நான் பிறக்கமுன்னே என் மண்ணில் யுத்தம் இருந்தது. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் யுத்தபூமியிலே வெடிகுண்டு ஓசைகள் எங்கள் தாலாட்டு, குருதி மணம் எங்கள் மண்ணின் மண்வாசம் ஆனது.
இது எல்லாம் ஏன்? ஆசியாவின் அழகிய இலங்கையில் எங்களை வன்னியில் பிறக்கவைத்த கடவுளுக்கு எங்கள் மீது ஏன் இத்தனை ஓரவஞ்சனை என்று தெரியவில்லை.
அமைதியான, யுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு ஏங்கிய காலங்கள் பல. சந்தோசம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் நாங்கள் ஓராயிரம் சோகக்கதைகள் எங்கள் மண்ணில் இருக்கின்றன.இன்று உயிரோடு இருப்பமா என்று தெரியாத வாழ்க்கை. மரணத்தைவிட மரணபயம் கொடுமையானது தினம் தினம் மரண பயத்துடன் போராடி இறுதியில் மரணபயமே எங்களிடம் தோற்றுப்போனது.
ஒரு கிலோ மரவள்ளிக்கிழங்கில் 10 பேர் கொண்ட குடும்பம் பசியாறும் வித்தையை எங்களுக்கு கற்றுத்தந்தது யுத்தம்,கோதுமை மாவை ரொட்டியாக தட்டி பொரித்து எடுத்து ஒரு துண்டு சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வயிறு பொருமிவிடும் பசி எடுக்காது இதை கற்றுத்தந்தது வறுமை.
ஈழத்தில் வன்னியில் வாழ்ந்த ஓவ்வொறு மக்களின் மனங்களிலும் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புக்கள் ஏராளம்.
இந்த தொடரின் நோக்கம் எங்கள் கதைகளை சொல்லி அனுதாபம் தேடுவது இல்லை. எங்கள் கஸ்டங்களை நாங்கள் பட்ட அவலங்களை பதிவு செய்யவேண்டும் என்பதுதான். அதைவிட இந்ததொடர் அரசியல் சார்ந்தோ இல்லை இனவாதம் பேசுவதாகவோ நிச்சயம் இருக்காது.அந்த நோக்கத்துடன் யாரும் இந்த தொடரை பார்கவேண்டாம்.
ஈழமக்களின் வாழ்வியல் கதைகள் பல அதை பதிவுசெய்வது இலகுவானது இல்லை.ஆனாலும் 30 வருடங்களுக்கு மேல் யுத்தம் நிலவிய ஒரு பூமியில் பிறந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒருவரின் பார்வையில் அவனது மனநிலையில் சமூகத்தில் கண்ட சில வாழ்வியல் கதைகளுடன் இந்த தொடரில் பயணிப்போம்.
எனக்கு பதிவுலகில் அன்பு ஆதரவும் வழங்கி வரும் நண்பர்கள் இந்த தொடருக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என நம்புகின்றேன். உங்கள் ஆதரவும் அன்பும்தான் என் எழுத்து ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும்.நிறை குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டுங்கள்.உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள் அனைத்துக்கும்.நான் பதிலளிக்கின்றேன்.
ஆனால் தயவு செய்து என்னை விமர்சிக்கின்றேன் என்று எங்கள் வாழ்க்கை கதைகளை கொச்சைப்படுத்திவிடாதீர்கள்.இது வாழ்க்கை இல்லை வலி.
நாளை முதல் உங்கள் நண்பர்கள் தளத்தில் ”யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்”புதிய தொடர்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
|
20 comments:
வலிகளை வார்த்தைக்கோர்வையாக்கி வாழ்க்கைப்பயண அனுபவத்தை ஏற்றிவரும் தொடரினை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன் அடுத்த பதிவில்.
வாழ்த்துக்கள்.
நல்லதொரு ஆரம்பம்.. தெளிவான ஆரம்பம்.. ஸோ கேள்வி ஏதும் இல்லை.. கொஞ்சம் கெத்தாக எழுதுங்க.. இலங்கை தமிழ் சமுகம் என்றாலே எதோ அழுத்தம், பாதிப்பு, மன உளைச்சல் அதிகம் உள்ளவர்கள் என்ற கருத்தே அதிகம் உள்ளது.. சோ வி வான்ட் டு பிரேக் தட் கைண்ட் ஆப் ரூல்ஸ்.. நன்றி
@தனிமரம்
நன்றி பாஸ்
@ஹாரி பாட்டர்
////
நல்லதொரு ஆரம்பம்.. தெளிவான ஆரம்பம்.. ஸோ கேள்வி ஏதும் இல்லை.. கொஞ்சம் கெத்தாக எழுதுங்க.. இலங்கை தமிழ் சமுகம் என்றாலே எதோ அழுத்தம், பாதிப்பு, மன உளைச்சல் அதிகம் உள்ளவர்கள் என்ற கருத்தே அதிகம் உள்ளது.. சோ வி வான்ட் டு பிரேக் தட் கைண்ட் ஆப் ரூல்ஸ்.. நன்றி/////
எங்களை பற்றிய பார்வையை நிச்சயம் மாற்ற முயல்கின்றேன்.
நன்றி பாஸ்
வணக்கம்,ராஜ்!///இந்தத் தொடர்,அரசியல் சார்ந்தோ இல்லை இனவாதம் பேசுவதாகவோ நிச்சயம் இருக்காது!///இந்தத் தொடரின் நோக்கம் எங்கள் கதைகளைச் சொல்லி அனுதாபம் தேடுவது இல்லை!///அறிமுகமே நச்சென்று!!!!முன் கூட்டியே வாழ்த்துக்கள்,ராஜ்!ஆரம்பியுங்கள்,தொடர்வோம்!!
@Yoga.S.
நன்றி ஜயா
வாழ்த்துக்கள் நண்பரே
புதிய தொடர் தொடர்ச்சியாக பல அனுபவங்களைச் சுமந்து வந்து எங்களுக்கும் வலியை ஏற்படுத்துமோ தெரியாது.
தொடர்ந்தும் பார்ப்போம் தொடரின் தொடக்கத்தை
@சிட்டுக்குருவி
////வாழ்த்துக்கள் நண்பரே
புதிய தொடர் தொடர்ச்சியாக பல அனுபவங்களைச் சுமந்து வந்து எங்களுக்கும் வலியை ஏற்படுத்துமோ தெரியாது.
தொடர்ந்தும் பார்ப்போம் தொடரின் தொடக்கத்தை
////நன்றி பாஸ்
வணக்கம் மச்சான் சார்! புதிய தொடருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! நல்ல முறையில் சுவாரசியமாக தொடர் தொடரட்டும்!
எமது கதை என்றதும், எனக்கு ஒரே ஆர்வமா இருக்கு! எந்தக் காலக் கதையை, எங்கிருந்து ஆரம்பித்து, எங்கு சென்று முடிக்கப் போகிறீர்களோ என?
நாளை முதல் கதை படிக்க நானும் தயார்!
மேலும் இரண்டு எழுத்துப் பிழைகளை அவதானித்தேன்.
பொறித்து என்பது பொரித்து என்றும் வருமை என்பது வறுமை என்றும் வரவேண்டும்! இவற்றை மாற்றிவிடுங்கள்!
மீண்டும் இனிய தொடருக்கு வாழ்த்துக்கள் மச்சான் சார் :))
ராஜ் ரெம்ப ஆவலாய் தொடருக்காண்டி வெயிட்டிங் :)) பாடசாலை நாட்கள் போல் இதுவும் உண்மைகள் பொதிந்த கதையே ஆகவே இப்பவே தொடருக்கு காத்திருக்கின்றேன் பாஸ்..
தொடர் பெயர் நன்று பொருத்தமான தலைப்புத்தான்.. பெயரே கதை சொல்லுது :(
நல்ல ஆரம்பம் தம்பி..ஆவலாய் இருக்கின்றேன்..தொடருங்கள்.
@மாத்தியோசி - மணி
மிக்க நன்றி மச்சான் சார் எழுத்துப்பிழையை திருத்திவிட்டேன்
@துஷ்யந்தன்
வாங்க பாஸ்.மறக்க முடியாத பாடசாலைக்காலங்களை நீங்க இன்னும் மறக்கவில்லை போல
நன்றி பாஸ்
@செங்கோவி
நன்றி பாஸ்
உங்கள் வலியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ராஜ்!ஆறுதல் பிறக்கும்.
@குட்டன்
நன்றி பாஸ்
தொடருங்கள்... பலரும் உண்மை அறியட்டும்...
உண்மைகளை எழுதும் போது விமர்சனங்கள் வரக்கூடும் ஆதலால் முன்னமே எச்சரிக்கை செய்துவிட்டீர்கள்..!போல...ஹஹா! அழுத்தம் பாதிப்பு இல்லாத யுத்தபூமியின் கதை என்றால் "காதல்" இருக்கும் என்றே அவதானிக்கின்றேன்.
@திண்டுக்கல் தனபாலன்
வாங்க பாஸ் நன்றி பாஸ்
@வீடு சுரேஸ்குமார்
விமர்சனங்களை எதிர்ப்பார்கவேண்டும் பாஸ் ஆனால் விமர்சனம் என்ற பெயரின் என்னை விமர்சிபதாக் எங்கள் உணர்வுகளை வலிகளை விமர்சிப்பது தாங்க முடியாது அதுதான் அப்படி குறிப்பிட்டேன்.
காதலும் நிச்சயம் இருக்கும் ஆனால் பிரதானமாக இருக்காது
Post a Comment