிக்கலாம்.இது அதைவிட பெட்டர்.
விக்ரம் என்ற ஒரு நடிகருக்கு தமிழ் சினிமா இலகுவாக தன் கதவுகளை திரந்துவிடவில்லை. எத்தனையோ போராட்டங்கள், வலிகள்,வேதனைகளை தாண்டி ஜெயித்த கலைஞன் விக்ரம்.ஆனால் இப்ப விக்ரமே தான் கஷ்டப்பட்டு ஜெயித்த பெயரை காலிசெய்துவிடுவார் போல. சார் தயவு செய்து ஓலகப்பட இயக்குனர்களில் படங்களில் நடித்து உங்க மார்க்கெட்டை காலியாக்கிடாதீங்க.நடிப்பதற்கு நல்ல பாத்திரம் கிடைக்கின்றது என்பதற்காக படத்தில் நடிக்காதீங்க நல்ல கதைகள் உள்ள படமாகவும் நடிங்க சார்.
ரசிகனின் ரசனை மாறிவிட்டதுயா எல்லாக் கவலைகளும் மறந்து 3 மணிநேரம் சந்தோசமாக கழிப்பதற்குத்தான் தியேட்டருக்கு வருகின்றோம். ஆனால் ஒலக்பட இயக்குனர்களின் படங்களை பார்க்கும் போது படத்தை ரசிப்பதற்கு பதிலாக இந்தக் காட்சியை அந்த படத்தில் பார்த்தது போல இருக்கே. இந்த பாடல் அந்தபாடல் காட்சியை பார்பது போலவே இருக்கே என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.
தாண்டவம் படத்தில் எமிஜாக்சனை வர்ணித்து யாரடி நீ மோகினி என்று ஒரு பாட்டு இருக்கு. அது எங்கேயும் காதல் படத்தில் ஹன்சிகாவை வர்ணித்த நங்காய் நிலாவின் தங்காய் பாட்டை அப்படியே ரீமேக் பண்ணியது போலவே இருக்கு ஸ்....சப்பா முடியலை.
தமிழ் சினிமாவில் இப்ப எல்லாம் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டது போல என்னத்தை சொல்ல. ஆனாலும் சில இயக்குனர்கள் பலர் சிறப்பாக பல படங்களைத்தந்துகொண்டுதான் இருக்கின்றார்கள் .உதாரணம் அட்டக்கத்தி,களவானி,கலகலப்பு,ஒரு கல் ஒரு கண்ணாடி இப்படி நிறைய படங்கள் சொல்லாம்.
எங்கள் கவலைகள் மறந்து தியேட்டருக்கு வருகின்றோம் எங்களுக்கு தேவை ஓலகப்படம் இல்லை ரசனையை பூர்த்திசெய்யும் படங்கள் தான்.
முஸ்கி-பல படங்களின் கதையை ஒன்றாக்கி ஒலகப்படம் என்று பில்டப் கொடுத்து எங்களை பல்பு வாங்க வைக்கின்றார்கள் அது போலதான் இந்த பதிவின் தலைப்பும்
*********************************************************************************
விரைவில் புதிய தொடர் ”யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்”
*********************************************************************************
|
13 comments:
இவங்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. வாங்க தம்பி நாம ஒரு படம் எடுப்போம்.
விக்ரமின் கடின உழைப்பு வீணாகி விட்டது...
@ராஜி
கண்டிப்பா ஆனா கதாநாயகியை நான் தான் தெரிவு செய்வேன்.
@திண்டுக்கல் தனபாலன்
உண்மைதான் பாஸ் நன்றி பாஸ்
பகல் வணக்கம்,ராஜ்!நன்றாகப் படம் பார்க்கிறீர்கள்!இங்கேயும்,யாரோ ஒரு புண்ணியவான் "இலவசமாக"படம் ரிலீசான அடுத்த நாளே ஒளிபரப்பினார்!ஒரு பாட்டு,ஒரே ஒரு பாட்டு ரசிக்கும்படி இருந்தது!////ராஜி said...
இவங்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. வாங்க தம்பி நாம ஒரு படம் எடுப்போம்.K.s.s.Rajh said...
கண்டிப்பா ஆனா கதாநாயகியை நான் தான் தெரிவு செய்வேன்.////கதாநாயகி "அவங்க" தானே???Ha!Ha!Haa!!!!
@Yoga.S.
////
பகல் வணக்கம்,ராஜ்!நன்றாகப் படம் பார்க்கிறீர்கள்!இங்கேயும்,யாரோ ஒரு புண்ணியவான் "இலவசமாக"படம் ரிலீசான அடுத்த நாளே ஒளிபரப்பினார்!ஒரு பாட்டு,ஒரே ஒரு பாட்டு ரசிக்கும்படி இருந்தது!////ராஜி said...
இவங்களை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. வாங்க தம்பி நாம ஒரு படம் எடுப்போம்.K.s.s.Rajh said...
கண்டிப்பா ஆனா கதாநாயகியை நான் தான் தெரிவு செய்வேன்.////கதாநாயகி "அவங்க" தானே???Ha!Ha!Haa!!!////
ஆமா அவங்கதான் அவ்வ்வ்வ்வ்வ் நன்றி ஜயா
ஆஹா இப்படியும் பதிவு எழுதலாமோ??:))) நான் இப்ப தியேட்டர் பக்கம் போய் வருடங்கள் கடந்துவிட்டது சினிமாவையும் மறந்து :)))
மீண்டும் பார்க்கும் காலம் ஜோசிப்போம் எங்கே சுட்டது உலகப்படம் என்று:)))))
@தனிமரம்
////
ஆஹா இப்படியும் பதிவு எழுதலாமோ??:))) நான் இப்ப தியேட்டர் பக்கம் போய் வருடங்கள் கடந்துவிட்டது சினிமாவையும் மறந்து :)))
மீண்டும் பார்க்கும் காலம் ஜோசிப்போம் எங்கே சுட்டது உலகப்படம் என்று:))))////
பாருங்க பாருங்க இப்ப எல்லாம் ஒலகப்படம் எடுப்பவர்கள் அதிகம்
அதுக்காக இப்புடியா பழிவாங்குவீங்க.. ஆமா அட்டக்கத்தி,களவானி,கலகலப்பு எல்லாத்தையும் சொல்றீங்கம் நம்ம ஓகே ஓகே ய விட்டுடீங்களே...
மொக்கராசு மாமா said...
அதுக்காக இப்புடியா பழிவாங்குவீங்க.. ஆமா அட்டக்கத்தி,களவானி,கலகலப்பு எல்லாத்தையும் சொல்றீங்க "நம்ம" ஓகே ஓகே ய விட்டுடீங்களே...////அடடே!அது சந்தானம் பான்ஸ் தயாரிப்பா,சொல்லவேயில்ல?ஹி!ஹி!ஹி!!!!!!////ராஜ்,அதையும் சேத்துடுங்க!
@மொக்கராசு மாமா
ஆமா பாஸ் ஒகே ஒகே யையும் சேர்த்துக்கொள்ளுங்க நான் இன்னும் பல படங்கள் என்று குறிப்பிட்டதுக்குள் ஒகே ஒக்கேயும் அடங்கும்.
நன்றி பாஸ்
////Yoga.S. said...
மொக்கராசு மாமா said...
அதுக்காக இப்புடியா பழிவாங்குவீங்க.. ஆமா அட்டக்கத்தி,களவானி,கலகலப்பு எல்லாத்தையும் சொல்றீங்க "நம்ம" ஓகே ஓகே ய விட்டுடீங்களே...////அடடே!அது சந்தானம் பான்ஸ் தயாரிப்பா,சொல்லவேயில்ல?ஹி!ஹி!ஹி!!!!!!////ராஜ்,அதையும் சேத்துடுங்க////
சேர்த்துட்டா போச்சு சேர்த்தாச்சு
நான் இதுக்குதான் மூளையை ஷட்-டவுன் பண்ணிட்டுப் படம் பார்த்தேன்....
எனக்கு ஓகே..... டைம்பாஸ் ஆச்சு...
விக்ரம், அனுஷ்கா, நீரவ் ஷா காப்பாத்தினாங்க படத்தை + என் டிக்கெட் பணத்தை! ;-)
Post a Comment