வணக்கம் கேப்டன்
தோனி-வணக்கம் வணக்கம் யோவ் கேப்டன் என்று சொல்லாதையா
ஏன் சார் நீங்க கேப்டன் தானே
தோனி-யோவ் ஊர் உலகத்துல கேப்டன் என்று தன்னைத்தானே சொல்லிக்கிறவன் எல்லாம் சந்தோசமா இருக்கான் இந்த கிரிக்கெட் கேப்டன் பதவிய வைச்சிகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே ஜயோயையோ........
சரி சார் தென்னாபிரிக்காவுடன் நீங்க அதிக ரன் வித்தியாசத்தின் வெல்லாததுக்கு காரணம் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் 5 சுழல் பந்துவீச்சாளரை பயன்படுத்திய மாதிரி பயன் படுத்தாமல். நீங்கள் வேகப்பந்து வீச்சை ஆரம்பத்தில் பயன் படுத்தியதுதான் என்று சொல்லுறாங்களே இது பற்றி.......
தோனி-யோவ் ஒரு வேளை அப்படி செய்து தோற்று இருந்தா என்ன சொல்லுவாய்ங்க இவன் பாகிஸ்தான்காரனை பார்த்து செயல் பட்டதால் தோத்துட்டம் என்று செம்பை நெளிப்பாய்ங்க அதுதான் நான் அப்படி செய்யவில்லை. அதைவிட
எப்பவும் பாகிஸ்தான் காரங்களை பின் பற்றக்கூடாதுனும் தமிழ்நாட்டு கேப்டன் சொல்லியிருக்கார் அது உங்களுக்கு தெரியாதா?
சரி சார் ஜ.பி.எல் போட்டிகளில் அடித்து நொருக்கும் உங்க பசங்க சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் ஏன் அப்படி ஆடுவது இல்லை
தோனி-என்னய்யா லுச்சாதனமா கேள்வி கேட்குற ஜ.பி.எல் போட்டிகளில் எத்தனை நாட்டு பிகருகள் நாங்க பவுண்ட்ரி,சிக்சர் அடிக்கும் போது ஆடும் இங்க அப்படி எந்த வசதியும் இல்லை.அதுனால பசங்க பம்மிடுறானுங்க நீ மட்டும் ஜ.பி.எல் மாதிரி பொண்ணுங்களை ஆடவிடு பசங்க வெறி கொண்டு வெளாடுவான்க.
சரி பாஸ் அப்படி என்றால் உங்க பசங்க பாகிஸ்தானுடன் மட்டும் அடித்து நொருக்கிவிட்டாங்களே குறிப்பா கோலி
தோனி-யோவ் அது ஒரு ரகசியம்யா நம்ம ஊரு சானியா மிர்ஷாவை பாகிஸ்தானின் சோயிப் மாலிக் லவட்டிகிட்டு போயிட்டான்ல.ஏற்கனவே சானியா மிர்ஷா மேல நம்ம பயலுகள் பலருக்கு ஒரு இது இதனால
மாலிக் மேல செம காண்டுல இருந்தாய்ங்க. மாலிக்கை எதிரணியில் பார்த்ததும் செம காண்டாகி பாகிஸ்தானை அடித்து நொருக்கிவிட்டாய்ங்க.....
![]() |
இந்தியாவின் சானியா மிர்ஷாவை கல்யாணம் கட்டின பாகிஸ்தான் வீரர் சொயிப் மாலிக் நிலமை |
சச்சின் எப்ப பாஸ் ஓய்வு பெருவார்
தோனி- நான் எப்ப ஓய்வு பெறுவேன்னு கேளு சொல்லுறன் இல்லை யுவராஜ்,ரெய்னா,ஏன் கோலி எப்ப ஓய்வு பெறுவான் என்று கேளு சொல்லுறன்.ஆனா இதை பத்தி மட்டும் என் கிட்ட கேட்காத நானே வேல்ட் கப் செமி பைனலுக்கு போக முடியாம போச்சேனு செம காண்டுல இருக்கேன். நல்லா கேக்குறாய்ங்க கேள்வி.......
சரி பாஸ் தென்னாபிரிக்காவுடன் அதிக ரன் வித்தியாசத்தில் வெல்ல முடியாததுக்கு என்ன காரணம்?
தோனி-மழை தான் காரணம் மழை காரணமாகத்தான் எங்களால் அதிக ரன் வித்தியாசத்தில் வெல்ல முடியாமல் போய்விட்டது
என்ன பாஸ் சொல்லுறீங்க மழை எங்க பெய்தது மழை பெய்யவே இல்லையே
தோனி-யோவ் அவுஸ்ரேலியாவுடன் தோற்ற போதும் இதைத்தன் சொன்னேன் ஒரு பயலும் மழை எங்க பெய்தது என்று கேட்கவில்லை.நீ மட்டும் என்னத்துக்கு கேட்குற.
இல்லை பாஸ் சரியான காரணம் சொல்லனும் இல்லையா
தோனி- ஒன்னு சொல்லட்டா கேள்வி கேட்க்கிறது ஈசி பதில் சொல்லுறது கஸ்டம்......இத்துடன் பேட்டியை முடித்துவிடு
(சொல்லிவிட்டு தோனி கிளம்பிப்போகின்றார்)
![]() |
இந்தப் படம் முகப்பு புத்தகத்தில் பார்த்தேன் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கின்றது. |
*********************************************************************************
விரைவில் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் புதிய தொடர்
*********************************************************************************
|
6 comments:
பகல் வணக்கம்,ராஜ்!எப்புடி உங்களால தோனிய கலாய்க்க முடியுது?எப்புடியோ,உங்க வயித்தெரிச்சலை தீத்துக்கிட்டீங்க,ஹ!ஹ!ஹா!!!!
பாவம் தோனி
போட்டு தாக்குங்க... (இருந்தாலும் கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு... பாவங்க...)
அனைவருக்கும் நன்றி நண்பர்களே
//தோனி-என்னய்யா லுச்சாதனமா கேள்வி கேட்குற ஜ.பி.எல் போட்டிகளில் எத்தனை நாட்டு பிகருகள் நாங்க பவுண்ட்ரி,சிக்சர் அடிக்கும் போது ஆடும் இங்க அப்படி எந்த வசதியும் இல்லை.அதுனால பசங்க பம்மிடுறானுங்க நீ மட்டும் ஜ.பி.எல் மாதிரி பொண்ணுங்களை ஆடவிடு பசங்க வெறி கொண்டு வெளாடுவான்க.////
நா அப்பவே நெனச்சேன்.. வத்தலும் தொத்தலுமா நாலு அட்டு பிகருகள சீர்கேர்ல்ஸா ஆடவிட்டது உங்க தப்ப்பு தம்பி.. ஐ.பி.எல் மாதிரி லட்டு பிகருகள ஆடவிடுங்க... அப்புறம் காட்டுறோம் நாங்க யாருன்னு....
@மொக்கராசு மாமா
பாஸ் இவங்கள் எண்ணம் எங்களுக்கு தெரிஞ்சுதான் லட்டு பிகருகளை ஆடவிடவில்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment